-
மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு சென்ற பெண் போலீசை கற்பழித்து கொன்ற காமக்கொடூரனின் லீலை (2)
பெண் போலீசை கற்பழித்து கொன்ற காமக்கொடூரனின் லீலை
அவினாசி : பெண் போலீஸ் ஜெயமணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெய்சங்கரின் வாக்குமூலத்தைக் கேட்டு, தனிப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையைச் சேர்ந்த மணியன் மனைவி ஜெயமணி(40); காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் பணியாற்றினார்.
கடந்த ஆக., 23ம் தேதி, பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வலசுபாளையம் பிரிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அன்றிரவு 8.30 மணிக்கு, "டியூட்டி' முடிந்ததும், ஊருக்கு செல்வதாக சக போலீசாரிடம் கூறிச் சென்ற ஜெயமணி, வீடு செல்லவில்லை; காணவில்லை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். ஆனால், செப்., 18ம் தேதி, பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் பிரிவில் ஜெயமணி சடலமாக கிடந்தார்.
முக்கிய திருப்பம்: இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக, குற்றவாளி குறித்த தடயம் சிக்கியது. கொலை செய்து விட்டு, குற்றவாளி திருடிச் சென்ற மொபைல் போனில் உள்ள இ.எம்.ஐ.இ., எண்ணை கொண்டு கூடுதல் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த மொபைல் போன் பலரது கைகளுக்கும் மாறிமாறி, சேலத்தில் ஒருவருக்கு விற்கப்பட்டிருந்ததை கண்டறிந்த போலீசார், அந்நபரிடம் விசாரித்த போது, எடப்பாடியைச் சேர்ந்த ஜெய்சங்கரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். ஜெய்சங்கர், இதற்கு முன் கற்பழிப்பு, கற்பழித்து கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவன் என்பதை போலீசார் அறிந்து கொண்டனர். ஜெய்சங்கரை பிடிப்பதற் கான திட்டத்தை தனிப்படை போலீசார் ரகசியமாக வகுத்தனர். சாதாரண உடையில், எடப்பாடி தாலுகா, காணியம்பட்டி ஊராட்சி, கோணசமுத்திரத்தில் உள்ள அவனது வீடு அருகே போலீசார் காத்திருந்தனர். ஆனால், அவன் வரவில்லை. இரண்டு நாட்களாக காத்திருந்த போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நேற்று முன்தினம் பகல் 1.00 மணிக்கு கணக்கம்பாளையம் பிரிவில், போலீசார் சென்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் பைக்கில் வந்த ஒருவன், வேகமாக செல்ல முயன்றான். மடக்கிய போலீசார் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினான். பைக் நம்பரை சோதனை செய்த போது, நம்பர் பிளேட் மாற்றியது தெரிந்தது. பெருமாநல்லூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, விசாரித்தனர். போலீசாரிடம் சிக்கியவன் பெயர் ஜெய்சங்கர் என்பது தெரிந்தது.
போலீசாரிடம் ஜெய்சங்கர் தெரிவித்ததாக கூறப்படுவதாவது: ஜெய்சங்கருக்கு 2003ல் திருமணம் நடந் துள்ளது; மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். திருமணத்துக்கு முன், காணியம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவரின் மனைவி கையை பிடித்து இழுத்து, ஊர்ப்பஞ்சாயத்து செய்யப் பட்டதில், 7,000 ரூபாய் அபராதம் கட்டியுள்ளான். அதிலிருந்து அவனது, "காம லீலை' துவங்கியுள்ளது. கடந்த 2008 செப்., 9ல், சங்க கிரியைச் சேர்ந்த சேலம் நகர போலீசில் பணிபுரியும் ராஜகோபால் மனைவி இந்திரா காந்தியை கற்பழித்து கொலை செய்தான். அடுத்து, கடந்த ஏப்., 20ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூர் - குண்டூரைச் சேர்ந்த ஜெயகாந்தம் (70) என்ற மூதாட்டியை கொலை செய் தான். அங்கிருந்த அவரது பேத் தியை கற்பழிக்கும் நோக்குடன் சென்றபோது கொலை நடந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக, பெண்களை கற்பழித்தல், நகைகளை வழிப்பறி செய்தல் போன்றவற்றை ஜெய்சங்கர் செய்துள்ளான். கடைசியாக கடந்த மாதம் 19ம் தேதி பெருந்துறை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அமுதம் பேக்கரி அருகே மெயின் ரோட்டில், வேறொரு நபருடன் கூட்டு சேர்ந்து, தனி வீட்டில் இருந்த பெண்ணை கத்தியால் குத்தி, காதை அறுத்து கம்மல், செயினை திருடினான்.
காயம் செய்த பின் கற்பழிப்பு: ஜெய்சங்கரிடம் சிக்கிய பெண்களில் சிலரை மட்டும் கற்பழித்து, நகைகளை திருடியுள்ளான். பெண்கள் சிக்கியதும், முதலில் கழுத்தின் பின் பகுதியில் கத்தியால் குத்துவது வழக்கமாம்; அப்பெண் மயக்கமானதும் கற்பழித்து விட்டு, காதை அறுத்து கம்மலை எடுத்து விட்டு, முகத்தின் பல பகுதி, கைகள், மார்பு ஆகிய பகுதியில் குத்தி, கொலை செய்து விடுவானாம். ஜெய்சங்கரின் காமவேட்டைக்கு, கோவை மேற்கு மண்டல காவல் எல்லையில் மட்டும் ஏழு அப்பாவி பெண்களும், திருச்சியில் ஒரு பெண்ணும் சிக்கியுள்ளனர். எட்டு பெண்களை கற்பழித்து கொன்றது, இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது, ஐந்து வழிப்பறி, ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்து, கற்பழிப்பு என மொத்தம் 17 வழக்குகளில் தற்போது ஜெய்சங்கர் மாட்டியுள்ளான்.
ஜெயமணி சிக்கியது எப்படி: ஆக., 23ம் தேதி இரவு 8.20 மணிக்கு வலசுபாளையம் பிரிவில், "டியூட்டி' முடிந்ததும், அரச்சலூருக்கு செல்ல ஜெயமணி முடிவு செய்து, எஸ்.ஐ.,க்கு தெரியப்படுத்தியுள்ளார். அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறினார்; கண்டக்டர், "பஸ் குன்னத்தூர் செல்கிறது என்றும், பெருந்துறை சென்று அரச்சலூர் செல்லுமாறு' கூறினார். உடனே இறங்கிய ஜெயமணி, மெயின் ரோட்டுக்கு சென்று பைக்கில் வந்தவர்களிடம், "லிப்ட்' கேட்டார். அவ் வழியாக, திருட்டு பைக்கில் வந்த ஜெய்சங்கர், ஜெயமணியை ஏற்றிக் கொண்டு சம்பவம் நடந்த காளிபாளையம் பிரிவில் திரும்பியுள்ளான். ஜெயமணி, "வண்டியை ஏன் இங்கு திருப்புகிறாய்' என்றதற்கு, "எனது அப்பா இங்கு வசிக்கிறார்; அவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, செல்லலாம்' என்று ஜெய்சங்கர் கூறினான். சந்தேகமடைந்த ஜெயமணி, பைக்கிலிருந்து குதித்து, ஜெய்சங்கரை திட்டியவாறே சில அடி தூரம் உள்ள மெயின் ரோட்டுக்கு நடந்து சென்றார். ஆவேசமடைந்த ஜெய்சங்கர், பைக்கில் எப்போதும் வைத்திருக்கும் கத்தியை எடுத்து, அவரது பின் கழுத்தில் குத்தினான். எதிர்பாராத இத்தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை, அருகிலிருந்து சுடுகாட்டுக்கு இழுத்துச் சென்று கற்பழித்துள்ளான். உயிருக்கு போராடிய ஜெயமணி, ஜெய்சங்கரின் வயிற்றில் உதைத்துள்ளார். ஆவேசமுற்ற அவன், முகம், மார்பு, கைகளில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். ஜெயமணியின் காதை அறுத்து கம்மல், பேன்ட் பாக் கெட்டிலிருந்த போலீஸ் ஐ.டி., கார்டு, 250 ரூபாய் ரொக்கம், தாலிக்கொடி, மொபைல் போனை திருடிக் கொண்டு, பைக்கில் தப்பினான். எடப்பாடிக்கு செல்லும் வழியில், சித்தோடு வாய்க்காலில் கத்தியை கழுவி, பிற பொருட் களை வாய்க்காலில் வீசி விட்டு வீட்டுக்கு சென்றான். ஐ.டி., கார்டை மட்டும் வீட்டில் பத்திரப்படுத்தியுள்ளான். ஒரு வாரம் கழித்து மொபைல் போனை விற்றான். ஜெயமணி கொலைக்கு பின்னும், ஐந்து பெண்களை கற்பழித்து கொலை செய்து, நகைகளை திருடியுள்ளான். கைது செய்யப்பட்ட ஜெய் சங்கரிடம் இருந்து ஒரு பைக், 26,400 ரூபாய் மதிப்புள்ள 22 கிராம் தங்க நகை, மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அவன் இதுவரை 20 சவரன் தங்க நகை, மொபைல் போன்கள், மொபட், பைக் ஆகியவற்றை திருடியுள்ளான்.
நவ., 3 வரை சிறைக்காவல்: பெண் போலீஸ் ஜெயமணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெய்சங்கரை பெருமாநல்லூர் போலீசார், திருப்பூர் ஜே.எம்.எண் 2 கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு, மாஜிஸ்திரேட் விடுப்பில் இருந்ததால், பொள்ளாச்சி ஜே.எம்.எண் 2 மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி பொறுப்பு மாஜிஸ்திரேட்டாக இருந்தார். அவர் பொள்ளாச்சி கோர்ட்டில் பணியில் இருந் ததால், இங்கு வந்து மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் மாலை 4.00 மணிக்கு ஜெய்சங்கரை ஆஜர்படுத் தினர். ஜெய்சங்கரை, நவ., 3ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துரைகள்: