-
மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு சென்ற பெண் காவலர் கற்பழித்து கொலை !
திருப்பூரில் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவிற்கு பாதுகாப்பு சென்ற பெண் போலீசார் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழக போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு, மாவட்டம் அரச்சலூரை சேர்ந்தவர் மணியம் (43). இவர் கடந்த காலத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். அந்த பணியல் இருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற்று, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி ஜெயமணி (39). காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
ஜெயமணி கடந்த மாதம் 23 ம் தேதி தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திருப்பூர் வந்த போது பெருமாநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
பணியை முடித்து விட்டு, வீடு திரும்புவதாக உயர் அதிகாரிகளிடம் கூறி விட்டு சென்ற ஜெயமணி பல நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது கணவர் பல இடங்களில் தேடியும் ஜெயமணி கிடைக்காததால், இது குறித்து காங்கேயம் டி.எஸ்.பி. -யிடம் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில், பெண் காவலர் ஜெயமணி, பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு அருகில் உள்ள காளிபாளையம் பிரிவில் ஒரு சுடுகாட்டில் பெண் பிரேதம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலையடுத்து அப் பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று அருகில் இருந்த தடயங் களை வைத்து விசாரணை நடத்திய போது அது காணாமல் போன பெண் காவலர் ஜெயமணி தான் என்று உறுதி செய்தனர்.
பெண் காவலர் ஜெயமணியன் உடைகள் கழற்றப்பட்ட நிலையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.
இதனால் இந்த வழக்கை திருப்பூர் டி.எஸ்.பி. காமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் , தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் , நிகழ்ச்சி , பாதுகாப்பு சென்ற பெண் காவலர் கற்பழித்து கொலை , போலீசார் அதிர்ச்சி , வழக்கு பதிவு, தனிப்படை, விசாரணை,
2 கருத்துரைகள்:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Police already arrested the culprit
Please Read the Link
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5360&ncat=&archive=1&showfrom=10/21/2009