Advertisement



  • கே.பி.யிடம் விசாரணை நடத்த சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் தீவிர முயற்சி.. இந்திய றோ பிரிவிலிருந்து நால்வர் அடுத்த வாரமளவில் வருவர்

    பாதுகாப்பு தரப்பினரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளரும் புதிய தலைவருமான குமரன் செல்வராஜா பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்காக இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நால்வர் அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று தேசிய நாளிதலொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டு அதற்கான சந்தர்ப்பம் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத வர்த்தக விவகாரம் தொடர்பான சர்வதேச பொறுப்பாளர் கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்கான அனுமதியினை வழங்குமாறு சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் பலவும் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினரே இந்த வேண்டுகோள்களை முன்வைத்துள்ளனர். அந்தவகையில் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் சீ.ஐ.ஏ புலனாய்வுப் பிரிவு, ரஷ்யாவின் கே.ஜீ.பீ. புலனாய்வுப் பிரிவு. அமெரிக்காவின் பயங்கரவாத விசாரணைப் பிரிவான பெடரல் பணியகம், பிரித்தானியாவின் எம்.ஐ 5 புலனாய்வுப் பிரிவு, இஸ்ரேலின் மொசாட் புலனாய்வுப் பிரிவு மற்றும் சீனாவின் அரசாங்க புலனாய்வுப் பிரிவு போன்றனவே மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற பயங்கரவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்படும் கடல் மார்க்கமான ஆயுதக் கடத்தல்கள் தொடர்பான விபரங்கள் கே.பி.யிடம் உள்ளதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் நம்புகின்றன. அதனாலேயே கே.பி.யிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் அவர்கள் பெரும் அக்கரை காண்பிக்கின்றன.

    இந்நிலையிலேயே இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் நால்வர் கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்காக அடுத்தவாரமளவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். விசாரணைகளின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அந்நாடு அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விட்டிருந்தது. இருப்பினும் அந்தக் கோரிக்கையினை மறுத்த அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமாயின் இலங்கைக்கு வருகை தருமாறு தெரிவித்தது.

    அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை அடுத்தே மேற்படி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நால்வர் அடுத்தவாரம் வருகை தரவுள்ளனர். இதேவேளை கே.பி.யிடம் விசாரணை நடத்த விரும்பும் சர்வதேச புலனாய்வுப் பிரிவினருக்கு இங்கு வந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos