Advertisement



  • கிறிஸ்ரினா என்ற கப்பலில் பிரபாகரன் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். ரொகான் குணரட்ன
    புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்புவதற்குப் பல வழிகளை வைத்திருந்ததாக சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளராக இருக்கும் றொகான் குணரத்ன தெரிவித்திருக்கிறார்.

    பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாக கிறிஸ்ரினா என்ற கப்பலை வரவழைத்து அதிலிருந்து ஹெலி கொப்டரைப் பயன்படுத்தி தப்பவது அவருடைய திட்டமாக இருந்தது. கனடாவைச் சேர்ந்த சங்கிலி என்றழைக்கப்படும் ரவிசங்கர் கனகராஜா கப்பலை ஒழுங்கு செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கப்பலை ஒழங்கு செய்து இந்தோனேசியாவிற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அச்சுதன் என்பவர் ஹெலிகொப்டரை ஒழுங்கு செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் அதனை ஒழுங்கு செய்ய முடியாமல் போய் விட்டது. போரின் பின்னர் கிறிஸ்ரினா என்ற கப்பல் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

    இரண்டாவது வழிமுறையாக, பாதுகாப்பு வலயத்தை உடைத்துக் கொண்டு யால சரணாலயத்துள் நுழைவது. அங்கிருந்து தெற்கின் அடா காட்டிற்குள் நகர்வது. அதனூடாக பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புக் குறைந்த தெற்கக் கடல் வழியாக தீவிலிருந்து வெளியேறுவது.

    மூன்றாவது வழிமுறையாக தளபதி ராம் இன் உதவியுன் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கிற்குத் தப்பிச் செல்வது. 2007இல் கிழக்கு கைப்பற்றப்பட்ட போதும் ராம் கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருந்து வந்தார் என குணரத்ன குறிப்பிடுகிறார்.

    ஆனால், இந்த எந்தவொரு வழிமுறையும் அவருக்குக் கைகூடவில்லை. ஏனெனில் இலங்கைப் படையினர் தரையின் எல்லாப் பகுதியையும் கடல் வழியையும் சுற்றி வளைத்திருந்தனர். மே 16ஆம் திகதி முல்லைத் திவின் எல்லா கடற்கரைப்பகுதியும் இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. கடற்படையினரின் சுற்றிவளைப்பு தகர்க்க முடியாததாக இருந்தது.

    நான்காவது வழிமுறையாக இலங்கைப் படைகளின் கடுமையான சுற்றிவளைப்பை நந்திக்கடலின் மேற்குப் புறத்தால் உடைத்துக் கொண்டு அடர்ந்த வன்னிக் காடுகளுக்குள் சென்று விடுவது. இதனால் தான் அங்கு விடுதலைப் பலிகள் தூரதிருஷ்டியுடன் பின்வாங்கும் போது ஆயுதங்களைப் புதைத்து வைத்தனர்.

    புலிகளின் 140 போராளிகளுடன் பொட்டு அம்மான் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி (பிரபாகரனின் மகன்) ஆகியோரின் தலைமையில் பொதுமக்களைப் போல் சென்று படையினரைத் தாக்குவது என்று திட்டமிட்டனர். இதன் போது 30 தற்கொலையாளிகள் படையினர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர். இராணுவத்தின் முன்னரங்கக் காவல்நிலைகளைத் தகர்த்த புலிகளால் அதற்கு மேல் முன்னேற முடியாமல் போய் விட்டது. பொட்டம்மானும் சார்ள்ஸ் உம் இதன் போதே உயிரிழந்தனர் என அவர் தெரிவிக்கிறார்.

    பிரபாகரனும் அவருடைய மெய்ப்பாதுகாவலர்களும் பொதுமக்களுடன் இணைந்து நந்திக்கடலைக் கடப்பதற்காக வெள்ளி முள்ளிவாய்க்காலிலிருந்து கரய முள்ளிவாய்க்கால் வரை பொருத்தமான இடத்தைத் தேடியதாகவும், அதற்காக முழங்கால் வரை சேறு உடைய களப்புப் பகுதியில் காத்திருந்ததாகவும், எனினும் 19ஆம் திகதி காலை பத்து மணியளவில் விஜயபாகு ரெஜிமென்டினால் நெஞ்சில் கிரனைட் தாக்குதலுக்குள்ளாகியும், தலையில் துப்பாக்கிச்சூடு பட்ட நிலையிலும் சகதி தொய்ந்த நிலையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் றொகான் குணரட்ண கூறியிருக்கிறார்.

    more
  • குழந்தைகளை அதிகமாக கொலை செய்யும் நாடுகள் பட்டியல் இடபட்டால் அமெரிக்காதான் முதல் இடத்தை பிடிக்கும்


    M.ஷாமில் முஹம்மட்

    அமெரிக்க ஆக்கிரமிப்பு படையின் டோன் விமானங்கள் மூலம் அத்துமிறி பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் தொடர்ந்தும் தாக்கி முஸ்லிம்களை தனது பாசிச வேட்டை பற்களால் கொடுரமாக கொன்று இரத்தமும் சதையுமாக குவித்து வருகிறது இங்கு கொலை செயபடுபவர்கள் பெண்களும் , எதுவும் அறியாத குழந்தைகளும்தான் அதிகம் அமெரிக்க பாசிச நகரங்களில் ஒரு குழந்தை தவறி விழுந்து விட்டால் ஒப்பாரி வைக்கும் அமெரிக்க , ஐரோப்பிய மாஸ் மீடியாக்கள் இங்கு பிச்சு தூக்கி எறியப்பட்டு சதை வேராகவும் எலும்பு வேராகவும் குவிக்கப்படும் குழந்தைகளை அமெரிக்க பாசிச தேசத்தை  நிலை நிறுத்த தேவையான உரமாக பார்கிறது .

    பாகிஸ்தானின் வட மேற்கு பகுதிகளில்  பழங்குடியினர்தான்  அதிகம்  இங்கு கொலை செயபடுபவர்கள் மிகவும் அதிகம் இந்தப் பகுதியில் முழுநாளும் பாசிச பயங்கரவாத  அமெரிக்க  இராணுவத்தின் பல ஆளில்லா விமானங்கள் உளவு பார்க்கின்றன கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி தினமும் பலரை கொலை செய்கின்றன ஆனால்   அவைகளில் சில தாக்குதல்கள் பற்றிய செய்திகள்தான் வெளிவருகின்றன அதுவும் பயங்கரவாதிகள் தாக்கப்பட்டார்கள் என்ற தலைப்புடன், அமெரிக்க பாசிசத்தின் கண்களுக்கு முஸ்லிம்கள் அனைவரும் பயங்கர வாதியாகத்தான் தெரிகிறது முஸ்லிம் குழந்தைகளை அதிகமாக கொலை செய்யும்  நாடுகள் பட்டியல் இடபட்டால் அமெரிக்காதான் முதல் இடத்தை பிடிக்கும் முஸ்லிம் குழந்தைகளை கொலை செய்யும் முன்னணி  நாடு அமெரிக்காதான் இதில் எவருக்கும் சந்தேகம்வராது

    இந்த வட மேற்கு பகுதி மக்கள் பாகிஸ்தானின் சுய ஆட்சி கொண்ட, முஸ்லிம் பழங்குடியினர் இவர்களின் பகுதி மிக பெரிய மலைகளை கொண்ட பிரதேசமாகும் இங்கு பாகிஸ்தானின் சட்டங்கள் பல செல்லுபடியாகாது. வெளி உலகுடன் மிகவும் தொடர்பு குறைந்த பகுதி இங்கு தினமும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையால் கொலை செயப்படும் மனிதர்களின் தொகை எவருக்கும் தெரியாது அமெரிக்கா  தான் புதிதாக கண்டுபிடிக்கும் அனைத்து ஆயுதங்களையும் இந்த மக்களின் மீதுதான் பரிசித்து   பார்க்கிறான் ஆளில்லா விமானங்கள் மூலமாக கொல்லப்படுபவர்கள் ஒரு பெரும் தொகை , ஆப்கானிஸ்தான் மற்றும்  ஈராக்கின்  உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத் தளங்கள் மற்றும் வலை குடா கடலில் நிறுத்தப்பட்டுள்ள நாசகார இராணுவ ஆக்கிரமிப்பு கப்பல்களில் இருந்து அமெரிக்க பயங்கரவாதம்  தான் புதிதாக கண்டுபிடிக்கும் அனைத்து ஏவுகணைகளையும்  இந்த மக்களின் மீதுதான் ஏவிவிடுகிறான் .

    இது போதாது என்று கருதும்  அமெரிக்கா   தனது   தளங்களில் இருந்து கிளம்பி விடும்  போர் விமானங்கள் மூலமாகவும்  நேரடியாக இந்தப் பிராந்தியத்தில்  அப்பாவிகளின் முதுகின் மீது குண்டுகளை  வீசி  குடும்பம்  குடும்பமாக  வகை தொகை இன்றி கொலை செய்து பாசிச நகங்களை வலுபடுத்துகிரான் நோபல் பரிசு பெற்ற பாசிச  அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஹுசைன் ஒபாமா 30000 மேலதிக ஆக்கிரமிப்பு படைகளை ஆப்கானிஸ்தானுக்கு கொலை வெறியாட அனுப்புவதன் மூலம் தானும் புஷ்ஷுக்கு நிகரான பாசிச  அமெரிக்காவின் பயங்கர வாத ஜனாதிபதியாக தன்னை தரம்உயர்த்தியுள்ளார்  


    கடந்த சில மாதங்களில் மட்டும் இப்பகுதியில் இருநூறு    தடவைகளுக்கு மேல்  தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில தினக்களுக்கு முன் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்  12 கிளர்ச்சியாளர்கள்    என்று சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு பயங்கரவாத  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் வழமை போன்று பொது மக்கள் கொல்லபட்டதாக வேறு தகவல்கள் குறிபிடுகிறது

    more
  • இலங்கை செய்திகள்

    பொட்டுவின் பெயரை நீக்குமாறு INTERPOL இடம் இலங்கை கோரிக்கை

    சர்வதேச காவல் படையான "இன்டர்போல்" அமைப்பால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலிலிருந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் பெயரை நீக்குமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு தற்கொலை செய்துகொண்டதாக இலங்கை அரசு கூறியுள்ள நிலையில், அவரை மீண்டும் தேடி வருவதாக சர்வதேச காவல் படையான 'இன்டர்போல்' அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    ஆனால் இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மானும் அவரது மனைவியும் தம்மை தாமே தற்கொலை தாக்குதல் மூலம் அழித்துக்கொண்டதால்தான், அவர்களது உடல்களை மீட்க முடியவில்லை என்றும், அவர்களது மரண சான்றிதழ் பத்திரத்தை தம்மால் தர முடியவிலை என்றும் இலங்கை அரசு கூறியிருந்தது.

    ஆனால், பொட்டு அம்மானை மீண்டும் தேடிவருவதாக 'இன்டர் போல்'தமது இணையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இலங்கை அரசுக்கு பெரும் அதிர்ச்சியையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், 'இன்டர்போல்' அமைப்பால் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலிலிருந்து பொட்டு அம்மான் பெயரை நீக்குமாறு அந்த அமைப்பை இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைத் தலைவர் கபில்ல ஹென்டாவிட்ரானா, சர்வதேச காவல்படை அமைப்பை தொடர்பு கொண்டு மேற்கூறிய கோரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

     

    பிள்ளையான் மட்டு வைத்தியசாலையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு.

    டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு 3 மூன்று நாட்களாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள பிரத்தியேக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    உலங்கு வானுர்தி மூலம் கொழும்பு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு காச்சல் குணமடைந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    more
  • ஒருவழி பண்ணிய நடிகை.

    துறவறத்தைத் துறந்து விட்டு இல்லறத்துக்கு வரும்படி ஒரு சாமியாரை ஒரு நடிகை வலியுறுத்தினார். சாமியார் அதற்குத் தயாராக இருந்தார். ஆனால் அப்படிச் செய்தால் சிஷ்யர்களின் கோடானுகோடி சொத்து கையை விட்டுப் போய் விடும் என்று பயந்து பிறகு சாமியார் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

    இதனால் ஏமாற்றமடைந்த நடிகை, தன் ‘கொழுந்தனுடன்’ சேர்ந்து அந்தச் சாமியை ஒரு வழி பண்ணிவிட்டார். காமலீலை குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் சுவாமி நித்யானந்தா விவகாரத்தில் அந்த சாமியின் ஆசிரம வட்டாரங்கள் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளன.

    ரஞ்சிதாவுக்கு இப்போது வயது 35. சாமியாருக்கு வயது 32. மணமான ரஞ்சிதாவுக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது விவாகரத்துக்குக் காத்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், நடிகை கே ஆர் விஜயாவின் உறவுப் பெண் சுதா, ரஞ்சிதாவை சாமியாருக்கு அறிமுகம் செய்துவைத்தார். படிப்படியாக ரஞ்சிதா, சாமியாரைக் கண்டு சொக்கி, தன் இருப்பிடத்தைச் சென்னையில் இருந்து பெங்களூரூவுக்கு மாற்றிக் கொள்ளக்கூட முடிவு செய்தார். சாமியார்- ரஞ்சிதா உறவு வலுவானது. சாமியார் ஒருவர் துறவறத்தைவிட்டு இல்லறத்தைக் கைப்பிடித்த கதையை எல்லாம் சாமியாரிடம் எடுத்துச் சொல்லிய ரஞ்சிதா, ஒருவழியாகச் சாமியாரைத் தன் வழிக்குக் சொண்டு வந்தார்.

    திருமணத்துக்கு முதலில் சம்மதித்த சாமியார், ஆல விருட்சமாக வளர்ந்து இருந்த சொத்து எல்லாம் போய்விடும் என்று பயந்து தன் முடிவை மாற்றிக்கொண்டு பிறகு ரஞ்சிதாவை ஔரங்கட்டினார். ரஞ்சிதா எவ்வளவே கெஞ்சிப் பார்த்தார். ஆனால் சாமியார் மசியவே இல்லை. அதோடு சாமியாரின் கண்கள் வேறு ஒரு பெண் பக்கம் திரும்பின. ஏமாற்றம், கோபம் எல்லாம் விஸ்வருபம் எடுக்க, ரஞ்சிதா, தன்னை ‘அண்ணி’, ‘அண்ணி’ என்று அன்புடன் அழைத்து வந்த லெனின் கருப்பன் என்பவரின் உதவியை நாடினார். லெனின் கருப்பன், சாமியாரின் வலது கையாக இருந்தவர். இவர் ஒரு மாதத்துக்கு முன் சாமியாரை ஏதோ ஒரு விவகாரம் தொடர்பில் மிரட்டினார். அவருக்கும் சாமியார் மசியவில்லை. சாமியாரை ஒரு கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர்.

    ரஞ்சிதாவும் லெனினும் சேர்ந்து வீடியோ திட்டத்தைத் தீட்டினர் என்று ஆசிரம வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியத் தகவல் சாதனங்கள் குறிப்பிட்டு உள்ளன. “ரஞ்சிதாவும் லெனினும் சேர்ந்து இந்த வீடியோ திட்டத்தை போட்டனர் என்று நான் நினைக்கிறேன். இருவரும் பல நாட்களாக அணுக்கமாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன்,” என்று ஒரு வட்டாரம் கூறியது. “எனக்கு ரஞ்சிதாவையும் தெரியும். லெனினையும் தெரியும். இருவரும் நேர்மையானவர்கள் அல்ல என்பதும் எனக்குத் தெரியும்,” என்று சொன்னார் சாமி நித்யானந்தாவின் அந்தரங்கச் செயலாளர் சுவாமி சேவானந்தா.

    இதற்கிடையே சாமி நித்யானந்தாவின் சார்பில் முன் ஜாமின் கேட்டு கர்நாடக நீதிமன்றத்தில் மனு செய்யப்படும் என்று அவரின் வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது. இவ்வேளையில் சேலம் பெரிய புதூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த எட்டு பெரும் புள்ளிகள், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேறிவிட்டனர். பெரும் சொத்துகளை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துள்ள அவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுக்கும் நித்யானந்தாவுக்கும் தொடர்புகள் இருந்ததாக இந்தியா டுடே இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    more
  • இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசார். ஓர் நடிகை புகார் செய்யாமலே ஓர் திருட்டு வீடியாவை வைத்து, பணம் சம்பாதிக்கும் சன் டிவியோ, நக்கீரன் பத்திரிகையோ, மற்றும் தலைப்பு செய்தியாகப் போட்டு வியாபாரத்தை கூட்டும் பத்திரிகையாளர்களோ, இந்த மாதர் அமைப்புகள் என்று சொல்லும் அமைப்புகளோ இந்த அபலைப் பெண்ணிற்கு நீதிக்கு போராடுவார்களா? இல்லை ஈழத்தமிழர், ஈழத்தமிழர்.... என்று கூக்குரல் போடும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதிக்கு முன் இட்டுச்சென்று தண்டனை வான்கிக்கொடுப்பார்களா?

    அல்லது இன்று இலங்கை அகதிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்த தமிழக போலிசாரை அவ் உயர் அதிகாரிகள் விசாரித்து அவ் அவலைப்பெண்ணிற்கு நீதி சொல்வார்களா?

    இந்த இலட்சணத்தில், பெண்கள் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில், மாதர் அமைப்புகள் எதுவும் இதுவரை புகார் கொடுக்கதாத நிலையில் நடிகை ரஞ்சிதா செய்தியை பிரபல்யப்படுத்துவது இது ஓர் அரசியல் சாயம்பூசப்பட்டதாகவே தெரிகின்ற நிலையில் அப்பாவிப் பெண்கள் என்றால் இவர்கட்கு இளிச்சவாய். அதற்கு மேலே "சர்வதேச பெண்கள் தினத்திற்கு முண்டியடித்து ஜெயலலிதா உட்பட வாழ்த்து செய்திகள்???

    அதிலும் வைகோ தனது வாழ்த்து செய்தியில் சொல்கிறார், "உலகிலேயே எங்கும் நடந்திராத வீரகாவியத்தை ஈழத்துப் பெண்கள் போர்க்களத்தில் படைத்தனர். மகளிருக்கு எதிரான குற்றம் புரிவோரைக் கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும். பெண்ணின் பெருமை சிறக்கட்டும். பெண் உரிமை வெல்லட்டும்."......இதெல்லாம் இந்தப் பேசலாம் எதற்க்காக? எம் ஈழத்துப் பெண்கள் தங்கள் நாட்டில் படும் அவலம் தெரியவில்லையோ?

    அவர்களின் வாழ்த்துச் செய்திகளை வாசியுங்கள்: http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17042

    சத்ய சாயிபாபாவின் மடத்தில் இறந்து யேர்மனியப் பெண் பற்றியும், பற்றைக்குள் கிடந்தது எடுக்கப்பட்ட அவரின் கைப்பை பற்றியும் என்ன நடந்தது? அதன் பின் ஒரு முறை அவரை கொல்ல சென்றவர்களை பாதுகாவலர் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது ஏன்? அதற்கு விசாரணை நடந்ததா? ஏன் மூடி மறைக்கப்பட்டது?

    இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்கள் (முன்னால் ஜனாதிபதி ஒருவர் கூட), போலிஸ் முக்கியஸ்தர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் அவரின் பக்தர்கள் ஆகும். ஏன், நாத்திக திராவிடத் தலைவர் கருணாநிதி அவரை சென்னையில் வரவேற்றது............... பணமும், செல்வாக்கும், அரசியலும் பத்தும் என்ன..... நூறும், ஆயிரமும் செய்யும்.

    "ஸ்ரீசத்திய சாயி சேவா அமைப்பு மூலம் சுமார் ரூ.200 கோடி செலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பூண்டிக்கு வரும் நீரின் வேகத்தை தாங்கும் அளவிற்கு கால்வாயின் கரைகள் மேம் படுத்தப்பட்டன".

    "சாய்பாபாவின் முயற்சியால் சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்ததையொட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 21-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை மக்கள் சார்பாக நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் சத்ய சாயிபாபா கலந்து கொள்கிறார்".

    ஆதாரமும் சுவாரஸ்யமும்: http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_17.html

    http://idlyvadai.blogspot.com/2007/01/blog-post_12.html

    இந்த இலட்சணத்தில் யாரோ ஓர் நடிகைக்காக இந்த சன் டிவி யில் எத்தனை முக்கியத்துவம்? அதை விட ஈழப்பிரச்சனையை வைத்து வியாபாரம் செய்யும் நக்கீரன் பத்திரிகையும் நடிகை ரஞ்சிதாவை வைத்து முழு வீடியோ பார்க்க log in செய்யும்படி. மாறன் குடும்பத்தில் ஒருவரோ, அல்லது நக்கீரன் கோபால் குடும்பத்தில் ஒருவரோ இந்த நித்தியானந்தாவின் சீடராக இப்படி நடிகை ரஞ்சிதாவின் இடத்தில் இருந்தால் இவ்வளவு விளம்பரம் செய்து இருப்பார்களா?

    பெண்ணியல் வாதி கனிமொழி எங்கு சென்றுவிட்டார்? அத்துடன் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பவர். நேற்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடிய உயர் மத்திய தரப்பு மாதர் அமைப்புகள், உயர்தரப்பு மாதர் அமைப்புகள் இந்தப் பெண்ணின் நீதிக்காக குரல் கொடுப்பார்களா?

    மறு பக்கத்தில், மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் ஒருவார விழாவாக கொண்டாடப்பட்டது. அவரது 70வது பிறந்தநாளாகிய இன்று அவரை அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்கார ரதத்தில் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விழா சிறப்பு மலரை வெளியிட்டு அருள்தரிசனம் தந்த அடிகளாரிடம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.

    பிப்ரவரி 13 முதல் 15 தேதிவரை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 5000 பேருக்கு மேல் பங்கேற்று சிகிச்சை பெற்ற மக்கள் நலப் பணியுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. பிப்ரவரி 25 முதல் தொடர் அன்னதானம், கலச வேள்வி பூசை, சிறப்பு பாத பூசைகள், தினசரி பல்வேறு சிறப்பு கலைநிகழ்ச்சிகள், தங்கரதத்தில் வரவேற்பு, ரூ.1கோடி மதிப்பிலான மக்கள் நலப்பணிகள், வானத்தில் வண்ணக் கதிரொளிக் காட்சிகள் என தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .

    அருளாசி மேடையில் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை அடிகளார் வெளியிட தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எம். தணிகாசலம் முதலியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அங்கு காத்துக் கொண்டிருந்த பல்துறைப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் ஆசி பெற்றனர்.

    மேலும் அறிய: http://www.kalaikesari.com/culture/culturenews/Results.asp?key_c=54

    இவருக்கும்உலகம் பூராகவும் கிளைகள் உள்ள நிலையிலும், பல ஈழத்தமிழர்கள் போட்டி போட்டு கிளைகள் (டொராண்டோவிலேயே ஒன்றில் இருந்து பிரிந்து என்று மூன்று கிளைகள்) அமைத்து வழிபடும் நிலையிலும், கூடுதலாக செவ்வாடை பெண்களையே கொண்டுள்ளதாலும் இவ் ஆன்மீக வாதி தானும் இப்பெண்ணிர்காக குரல் கொடுப்பாரா? இல்லை........ ஏன் நமக்கு வம்பு என்று விட்டுவிடுவார்கள். அப்பெண்ணின் குடும்பத்தார் என்ன நன்கொடை கொடுக்கப்போகிறார்களா?

    “ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே.”

    “நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள் என்பதே. ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ரமேஸ்வரத்தில் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?”

    மேலும்: http://karupu.blogspot.com/2008/04/blog-post.html

    இப்படியும் ஓர் குமுறல், ஆனால் இதுதான் நிஜம். ஈழத்தமிழரை வைத்து சம்பாதிப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழருக்கு என்ன செய்கிறார்கள்? இதற்கு மேலையும் பணத்திக்காக எத்தனையோ நடக்கிறது. பிணத்தின் மேலேயே பணம் கறப்பவர்கள்.

    அதே நேரத்தில் "எந்த ஒரு மனிதப் பிறப்புக்கும் தன் சொந்த நாட்டில் வாழ்வது தான் கௌரவம், பாதுகாப்பு. ஆனால் ஈழத் தமிழனுக்கென்று ஒரு பாழ் விதி எழுதி வைத்திருக்கிறான் கடவுள் அகதிகளாக அலைய வேண்டுமென்று. சொந்த மண்ணிலேயே வாழும் உரிமையோ, தகுதியோ இல்லாதவனாக அகதியாக்கப்பட வேண்டுமென்ற கொடும் விதி எழுதியவன் எவனோ அவனை நான் மதியேன்!"

    “உயிர் தப்பி ஓடி வர ஈழத் தமிழனுக்கு பரப்பளவுகள் குறைந்து கொண்டே போகிறது. ஒன்று தமிழகத்தை நோக்கி ஓடி வர வேண்டும், அல்லது இலங்கையின் கொழும்பை நோக்கி பயணிக்க முனைய வேண்டும். அகதியாக கொழும்பில் இருக்க முடியாது, அங்கே தமிழனை விரோதியாகத் தான் பார்ப்பார்களே தவிர அகதியாக புகலிடம் கொடுக்கமாட்டார்கள். ஆக..எஞ்சியிருப்பது 24 மைல் கடல் தாண்டிய தூரத்திலிருக்கும் தமிழகம் மாத்திரமே!! என்றைக்கு உயிருக்காக ஓடி வர நினைத்தோமோ அன்றைக்கே எமது நிலை அண்டிப் பிழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்று தெரிந்தே தான் அகதியாக ஓடி வருகிறோம்”.

    “எங்கே தமிழன் அடித்து துரத்தப்படும் போதும் ஐயோ என்று ஓடி வருவது தமிழகத்தை நோக்கித் தான். நடுக்கடலில் உயிருக்காகத் தத்தளிக்கும் நீச்சல் தெரியாத எந்த பிறவியும் கைக்கு எந்த ஒரு பொருள் கிடைத்தாலும் அதைப் பற்றி கரையேறித் தப்பிவிடத் தான் எத்தனிக்கும். அப்படியொரு சூழ்நிலை தான் எந்த ஒரு அகதிக்கும். முதலில் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்ற நிலை. தவிப்பு.. ஓடி வந்து விடுகிறோம். வந்த பின் உயிர் வாழ வேண்டுமென்றால் எத்தனை இன்னல்களையும் தாங்கித் தானாக வேண்டும். எத்தனை அவமானங்களையும் சகித்துத் தானாக வேண்டும். நாம் தான் எல்லாமிழந்துவிட்டோமே? எம்மைத் திரும்பக் கட்டியெழுப்பவோ நாம் இன்னார் என்று அடையாளம் காட்டவோ இனி என்ன இருக்கிறது, உயிரைத் தவிர...? பாழாய்ப் போன வயிறும், உயிரும் இருந்து தொலைக்கிறதே... என்ன செய்வது?”

    ஆனாலும்.............

    “எப்போது எமக்கான சுயம் கிடைக்குமோ அப்போது தான் அகதி என்ற வார்த்தை தமிழினத்தின் வரலாற்றிலிருந்து அகற்றப்படும். கற்பனை செய்து பாருங்கள்..அகதிகளாக தமிழகம் வருவதை விட , சுதந்திரமானவர்களாக தொப்புள் கொடியுறவுகளிடம் வரும் போது ஈழத் தமிழனுக்கு எத்தகைய ஆத்ம திருப்தி கிட்டும் என்று??. அந்த சந்தோசத்தின் அளவீடு என்பதே தனித்துவமானதாயிருக்கும்.”

    “எப்போது தமிழினம் தன் சொந்த மண்ணில் சுதந்திரமாக சுவாசிக்க முடியுமோ அப்போது தான் அகதி என்ற நிலைபாடு எம்மை விட்டுப் போகும்.”

    “அதற்கான வழிமுறையை ஈழத் தமிழன் அமைக்க முற்பட்டால் தடைக்கல் ஏன் மற்றவர்கள் போட நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு தார்மீகமான , மனிதாபிமான, உணர்வுமிகுந்தவர்கள் நியாயமான பதில் தரமுடியுமா?” என்று ஓர் அகதியின் எதிர்பார்ப்பு.

    மேலும்: http://groups.google.ge/group/piravakam/msg/2b11ee3d3391b823

    இதற்கு இன்று நமது தாயகத்தில் வாக்கு வேட்டைக்காக இறங்கியிருக்கும் எமது வேட்டையாளர்கள் (ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் வேட்டையாளர்கள்) குரல் கொடுப்பார்களா? அல்லது அரசாங்கதுடன் இணைந்து உள்ளவர்கள், ஜனாதிபதி தெரிவில் மக்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிக் கடலில் குளித்தவர்கள், நிருபாமாவை சந்தித்தவர்கள், நல்லிணக்க, சமூக நலத்துறை அமைச்சர்கள் குரல் கொடுத்து இவ் நம் தொப்புள் கொடியுறவுகளை அவர் தம் தொப்புள் கொடியுறவுகளிடம் சேர்ப்பார்களா? முயற்சி தன்னும் எடுப்பார்களா?

    இன்று இவ் வாக்கு வேட்டையாடும், வேட்டையாளர்கள் இவர்களை தாயகம் அழைத்து மீள் குடியேற்றினால் அவ் இரண்டு இலட்ச்சத்திர்க்கும் மேற்ப்பட்ட வாக்குகளும் இவர்களுக்குத்தானே, அதைதன்னும் சிந்திக்கிறார்களா? இதைப்பற்றி பலதடவை எடுத்துக் கூறியுள்ளேன். தற்போது தமிழ் நாட்டு அரசியலை விட கேவலமாகிய அரசியலாகிவிட்டது.

    குஷ்புவிற்கு, ராதிகாவிற்கு, நமீதாவிற்கு, நயன்தாராவிற்கு ஓர் பிரச்சனைஎன்றால் தமிழகமே திரண்டு எழும்!

    ஏன் நம் நாட்டிலும் வசந்தம் கொண்டாடுபவர்கள் அவர்களைக் கூப்பிட்டு அரங்கேற்றி மாலைகள் , பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவார்கள். அதுமட்டுமா இதை எதோ ஈழத்தமிழரின் அடிப்படைப் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதாக பிரச்சாரம் செய்யும் இணையதளங்கள் வேறு. கூலிக்கு மாரடிப்பவர்களை, கவர்ச்சியை காட்டுபவர்களை இவ்வளவு பணம் செலவழித்து கூப்பிடுகிறவர்கள், ஏன் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கூப்பிடக்கூடாது....... முயற்ச்சிக்கக்கூடாது? அவர்களும் தமது திறமைகளை வெளிக்கொண்டுவருவார்கள் தானே! அவர்கள் உங்களுக்கு கவர்ச்சியில்லையா?

    வாழ்க தமிழகம்! வாழ்க ஈழத்தமிழ் எழுச்சி!

    எல்லாவற்றிக்கும் மனிதாபிமானம் வேண்டும்!

    அலெக்ஸ் இரவி

    more
  • அதிபயங்கர மலைபாம்பு வேட்டை

    ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் காணப்படும் அதிபயங்கர மலைபாம்புகளை (African rock pythons) எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேட்டையாடும் மனிதர்களை பார்க்கும் பொது நமக்குள் பயம் தொற்றிகொள்ளும் என்பது உண்மையே.

    African rock pythons

    இந்த பாம்புகள் தான் உலகிலே மிக நீளமான மலை பாம்புகள் ஆகும், இவற்றின் கூரிய பற்களும் சர்வ சாதாரணமாக எந்த ஒரு காட்டு விலங்கினையும் சுருட்டி கொல்லும் திறனுடைய இந்த பாம்புகளை வேட்டையாடும் முறையே வித்யாசமாக இருக்கிறது.

    பாம்பு வேட்டைக்கு தயாராகிறார்கள்

    மலைப்பாம்பு பிடிக்கும் முறை மிகவும் எளிதானது தான். மலைப்பாம்பு இருக்கும் வளையினை கண்டிபிடித்தவுடன் கையில் ஒரு சிறிய தோலை சுற்றிக்கொண்டு சின்ன தீ பந்தத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் அந்த வளைனுள் செல்லுவான்


    முட்டையிட்டு அடைகாக்கும் மலைப்பாம்பு எப்பொழுதும் மிக கோபமாகவே இருக்கும். திறமையான மனிதன் மிக வேகம்மாக வெளியே வந்துவிடுவான்.... தவறினால் தலை பாம்பின் வாயினுள் தான்.

    ஆனால் அவர்களும் புத்திசாலியே, தோல் சுற்றபட்ட கையால் மெதுவாக பாம்பின் முன் ஆட்டுவார்கள் ஒரு வேளை பாம்பு இவர்களை கவ்வி விட்டால் கையால் பாம்பின் நுரையீரல் இருக்கும் பகுதியை கெட்டியாக பிடித்து அதனை சம்மாளித்துவிடுவார்கள். கையில் இருக்கும் சிறிய தீ பந்தம் பாம்புகளின் முகத்தினை நோக்கி வராதவாறு முகத்தின் முன் பிடித்து கொள்வார்கள். அதையும் மீறி பாம்பு கவ்விவிட்டல் வெளியே இருக்கும் நண்பன் வேகமாக காலைபிடித்து வெளியே இழுத்துவிடுவான்.

    இவ்வாறு பிடிக்கபட்டு கொல்லப்படும் இந்த மலை பாம்புகளின் தோல்கள் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.

    இறுதியில் இப்படித்தான் மாற்றபட்டு விற்பனை செய்யப்படுகிறது.


    ஒருவேளை இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை உயிரினகளும் மனிதனுக்கு மட்டுமே சொந்தமோ?

    more

Featured Video

Photos