Advertisement



  • இலங்கை அகதி பெயரில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கொலை மிரட்டல்!

    இலங்கை அகதி பெயரில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது
    தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க சதி நடக்கிறது. இன்று கூட எனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழம் அமைப்போம் என்று பேக்ஸ் அனுப்பி இருக்கிறார்கள். யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை.

    காங்கிரஸ் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது. ஒவ்வொரு தலைவர்களுக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.

    இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் காங்கிரஸ் அதை அனுமதிக்காது. வன்முறை, பிரிவினைவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை.

    நேற்று எனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்தும், இன்று வந்துள்ள மிரட்டல் குறித்தும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos