Advertisement



  • மகன் பொலிஸ் வேடம் பூண்டதை மறைப்பதற்காக தற்கொலை வாகனப் பூச்சாண்டி காட்டினார் எஸ்எஸ்பி. மாலம்பே தகவல் தொழில்நுட்ப கல்ல£ரி ஒன்றில் பயிலும் தனது மகன் பொலிஸ் அதிகாரத்தை கையில் எடுத்து சகமாணவன் ஒருவரை கட்த்திச் சென்று சித்திரவை செய்த விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து, பிரச்சினை முடி மறைக்கப்பட முடியாத நிலைக்கு வந்த போது நவீன வியூகம் ஒன்றை வகுத்கு தற்கொலைக் குண்டு பூச்சாண்டி ஒன்றை காட்டி தனது மகனது தவறை மறைத்து விடலாம் என கொழும்பு குற்றத் தடுதப்பு பிரிவின் இயக்குனர் வாஸ் குணவர்த்தன அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் அம்பலமாகியுள்ளது.

    வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கே மேற்படி தற்கொலை வாகன விடயம் முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டுள்ளார்.

    இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காலை 10 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு உதவி கோரியுள்ளதுடன் அந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி ஒருவரின் ஒத்துழைப்பின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வாகனம் ஒன்று தொடர்பில் தகவல் தெரியவந்துள்ளது.

    குறித்த வாகனம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த வாகனம் வாடகைக்காக சிலரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொலிஸாhர் அந்த வாகனத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறியதும் தொலைபெசி மூலம் தொடர்பு கொண்ட சந்தேக நபர் வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரச் செய்துள்ளார்.

    அதன் பின்னர் குறித்த வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியை வாகனத்திலிருந்து கீழே இறக்கியுள்ள பொலிஸார் அதனை சந்தேக நபருடன் கொழும்புக்கு எடுத்து வந்துள்ளனர். இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லெவ்கேயிடம் ஊடகம் ஓன்று கேட்ட போது தெரியவந்ததுள்ளது.

    அதிசக்தி வாய்ந்த 20 குண்டுகள் பொறுத்தப்பட்ட வான் ஒன்று மன்னார், உப்புக்குளம் பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது என்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட வரும் பிரசாரத்தில் உள்ள உண்மைத் தன்மை குறித்து முழுமையானதொரு விசாரணையினை நடத்தி அது தொடர்பான அறிக்கையினை தமக்கு கையளிக்குமாறு வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கேவினால் மன்னார் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசில் பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க ஆகியோருக்கு உத்தரவு இட்டுள்ளார்.

    இந்நிலையில் குறித்த வாகனத்தில் குண்டுகள் எதுவும் பொருத்தப்பட்டிருந்தமை தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று பிரதி பொலிஸ் மா அதிபர் லெவ்கே தெரிவித்தார். அவ்வாறு குண்டுகள் பொறுத்தப்பட்டிருந்தால் முதலில் அந்தக் குண்டுகளை செயலிழக்கச் செய்திருக்க வேண்டும். அத்துடன் அந்த வாகனத்தில் குண்டுகள் காணப்பட்ட விடயம் தொடர்பில் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற வகையின் எனக்கோ அல்லது பிரதி பொலிஸ் மா அதிபருக்கோ இல்லை சிரேஷ் பொலிஸ் அத்தியட்சருக்கோ தெரிவித்திருக்க வேண்டும்.

    குண்டுகள் பொறுத்தப்பட்ட வாகனம் ஒன்று கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் தான் வானொலிச் செய்தியின் மூலமாகவே அறிந்து கொண்டதாக தெரிவித்த லெவ்கே இந்த சம்பவம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணையை நடத்தில் அது உண்மையா? போய்யா? ஏன்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசில் பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க ஆகியோருக்கு உத்தரவு இட்டுள்ளார்.

    இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தான் பொலிஸ் மா அதிபருக்கும் தகவல் வழங்கியதாக லெவ்கே மேலும் கூறினார்.

    more
  • கே.பியின் கைதும்,பிரபாகரன் கடைசியாக கையெழுத்திட்ட கடிதமும் - அருந்தா

    ஆகஸ்ட் 5ம் திகதி 'தென்கிழக்காசிய' நாடொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட கே.பி அவர்கள் உண்மையாகவே கைது செய்யப்பட்டாரா அல்லது இருதரப்பாரும் (கே.பி--இலங்கை பாதுகாப்பு பகுதி) செய்துகொள்ளும் நாடகமா என்ற கேள்வி பலரைக்குழப்புகிறது.

    2008ம் ஆண்டுக் கடைசியில் புலிகள் தங்களின் பாதுகாப்பிலிருந்த பகுதிகளை விட்டு ஓடுவதற்குப் புலிகளின் இராணுவப் பலவீனம் மிகவும் உறுதுணையாகவிருந்தது. புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பல கப்பல்கள் சரியாக வரவில்லை, வந்தவை பல கடலில் மூழ்கடிக்கப்பட்டன. இலங்கைப் பாதுகாப்பு இரகசியப்பகுதிக்கு இந்தக்கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களைக் கொடுத்தது யார்?

    பெரும்பாலான புலி ஆதரவாளர்கள் மன்னார்ப்பகுதி; அரசுவசம் வந்தவுடனனேயே ஓடத்தொடங்கிவிட்டார்கள். புலிகளின் விசுவாசிகள் பிரபாகரனின் மனைவியையும் குழந்தைகளையும் வெளிநாடு அனுப்புமாறு பல தடவை கேட்டுக்கொண்டார்கள். ஆனால் வெளியிலிருந்த ஒரு பிரமுகரின் ஆலோசனையில மதிவதனியும் குழந்தைகளும் வெளியே செல்லாமற் தடுக்கப்பட்டார்கள். அதற்குக் காரணம் யார்?; பிரபாகரன் புதுமாத்தளனை விட்டு வெளியேற, அவர் தனது குடும்பத்துடன் இருந்தால் உதவி பெறுவது இலகு என்ற காரணம் கொடுக்கப்பட்டதாம். இந்த ஆலோசனையைச் சொன்னது யார்?. பிரபாகரனின் குடும்பம் அடியோடு அழிந்தால் நன்மை பெறுவது யார்?

    2008ம்ஆண்டு கடைசிக்கட்டத்தில் புலிகள் பல தோல்விகளைத் தழுவிக் கொண்டிருக்கும் போது,'தற்செயலாக நீங்கள் தலைமறைவாக இருக்க நேர்ந்தால் இயக்கத்தை முன்னெடுக்க ஒரு தலைமை தேவை' என்று பல தடவைகள் கே.பி பிரபாகரனுக்குச் சொல்லியதாக மிகவும் நம்பகரமான இடங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

    கே.பியின் தொல்லை தாங்காமலும் புலிகளின் தோல்விகளால் சோர்வடைந்திரந்ததாலும் ' எனக்கு ஏதும் நடந்தால் நீங்கள்தான் கொண்டு நடத்தவேண்டும்' (இவை பிரபாகரனின் வார்த்தைகள்) என்று பிரபாகரன் சொல்ல, 'அப்படி நீங்கள் வார்த்தைகளால் சொன்னால் நான் என்னவென்று வேலை செய்யலாம். உங்களின் கையெழுத்து இல்லாவிட்டால் யாரும் என்னை நம்ப மாட்டார்கள்' என்று பத்மநாதன் சொல்ல பிரபாகரன்' எனக்கு ஏதும் நடக்கும் பட்சத்தில் குமரன் பத்மநாதனை என் இடத்துக்கு ஏற்றுக்கொள்ளவும்' என்று எழுதிக்கையெழுத்து வைத்துக் கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கையெழுத்து வைத்த கடைசிப்பத்திரம் இதுவேயாகும்.

    இந்தக்;கையெழுத்தின்பின் புலிகளின் தோல்வி கண்மூடித் திறப்பதற்குள் நடந்து விட்டது. புலிப்போராளிகள் பலர் இரவோடிரவாக ஓடிவிட்டார்கள். பாடசாலைப் பிள்ளைகள் புலிகளுக்குப்போராடப் பிடிக்கப்பட்டார்கள்.

    12.05.09ல் பிரபாகரனின் மகள் துவாரகா போர்க்களத்தில் கொல்லப்பட்டாள். 13 அல்லது 14ம் திகதி மதிவதனி காயம்பட்டார்அல்லது இறந்துவிட்டார் (செல் அடியில்?). மூத்தமகனும் இறந்துவிடத் தனது கடைசி மகனைத் தப்பவைக்கப் பிரபாகரன் மக்களுடன் மக்களாகத் தன் கடைசி மகனை அனுப்பினார். தப்பி வந்த தமிழ்மக்கள் பிரபாகரனின் கடைசி மகனையும் அரச படையிடம் காட்டிக்கொடுத்தனர். அந்த இளம்பாலகனைக்கொண்டு இராணுவத்தினர் தகப்பனின் இடத்தைக்கண்டு பிடித்தார்கள். தான் சரணடைந்தால் மகனின் உயிர் தப்பலாம் என்று நினைத்தோ என்னவோ பிரபாகரன் சரணடையவந்தார்.

    அதன்பின் நடந்ததை ஊகித்துக்கொள்ளவும்.

    இந்த மாற்றத்துக்கெல்லாம் யார் காரணம்? கே.பிக்குப் பிரபாகரன் போர்க்களத்தில் நடக்கும் முழுவிடயங்களையும் சொல்லிக்கொண்டிருந்தார். அவை பெரும்பாலும் இலங்கை அரசுக்கும் தெரியும்.

    அவை எப்படி? புலிகளின் உள்மட்டத்தில் சர்வதேசப் பொறுப்பாளரான காஸ்ட்ரோவுக்கும்,புலனாய்வுத்துறையின் பொறுப்பாளரான் பொட்டுவுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காது என்று சொல்லப் படுகிறது. புலிகள் போர்க்களத்தில்; தோல்வியுற்றால் சர்வதேசப் பணங்களைத் தங்கள் வசப்படுத்த காஸ்ட்ரோ தனது நம்பிக்கைக்குரிய' நெடியவனை' வெளிநாட்டுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது அதை முறியடிக்கப் பொட்டுவின் கூட்டம் கேபியைத் தலைவராக்கியது என்ற கதையும் அடிபடுகிறது.

    இப்போது கேபி இலங்கை அரசின் விருந்தாளி.மிகவும் விலை உயர்ந்த விடயங்களைச் சொல்லக்கூடியவர் பல உடல்நோய் வருத்தங்களுடன் மாரடிக்கும் கே.பி. துனது அன்புடைய மனைவி குழந்தைகளுக்காகத் தானாக வந்து' அகப்பட்டுக்கொண்டதாக'நடிக்கிறாரா ஒரு காலத்தில் இலங்கையின் மந்திரிகளில் ஓருவராவாரா என்பது கேள்வி.புலிகளின் பணத்துக்காக நடக்கும் இந்தச் சண்டையில் பல புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். ஏழைத்தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணம் இன்று எப்படியெல்லாம் வேலை செய்கிறது?

    more
  • கே.பி.யிடம் விசாரணை நடத்த சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் தீவிர முயற்சி.. இந்திய றோ பிரிவிலிருந்து நால்வர் அடுத்த வாரமளவில் வருவர் பாதுகாப்பு தரப்பினரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளரும் புதிய தலைவருமான குமரன் செல்வராஜா பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்காக இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நால்வர் அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று தேசிய நாளிதலொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டு அதற்கான சந்தர்ப்பம் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத வர்த்தக விவகாரம் தொடர்பான சர்வதேச பொறுப்பாளர் கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்கான அனுமதியினை வழங்குமாறு சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் பலவும் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினரே இந்த வேண்டுகோள்களை முன்வைத்துள்ளனர். அந்தவகையில் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் சீ.ஐ.ஏ புலனாய்வுப் பிரிவு, ரஷ்யாவின் கே.ஜீ.பீ. புலனாய்வுப் பிரிவு. அமெரிக்காவின் பயங்கரவாத விசாரணைப் பிரிவான பெடரல் பணியகம், பிரித்தானியாவின் எம்.ஐ 5 புலனாய்வுப் பிரிவு, இஸ்ரேலின் மொசாட் புலனாய்வுப் பிரிவு மற்றும் சீனாவின் அரசாங்க புலனாய்வுப் பிரிவு போன்றனவே மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற பயங்கரவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்படும் கடல் மார்க்கமான ஆயுதக் கடத்தல்கள் தொடர்பான விபரங்கள் கே.பி.யிடம் உள்ளதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவுகள் நம்புகின்றன. அதனாலேயே கே.பி.யிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் அவர்கள் பெரும் அக்கரை காண்பிக்கின்றன.

    இந்நிலையிலேயே இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் நால்வர் கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்காக அடுத்தவாரமளவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். விசாரணைகளின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கே.பி.யிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அந்நாடு அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விட்டிருந்தது. இருப்பினும் அந்தக் கோரிக்கையினை மறுத்த அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமாயின் இலங்கைக்கு வருகை தருமாறு தெரிவித்தது.

    அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை அடுத்தே மேற்படி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நால்வர் அடுத்தவாரம் வருகை தரவுள்ளனர். இதேவேளை கே.பி.யிடம் விசாரணை நடத்த விரும்பும் சர்வதேச புலனாய்வுப் பிரிவினருக்கு இங்கு வந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

    more
  • புலிகளுடன் தொடர்புடைய பாதிரியார் ஜெயநேசன் கைது! புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்படும் கிறிஸ்தவப் பாதிரியாரான ஜெயநேசன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அமைச்சர் ஒருவரே இவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் எனக் கூறப்படுகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்துக்குப் பொறுப்பாக இருந்த குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பு பிரதமரிடம் வழங்கப்பட்டது.

    குறிப்பிட்ட அமைச்சர் மற்றும் வண. பிதா ஜெயநேசனுடைய ஆதரவுடன் பல சி.டி.ம்.ஏ. தொலைபேசிகள் போர் இடம்பெற்ற காலத்தில் புலிகளின் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    ‘கிறிஸ்ரியன் கெயர்’ என்ற தொண்டர் நிறுவனம், ‘லடர் ஹோப்’ என்ற அமைப்புடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றது. ‘லடர் ஹோப்’ நிறுவனத்தின் தலைவராக வண. பிதா ஜெயநேசனே இருந்து வருகின்றார். இலங்கையில் ‘கிறிஸ்டியன் கெயர்’ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளராகவும் இவரே பணிபுரிகின்றார்.

    ஜெயநேசன் கைது செய்யப்பட்ட உடனடியாகவே குறிப்பிட்ட அமைச்சரின் தலைமையிலான குழுவினர் யாழ். ஆயர் அதி வண. டானியல் தியாகராஜாவை அச்சுறுத்தியதாகவும், அதனையடுத்து அவர் கொழும்பு வந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    more
  • கே.பி. எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என கதைக்கப் போவதில்லை. ஆனால் எங்களது பாதுகாப்பில் அவரை வைத்திருக்கிறோம்" - மஹிந்த ராஜபக்க்ஷ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான செயற்பட்டாளர் செல்வராசா பத்மநாதன் மலேசியாவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இதுகுறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ வெளிநாட்டு ஊடகமொன்று செவ்வியளித்துள்ளார். இதன் தமிழாக்கம் இது.

    கேள்வி : கேபியின் கைது எவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    அவரது கைது இலங்கைக்கு மிக முக்கியமானது. ஏனெனில் அவர் தான் பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக இருக்கிறார். இப்போது அவர் எங்களிடம்

    உள்ளார். அவரை நாங்கள் எங்களது பாதுகாப்பில் வைத்திருக்கிறோம். அவர் இப்போது இலங்கையில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    கேள்வி : இது மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் உங்களுக்குக் கிடைத்த முதலாவது பெரிய வெற்றி என்று சொல்லலாம் அல்லவா? சரி, இதனைக் கொண்டு எவ்வாறு விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத மற்றும் பணப் பரிவர்த்தனைத் தொடர்புகளை முறியடிக்கப் போகிறீர்கள்?
    என்னால் தனியே இதனைச் செய்ய முடியாது. சர்வதேசம் இதற்கு எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். இது அவர்களுடைய பொறுப்பெனவே நான் நினைக்கிறேன். எல்லா நாடுகளுடைய அரசாங்கங்களும் இணைந்து இதற்கு உதவ வேண்டும். பயங்கரவாதம் என்பது இலங்கைக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. அது முழு உலகுக்குமான பிரச்சினை. எல்லோரும் இணைந்து தான் அதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

    கேபியின் கைது:

    நான் நினைக்கிறேன், அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று நான் கதைக்கப் போவதில்லை. ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் அவர் எங்களிடம் தற்போது உள்ளார் என்பது தான். அவரைக் கைது செய்ய எங்களுக்குப் பலர் உதவினார்கள். அவர்களுக்கு இவ்விடத்தில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

    பயங்கரவாதத்தைக் கையாள்வது:

    எங்கள் எல்லோருக்கும் உள்ள பொறுப்பு அது. இது ராஜபக்சவின் வழிமுறையா அல்லது புஷ்ஷின் வழிமுறையா என்பதல்ல பிரச்சினை. எங்களிடம் ஒரு வழிமுறை இருக்கிறது. அதனைக் கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழித்தோம். நாங்கள் எல்லோரும் இணைந்து உலகிலிருந்தே பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும். அது தான் நாங்கள் செய்ய வேண்டியது.

    பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது:

    பயங்கரவாதத்திற்கான நிதி என்பது ஆயுதக்கடத்தலிலிருந்தும் போதைவஸ்து கடத்தலிலிருந்தும் தான் கிடைக்கிறது. எனவே அதனை நாங்கள் முறியடிக்க வேண்டும். எனவே ஆயுத வியாபாரிகளும் போதைவஸ்து வியாபரிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

    புலிகளின் வலைப்பின்னல்:

    தெற்காசியப் பிராந்தியத்தின் பல நாடுகளிடையே இவர்கள் சுதந்திரமாக உலாவி வருகிறார்கள். அவர்கள் அங்கு தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இன்னும் சில மேற்கு நாடுகளிலும் அவர்கள் பலமாக இருக்கிறார்கள்.

    இனப்பிரச்சினைக்கான தீர்வு:

    இது நிச்சயமாக உள்நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் தீர்வு தான். நாங்கள் வெளியிலிருந்து எதனையும் பிரதி பண்ண விரும்பவில்லை. முக்கியமாக மேற்கிலிருந்து, குறைந்த பட்சம் அயல்நாடுகளிடமிருந்து கூட எதனையும் நாம் பிரதி பண்ண விரும்பவில்லை. எல்லா வகையான தீர்வுகள் தொடர்பாகவும் அக்கறை செலுத்தலாம். தீர்வு நாட்டினுள்ளிலிருந்து தான் எழும். உண்மையான தீர்வு மக்களிடமிருந்து வரும். அது எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கும். எல்லா சமூகங்களாலும் அங்கீகரிக்கப்படக் கூடியதாக இருக்கும்.

    அபிவிருத்தி:

    என்னுடைய பிரதானமான நோக்கு இப்போது இடம் பெயர்ந்தவர்களைக் குடியேற்றுவது தான். கடந்த 30 வருடங்களில் வடக்கு கிழக்கு எத்தகைய அபிவிருத்தியையும் காணவில்லை. நாங்கள் இப்போது அதனை ஆரம்பித்திருக்கிறோம். அடிப்படைக் கட்டுமானங்களுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம். அதன்பின்னர் இம்மக்களை மீளக் குடியேற்ற வேண்டும். அதன் பின்னர் அபிவிருத்தி தானாகவே வரும். அபிவிருத்தி இல்லாமல் எதனையும் அடைந்துவிட முடியாது. அதற்கு முதலில் அப்பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். அதன்பின்னர் நீர், மின்சாரம், குடியிருப்பு, வீதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றைத் தான் நாம் இப்போது செய்ய ஆரம்பித்துள்ளோம். 180 நாட்களுள் அவர்களை மீளக் குடியேற்றுவது தான் எங்களது திட்டமாக இருக்கிறது. அதற்குள் 60 வீதத்தினரையாவது நாம் மீளக் குடியேற்றி விட்டால் நாம் திருப்தியடையலாம்.


    அதிகாரப்பகிர்வு:

    கேள்வி : அதிகாரப் பகிர்வு இந்தப்பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று நினைக்கிறீர்களா?

    எங்களுடைய அரசமைப்பிலேயே அதிகாரப்பகிர்வு இருக்கிறது. ஆனால் நாங்கள் எவ்வளவு கொடுக்கப் போகிறோம் என்பது தான் கேள்வியாக உள்ளது. அது ஒரு பிரச்சினை இல்லை. அது விரைவில் செய்யப்பட்டு விடும். மாநகர சபைகள், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் என பல விடயங்கள் இருக்கின்றன. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் போது அவர்களுக்கு மேலதிகமாக எதனைக் கொடுக்கலாம் என்று பார்க்கலாம். 80 வீதமான தமிழர்கள் தெற்கில் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள். நான் சொல்கிறேன் சிறுபான்மையினர் என்று இங்கு எவருமில்லை.


    13வது திருத்தச்சட்டம்:

    நாங்கள் அதனோடு புதிதாக ஒன்றை கொடுக்கவுள்ளோம். அதாவது புதிய சேம்பர் ஒன்றைக் கொண்டு வர உள்ளோம். இரண்டாவது சேம்பர் எனும் அதனூடாக மாகாணங்களில் சிறுபான்மையோருடன் அதிகாரங்களைப் பகிர உள்ளோம்

    அது எவ்வாறு அமைந்திருக்கும்?

    அதனை நாம் இன்னமும் கலந்துரையாடவில்லை. அதற்கான பிரேரணைகள் உள்ளன. எல்லா அரசியல் கட்சிகளையும் அழைத்து அவற்றை நாம் அவர்களுடன் கலந்தாராய்வோம்.

    சமஸ்டி குறித்து:

    இல்லை, இல்லை. சம~;டி என்ற பேச்சுக்கே இலங்கையில் இடம் இல்லை. அது இங்கிருந்து தூக்கி வீசப்பட்டு விட்டது. மக்களிடமிருந்து வரும் ஒரு தீர்வே நடைமுறைப்படுத்தப்படும். சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் புத்திஜீவிகள் ஆகியோர் கலந்துரையாடி ஒரு தீர்வைக்காணுவர். யாராவது வந்து மேற்கில் இப்படி நடந்தது அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொன்னால் நாம் அதனை ஏற்கப் போவதில்லை.

    தமிழர்களுக்கான தீர்வு:

    ஜேஆரோ சந்திரிகாவோ ரணிலோ எவரும் பிரபாகரனுடன் பேசவே முயன்றார்கள். 13வது திருத்தச் சட்டத்தை பிரபாகரன் முதலில் ஏற்றிருந்தார். கையொப்பமுமிட்டிருந்தார். பின்னர் திடீரென அவர் அதனை நிராகரித்தார். நானும் கூட அவருடன் பேச முயன்றேன். ஏழு மாதங்களாக நாங்கள் முயற்சி செய்தோம். அவர் பேச்சுக்கான கதவை மூடிவிட்டார். இறுதியாக நான் இவ்வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

    more
  • பாம்புக் கடை , உடும்புக்கடை =அலங்காரப் பொருட்கள்

    உயிர்களைக் கொன்று , தோலை உரித்தெடுத்து...

    இந்தப் படங்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஒரு சேர அளிக்கக்கூடியன. இதன் ஆரம்ப நிலை உங்களை முகம்சுழிக்க வைப்பதாக இருப்பினும் கூட , இறுதி நிலையில் நீங்கள் கூட பெரு விருப்பத்துடன் உங்களோடு சேர்த்தணைத்துக் கொள்ளும் ஒன்றாக இவை இருக்கக் கூடும். இனி படங்களைச் சற்றுப் பார்ப்போம்.

     
    பாம்புகள், முதலைக் குட்டிகள் இதற்கென்றே பிடித்துவரப்பட்டுக் கொல்லப்படுகின்றன
     
    மிகவும் கவனமாகத் தோல் உரித்து வேறாக்கப்படுகிறது

    அப்பாவி ஜீவன்களென பாம்பு, முதலை போன்றவற்றைச் சொல்ல முடியாதுதான். எனினும் இப் பூமியில் வாழும் உரிமை நமக்கிருப்பதைப் போலவே அவற்றுக்கும் இருக்கிறதுதானே ?
    மனிதனின் அற்பமான பேராசைகளுக்கும், அந்தஸ்துக்காக வேண்டியும் இவை போலப் பல உயிர்கள் தினந்தோறும் நாம் அறிந்த விதத்திலும், அறியாப்பக்கங்களிலும் பலியாகிக் கொண்டே இருக்கின்றன.
     
    இவ் உயிர்களின் தோல்களால் உருப்பெறும் செருப்புக்கள், தோற்பைகள், கைப்பைகள், தோலாடைகள், தோல் பொருட்கள் எனப் பலவற்றுக்கு புராதன காலம்தொட்டு இன்றைய நவீன காலம்வரை சமூகத்தில் பாரிய வரவேற்பு இருந்துகொண்டே இருக்கின்றது. 
    இவ்வாறாகத் தங்கள் உயிர் கொடுத்து, உங்கள் அந்தஸ்த்தை உயர்த்தும் பொருட்களை இனி நீங்கள் பாவனைக்கென எடுக்கும் போதெல்லாம் ஒரு உயிரின் கதறல் உங்கள் காதுகளில் கேட்கட்டும் !

    more
  • தாயைச் சந்திக்கும் தருணங்களில்...! பிரபாகரன் நெகிழ்ச்சி. -- அருட்தந்தை ஜெகத் கஸ்பார்
    எல்லாம் நிறைவேறிய மே 17-ம் நாள் நந்திக்கடல் கரையில் நின்றவர். எங்கும் பிணக்காடாய் கிடந்த முல்லைத்தீவு கடற்கரை யைக் கண்டவர். போராளி. வவுனியா காடுகளை நன்கறிந்தவராயிருந்ததால், தப்பி வந்த முதல் நாள் இரவே காட்டுக்குள் மறைந்து, எப்படியோ கொழும்பு சேர்ந்து, புண்ணியவான்கள் சிலரின் உதவியோடு ஐரோப்பிய நிலப்பரப்பினை சேர்ந்துவிட்டார். மூன்று வாரங்களுக்கு முன் எனக்குத் தொலைபேசினார். மனதின் பாரங்களை இறக்கிவைக்க வேண்டி பிரான்சிலுள்ள லூர்து மாதா திருத்தலம் வந்திருப்பதாகவும், அங்கிருந்தே தொலைபேசுவதாகவும் கூறினார். அந்தப் போராளியின் பெயர் சிவரூபன்.

    வேரித்தாஸ் வானொலியில் என் முதல் லூர்துமாதா திருத்தல பயணம் குறித்து படைத்த நிகழ்ச்சி செறிவானது. எனக்கே மிகவும் பிடித்திருந்தது. உலகில் நான் பார்த்து "வியாபாரம்' இல்லாதிருந்த புண்ணிய இடம் அது. அதீத பக்தியெல்லாம் பொதுவில் எனக்கு வராத சமாச்சாரம். ஆனால் இத்தூய மண்ணில் காற்தடம் பதித்த கணத்திலேயே கண்கள் பனித்தன. சுமார் பத்து நிமிடங்கள் கட்டின்றி அழுதுகொண்டி ருந்தேன். சடங்குகளில்தான் விருப்பில்லையே தவிர சரணடையும் ஆன்மீகத்தில் ஆசையுண்டு. அதுவும் ஏழாவது வயதில் தந்தையை இழந்து, தாய் வளர்த்த பிள்ளை நானென்பதால் ஆழ்மனதில் மாதா பற்று அதிகம்.

    முதன்முறையாக நான் லூர்துமாதா திருத்தலம் சென்றது 1997-ம் ஆண்டு ஐரோப்பாவின் கோடை காலத்தில். திருத் தலத்தினூடே ஓடும் அருவியை பார்த்துக் கொண்டே மரநிழலொன்றில் முன்பகல் முழுதும் அமர்ந்திருந்த வேளை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் ""குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, குறை யொன்றும் இல்லை கோவிந்தா'' -பாடல் நினைவுக்கு வந்து மனதை நிறைத்தது. மனதெல்லாம் இனம்புரியா நன்றியுணர்வில் நிறைந்து சிலிர்ப்பாயிருந்தது.

    அக்கணத்தில் என் நாட்குறிப்பேட்டை எடுத்து, ""சொல்லில், சொல்லில் வடிக்க முடியா நன்மைகளை நீ செய்தாய், குறை யென்று என் வாழ்வில் ஏதுமில்லை'' என்று எழுதிய பாடலுக்கு 2001-ம் ஆண்டு இசையும் அமைத்தேன். உண்மையில் நிர்வாகம், பேச்சு, எழுத்து இவற்றையெல்லாம்விட என் இயல் பான தாய்மாடி இசை. கிடார், கீ போர்டு எல்லாம் ஒரு காலத்தில் நன்றாக இசைப்பேன். அவற்றையெல்லாம் இழந்துவிட்டேனே என்று அவ்வப்போது மனம் கிடந்து தவிக்கும்.

    திருத்தல மர நிழலில் அமர்ந்து எழுதிய அந்தப் பாடலின் சரணத்தில் ""வளர்த்த ஆசைகள் வசமாக வில்லை, நினைத்த காரியம் நிறைவேறவில்லை, ஆனாலுமே அன்பானவா... குறையென்று என் வாழ்வில் ஏதும் இல்லை'' என்ற வரி அவ்வப்போது என் நாவில் வந்து போகிற மறக்க முடியாத வரி. உண்மையில் என் வாழ்வும் அதுதான். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் இரண்டிலும் சமநிலை பேணப் பயின்றுவிட்டால் குறையென்று வாழ்வில் எதுவுமில்லைதான்.

    நான் 1997-ம் ஆண்டு வேரித்தாசில் லூர்துமாதா திருத்தலம் பற்றி படைத்த நிகழ்ச்சியை, வன்னிக் காடுகளுக்குள்ளிருந்து அப்போது கேட்ட போராளியான சிவரூபன் 12 ஆண்டுகளுக்குப் பின் அவர் அத்தலத்தில் நின்றபோது நினைவுகூர்ந்து என்னையும் நினைத் திருக்கிறார். வாழ்வு பாரபட்சம் காட்டி பரிசாகத்தரும் பெறுமதியான பொக்கிஷங்கள் பொன்னோ, பொருளோ, பணமோ அல்ல. இத்தகு முகம் தெரியா மானுட உறவுக்கண்ணிகள்தான்.



    இன அழித்தலின் பிணக்காடு வழியே ரத்தமும் சதையும் மிதித்து தன் உயிரை மிச்சப்படுத்திய சைவரான சிவரூபனுக்கு அழுவதற்கோர் தாய்மடி அவசியப்பட்டிருக்கிறது. லூர்துமாதா வீடு நோக்கி ரயில் ஏறியிருக்கிறார்.

    சில வாரங்களுக்கு முன் சிலுப்பிய கத்தோலிக்க விசுவாசப் பாதுகாப்பு பரிசேயக் கூட்டத்தைப் பற்றி எழுதியிருந்தேனல்லவா? அதென்ன கடவுளின் அருட்செயலோ தெரியவில்லை. இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின், அவரது உடல் வைக்கப்பட்ட கல்லறைக் கோயிலில் கடமையாற்றும் தமிழகத்து அருட்தந்தை ஒருவர் விடுமுறைக்காய் வந்திருந்தார். காஞ்சிபுரத்துக்காரர். கிறித்தவ உலகின் மிகப்புனிதமான கோயில்களில் ஒன்று இது. இந்தக் கல்லறையினின்றுதான் இயேசுபிரான் சாவின் தளைகளை அறுத்தெறிந்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறித்தவ மக்கள் நம்புகிறார்கள்.

    இந்த காஞ்சிபுரத்து அருட்தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களிடம் சிறியதோர் வேலை ஆகவேண்டியிருக்கிறது, உதவ முடி யுமா என்று கேட்டுத்தான் வந்திருந் தார். உரையாடிக் கொண்டிருந்த போது சொன்னார்:

    ""உங்களது தயாரிப்பில் இசைஞானி ஆக்கினாரே சிம்பொனியில் திருவாச கம்... என்னமான படைப்பு... (ரட்ஹற் ஹ ஙஹள்ற்ங்ழ் ல்ண்ங்ஸ்ரீங்) என்று சிலாகித்து வியந்தவர் தொடர்ந்தும் சொன்னார். ""ஏறக்குறைய எல்லா நாட்களுமே இயேசுவின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்ட அத்திருக்கோயிலில் பக்தர்களெல்லாம் அகன்றபின் இரவு பத்துமணிக்கு மேல் நான் சிம்பொனியில் திருவாசகம் கேட்பேன்... அப்படியொரு சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும்...'' என்றார்.

    மதவெறியின் விஷவேர்கள் இந்த மண்ணில் ஒருபோதும் இங்கு ஆழம் போக முடியாதென்பதற்கு சிவரூபனும் இந்த அருட்தந்தையும் சமீப நாட்களில் நான் கண்ட சாட்சிகள்.

    தாயின் திருத்தலத்தில் நின்று சுமார் பத்து நிமிடங்கள் பேசிய சிவரூபன், விம்மி அழுதார். எனது முகவரியை பெற்றுக்கொண்டார். கடைசி நாட்களில் முல்லைத்தீவில் கண்டவற்றையெல்லாம் எழுதி அனுப்பு வேன் என்றார். அவரது கடிதம் நேற்று வந்தது. கடிதம் வடித்த ரத்தக் காட்சி களை அடுத்த இதழில் பதிக்க விழைகிறேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் பெரியார் வழி. கடவுள் நம்பிக்கை இருக்க வில்லையென்பது நேர்காணலினூடே தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இயற்கையை, ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் ஓர் அர்த்தம் இருப்பதைத் திடமாக நம்பினார். வாழ்வை மதித்தார், நேசித்தார். நட்பை, மானுடத்தின் மென்மையான உணர்வுகள் யாவற்றையும் கவித்துவத் தன்மையோடு போற்றினார்.

    நேர்காணலில் அவரிடம் நான் கேட்ட முதற்கேள்வி அவரது தாயின் நினைவுகளைப் பற்றித்தான்.

    ""உங்கள் தாயை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? பார்க்க முடியவில்லை, அவர் அருகில் இல்லை என்ற ஏக்கம் எழுவதுண்டா? உங்கள் தாயின் நினைவுகளை உலகத் தமிழரோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்..'' என்றேன். இதோ வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற மகனின் பதில் :

    ""தாயை சந்திக்கணும் என்று ஆசை இல்லாமல் ஒரு மகனும் இருக்கமாட்டான். ஆனால் என்னுடைய சூழலை பொறுத்த வரைக்கும் 19 வயதிலேயே நான் தலைமறைவான வாழ்க்கை தொடங்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. சிறு வயதிலிருந்தே எனது வீட்டை விட்டு பிரிந்ததால் எனக்கு அவர்களோடு வாழும், பார்க்கும் அந்த சந்தர்ப்பம் குறைவாகவே இருந்தது. என்னுடைய தாயுடன் நான் செலவிட்ட காலங்கள் அந்த 19 வயது வரைதான். அதிலேயும் 18-19 வயதிலேயே நான் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கிட்டேன்.

    அந்த காலகட்டங்களில் போலீஸ் என்னை வெளிப்படையாக தேடவில்லையே தவிர, நான் போராட்ட வாழ்க்கையில் ஈடுபட்டதால் அப்பவே வீட்டில் இருப்பது குறைவு. பிறகு தலைமறைவு வாழ்க்கை யோடு வீட்டுக்குச் செல்வதையே தவிர்த்து விட்டேன்.

    அந்த நேரங்களில் என்னைத்தேடி போலீஸ் எப்போதும் வீட்டுக்கு வந்து கொண்டே இருக்கும். எனது தாயைக்கூட விசாரிப்பார்கள். ஒருமுறை என் தாயை போலீஸ் ஸ்டேஷனுக்கு பிடித்துக்கொண்டு போய் ஒருநாள் வைத்திருந்தார்கள்.

    அப்படிப் போராட்ட வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தே வீட்டுத் தொடர்பே இல்லாமல் இருந்துவிட்டேன். எப்போதாவது 5 வருடம் அல்லது 6 வருடம் என நீண்ட இடை வெளிகளுக்குப் பின்புதான் ஒருநாள் அல்லது இரண்டு நாள் என தொடர்ச்சியாக சந்திப் போம்.

    இப்பகூட கடைசியாக 87-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த கால கட்டத்தில் நாங்கள் ஒரு சுமூக சூழலில் இருந்த நேரத்தில் என் தாயை நான் சந்தித்தேன்.

    அதன்பிறகு இந்தியாவோடு மோதல் வர, தலைமறைவாக இருந்ததோடு கிட்டத்தட்ட 87-லிருந்து இதுவரைக்கும் என் தாயை சந்திக்கவில்லை.

    (நினைவுகள் சுழலும்)

    more
  • கே .பி . கைது ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை (புதியது ) கைதுக்குக்கு உதவியவர்களின் பெயர் விபரங்களுடன் செய்தி விரைவில்
    கைது செய்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் கே.பி. என்ற பெயராலேயே பரவலாக அறியப்பட்டிருந்த போதிலும் அவருக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வைத்திருந்த பெயர் "கழுதை' என்பதாகும். செல்லமாக இந்தப் பெயரை பிரபாகரன் கே.பி.க்குச் சூட்டியிருந்தார்.
    இத்தகவலை பத்தி எழுத்தாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் தமது இணையத்தளத்தில் எழுதியுள்ளார். கே.பி.யின் கைது தொடர்பாக ஜெயராஜ் மேலும் எழுதியிருப்பதாவது; கழுதையானது தனது முதுகில் பொதிகளை சுமந்துவரும். தனது முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத மூடைகளை விநியோகித்தவர் கே.பி. அதனால், அவருக்கு இப்பெயர் வழங்கப்பட்டிருந்தது.

    கடந்த மேயில் பிரபாகரன் மரணமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் உயிருடன் இருக்கும் தலைவர்களில் சிரேஷ்ட உறுப்பினரான கே.பி.யை தலைவராக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை புலிகளின் வெளிநாடுகளிலுள்ள சில உறுப்பினர்கள் எதிர்த்திருந்தனர். பேரின்பநாயகம் சிவபரன் அல்லது நெடியவன் என்பவரது தலைமையில் புலிகளின் ஒரு பகுதியினர் கே.பி. தலைவராவதை எதிர்த்திருந்தனர். அதன்பின் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தலைமைச் செயலராக கே.பி.யை நியமிக்க உடன்பாடு காணப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கு மத்தியிலும் வெளிநாடுகளிலுள்ள புலி உறுப்பினர்கள் மத்தியில் கே.பி.யை தலைவராக ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நெடியவன் இந்த எதிர்ப்பின் பின்னணியில் செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.

    உள்மட்டத்திலான இந்த எதிர்ப்புச் சூழ்நிலையின் மத்தியில் கே.பி.தமது தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார். இன்ரர்போலினால் தேடப்பட்டு வந்த நிலையிலும் உடல்நலக் குறைவினாலும் அவர் சர்வதேச பயணங்களை தவிர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். இதன் விளைவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் இவருடன் கலந்துரையாடுவதற்காக மலேசியாவிற்கு சென்றுவந்தனர். சனல்4 தொலைக்காட்சி பணியாளர் கூட கோலாலம்பூருக்கு புலிகளின் புதிய தலைவரை பேட்டி காணச் சென்றிருந்தார். பாங்கொக்கிற்கும் கோலாலம்பூருக்கும் இடையில் கே.பி.பயணங்களை மேற்கொண்டிருந்தார். கடந்த புதன்கிழமை 5 ஆம் திகதி கே.பி. கோலாலம்பூரில் இருந்தார். கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் 316 ஜலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலிருந்த ஹோட்டலுக்கு அவர் சென்றிருந்தார். லண்டனிலிருந்து வருகை தந்திருந்த இரு விருந்தினர்களை சந்திப்பதற்காகவே அவர் சென்றிருந்தார்.

    கே.பி.க்கு உதவியாளர்களாக சிலர் பணியாற்றினர். சாரதிகளாகவும் பாதுகாவலராகவும் அவர்கள் செயற்பட்டு வந்தனர். ஆட்களைச் சந்திக்க கே.பி.வெளியே செல்லும் போது அவருடைய வாகனத்தில் சாரதி மட்டுமே இருப்பார். குறிப்பிட்ட அந்தத் தினத்தில் கே.பி.அந்த ஹோட்டலுக்கு அப்பு என்று அழைக்கப்படும் தமது சாரதியுடன் சென்றுள்ளார். ஹோட்டல் அறைக்கு வெளியே காத்திருந்த விருந்தாளிகளுடன் கே.பி. சென்றுள்ளார். அப்பு வாகனத்தை நிறுத்திவிட்டு அதற்குள் இருந்திருக்கிறார்.

    பிரிட்டனிலிருந்து வருகை தந்திருந்த விருந்தாளிகளில் ஒருவர் பாலசிங்கம் பாலேந்திரனாவார். இவர், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் பாலசிங்கம் மகேந்திரன் அல்லது நடேசன் என்பவரின் இளைய சகோதரனாவார். மற்ற விருந்தாளி நடேசனின் மகனாவார். நடேசனின் மகன் சில வருடங்களுக்கு முன்னர் லண்டனுக்குச் சென்று அங்கு தனது சிறிய தகப்பனாருடன் இருக்கின்றார். மூவரும் கதைத்துக்கொண்டு இருந்தனர். அப்போது, நண்பரொருவர் கே.பி.யின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பிற்பகல் 2 மணியாகும். அச்சமயம் தனது கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு கே.பி.கதைக்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தான் வெளியே தாழ்வாரத்திற்குச் சென்று கதைக்கப்போவதாக விருந்தாளிகளுக்கு சைகையால் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார்.

    விருந்தாளிகள் சுமார் 1520 நிமிடங்கள் வரை அறைக்குள் காத்திருந்தனர். நடேசனின் மகன் வெளியே சென்று பார்த்திருக்கிறார். கே.பி.யை காணவில்லை. பின்னர் இருவருமாக தேட ஆரம்பித்தனர். அங்கு கே.பி.யின் வாகனமோ அப்புவோ இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கவலையடைந்த பாலேந்திரன் தமது தமிழ்தரப்பு தொடர்புகளுக்கு அழைப்புவிடுத்த கே.பி. திடீரெனக் காணாமல் போய்விட்டது பற்றிக் கூறியுள்ளார்.

    அதேசமயம், கே.பி.க்கு தொலைபேசி அழைப்புவிடுத்த நண்பனும் குழப்பமடைந்திருக்கிறார். கே.பி.யுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளை சடுதியான சத்தம் கேட்டுள்ளது.பின்னர் தொலைபேசி செயலிழந்துவிட்டது. குழப்பமடைந்த நண்பர் தொடர்ந்து கே.பி.க்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்தார். பதில் கிடைக்கவில்லை. பின்னர் தொலைபேசி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நண்பர் கே.பி.யின் தொடர்புகள் மற்றும் கோலாலம்பூரிலுள்ள உதவியாளர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியப்படுத்தி எச்சரிக்கைப் படுத்தினார். கே.பி. தங்கியிருந்த இடத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர். திடீரென ஏதோவொரு காரணத்திற்காக கே.பி.அங்கு சென்றிருக்கலாம் என்று அவர்கள் கருதியிருந்தனர். ஆனால், அங்கு கே.பி.இருக்கவில்லை. ஆனால், கே.பி.யின் இன்சுலின் ஊசிகள் , இதர மருந்துப் பொருட்கள் அவரது அறையில் காணப்பட்டன. நீரிழிவு நோயாளியான கே.பி. இன்சுலின் இல்லாமல் எங்கும் பயணம் செய்யமாட்டார். தமது எஜமான் இன்சுலின் இல்லாமல் தூர இடத்திற்கு போகமாட்டார் என்பதைத் தெரிந்திருந்த அவரது உதவியாளர்கள் கவலையடைந்திருந்தனர். தங்களுக்குத் தெரிந்ததை பிரிட்டன் விருந்தாளிகள் கே.பி.யின் உதவியாளர்களுக்கு தெரிவித்திருந்தனர்.

    புலிகளின் புதிய தலைவர் கைதாகியதோ அல்லது கடத்தப்பட்டோ இருக்கலாம் என்பதை அவரின் நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் புரிந்து கொண்டனர். மலேசிய அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாமென அவர்கள் சந்தேகப்பட்டனர். அத்துடன், இலங்கை , இந்தியா மீதும் சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

    செய்திகள் பரவத் தொடங்கின. புலிகளின் புதிய தலைவர் கே.பி.தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக பத்திரிகைகளும் ஏஜென்சி செய்திகளும் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்தன. பாங்கொக்கில் வைத்து கே.பி. கைது செய்யப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார ராய்ட்டருக்கு கூறியிருந்தார். இந்தத் தருணத்தில் அந்தளவுக்கே தமக்குத் தெரியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    என்ன நடந்தது என்பது தொடர்பாக இரு முரண்பட்ட கருத்துகள் வெளியாகியிருந்தன. கே.பி.யும் அப்பும் கோலாலம்பூரிலிருந்து பாங்கொக்கிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தகவல் தெரிவித்தது. கே.பி.தாய்லாந்தில் வைத்து கைதானார் என்ற மனப்பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. இலங்கையில் இருந்து சென்ற பயங்கரவாத விசாரணை திணைக்களக் குழுவொன்று பாங்கொக்கிலிருந்து கே.பி.யை விசேட விமானத்தில் கொழும்புக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆயினும், இலங்கைக் குழு மலேசியாவிற்குப் போயிருந்ததாக மற்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. கோலாலம்பூரில் வைத்து கே.பி.யைக் கைது செய்து அவரை விமான மார்க்கமாக கொழும்புக்கு கொண்டுவந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறுகிய காலப்பகுதியில் அந்த விசேட விமானம் பாங்கொக்கில் தரித்து நின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஆனால், தாய்லாந்தின் ஏஜென்சி செய்தி அறிக்கையின் பிரகாரம் கே.பி.யின் கைது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தாய்லாந்துப் பிரதமர் அபிஜித் பாதுகாப்புத் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கைதான விடுதலைப் புலிகளின் வெளிநாட்டைத் தளமாகக் கொண்ட தலைவர் செல்வராஜா பத்மநாதன் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அங்கு அவர் மீது விசாரணை இடம்பெறுவதாகவும் ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்திருந்தது. இந்த விடயம் குறித்து வியாழக்கிழமை பின்னிரவு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்களை சமர்ப்பிக்குமாறு தான் பாதுகாப்பு தரப்புக்கு பணித்திருப்பதாகவும் தாய்லாந்துப் பிரதமர் கூறியிருந்தார். இதேவேளை, கே.பி.தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லையென்றும் சிங்கப்பூரிலேயே கைதானதாகவும் தாய்லாந்தின் விசேட பொலிஸ் பிரிவின் தலைவர் தீராதேஜ் கூறியிருந்தார்.

    கட்டுநாயக்காவுக்கு கொண்டுவரப்பட்ட இருவரும் உடனடியாக வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரது முகங்களும் மூடப்பட்டு கைவிலங்குடன் அவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் கட்டுநாயக்காவிலுள்ள வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. கொழும்பில் கே.பி.மீது விசாரணை நடத்தப்படுவதாக பசில் ராஜபக்ஷ எம்.பி. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். அப்பு தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    இரு வருடங்களுக்கு முன்னர் 2007 செப்டெம்பரில் கே.பி.தாய்லாந்தில் வைத்து அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா அல்லது இலங்கைக்கு அவர் கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதுவும் இடம்பெறவில்லை. விரைவில் கே.பி. விடுதலையாகியிருந்தார். ஆனால், இந்தத் தடவை நிலைமை வித்தியாசமானதாக இருந்துள்ளது. மலேசியாவில் கே.பி.கைதானமை குறிப்பிடத்தக்க விடயமாகவுள்ளது.

    முதலாவதாக மே 29 இல் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் அகமத் ஹமீதியிடம் கே.பி.யை கையளிக்குமாறும் புலிகளின் வெளிநாடுகளில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை கையளிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கோரிக்கை விடுத்திருந்தார். சிங்கப்பூரில் இடம்பெற்ற தென்கிழக்காசிய பாதுகாப்பு தொடர்பான வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த வேளையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளை மலேசிய அரசாங்கம் தடைசெய்ய வேண்டுமென இலங்கை கேட்டிருந்த போது அச்சமயம் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக பிரிகேடியர் உதய பெரேராவை அண்மையில் மலேசியாவிற்கான பிரதி உயர்ஸ்தானிகராக இலங்கை நியமித்திருந்தது. விடுதலைப் புலிகளின் புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. மேஜர் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்ட ஜி.வி.டி.யூ.எ. பெரேரா இராஜதந்திர நியமனத்தைப் பெறும் பதவியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் முதலாவது இராணுவ அதிகாரியாவார். இறுதி யுத்தத்தைத் தொடர்ந்து விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து வெளிநாட்டுத் தூதுவரை வைத்து விடயங்களை மேஜர் ஜெனரல் பெரேரா தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து அவருக்கு நியமனம் வழங்கப்பட்டது. ஜெனரல் உதய பெரேராவின் பிரதான பகிரங்கப்படுத்தாத கடமை "ஒப்பரேசன் கே.பி' என்பது புரிந்துகொள்ளக்கூடியதொன்றாகும். குறிப்பிட்ட சில காலம் புலிகளின் முக்கியமான நடவடிக்கைகளுக்காக மலேசியாவை கே.பி. பயன்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பது அனுமதிக்கக்கூடியதாகும். கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் மலேசியாவிற்குச் சென்று கே.பி.யைச் சந்தித்ததைத் தொடர்ந்து கோலாலம்பூரில் கே.பி. பிரசன்னமாகியிருப்பது கவனிக்கக்கூடிய விடயமாக இருந்தது. மலேசியாவில் கே.பி.யை சந்தித்ததாக ஒப்புதல் அளித்திருக்கும் மற்றொருவர் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் லெப்டினன்ட் கேணல் ஆவார். அத்துடன் ஐ.நா.விலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளும் மலேசியாவில் கே.பி.யுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தனர். ஏனைய நாடுகளின் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் கே.பி.யை கைது செய்து கொழும்புக்கு கொண்டு வந்திருப்பது பற்றி நம்புவதற்கான காரணங்கள் உள்ளன. 2009 செப்டெம்பர் 11 ஆம் திகதி இரட்டைக்கோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க மத்திய புலனாய்வு முகவர் அமைப்பு சி.ஐ.ஏ. எவ்வாறு செயல்பட்டதோ அதனை அடியொற்றிய விதத்தில் இந்த அசாதாரணமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் "ஒப்பரேசன் கே.பி' தொடர்பாக அதிகளவு தகவல்கள் வெளிவரக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஊடகங்களில் ஒரு பகுதியே கே.பி.மீது நச்சுத்தனமான தாக்குதல்களை தொடுத்திருந்தமை அவர் தொடர்பாக உயர் மட்டப் பகை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

     மற்றொரு புதிரான விடயமானது கே.பி.தனது சொந்தப் பாதுகாப்புக் குறித்து அசட்டயீனமாக இருந்ததாகும். அவருக்கு எதிராக இன்ரர்போல் இரண்டு பிடியாணைகளை விடுத்திருந்தது. ஆனால், அவர் ஆட்களை பகிரங்கமாக சந்தித்துள்ளார். பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும் அவர் பேட்டியளித்திருக்கிறார். தனது சொந்த இணையத்தளத்தில் கிரமமாக எழுதியுள்ளார். உலகளாவிய ரீதியில் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இவை சட்டத்தின் பிரகாரம் மிகவும் பலவீனமான விடயங்களாகும். விடுதலைப் புலிகளின் பிரதான ஆயுதக் கொள்வனவாளரான கே.பி. கிட்டத்தட்ட புலிகளுக்கு மிகவும் முக்கியமாகத் தேவைப்படுபவராக இருந்திருக்கிறார். கே.பி.யின் அறிவும் சேகரித்து வைத்திருந்த தகவல்களும் இலங்கை அதிகாரிகளுக்கு மட்டுமன்றி பல நாடுகளைச் சேர்ந்த புலனாய்வுத்துறை முகவர் அமைப்புகளுக்கும் மிகவும் பெறுமதிவாய்ந்தவையாகும் என்று டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதியிருக்கிறார்

    more

Featured Video

Photos