-
அமெரிக்காவில் மர்ம மனிதர்கள் சுட்டதில் மாணவர்கள் படுகாயம்
அமெரிக்க டெட்ராய்ட் நகரிலுள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் மீது இரு மர்ம மனிதர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். பின்னர் ஆயுததாரிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அனைவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
துப்பாக்கியால் சுட்டவர்கள் யார், எதற்காக சுட்டார்கள் என்ற விபரம் தெரியவில்லை. மாணவரிடையே ஏற்பட்ட மோதலால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவில் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: