-
நவம்பர் 27 ல் பிரபாகரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றிய திரைப்படத்தை பெங்களூரைச் சேர்ந்த இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். வரும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் மற்றும் ராஜீவ் காந்தி கொலையாளிகளை மையப்படுத்தி ஏற்கனவே ‘சயனைட்’ (குப்பி) எனும் திரைப்படத்தை ரமேஷ் இயக்கியுள்ளார். இடையில் வீரப்பன் பற்றிய படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்தப் படத்தை ஒத்திப் போட்டுவிட்டு, பிரபாகரன் பற்றிய படத்தை இயக்கத் தயாராக உள்ளார். பிரபாகரனைப் பற்றிய படத்துக்கான திரைக்கதை தயாராகி விட்டது. ஆனால், பிரபாகரனாக யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது. அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு மிகத் திறமையுள்ள நடிகரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தமக்கு என ‘இமேஜ்’ ஒன்றைக் கொண்டிருக்கும் நடிகர் எவரும் வேண்டாம் என்கிறார் இயக்குநர் ரமேஷ். முன்னதாக இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பார் என கூறப்பட்டது. நவம்பர் 27-க்குப் பிறகு…“பிரபாகரன் மரணம் என்பதை நான் இன்னும் நம்பவில்லை. பிரபாகரன் தனது கழுத்தில் சயனைட் அணிந்திருக்கவில்லை. அத்துடன், தனது அடையாள அட்டையையும் வைத்திருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவியலை அறிந்தவர்கள் இவை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறார்கள்..”, என்கிறார் ரமேஷ்.மேலும் அவர் கூறுகையில், “படப்பிடிப்பை நவம்பர் 27 ஆம் நாளுக்குப் பின்னர் தொடங்க திட்டமிட்டுள்ளேன். காரணம் அந்த நாளில் பிரபாகரன் மக்கள் முன் தோன்றி மாவீரர் தின உரை நிகழ்த்துவார் என்றும் நம்புகிறார்கள்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் பிரபாகரன் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளார். இதற்கு முன்பு மூன்று முறை பிரபாகரன் இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட போதும், சரியாக இந்த மாவீரர் தினத்தில் மக்கள் தோன்றி உரை நிகழ்த்தியிருக்கிறார் பிரபாகரன்.நவம்பர் 27ம் நாளில் பிரபாகரன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை எனில் அது, பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக இலங்கை படையினர் கூறுவதை மேலும் உறுதிப்படுத்துவதான தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே அந்த சூழலுக்கேற்ப எனது திரைக்கதையிலும் மாறுதல்களைச் செய்ய முடிவு செய்துள்ளேன்” என்கிறார் ரமேஷ்.இந்தப் படத்தை தானே தயாரிக்கப்போவதாகவும், அதற்கான நிதி உதவியை மலேசியத் தமிழர்கள் இருவர் வழங்குவார்கள் என்றும் ரமேஷ் அறிவித்துள்ளார்.தமிழர் பகுதிகள் பிரபாகரன் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் வன்னிக்கு ரமேஷை அழைத்திருந்தனர் புலிகள். ஈழப் போர் குறித்த படம் ஒன்றை இயக்கித் தருமாறும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
more
-
ரமளானை வாஞ்சையோடு வரவேற்போம் ! செளகத் அஹமது இபுறாகிம் -Jubail, KSA
ஒவ்வோர் ஆண்டும் காத்திருந்தோம்நன்றி >>>> சித்தார் கோட்டை.காம்
ஆண்டில் ஓர் முறை வரும் - இந்த
இனிய ஓர் திங்கள் வசந்த காலத்திற்கு
இனிதே வருக ரமளான்
பிறை கண்ட நாள் முதலாய்
ஸகர் செய்து நோன்பு வைத்து
பேரின்பம் பெற்றுத் தரும் ரமளான்
புனிதமிக்க இரவுகளைத் தந்த ரமளான்
எங்கள் பாவங்களை
கழுவிக் களையும் ரமளான்
ஏழை, பணக்காரன் ஏற்றத் தாழ்வின்றி
எல்லோரும் நோன்பு வைக்கும் ரமளான்
உள்ளங்கள் ஒளி வீசி தூய்மை பெற
ஓர் மாதம் உதிக்கும் இந்த ரமளான்
சைத்தான்கள் பூட்டப்படும் ரமளான்
சத்திய வேதம்தனை இறக்கி வைத்த ரமளான்
குர்ஆன் மாதம் என பேறு பெற்ற ரமளான்
'இஃப்தார்' நோன்பு திறக்குமுன் நேரம்
இறைவனிடம் இறைஞ்சி கேட்கப்படும்
எங்கள் துஆக்கள் ஏற்கப்படும் ரமளான்
'தராவீஹ்' தொழுகைகளில் சிறப்பாக
நன்மைகளை கூட்டித் தரும் ரமளான்
இரவு நின்று தொழுதவர்க்கு
இன்னும் நன்மையை அள்ளித்தரும் ரமளான்
லட்சிய இரவுகளாய்
'லைலத்துல் கத்ர்' என்றும்
பதினேழாம் பிறைநாளில்
பத்ரு யுத்த ஸகாபாக்களின்
நினைவுகளை நெஞ்சினிலே
நெகிழ வைக்கும் ரமளான்
ஸகாத் எனும் புனித வரியை
இருப்போர் தந்து, தேவையுற்றோர் பெற்று
எல்லோரும் இன்புறும் ரமளான்
இருப்போரும் பசித்துணரும் ரமளான்
மாதம் முழுவதும் பெருநாளாய்
மஸ்ஜித்கள் மக்களால் நிறைந்திருக்கும் ரமளான்
நோன்புக் கஞ்சி கூட
நிறைவாய் பள்ளிதோறும் கிட்டும் ரமளான்
தூக்கம் துறந்து இறையை துதிப்போம்
தௌபா செய்து பாவம் களைவோம்
தீமைகளை தவிர்ந்து, நன்மைகளை நாடி
இறையச்சம், மறுமையின் பயம் உணர்ந்து
நாமும் ரமளானை நிறைவு செய்வோம்
நன்மையாய் நிறைவு செய்வோம்
இனிதே வருக ரமளான்
more
-
கே.பி யின் கைதும் பரப்பப்படும் வதந்திகளும். கிழக்குப் புலிகள் துரோகிகளாம். -விருகோதரன்-
புலிகளியக்கத்தின் தற்போதைய தலைவர் என தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்ட கே.பி என அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கைது தொடர்பாக பல தரப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு இலங்கை அரசின் மிக தேர்ச்சி பெற்ற இராணுவ புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்ற உண்மையைத் தவிர எவ்விதமான தகவல்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் வெளிவிடப்படவில்லை.
இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறையின் தேர்ச்சி பெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின்போது கே.பி பல தகவல்களை தெரிவித்துள்ளார் என்பது அரச உயர் மட்டத்தினரால் ஊடகங்களுக்கு சொல்லப்பட்டுள்ள செய்தியாகும். இது தவிர இக்கைது எவ்வாறு இடம்பெற்றது? எங்கு இடம்பெற்றது? யார் இவரை கைது செய்தார்கள்? கைதுக்கு உதவிய காரணிகள் யாது? என்ற வினாக்களுக்கு விடைகாண்பதற்கு பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் கூட முட்டிமோதிக்கொள்கின்ற நிலையில் கற்பனைச் செய்திகள் பல கோணங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
கே.பி தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தியை அந்நாட்டு பிரதமர் நிராகரித்ததுடன் மலேசியாவில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கே.பி கைது செய்யப்பட்டதாக கூறப்படும் விடுதி அதிகாரிகள் தமது விடுதியில் வைத்து கேபி கைது செய்யப்படவில்லை என உறுதிபடக் கூறியுள்ள நிலையில் இவ்வாறான கற்பனைகள் அடங்கிய பல செய்திகள் புலம்பெயர் புலித்தொழிலாளர்களாலேயே பரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. புலிகள் கேபி கைது தொடர்பாக முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதற்கு காரணங்கள் பலவுள்ளது.
கே.பி எவ்வாறு மாட்டினார் என்பதை விவாதிப்பதற்கு நியாயமான சந்தேகங்கள் உள்ளன, கேபி கைது செய்யப்பட்டவுடன் புலிகளினால் பரப்பப்பட்ட செய்திகளிலேயே பல சந்தேசங்கள் உள்ளன. பொலிஸ் நடேசனின் மகன் மற்றும் சகோதரனுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே கே.பி கைது செய்யப்பட்டதாக புலிகளின் வானொலிகள் முதலில் செய்தியை வெளியிட்டு பின்னர் அவற்றை அவ்வாறே மூடி மறைத்துக்கொண்டனர்.
புலிகளின் ஒட்டுமொத்த அழிவிற்கும் கே.பி யே வேட்டுவைத்தார் என நெடியவன் தலைமையிலான புலிகள் பகிரங்கமாக தெரிவித்திருந்தமையையும் பொட்டு தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் உள்ளார் என்று உலாவும் செய்திகளையும் வைத்து பார்க்கின்றபோது கே.பி புலிகளின் தலைமையை காட்டிக்கொடுத்ததற்காக நெடியவன் தரப்பின் அல்லது பொட்டுவின் சதியினால் கே.பி மாட்டியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றது.
கே.பி யே புலிகளின் அழிவிற்கு காரணமாக இருந்தார் என்ற செய்தியில் உண்மை இருந்தால், அது நிச்சயமாக பொட்டுவிற்கு தெரியாமல் இருந்திராது. பொட்டு இலங்கை இராணுவத்தின் பிடியில் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தி உண்மையாக இருந்தால், கே.பி யை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் பொட்டுவை விட்டு அகலாது.
அதன்பொருட்டு நடேசனிடம் அணுகி உங்கள் தந்தை உயிரிழப்பதற்கும் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படுவதற்கும் கே.பி யே காரணமாக இருந்தார். எனவே அவரை எவ்வாறாவது மாட்டவேண்டும் என அதற்கான திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து பொட்டு செய்திருக்கமுடியும்.
அத்திட்டத்திற்கு இணங்க நடேசனின் மகன் மற்றும் சகோதரன் குறிப்பிட்டவிடுதிக்கு சென்று கே.பி யை கைது செய்ய உதவியிருக்க முடியும். அவ்வாறு கே.பி கைது செய்யப்படும்போது தாம் அவ் விடுதியில் இருந்ததாக தெரிவித்திருக்கும் நடேசனின் மகன் மற்றும் சகோதரன் ஆகியோர் ஏன் கே.பி க்கு ஓர் அழைப்பு வந்தே அவர் வெளியே சென்றார் என்ற செய்தியை அவசர அவசரமாக வெளியிடவேண்டும். அதாவது இவர்களின் சந்திப்பை மூன்றாம் நபர் ஒருவர் அல்லது தரப்பு ஒன்று அறிந்து வைத்திருக்கவேண்டும் எனவே அக்கைதில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வெளிக்காட்டுவதற்கா தொலைபேசிக் கதையை கட்டவிழ்த்து விட்டிருக்கவும் முடியும்.
அவ்வாறு நடசேனின் மகன் சகோதரன் ஆகியோர் குறிப்பிட்ட விடுதியில் இருக்கும் போது கே.பி கைது செய்யப்பட்டதாகவும் அவருடைய மூக்குக் காண்ணாடி தாம் தங்கியிருந்த அறையிலேயே காணப்படுவதாகவும் கூறியிருந்தனர், அவ்வாறாயின் அவர்கள் கே.பி கைதுடன் தொடர்பு பட்டிருக்கவிலையாயின் விடுதி அதிகாரிகள் கே.பி குறிப்பிட்ட விடுதியில் வைத்து கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கும் மறுப்பை நடேசனின் மகன் மற்றும் புலம்பெயர் புலிகள் மறுதலிக்க மறுக்கும் மர்மம் என்ன?
அத்துடன் புலிகள் அமைபினுள் பிளவு இல்லையாயின் இக்கைது புலித்தலைமையின் அனுசரணையுடன் இடம்பெறவில்லையாயின் கைது இடம்பெறும் போது கூடவே இருந்ததாக கூறும் மேற்படி புலிகளின் முக்கியஸ்தர்கள் மலேசிய அரசிற்கு குறிப்பிட்ட விடயத்தை முறையீடு செய்யாததன் காரணம் அல்லது இக்கைதின்பொருட்டு சட்ட நடவடிக்கை எடுக்க முயலாததன் மர்மம் என்ன என்ற விடயங்களுக்கான விடையை மக்களே தேடிக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு புலம் பெயர் புலித் தொழிலாளர்கள் தொடர்ந்தும் மக்களின் பணத்தை சுருட்டிக்கொள்வதற்காக பல தரப்பட்ட பொய்கைளை மக்களுக்கு கூறி அவர்களை தொடர்ந்து ஏமாற்ற முற்பட்டு வருகின்றமையே இவ்வாறான முன்னுக்கு பின் முரணான செய்திகளுக்கு பிரதான காரணமாகும்.
புலிகளின் தலைமை எவ்வாறு அதன் விசுவாசிகளாலும் சர்வதேசவலைமைப்பாலும் காட்டிக்கொடுக்கப்பட்டதோ அதேபோன்று கேபியின் கைதும் அவ்வியக்கத்தின் தலைமையை கைப்பற்றுவதற்கும், போராட்டத்தின் பெயரால் அறவிடப்பட்ட பணத்தை பங்கிட்டுக்கொள்ளவும் துடிக்கும் பல புலிதொழிலாளர்களின் ஒருமித்த நடவடிக்கை என்பதை மக்களுக்கு மூடி மறைப்பதற்காக பல தரப்பட்ட பொய் செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பமடையச் செய்யும் தமது கைங்கரியத்தை கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றனர்.
புலம்பெயர் புலித்தொழிலாளர்களின் இவ்வாறான பொய்பிரச்சாரங்களுக்கு கிழக்குப் புலிகள் இன்று பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது. புலிகளின் தலமை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசினால் பலமுறை சரணடையுமாறு அறிவுறுத்தல்கள் விடப்பட்டிருக்கின்ற நிலையிலும் தொடர்ந்தும் காடுகளில் வாழ்ந்து வரும் ராம் தலமையிலான புலிகளே கேபி யை காட்டிக்கொடுத்தனர் என்ற தோரணையில் புலித் தொழிலாளிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் புலித்தொழிலாளர்களால் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இடம்பெறும் குத்துவெட்டுக்களே இவ்வாறான பின்னடைவுகளுக்கு காரணம் என்பதை மக்கள் ஊகித்துக்கொள்ளும் நிலையில், கிழக்கு மாகாண புலிகள் மீது பழியைபோட்டு தம்மை மக்களிடம் உத்தமர்களாக காட்டிக்கொள்ள முற்படும் புலித்தொழிலாளர்களது வக்கிரகுணத்தை சம்பந்தப்பட்ட அனைவரும் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.
ஐ.பி.சி வானொலியினுள் கே.பி யின் விசுவாசியான றஞ்சித் என்பவரால் உட்புகுத்தப்பட்ட ஈஸ்வரதாசன் என்பவரால் நிர்வகிக்கப்படும் அதிர்வு இணையம் இவ்வாறான செய்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்புவதை காணமுடிகின்றது. பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு சமூக அந்தஸ்தை இழந்துள்ள மேற்படி நபர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி புலிகள் விட்டுச் சென்றுள்ள மிச்ச சொச்சங்களை சுருட்டிக்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு தவறான செய்திகளை வழங்கி வருவது தெளிவாக தெரிகின்றது.
புலிகளின் தலைமைக்காக போட்டி போடும் வல்வெட்டித்துறை, யாழ் கரையோரப்பகுதியை சேர்ந்தோருக்கு கிழக்கு மாகாண மக்கள் என்றால் காட்டிக்கொடுக்கும் பரம்பரையில் வந்தவர்கள் என்று இலகுவாக கூறமுடிந்துள்ளதை நோக்க முடிந்துள்ளது. அதாவது கிழக்கு மாகாணப் புலிகள் போடுதடிகள் என்பது புலித்தொழிலாளிகளின் கருதுகோள்.
கருணாவிற்கும் புலிகளின் தலைமைப் பீடத்திற்கும் முறுகல் ஏற்பட்டது தமிழீழ இராணுவத் தளபதி எனும் பதவியில் ஏற்பட்ட போட்டியே என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். பதவி போட்டியினால் அவ்வியக்கத்தில் பிளவு ஏற்பட்டபோது கருணா மற்றும் புலிகள் தரப்பால் மூட்டப்பட்ட பிரதேசவாதத் தீ இன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பது துரதிஸ்டமே. ஆனால் அவை அனைத்துக்கும் அப்பால் புலிகளியக்கத்திற்கு விசுவாசமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் அனைவரும் வன்னியில் பிரபாகரனுடன் இருந்தே மடிந்துள்ள நிலையில், புலம்பெயர் புலித்தொழலாளர்கள் கிழக்கு புலிகளே கேபி யை காட்டிக்கொடுத்ததாக தெரிவிக்க முனைந்து வருவதானது புலிகளின் தலைமை கடந்த காலங்களில் தமது உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தனிநபர்கள் மீது எவ்வாறு பொய்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்கள் என்பதற்கு சிறிய உதாரணமே.
இன்று கே.பி யின் கைதுடன் புலிகளின் ஒரு தரப்பினர் தமது கை ஓங்கி உள்ளதாகவும் தாமே எதிர்வரும் காலத்தில் புலிகளின் ஏகத்தலைமை என தெரிவித்து வருவதை உணர முடிகின்றது. யார் இந்த தலைமை? அவர்களுக்கு கே.பி யை தலைமையாக ஏற்றிருந்த தரப்பினர் எவ்வாறான வேட்டு வைக்கப்பபோகின்றார்கள் என்பது வெளிவரும்போது, புலிகளின் சுயரூபம் விளங்காத புலம்பெயர் பாமரத் தமிழ் மக்களில் பலருக்கு புரியும் என நம்பமுடியும். VIII
more
-
சிரிச்சா,,,,, என்ன கொறஞ்சா போயிடுவீங்க ,,,,,
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே
நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக
இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,
“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த
அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”
“முதலில் செல்வது எனது மனைவி.”
“என்ன ஆயிற்று அவருக்கு?”
“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
“இரண்டாவது பிணம்?”
“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”
அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்”
more
-
கே .பி . யை கைது செய்தது யார் ?
எவ்வாறு கைது நடந்தது:
கே.பி கைதானது இது ஒன்றும் முதல் தடவை அல்ல, தாய்லாந்தில் 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி கே.பி கைதுசெய்யப்பட்டிருந்தார். இருப்பினும் தாய்லாந்து அரசாங்கம் அவரை நாடுகடத்தவில்லை. பின்னர் அவர் சில நாடுகளின் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இம் முறை இலங்கை அரசு வித்தியாசமாக இதனைக் கையாண்டுள்ளது. கே.பி கைதுசெய்யமுன்னர் வந்த தொலைபேசி அழைப்பு தயாமோகனிடம் இருந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னரும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இருப்பினும் அவர் அந்த தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பின்னர் வந்த தயாமோகனின் அழைப்பை ஏற்றுக் கதைத்த அவர், சைகையால் அங்கு நின்ற நடேசனின் தம்பியாரிடம், கொஞ்சம் பொறுங்கள் தான் வெளியேசென்று கதைத்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். தனது கண்ணாடியை அவர் மேசை ஒன்றின் மீது கழற்றிவைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
தயாமோகனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடிய அவர், தொலைபேசியை துண்டித்தபோது, வேறு ஒரு அழைப்பு வந்தது அந்த அழைப்பில் அவர் பேசியவண்ணம் கீழே இறங்கி ரியூன் கோட்டலின் சுவருக்கு அருகாமையில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவர் சுற்றிவழைக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்குத் தெரியாது.
கைது செய்தது யார் ?
ஆம் அவரைக் கைது செய்தது Malaysian Special Bureau (MSB ) மலேசியாவின் ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட். மலேசியாவில் இயங்கும் மலேசிய ஸ்பெசல் பியூரோ அமைப்பு மலேசிய முடியரசின் அபிமானத்திற்குரிய, மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்பாகும், இவர்களின் நடவடிக்கையை போலீசார் கட்டுப்பத்த முடியாது, மற்றும் இவர்களின் நடவடிக்கை பற்றி மலேசியப் போலீசார் அறிந்திருக்கவும் மாட்டார்கள்.
இரண்டாவது தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் தமது அமைப்புக்கு உதவியவர் என மலேசிய ஸ்பெசல் பியூரோவினர் தெரிவித்துள்ளனர்.
5ம் திகதி புதன்கிழமை மாலை சுமார் 3.00 மணியளவில் அவர் மலேசிய ஸ்பெசல் பியூரோ ஏஜன்ட்டுகளால் கைது செய்யப்பட்டார். கே.பியின் வாகன சாரதி அப்பு என்றழைக்கப்படுபவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் உடனடியாக பாங்கொக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏன் பாங்கொக் ? மலேசியாவில் இருந்து கொழும்புகொண்டு சென்றிருக்கலாமே ?
மலேசியாவில் உள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்து அமைப்புக்களுடன் கே.பி தொடர்புகளை சமீபத்தில் ஏற்படுத்தியிருந்ததே கே.பியின் கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மலேசியாவில் உள்ள ஹிந்துராப் அமைப்புடன் கே.பி தொடர்புகளை மேற்கொண்டதால், மலேசிய அரசாங்கம் அதிர்ச்சிக்குள்ளானது, ஏற்கனவே அங்கு வாழும் தமிழர்கள், மலேசியாவில் தமக்கு சம உரிமையில்லை என்றும் தம்மை ஒரு இரண்டாம் தர குடிமக்களாகவே அரசு கருதுவதாகவும் கூறிப் பலபோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கே.பி யின் இந்த நடவடிக்கை மலேசிய அரசுக்குப் பெரும் திண்டாட்டமாக இருந்தது. கே.பியை தாமே கைதுசெய்து நாடுகடத்தியதாக மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொள்ளுமேயானால் அது அங்கு வாழும் தமிழர்களிடம் மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என அஞ்சிய மலேசியா, கைதுசெய்த கே.பியை உடனே பாங்கொக்கிற்கு கொண்டுசென்றது. ஆக இரண்டு இலங்கை புலனாய்வு அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். கே.பி மலேசியாவில் கைதாகும் போது, அவர்கள் இருவரும் காரில் அமர்ந்திருந்தனர். இதுவே உண்ம ஆனால், தாமே கே.பியை கைதுசெய்தோம், எந்த நாட்டிற்கும் சென்று எவரையும் கைதுசெய்ய முடியும் என்று இலங்கை அரசு கொக்கரித்தது எல்லாம் படு பீலா. சொந்த நாட்டில் உள்ளவர்களையே ஒழுங்காக கைதுசெய்ய முடியாத கையாலாகாத இலங்கை புலனாய்வுப் பிரிவினர், நாடுவிட்டு நாடுசென்றா கைதுசெய்யமுடியும்? செய்மதி தொலைபேசியூடாக நடமாட்டத்தை கண்காணித்தே தாம் இந்தக் கைதை மேற்கொண்டதாக இலங்கை அரசு படு உடான்ஸ் விட்டது, காரணம் மலேசியா வாய் திறக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.
5ம் திகதி மாலை சுமார் 3.00 மணியளவில் மலேசியாவில் இருந்து கோத்தபாய ராஜபக்சவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாக் கூறப்படுகிறது. அதில் பேசிய ஜெனரல் உதய பெரேரா, கே.பி கைதான விடயத்தைக் கூறியிருக்கிறார். உடனடியாக இலங்கை இராணுவ விமானத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்றில், கேணல் ஷாலில் தலைமையில் சில அதிகாரிகள் பாங்கொக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படையினர் பாங்கொக் விமான நிலையத்திற்குப் பல தடவைகள் பறப்பில் ஈடுபட்டிருந்ததாகவும், பாங்கொக் நகரமே கே.பியை இலங்கைக்கு அழைத்துவர ஏற்றது என இலங்கை அதிகாரிகள் மலேசியாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்ற கேணல் ஷாலில் கே.பியையும் அவரது வாகன சாரதி அப்புவையும் இலங்கை கொண்டு சென்றனர்.
சீன அரசாங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது
இது இவ்வாறிருக்க கே.பியின் கைது காரணமாக தமிழ் மக்களை விட அதிர்ச்சியில் இருப்பது சீன அரசாங்கமே. ஏன் என்றால், புலிகளின் மொத்த ஆயுதக் கொள்வனவில் பாதிக்குமேல் ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகச் சீனா விளங்கியுள்ளது. இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேணிவரும் சீனா மறுபக்கத்தில் புலிகளுக்கும் பல நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது. இலங்கை அரசிற்கு தான் கொடுத்த ஆயுதங்களின் விபரங்களையும் சொல்லி அதனைவிட அதி நவீன ஆயுதங்களைப் புலிகளுக்கு விற்று, நாடகம் ஆடியது சீன அரசு. தற்போது இந்தியாவிற்கு தலையிடியை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையுடன் கைகோத்து நிற்கும் சீனா கே.பியின் கைதுதொடர்பாக படு அதிர்ச்சியடைந்துள்ளது.
இராணுவம் கூறும் ஊர்ஜிதமற்ற தகவல்கள்:
இலங்கை இராணுவத்தின் கூற்றுப் படி தளபதி ராம் தம்மிடம் அக்கரைப்பற்றில் வந்து சரணடைந்ததாகவும், ராமை வைத்து கே.பி மற்றும் சில முக்கியமான நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ராம் காட்டில் இருப்பதாக் கூறி அவரே தொலைபேசியில் உரையாடியதால், பல விடையங்கள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது. கே.பியுடன் தொடர்ந்து உரையாடிவந்த தளபதி ராம், கே.பி மலேசியாவில் இருந்து புறப்பட இருந்த தேதிகளையும் இராணுவத்திற்குக் கூறியதாக ஊர்ஜிதமற்ற இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த இயக்கத்தை அரசியல் ரீதியாகப் பலப்படுத்துவதை கே.பி மேற்கொண்டதும், அமெரிக்க அரசில் அவர் கொண்டிருந்த செல்வாக்கும் இலங்கை அரசு அவரைக் கைதுசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது எனலாம். கடைசி நாட்களில் அவர் தனது பாதுகாப்பில் அக்கறை செலுத்தவில்லை என்பது எல்லோராலும் தெரிவிக்கப்படும் ஓர் விடையமாகும்.
எது எவ்வாறு இருப்பினும் கே.பியை இலங்கை நீதிமன்றில் ஆஜர் படுத்தி முறையான விசாரணையை நடத்த இலங்கை அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்.
more
-
நல்லூர் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள்: விமானங்கள் பூமழை பொழிய முருகன் வீதிஉலா
சரித்திர பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திரு விழா நேற்றுக் காலை சிறப்பாக நடந்தேறியது. காலை 7.15க்கு முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து 9.15 மணியளவில் தனது இருப்பிடத்தை வந்தடைந்தார்.
இலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் முருகப் பெருமானின் தேர் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை விமானப்படை விமானங்கள் வானிலிருந்து பூமழை பொழிந்தன. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததோடு அனைவரையும் மெய்ச்சிலிர்க்கச் செய்தது.
குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையின் தென்பகுதி மற்றும் ஏனைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்லைநகர் கந்தனின் தேர் உற்சவத்தைக் கண்டு களித்தனர்.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு தென் இலங்கை யில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்களின் வருகைக்காக மிகக் குறைந்த செலவில் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையினை வழங்கியிருந்தது. அத்துடன் பக்தர்களுக்கான தாக சாந்திக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களையும் வழங்கியிருந்தது.
அத்துடன் ஆலய வீதிகளிலும் யாழ்குடா நாட்டின் பல இடங்களிலுள்ள வீதியோரங்களிலும் ஆலயம் சென்று வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்கும் தாகசாந்திக்கும் தாக சாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
தேர் தொடங்கி இருப்பிடம் வரும்வரை வீதியில் கற் பூரம் எரிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் தூக்குக்காவடிகள் என்பனவும் தேர் வெளி வீதியுலா தொடங்கி முடியும்வரை ஆலய வீதிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் ஆலய வீதியில் ஒலி பெருக்கி (வெளியார்) பாவிப்பதும் தடை செய்யப்பட் டிருந்தது.
யாழ் மாநகர சபை நிர்வாகம் பக்தர்களினது வசதி கருதி ஆலய வீதிகளுக்கு சமீபமாக பல மலசல கூடங்களை அமைத்திருந்ததுடன், ஆங்காங்கே குடிதண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்களையும் மக்களின் பாவனைக் கென வைத்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும், இராணுவத்தினரும்கூட்டாக இணைந்து ஈடுபட்டிருந்தனர். சென்யோன் முதலுதவிப் படையினர் கே. செல்வரஞ்சன், யாழ் மாவட்ட இணைப்பாளர் தலைமையிலும் மக்கள் நலன்புரி சங்கத்தினர் எஸ். சதீஸ் தலைமையிலும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் எஸ். சாந்தா தலைமையிலும் தொண்டர் சேவைகளை ஆற்றியிருந்தனர். பலாலி இரா ணுவ தலைமையகத்திற்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர் தேர் வீதியில் வந்து கொண்டிருந்த போது மேல் இருந்து பூ மாரிபொழிந்து கந்தனை வழிபாடு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
more
-
கே.பி. பகீர் வாக்குமூலம்… பின்னணியும் பிரளயமும்!
தமிழ்நாட்டில் திருப்போரூர் முருகன் கோயிலில் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்தபோது, மாப்பிள்ளைத் தோழனாக தோள்கொடுத்து நின்றவர் குமரன் பத்மனாபா என்கிற கே.பி.! ஈழப் போரில் விடுதலைப்புலிகள் பெரிய அளவில் வீழ்த்தப்பட்டபோது, ‘பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார்’ என்பதை அறிவித்து, அடுத்தகட்ட தலைவராகத் தன்னை பிரதானப்படுத்திக் கொண்ட கே.பி., இப்போது இலங்கை ராணுவத்தின் பிடியில்! அவர் பிடிபட்ட விதம் குறித்து சிங்கள ராணுவம் பல்வேறு கதைகளைச் சொன்னாலும், நிஜத்தில் நடந்ததைப் புட்டுப்புட்டு வைக்கிறார்கள், சிங்கப்பூரில் உள்ள தமிழீழ ஆர்வலர்கள்.
மர்ம போனும்… மாட்டிய பின்னணியும்!..
”மலேசியாவில் ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியில் உள்ள டியூன் ஹோட்டலில் கே.பி., முக்கியமான இருவரை சந்தித்துப் பேசி இருக்கிறார். விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த நடேசனின் தம்பியான பாலசிங்கம் பாலேந்திரனும், நடேசனின் மகனும்தான் அந்த முக்கியஸ்தர்கள். அவர்களுடன் கே.பி. பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. அதை அட்டெண்ட் பண்ணிப் பேசிய கே.பி., ‘முக்கியமான போன்… அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள்… நான் வெளியே போய் பேசிவிட்டு வருகிறேன்’ எனச் சொன்னபடியே வெளியே போயிருக்கிறார். நடேசனின் தம்பியும், மகனும் இருபது நிமிடங்கள் வரை காத்திருந்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், கே.பி. வரவில்லை. அதன்பிறகுதான் கே.பி. கடத்தப் பட்ட தகவலை அவர்களாலேயே உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது. மர்ம போனில் கே.பி-யுடன் யார் பேசினார்கள் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. சர்வதேச போலீஸின் துணை இல்லாமலே கடத்தல்காரர்களைப் போல் வந்து, இலங்கையின் ராணுவப் பிரிவினர் ஆடிய சதிராட்டம்தான் இது!” எனச் சொல்கிறார்கள் சிங்கப்பூர் விவரப்புள்ளிகள்.
இலங்கையை அதிரவைத்த அமெரிக்கா!
கே.பி. வளைக்கப்பட்ட பின்னணி குறித்து அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள் சிலரிடத்தில் பேசியபோது, ”பிரபாகரனுக்குப் பிறகு ‘இனி ஆயுதப் போராட்டம் இல்லை… அமைதி வழியிலேயே தீர்வு’ என்று அறிவித்து… அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார் கே.பி. இதற்காக உலகநாடுகளின் ஆதரவைக் கோரவும் செய்தார். இந்தக் குரல் ஐக்கியநாடு கள் சபையிலும் ஒலித்து, ‘போர் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னமும் அப்பாவி தமிழர்களை மின்சார கம்பிகளுக்கு நடுவே வைப்பது நியாயமா?’ என பல நாடுகளையும் கேள்வி எழுப்ப வைத்தது. இதனால் ஈழத்தமிழர்களின் தீவிர ஆதரவாளரான அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டன், இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தார். அதிபர் ஒபாமாவும் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத் துறை அமைச்சகக் கூட்டத்தில் இலங்கையை கடுமையாகச் சாடினார். அதோடு, ‘விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் மீதான தடையை ஏன் அகற்றக் கூடாது?’ என்கிற கேள்வியையும் அமெரிக்க காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்கள் கேட்கத் தொடங்கினார்கள்.
ஜனநாயகப் பாதையில் ஈழப்போராட்டம்தொடங் கினால், அதனை ஆதரிக்கவும் அமெரிக்காதயாரானது. சமீபத்தில் இந்தியா வந்த ஹிலாரி கிளின்ட்டன், வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இதுகுறித்து விவாதித்துள்ளார். இந்த விஷயமறிந்துதான் இலங்கை அரசு பதறத் தொடங்கி இருக்கிறது. கே.பி. தலைமையில் ஈழத் தமிழர்கள், அமைதியையே அஸ்திரமாக்கிப் போராடத் துணிவார்கள் என்பதை இலங்கை எதிர்பார்க்கவில்லை. ‘தீவிரவாதம்’ என்ற சொல்லை வியாபாரம் ஆக்கிவந்த ராஜபக் ஷேவுக்கு கே.பி-யின் மிதவாத மூவ் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனால்தான் அதிரடியாக அவரைக் கைது செய்துவிட்டார்கள்!” எனச் சொன்னார்கள்.
கே.பி. உயிருக்கு குறி!
”பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு இரண்டுபட்ட புலிகள் இயக்கம் கே.பி. மற்றும் ருத்ரகுமாரன் தலைமை யில் ஒரு அணியாகவும், காஸ்ட்ரோ மற்றும் நெடியலன் தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் ருத்ரகுமாரன், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக இருந்தார். எப்படியாவது இதைத் தடுக்க நினைத்த இலங்கை, காஸ்ட்ரோ குழுவினரை கருணா வழியாகத் தொடர்பு கொண்டு அணுகியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவராக இந்திய அரசும் கே.பி. மீது ஒரு கண் வைத்திருக்கிறது. இதையெல்லாம் கணக்குப் போட்டுத் தான் கே.பி-யை சிங்கள அரசு சர்வதேச உளவு அமைப்புகளுடன் கைகோத்து வளைத்திருக்கிறது.
விசாரணை என்கிற பெயரில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் கே.பி-யின் உயிருக்கு எந்த நேரத்திலும் இலங்கை ராணுவம் முடிவு கட்டக் கூடும். இப்போதே கே.பி. ஏகப்பட்ட சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் கசிகின்றன. கே.பி. கைது குறித்து சர்வதேச அளவில் பிரஷர் ஏதாவது வந்தால், அவரைத் தடாலடியாக இந்தியாவிடம் ஒப்படைத்து, வீணான தலைவலியைக் கொடுக்கவும் இலங்கை திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவை வைத்துத் தன்னுடையை நெருக்கடியைக் குறைத்துக் கொள்ளும் திட்டமே இது..!” என்கிறார், அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர்.
பதறும் வைகோ.. ”மயக்க மருந்தும்…. மிருக வெறியும்…
மூலிகை சிகிச்சைக்காக கேரளாவில் தங்கி இருக்கும் வைகோவிடம் கே.பி. கைது குறித்தும், தனி ஈழப் போராட்டத்தின் பின்னடைவுகள் குறித்தும் பேசினோம். ”உலக மனுதர்மங்களை காலில் போட்டு நசுக்கி விட்டு, பேட்டை ரவுடிகளைப் போல மாறி சிங்கள அரசு கே.பி-யை கடத்தி இருக்கிறது. சர்வதேசங்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்த அத்துமீறலை சிங்கள வெறியர்கள் நடத்தி இருக்கிறார்கள். நடேசனின் ரத்த உறவுகளிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த கே.பி-யை மர்ம போன் மூலமாக யாரோ வெளியே அழைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மர்மமாக இருக்கிறது.
நான் விசாரித்த மட்டும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த கே.பி-யை மயக்க மருந்து மூலமாக சுயநினைவு இழக்க வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு, வீல் சேர் மூலமாக ஹோட்டலை விட்டு வெளியே கொண்டு சென்றிருக்கிறார்கள். மயக்கம் தெளியாத நிலையிலேயேதான் கே.பி. விமானத்தில் ஏற்றப்பட்டிருக்கிறார். ‘கே.பி-யை கண்டவுடன் நாங்கள் சுட்டுக் கொல்லத்தான் நினைத்தோம். ஆனால், சூழ்நிலைகள் சரியாக இல்லாததால்தான் கே.பி-யை உயிருடன் கொண்டு வரவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டு விட்டது!’ என ஒரு சிங்கள அதிகாரியே சொல்லி இருக்கிறார். நாளைக்கு தமிழகத்துக்கே வந்து யாரையும் கடத்திக் கொண்டு போக, சிங்கள ராணுவம் துணியாது என்பது என்ன நிச்சயம்?” எனக் கொந்தளித்த வைகோ, சமீபத்தில் ஈழத்தில் நடத்தப்பட்ட இன்னொரு துயரத்தையும் வேதனையோடு சொன்னார்.
”ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், யோகி, கரிகாலன் என தமிழுலகுக்கு வரமாகக் கிடைத்த வைரங்களை சிங்கள அரசு சித்ரவதை முகாமுக்குள் அடைத்து வைத்திருந்தது. சில தினங்களுக்கு முன் அவர்களைக் கொலை செய்யவும் சிங்கள ராணுவம் துணிந்து விட்டதாக செய்திகள் வந்தபோது, என் இதயத்து நரம்புகளே அறுந்து போய் விட்டன. ஆற்றாமையும், வேதனையும் என் நெஞ்சத்தை சுக்குச் சுக்காக தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறது!” என்று குரல் கம்மியபடி சொன்னார் வைகோ.
காட்டிக் கொடுக்கப்பட்டாரா?
”கே.பி-க்கும் புலிகளின் இன்னொரு பிரிவுத் தலைவரான நெடியலனுக்கும் சில நாட்களாகவே மனஸ்தாபங்கள் இருந்து வந்ததாகவும், ‘ஆயுதப் போராட்டம் இல்லாமலே அரசியல்ரீதியான நடவடிக்கைகள் மூலம், தமிழீழம் அமைக்க முடியும்’ என்று கே.பி. கூறி வந்தது, நெடியலன் போன்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது. லண்டனில் இருக்கும் புலிகளின் சொத்துகளை அடைவதற்கான போட்டியில் கே.பி. சிக்க வைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில், மலேசியாவில் உள்ள சில இந்து சமயம் சார்ந்த அமைப்புகள் எல்.டி.டி.ஈ. போன்ற, தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு அமைதியைக் குலைக்க முயல்வதாக மலேசிய அரசுக்கு உளவுத் தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதோடு, மலேசியாவில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலர், லிபியாவுடன் ஆயுதப் பரிவர்த்தனையில் தொடர்பு வைத்துள்ளதாக எச்சரித்த சிங்கள அரசு, ‘புலிகளின் நடவடிக்கைகளை மலேசியாவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், அது தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற் றுக்கும் எதிர்காலத்தில் தலை வலியாக அமைந்து விடும்’ என்றும் பயம் காட்டியது. ஆனால், மலேசிய அரசு அதையெல்லாம் சட்டை செய்து கொள்ளவில்லை.
இந்தப் பின்னணியில்தான் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில், தன்னுடைய ரகசிய உளவாளிகளை ஏகத்துக்கும் இறக்கிவிட்டு, தானே நேரடியாக கே.பி. உள்ளிட்டவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டியது இலங்கை. கே.பி-க்கு எதிரான சில தமிழர்களின் மூலமாகவே அவருடைய நடமாட்டத்தை அறிந்து, வலை விரித்துப் பிடித்திருக்கிறது சிங்கள அரசு.
மலேசியாவில் கே.பி. கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்தால், மலேசியாவில் தங்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களால் பிரச்னைகள் அரங்கேறக் கூடும் என்பதை யூகித்துத்தான் தாய்லாந்தில் கைது நடந்ததாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை, தங்களுக்கு ஆதரவான மீடியாக்கள் மூலமாக இலங்கை அரசு பரப்பிவிட்டிருக்கிறது…” என்கிறார்கள்.
கிடுகிடுக்க வைக்கும் கே.பி.!
கே.பி-யின் இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் அவருடைய வளர்ச்சி குறித்தும் விசாரிக்கத் தொடங்கினால், கிடுகிடு ஹிஸ்டரியை ஒப்பிக் கிறார்கள், நடுநிலையான உளவுப் புள்ளிகள்…
”பிரபாகரனின் நம்பகத்துக்குரிய கே.பி., அவருடைய உறவினரும்கூட. அதனால் புலிகளின் வெளியுலக விவகாரங்களையும், ஆயுதக் கொள்முதலையும் நிர்வகிக்க பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் கே.பி. 1987-ல் மலேசியாவில் ஒரு கப்பல் நிறுவனத்தை தொடங்கிய கே.பி-க்கு, அங்கே நிரந்தரமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது புலிகளின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணித்து வந்த மலேசிய அரசு, தேடுதல் வேட்டையையும் தீவிரப்படுத்தியது. அதனால் கே.பி. தாய்லாந்துக்கு பறந்தார். ஏகப்பட்ட பாஸ்போர்ட் களுடன் உலகத்தின் எந்த திசையில் உள்ள நாட்டுக்கும் சர்வசாதாரணமாக சென்று வரக்கூடிய வல்லமை படைத்த வராக விளங்கினார்.
2007-ல் ஒருமுறை தாய்லாந்து அரசால் கே.பி. கைது செய்யப்பட்ட போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்திய அரசு அவரை ஒப்படைக்கக் கோரியது. ஆனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே கே.பி. வெளியே வந்தார். அந்தளவுக்கு தாய்லாந்து அரசின் சகலதுறைகளிலும் தனக்கான ஆட்களை உருவாக்கி வைத்திருந்தார். பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு, புலிகளுடைய சொத்துகளை நிர்வகிக்கும் உரிமை கொண்டவராக கே.பி-தான் கருதப்பட்டார். 30.1.09-ம் தேதியன்று புலிகளின் சர்வதேச தொடர்பாளராக அறிவிக்கப்பட்ட கே.பி., லெபனான், தாய்லாந்து, கிரீஸ், சைப்ரஸ், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஜப்பான் என பல நாடுகளுக்கும் பயணித்து, சர்வதேச தொடர்புகளில் கில்லாடியாக விளங்கினார்.
ஆயுதச் சந்தைகளில் சர்வபல செல்வாக்குப் பெற்ற கே.பி., தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் நிறைய கப்பல்களை வைத்துக் கடல் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வந்தார். வெவ்வேறு தோற்றங்களிலும் பெயர்களிலும் மிக ஜாக்கிரதையாக உலவிய கே.பி., புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, வெளியே வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘பிரபாகரன், பொட்டு அம்மானைக் காட்டிலும் கே.பி-தான் கொடூரமானவர்’ என இலங்கையின் பயங்கரவாத தடுப்பு நிபுணரான ரொகர் குணரத்ன அறிவித்தார். அதன் பின்னர்தான் இலங்கை ராணுவ மேஜர் ஜெனரலான பெரேரோ ‘ஆபரேஷன் கே.பி.’ திட்டத்தை ரகசியமாகத் தீட்டத் தொடங்கினார். அந்தத் திட்டம் இவ்வளவு சீக்கிரத்தில் சக்சஸ் ஆகுமென்று இலங்கை அரசே நினைத்திருக்காது…” எனச் சொல்கிறார்கள் வியப்பு குறையாமல்.
கே.பி. வெளியிடப் போகும் பகீர்!
மலேசியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கே.பி-யை கட்டுநாயகா விமான நிலையத்தில் இருந்து ரகசிய இடத்துக்கு ராணுவத் தரப்பினர் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவரிடத்தில் நடத்தப்படும் விசாரணை குறித்து, கொழும்பு பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.
”கே.பி-யைப் பிடித்ததன் மூலமாக இலங்கைக்கு வெளியே தமிழீழ அரசு அமைக்க நடந்த முயற்சிகளை வேரோடு அழித்து விட்டதாக ராணுவம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தற்போது ரகசிய அறையில் வைத்து கே.பி-யை கடுமையான முறையில் விசாரிக்கும் ராணுவ அதிகாரிகள், பல ரகசியங்களை அவரிடமிருந்து கறந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் சொத்துகள், ஆயுதங்கள், அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தெல்லாம் ஆரம்பகட்ட விசாரணையிலேயே கே.பி. நிறைய தகவல்களைக் கொட்டி இருக்கிறாராம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கே.பி., ராணுவ சித்ரவதைகளை எதிர்கொள்ள முடியாமல் அடிக்கடி மயக்கமாகி விடுகிறாராம். ராஜீவ் கொலை, பிரபாகரனின் இறுதித் திட்டங்கள், இறுதிக்கட்ட பேச்சு, தமிழகத் தொடர்பு, உலகளாவிய நட்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து இப்போது அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் எங்களிடம் பேசிய சில ராணுவ அதிகாரிகள், ‘பிரபாகரனின் கொடூர முகத்தை கே.பி. மூலமாகவே உலகத்துக்கு வெளிச்சமிடுவோம்’ எனச் சொன்னார்கள். கே.பி-யை பெரிய அளவில் டார்ச்சர் செய்து, அவருடைய வாக்குமூலமாக சில செய்திகளை வெளியிட்டு, உலகத் தமிழர்களையே அதிர வைக்க ராணுவத் தரப்பு தயாராகி விட்டது. மே 18-ம் தேதி பிரபாகரன் கடைசியாக கே.பி-யிடம் பேசிய விவரங்களாக என்னென்ன கட்டுக்கதைகள் ராணுவத்தால் கிளப்பப்படப் போகிறதோ…” எனச் சொன்னார்கள் கொழும்பு பத்திரிகை யாளர்கள்.
அடுத்த தலைவர் யார்?
கே.பி. கைதுக்குப் பிறகு தமிழ் ஈழ முயற்சிகள் முடங்கிவிடாதபடி புலிகளின் புதிய தலைவராகச் செயல்படப் போவது யார் என்கிற பட்டிமன்றம் இப்போதே பரபரக்கத் தொடங்கி விட்டது. கனடா வில் உள்ள ஈழத்தமிழர் தலைவரான டேவிட் பூபாலபிள்ளை, லண்டன்வாழ் ஈழத்தமிழரான முனைவர் அம்பலவாணன் சிவானந்தன் ஆகியோரின் பெயர்கள் இப்போதைக்கு தீவிரமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
நன்றி: விமர்சனம்
more
-
ரஜனி காந்த், வைகோ மற்றும் ராம்தாஸ் ஆகியோர் புலிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளனர் – ரிசாட் பதியூதீன்


தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக போற்றப்படும் ரஜனி காந்த், அரசியல்வாதிகளான வை.கோ மற்றும் ராம்தாஸ் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளில் இயங்கி வரும் தமிழ் வானொலிச் சேவைகள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வியாபார முயற்சிகளுக்கு புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
குறித்த ஊடகங்கள் வெறுமனே இலங்கை அரசாங்கம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து, தமிழ் புலம்பெயர் மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை விளக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான தமிழ் இணைய தளங்கள் புலம் பெயர் தமிழர்களின் பணத்தைக் கொண்டு இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொல் திருமாளவன், வை.கோ, ராம்தாஸ் மற்றும் நெடுமாறன் போன்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பம் முதலே நிதியுதவிகளை வழங்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில தமிழ்த் திரைப்படங்களை இயக்குவதற்காக புலிகள் பணம் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டனில் உள்ள தமிழர்கள் பெரும் தொகையான பணத்தை செலவிட்டு தமிழகத்தில் திரைப்படங்களை தயாரித்துள்ளதாகவும், ரஜனி காந்திற்கும் இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ரஜனிகாந்திற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் எந்தக் கருத்தக்களையும் வெளியிடவில்லை.
புலம் பெயர் தமிழர்களினால் பயன்படுத்தப்படும் இரத்தம் படிந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: தகவல்கள்
more
-
ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி “இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள், ‘இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்,” என்று கட்டளையிட்டான்.
அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் “எனக்கு ஆமை வாசனை தெரிகிறது… நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்” என்று கூறினாராம்.
அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஓர் உண்மைச் சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீசாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஓர் அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.
நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்துக்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும், ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.
அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.
அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்துக்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.
அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.
உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.
ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு, இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.
more
-
எஸ்.எஸ்.பி மகன் விளக்கமறியல்: மனைவி கைது செய்யப்படுவார். பொலிஸ் பேச்சாளர்.
தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் பொருட்டு பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிங்கள மொழியில் விடுக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையின் சாராம்சம் கீழே.
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று 17ம் திகதி கடுவல மாவட்ட நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களில் பல்வேறுபட்ட செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை விளக்கும் பொருட்டு இவ் அறிக்கை வெளியிடப்படுகின்றது.
விசேட பொலிஸ் அணி ஒன்றினால் மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளில், சில முக்கியமான சாட்சிகள் நகரப்பகுதியில் இருந்து வெளியே காணப்படுகின்றமையால் சாட்சிகளை பதிவு செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தலைமையில் செயற்பட்டு வரும் பொலிஸ் குழுவினர் 12 சந்தேக நபர்களை கைது செய்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 உதவி பொலிஸ் பரிட்சகர்கள், 7 பொலிஸ் கொஸ்தாபல்கள் மற்றும் பொலிஸ் சாரதி ஒருவர் அடங்குவதுடன் அவர்கள் நேற்று 17ம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 31ம் திகதி நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
பிரதான சந்தேக நபர் களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பி அறிக்கை ஊடாக நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டபோது நோயாளியின் நிலமையை நேரடியாக சென்று பார்வையிடுமாறு கடுவல நீதிமன்று கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றிற்கு அறிவுறித்தியது.
அவ் அறிவுறுத்தலைத் தொடர்ந்து நேற்று இரவு களுபோவில வைத்தியாசாலைக்குச் சென்ற கங்கொடவில நீதிவான் சந்தேக நபரின் நிலமைகளை பார்வையிட்டதுடன் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அவ் அறிவுறுத்தலை தொடர்ந்து அங்கு விரைந்த சிறைக்காவலர்கள் முதலாம் சந்தேக நபரான ரவிந்து குணவர்த்தனவை தமது காவலுக்குள் கொண்டுவந்துள்ளதுடன், தடுப்புக்காவலில் சந்தேக நபர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது மனைவியை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதன்பொருட்டு பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
more
-
எல்டிடிஇ-யின் புதிய தலைவர் நெடியவன்?- நார்வே அரசு விசாரணை-நன்றி :தமிழ் நியூஸ் வெப்


கேபி என்கிற செல்வராசா பத்மநாதனை கொஞ்சம் கூட விரும்பாத, போர்தான் தமிழீழத்தை அடைய ஒரே வழி என்ற பிரபாகரனின் கொள்கையை முழுமையாக பின்பற்றுகிற, நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் (வயது 32) புலிகள் இயக்கத்தை அடுத்து தலைமையேற்று நடத்தப் போவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நார்வே அரசு அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளது. இருப்பினும் விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.
புலிகள் இயக்கத்திற்கு இப்போது தலைமை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் மரணம் என்ற செய்திக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தின் ஒரு தரப்பு கேபிக்கு பின் அணிவகுத்தது. இதை புலம் பெயர்ந்த தமிழர்களும், பெருவாரியான புலிகள் இயக்க நிர்வாகிகளும் ஏற்காவிட்டாலும் கூட, பின்னர் கேபியின் பின்னால் கிட்டத்தட்ட அனைவருமே ஒன்று திரளத் தொடங்கினர். நாடு கடந்த தமிழீழ அரசை நிர்மானிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில்தான் கேபி கைது செய்யப்பட்டு விட்டார். இதனால் தற்போது புலிகள் இயக்கம் கிட்டத்தட்ட தலைமை இல்லாத நிலையை அடைந்துள்ளது.
யார் அடுத்த தலைவர் என்ற பேச்சு பெரிதாக எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் நார்வேயில் வசித்து வரும் நெடியவன்தான் அடுத்த தலைவராகப் போகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
நெடியவன், தீவிர புலிகள் இயக்க பிரமுகர் ஆவார். நார்வேயில் நீண்ட காலமாக வசித்து வருகிறார். கேபியைப் போலவே இவருக்கும் சர்வதேச அளவில் நல்ல தொடர்புகள் உள்ளன.
கேபியை கொஞ்சம் கூட விரும்பாதவர் நெடியவன். பிரபாகரனின் கொள்கைகள் மீதும், அவரது போக்கின் மீதும் முழு நம்பிக்கை கொண்டவர். இடையில் கேபியை ஓரம் கட்டி வைத்திருந்த பிரபாகரன், அவருக்குப் பதில் சர்வதேச பொறுப்பாளர் பொறுப்பை காஸ்ட்ரோவிடம் கொடுத்திருந்தார். அந்த காஸ்ட்ரோவுக்கும், நெடியவனுக்கும் இடையே நல்ல தொடர்புகள் உண்டு.
கேபி புலிகள் இயக்கத்திற்கு தன்னைத் தானே தலைவராக்கிக் கொண்ட போது அதை கடுமையாக எதிர்த்தவர் நெடியவன். கேபியுடன் சேரவே முடியாது என்றும், போர் மட்டுமே நிரந்தர தீர்வு என்றும் தொடர்ந்து கூறி வந்தார் நெடியவன்.
இருப்பினும் கேபியின் சார்பில் பல்வேறு தரப்பினரும் அவரை சந்தித்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறியதைத் தொடர்ந்து கேபியுடன் இணைந்து செயல்பட முன்வந்தார் நெடியவன்.
இந்த நிலையில் தற்போது கேபி கைதாகி விட்டதால் நெடியவன் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது.
நெடியவன் போர் மட்டுமே தீர்வு என்று நம்புகிறவர். உலக அளவில் நல்ல தொடர்புகளைக் கொண்டிருப்பவர், பிரபாகரனின் கொள்ககைள் மீது இன்னும் முழு நம்பிக்கையும், பற்றும் கொண்டிருப்பவர். எனவே புலம் பெயர்ந்த தமிழர்கள் நெடியவனை புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பார்க்கத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த செய்தியை முதலில் கிளப்பியவர் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத ஆய்வு நிபுணரான ரோஹன் குணவர்த்தனே என்பவர்தான். இவர்தான், புலிகள் இயக்கத்தின் அடுத்த தலைவர் நார்வேயில் இருப்பதாக கூறியிருந்தார்.
கைது - விடுதலை..
இந்த நிலையில் நெடியவனை ஆகஸ்ட் 12ம் தேதி நார்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம், சேதுரூபன் என்பவர் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின்னர் நெடியவன் விடுவிக்கப்பட்டு விட்டாராம்.
புலிகள் இயக்கம் தொடர்பாக நெடியவனிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் ஒரு தகவல் கூறுகிறது.
அடிக்கு அடி, உதைக்கு உதை என்ற கொள்கையைக் கொண்டவர் நெடியவன். பிரபாகரனின் போர்க்குணம் இவருக்கும் உள்ளதாம். நார்வேயில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தமிழ் வெஸ்ட்லான் பகுதியில் நான்கு பேர் புடை சூழத்தான் உலா வருவாராம் நெடியவன்.
நார்வேயில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக இருக்கிறார் நெடியவன்.
18 வயதாக இருக்கும்போது நெடியவன் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். அவர் உயர் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக புலிகள் இயக்கமே, அவரை ரஷ்யாவுக்கு படிக்க அனுப்பி வைத்தது. இருப்பினும் தனது படிப்பை நெடியவன் முடிக்கவில்லை.
அதன் பின்னர் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவில் இணைந்தார் நெடியவன். எஸ்.பி. தமிழ்ச்செல்வனுடன் இணைந்து தாய்லாந்தில் நடந்த 4வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். பின்னர் ஐரோப்பாவுக்கு இடம் பெயர்ந்தார். நார்வேயை தனது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார்.
நெடியவனின் மனைவி பெயர் சிவகெளரி சாந்தமோகன். கெளரியின் தந்தை ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன் லாலா. இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களில் ஒருவர். பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் ஒருவர்.
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ரஞ்சன் லாலா ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந் நிலையில் நெடியவன் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்படக் கூடும். அதேசமயம், கேபி தன்னைத் தானே தலைவராக அறிவித்துக் கொண்டது போல நெடியவன் செய்ய மாட்டார். சத்தம் போடாமல் நடவடிக்கைகளை முடுக்கி விடுவார், இலங்கையில் மீண்டும் புலிகளை ஒருங்கிணைக்கும் ரகசிய வேலைகளையும் அவர் தொடங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ருத்ரகுமாரனை நாடு கடத்தக் கோரும் இலங்கை..
இதற்கிடையே, நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பிரபல வழக்கறிஞர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிம நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயந்த ஞானக்கோன் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரரான சார்லஸ் ஞானக்கோன் என்பவர் சிங்கப்பூரில் இருந்தபடி புலிகளுக்காக செயல்பட்டு வந்துள்ளார். இந்தத் தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள கேபி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர விஸ்வநாதன் ருத்ரகுமாரன். இவர்கள் மூவரையும் நாடு கடத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோரிக்கை விட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என்றார்.
ஞானக்கோன் சகோதரர்களில் மூத்தவர் சார்லஸ். இவரைத்தான் சில காலத்திற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்கே, சிங்கப்பூரில் ரகசியமாக சந்தித்து புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாக ராஜபக்சே கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.
ஜெயந்தா ஞானக்கோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனேவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.
சார்லஸ் ஞானக்கோன் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் துப்பாக்கிகளை சப்ளை செய்து வந்தவர்.
இவர்கள் தவிர ருத்ரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்.
இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு நாடு கடத்தி கொண்டு வந்து விசாரிக்க இலங்கை அரசு தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் அது எளிதாக இருக்குமா என்பது சந்தேகம் என்ற பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.
more
-
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 38: ஆயுதம் ஏந்தும் இளைஞர் அமைப்புகள்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் இயக்கம் 1972-லேயே உருவாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ்ப் புதிய புலிகளாக இருந்த பின்னால் பெயர் மாற்றம் அடைந்ததே இது. ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் ஆயுத எதிர்த்தாக்குதல் இயக்கமே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமே தனி ஈழம் கட்டமைக்க முடியும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் இவர்கள்.
இவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் 1954-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வல்வெட்டித்துறையில் பிறந்தார். தனது 17-ஆவது வயதிலேயே தமிழ் இன ஒடுக்கு முறையை எதிர்க்கும் மனோபாவத்தைக் கொண்டிருந்தார். சிறு வயதாக இருந்ததால் மற்றச் சக புரட்சியாளர்கள் இவரைத் "தம்பி' என்றனர்.
இவர் ராணுவ வெளித்தாக்குதல்களை எதிர்த்துத் தீவிர எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவர் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட ஓர் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். 1983-ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்கா அரசு நடத்திய உள்ளூராட்சித் தேர்தல் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியில் இவ்வியக்கம் முதன்மைப் பங்கெடுத்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மூவர் மீது ராணுவ நடவடிக்கை தொடுத்தது. அதேபோன்று 1983 ஜூன் 5-ஆம் தேதி காங்கேயன் துறைத் தாக்குதலும், சாவகச் சேரிப் போலீஸ் நிலையத் தாக்குதலும், நெல்லியடியில் அரசுப்படையினருக்கு எதிராக 1982-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலும் ஆவ்ரோ விமானத் தகர்ப்பும் இவ்வமைப்பால் நடத்தப்பட்டவை ஆகும்.
தமிழ் மாணவர் பேரவை உருவானபின் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து அரசியல் தலைமை உருவாக ஆரம்பித்தது. தரப்படுத்துதல் மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் பல வந்தபின், முதல் தடவையாக தமிழ் இளைஞர்கள் இனவாதத்திற்கு எதிராக ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்தச் சமயம் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதப் போராட்டங்கள் உருவாயின.
1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையின் கீழ் ஏற்பட்ட அரசுக்கு எதிரான எழுச்சியில் பல்வேறு இளைஞர்களைக் கும்பல் கும்பலாகக் கைது செய்து அரசாங்கம் காவலில் வைக்கிறது. இந்தக் கைது படலத்தில் தமிழ் இளைஞர்களும் இருந்தனர். இந்த இளைஞர்கள் விடுதலையானபின் அரசுக்கு எதிராகத் தீவிர எதிர்த்தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். அரசு பதில் நடவடிக்கையாகக் கொடூரமான ஒடுக்குமுறையை மேற்கொள்ளுகிறது. இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் மூன்று விதமான போக்கு வெளிப்படுகிறது.
1. தலைமறைவு ஆதல்.
2. ஒதுங்குதல்.
3. அரசால் கைது செய்யப்படுதல்.
தலைமறைவான இளைஞர்களில் அரசியல் தெளிவு பெற்ற ஒரு சிலர் லண்டனில் கூடி ஈராஸ் (EROS) என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். இதனுடன் மாணவர்களுக்கான அமைப்பான கஸ் (GUES)சும் உருவாகிறது. (General Union of Eelam Students) ஆரம்பத்தில் இவ்விரண்டு அமைப்பும் ஒன்றாக இணைந்தே செயல்படுகின்றன.
ஈராஸ் படிப்படியாக ஆயுதப் படைக் குழுக்கள் கட்டமைப்பதற்கான வேலைகளைச் செய்கிறது. அதே நேரத்தில் பல பிரிவு வெகுஜன அமைப்புகளையும் உருவாக்கிச் செயல்பட வேண்டும் என்ற கருத்தும் உருவாகி, அதற்கான செயல்களில் சில தலைவர்களும் ஈடுபடுகிறார்கள். இதன் உச்சக்கட்டமாக 1980-இல் ஒரு பிளவு ஏற்படுகிறது. இப்பிளவில் இருந்து உருவானதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகும்.EROS-இன் தலைவர் பாலகுமார் ஆவார். ஈராசிலிருந்து வெளியேறி வந்த தலைவர்கள் உருவாக்கிய அமைப்பே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகும்.
1981 அக்டோபர் 10-ஆம் நாள் இவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிடுகின்றனர்.
இந்த அமைப்பு மூன்று மிக முக்கியமான நோக்கங்களைக் கொண்டதாகும்.
1. ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் தேசத்தை விடுவித்து தனி ஈழம் காண்பது.
2. ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, கலாசாரச் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியல் சுதந்திரத்தைப் பெற்று ஒரு சோஷலிச சமுதாயத்தைக் கட்டமைப்பது.
3. சர்வதேச முற்போக்குப் போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஏகாதிபத்தியத்திற்கும், மிதவாத இனவாதத்திற்கும் எதிராகப் போராடுவது.
இம்மூன்று நோக்கங்களை உள்ளடக்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கட்டமைக்கப் பலதரப்பட்ட பிரிவு மக்கள் மத்தியில் இறங்கிப் பல வகையான மக்கள் இயக்கங்களை உருவாக்கித் தனி ஈழத்திற்காகப் போராட வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.
கஸ் ((GUES)அமைப்பு, பின்னால் இவர்களுடன் இணைந்து விட்டது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை அமைப்புகளாக, மாணவர் அமைப்பாக கஸ் (GUES) கிராமப்புறத் தொழிலாளர் விவசாயிகள் முன்னணி (Rural Workers & Peasants Front), ஈழ இளைஞர்கள் முன்னணி (Eelam Youth Front), தோட்டத் தொழிலாளர் முன்னணி (Plantation Proletariat Front), ஈழ பெண்கள் விடுதலை முன்னணி (Eelam Women’s Liberation Front), மீனவத் தொழிலாளர் முன்னணி (Fishery Workers Front) ஆகியவைகளும் அடங்கும்.
1983-ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஆயுதப்படைப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் விடுதலைப் படை உருவானது. இது பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும், இனவாத அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவராகப் பத்மனாபா இருந்தார்.
இது 1980-இல் LTTE - தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்து உருவான ஒரு அமைப்புதான் தமிழ் ஈழமக்கள் விடுதலை இயக்கம்- PLOT.. இது முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் தலைமையில் செயல்பட்டது. இவரது தலைமையில் உள்ள இயக்கம் பல ஆயுத எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளது.
இந்த ஐந்து (EROS, EPRLF, TELO, LTTE, PLOT) அமைப்புகளையும் தவிர மற்றும் சில சிறு ஆயுதக் குழுக்கள் இலங்கை மண்ணில் இருக்கத்தான் செய்தன. அதைத் தவிர ஒரு சில மனித உரிமை மற்றும் பல மக்கள் இயக்கங்களும் இலங்கை மண்ணில் இனவாத ஒடுக்குமுறையை எதிர்த்து இயங்கி வந்தன.
ஆனால் இந்த ஐந்து இயக்கங்கள் மட்டும்தான் ஆயுதப் படைப்பிரிவைக் கட்டமைத்து அரசு பயங்கரவாதத்தை வீரத்துடன் எதிர்த்துத் தியாகம் பல புரிந்து வந்தன.
ஒரு காலகட்டத்தில் EROS, EPRLF, LTTE, TELO ஆகிய நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதாக முடிவெடுத்தன. அதன்படி வேறு சில மக்கள் இயக்கங்களுடன் (23 மக்கள் இயக்கங்கள்) இணைந்து இனவாத எதிர்ப்பு மக்கள் அணிகளைக் கட்டமைத்தும் அதே சமயம் ஆயுதப்படைப் பிரிவுகளின் மூலம் ராணுவ பதிலடியும் தந்தனர்.
பிரபலமாக உள்ள அமைப்புகளைத் தவிர (TELO, EPRLF, EROS, LTTE, PLOT) வேறு சில குழுக்களும் சிறிய அளவில் செயல்பட்டு வந்தன என்று சொன்னோம். இவற்றில் இரண்டு அமைப்புகள் நம் கவனத்திற்குரியது.
தமிழ் ஈழ விடுதலை ராணுவம் (TELA) என்கிற அமைப்பு TELO விலிருந்து பிரிந்ததாகும். இவ்வமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் ""ஓபராய்'' தேவன் என்பவர். இவர் இலங்கையில் தியாகியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983 ஜூலை கலவரத்திற்குமுன் யாழ் பல்கலைக்கழக மாணவியரைக் கடத்திச் சென்று கற்பழித்த ராணுவ வீரர்களைக் கொன்ற தாக்குதல் நடவடிக்கை இவர்கள் எடுத்ததே ஆகும்.
இவைத் தவிர (TEA, TELE) என்ற ராணுவ அமைப்புகளும் உள்ளன.
தமிழ் ஈழ தேசிய ராணுவம் (TENA) என்கிற அமைப்பு தமிழ் விடுதலைக் கூட்டணியின் (TULF)ன் தலைவரான அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதனால் உருவாக்கப்பட்டதாகும். மற்ற விடுதலைக் குழுக்கள் இவ்வமைப்பைத் தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவருடைய துணை அமைப்பு என்றே குறிப்பிட்டனர்.
தமிழ் ஈழ விடுதலை முன்னணி (Tamil Eelam Liberation Front) என்பது ஈழவேந்தன் தலைமையில் உருவான அமைப்பாகும்.
அதேபோன்று எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகனான சந்திரஹாசனால் வெளியேறிய இலங்கைத் தமிழரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு PROTEG. இலங்கையில் இருக்கும் மதத் தலைவர்கள் (புத்த, கிறிஸ்துவ முஸ்லிம்) தமிழ்நாட்டில் உள்ள விடுதலைக் குழுக்களுடன் பேசுவதற்கு வரும்போது இவ்விரு அமைப்புகளுடனேயே பேச விரும்பியதற்குக் காரணம், இவர்களின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு என்கிற விமர்சனம் உண்டு.
இவைகளைத் தவிர அகதிகளுக்கு உதவும், வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் OFERR என்ற ஓர் அமைப்பும் உள்ளது.
மேலும் ஆயுதப் போராட்ட விடுதலைக் குழுக்களைத் தவிர பரந்த அளவில் தமிழ் ஈழத்துக்காக மக்களைத் திரட்டிப் போராடும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற ஒரு வெகுஜன அமைப்பும் குறிப்பிடத்தக்கது. இது 1983 ஜூலை கலவரத்திற்குப் பின் பல்வேறு மக்கள் போராட்டங்களை இலங்கையில் கட்டமைத்துள்ளது.
நம்மால் அறியப்பட முடியாமல் இலங்கையில் இயங்கிய பல சிறு சிறு அமைப்புகளும் கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த அமைப்புகளும் விரிவான தொடர்பின்மையின் காரணமாக அவ்வமைப்புகளைப் பற்றிய தெளிவான விஷயங்களை அறியமுடியவில்லை.
.
தொடரும்...
நன்றி : இலக்கியா
more
-
கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவருக்கு ஆயுட் தண்டனை வழங்கப்படலாம்

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவரின், பல புகைப்படங்களை F B I புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.
அவர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காட்சி கொண்ட நிழற்படத்தையும், இயந்திர துப்பாக்கி ஒன்றை இயக்கும் படத்தையும் F B I வெளியிட்டுள்ளது.
29 வயதான சதா சரத் சந்திரன் என்ற இவர், புலிகளுக்கு, விண்ணை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணை கொள்வனவிற்கு துணை புரிந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் அக்டோபர் ஆறாம் திகதி நீதிமன்றில் முன்நிலைப்படுத்தும் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், ஆயுள் தண்டணைக்கு உட்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மற்றொரு கனேடியரான நடராசா யோகராசாவும் அதே தினத்தில் நீதிமன்றத்தில் முன் நிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதனைத்தவிர, சகிலால் சபாரட்ணம் என்ற கனேடியன் தமிழ் காங்கிரசின் தகவல் தொடர்பு கணிப்பாளர் நவம்பர் 14 ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அத்துடன், மேலும் மூன்று கனேடியர்கள் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
2006 ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி நியுயோர்க் லோங் ஐலண்ட் பிரதேசத்தில் ஆயுத ஒப்பந்தகாரர் ஒருவருடன் பேச்சு நடத்திய சரத் சந்திரன், நிதி ஒரு பிரச்சினை அல்ல என குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து அவர் கனடாவில் நிதி சேகரிப்பு குறித்து கலந்துரையாடல்களை நடத்தி, அதனடிப்படையில் நிதிகளை சேகரித்தார்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கனடாவின் இரகசிய புலனாய்வு அறிக்கையின் படி, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு, வருடமென்றிற்கு 12 மில்லியன் டொலர்கள் நிதி சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது,
more
-
தினசரி 250மிஸ் கோல்கள் ஆபாச எஸ்.எம்.எஸ்.களாள் திணறிபோன நடிகை ஸ்நேகா.
கடந்த 6மாதங்களாக தினம் 250மிஸ் கோல்கள் அடித்து எண்ணற்ற ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி காதல் தொல்லை கொடுத்த நபர் ஒருவர் மூலம் சலித்துப் போனார் நடிகை ஸ்நேகா.
தன்னை படத்தயாரிப்பாளர் எனக் கூறிக்கொண்டு ஆட்டோகிராப் பாகம் 2என்ற படத்தை கன்னட மொழியில் எடுக்கப் போவதாக கூறியவாறு ஸ்நேகாவின் தந்தையை ஏமாற்ற முயன்ற பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா (வயது 35) தற்போது கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த பேட்டியில் மேலும் தெவித்துள்ளதாவது, ராகவேந்திரா முதலில் எங்கள் வீட்டுக்கு வந்து தன்னை ஒரு சினிமா தயாரிப்பாளர் என்று அறிகப்படுத்திக் கொண்டார். அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் என் அப்பாவிடம் கூறினார்.
அதுபற்றி முதலில் இயக்குநர் சேரனிடம் போய் பேசுமாறு என் தந்தை அவடம் கூறி அனுப்பினார். இதையடுத்து இயக்குநர் சேரன் என் அப்பாவை தொடர்பு கொண்டு, ராகவேந்திரா படம் எடுக்க வந்தவர் போலில்லை. மோசடி பேர்வழி போல் தெரிகிறார் என்றார்.
அதன்பிறகு சில நாட்களில் ராகவேந்திரா என்னை சந்தித்தார். அப்போது, நான் உன்னை வைத்து படம் எடுப்பதற்காக சென்னை வரவில்லை. என்னிடம் ரூ.5,000 கோடி சொத்து உள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்காகத்தான் படத் தயாரிப்பாளர் போல வந்தேன் என்றார். அதற்கு, நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்று கூறிவிட்டேன்.
இதையடுத்து எனக்கு காதல் எஸ்.எம்.எஸ்களை அனுப்ப ஆரம்பித்தார். நான் எந்த எஸ்.எம்.எஸ்.சுக்கும் பதில் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, உன் முகத்தில் அசிட் ஊற்றி கோரமாக்கி விடுவேன் என்று மிரட்டினார்.
பின்னர் ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்ப ஆரம்பித்தார். தினம் 250 மிஸ் கோல்கள், எஸ்.எம்.எஸ்.கள் என்று தொல்லையாக இருந்தது. செல்போனை நிறுத்தி விட்டு மறுபடியும் போட்டால் அடுத்து நிமிடமே அழைத்து, எனக்கு பயந்து போனை நிறுத்தி விட்டாயா? என்று மிரட்டுவார்.
3 முறை செல்போன் எண்களை மாற்றினேன். ஆனாலும் எப்படியாவது இலக்கத்தைக் கண்டுபிடித்து விடுவார். நாளடைவில் நேராக படப்பிடிப்புகள் நடக்கும் இடத்திற்கு வந்து தொல்லை தர ஆரம்பித்தார். என் பிறந்த நாளன்று பூச்செண்டு அனுப்பினார். அதை தூக்கி வீட்டிற்கு வெளியே போட்டால் அதையும் கண்டுபிடித்து, நான் அனுப்பிய பூச்செண்டை வெளியே எறிந்து விட்டாயா? என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
பொறுமை இழந்து போனதால் பொலிஸில் புகார் கொடுத்தேன். பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
more
-
தமிழர் தலைவர் முதல்வர் கலைஞ்சருக்கு மலேசியாவில் செருப்படி -வீடியோ
வீடியோவைப் பார்க்க Readmore யை அழுத்தவும்
more
-
'உணவுக்கு சரியாக கஸ்டப்பட்டோம் கோதுப்பருப்பை தண்ணீரில் அவித்து பசியாறினோம்"
- இறுதிக் கட்டப் போரில் சிக்கி உயிர்தப்பிய ஒரு பெண்மணியின் கண்ணீர்
நாம் இடம்பெயர்ந்து இராமநாதபுரம், பிரமணங்குளம், துறவில், தேவிபுரம், இரணைப்பாலை என 3 மாதங்கள் வரை அலைந்து நாடோடியாக புதுமாத்தளனை அடைந்தோம். அங்கு தினமும் வெறும் பருப்பை தண்ணீரில் அவித்து உண்டோம்." என இறுதிக் கட்ட போரில் உயிர்தப்பிய சிவராசா ரஞ்சனி தெரிவித்தார்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் சிக்கி வவுனியாவை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி (வயது 32) என்ற பெண்மணி தனது கசப்பான அனுபவங்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது அவரது கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கையில், 'என்ர கணவர் சிவராசா. கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நான் நற்பிட்டிமுனை. 1982ல் மணம் முடித்தோம். எங்களுக்கு 3 பிள்ளைகள். 2006ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து திரும்ப 'பாஸ்" கிடைக்கேல. கடந்த வருடம் யுத்தம் தொடங்கிட்டுது. வேறு வழியில்லாமல் இடம்பெயர ஆரம்பித்தோம். வட்டக்கச்சி, இராமநாதபுரம் என ஆரம்பித்து புதுமாத்தளன் வரை 3 மாதங்கள், உடுத்த உடுப்போட நாடோடிகளாக அலைஞ்ச நாங்கள்"
புதுமாத்தளனில் உணவுக்கு கஸ்டப்பட்டோம். அங்கு தேங்காய் 2 ஆயிரம் ரூபா, சீனி 2,500 ரூபா, செத்தல் மிளகாய் 16,000 ரூபா, மீன் 1,500 ரூபா இப்படியாக பொருட்களின் விலைகள் இருந்தன. கப்பல் வந்தால் உணவுப் பொருட்கள் வரும். ஆனால் எங்களுக்கு வெறும் பருப்பு மட்டுமே கிடைக்கும். அதுவும் கோதுப்பருப்பு. என்ன செய்வது. பருப்பை வெறும் தண்ணீரில் அவித்து பசியை ஆறினோம். சிலர் சைக்கிளை விற்று, தங்கத்தை விற்று தேங்காய் வாங்கினர். எம்மிடம் பணமில்லை. அங்கு துப்பாக்கிச் சூடுகள் விழவிழ ஓடினோம். ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வந்த ஆறுபேர் கால்களை இழந்தனர்.
நாதியற்று அலைந்து கடந்த ஏப்ரல் 16ம் திகதியன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். எம்முடன் 2,500 பேர் சரணடைந்தனர். நாம் செட்டிக்குளம் அருணாசல முகாமில் தங்க வைக்கப்பட்டோம். எமது ஒரு மகனை மொட்டை அடித்து வவுனியா காமினி வித்தியாலயத்தில் வைத்துள்ளனர். அவர் இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தர பரீட்சை எடுப்பவர். அவரை அவர்கள் விடவில்லை. நாம் அருணாசல முகாமில் 3 மாதங்கள் வரை இருந்தோம். சாப்பாடு பரவாயில்லை. நிவாரணம் தந்தார்கள். உடுப்புகளைத் தந்தார்கள். இன்று ஆண்டவன் அருளால் இங்கு வந்திருக்கிறோம். இனி புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவிருக்கிறோம்" என்றார்.
வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்கள் அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் முதலில் காரைதீவு விபுலானந்தர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி தனது கசப்பான அனுபவங்களைக் கொட்டித் தீர்த்தார்.
இவ்வாறு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மரண வேதனையான அனுபவங்கள் இருக்கின்றன. ஊடகங்கள் அனுமதிக்கப்படாததன் காரணமாக அவை இன்னும் அவர்களின் மனங்களில் புதைந்துபோயுள்ளன.
- லங்காநியுஸ்வெப்
more
-
பொலீஸ் அத்தியட்சகர் ஜமால்தீன் கொலை தொடர்பிலான உண்மைகள் அம்பலம்..
9
கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பணிப்பாளராயிருந்த பொலிஸ் அத்தியட்சகர் எச்.எல். ஜமால்தீன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான சந்தேகத்தின்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காரைதீவு விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் இம்மூவரையும் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி மருத முனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் அருகில் வைத்து பொலிஸ்அத்தியட்சகர் ஜமால்தீன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப் படையினர் முக்கிய சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர். மருதமுனை அல்-ராஜ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான சுலைமா லெவ்வை நஜிமுல் றகுமான், மத்திய முகாம் 13ம் கொலனியைச் சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன் (வீரா புலி உறுப்பினர்) நற்பிட்டிமுனை முகம்மது காசிம் ஹம்ஸா ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்களாவர். இச்சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் தகவல் தருகையில்: கொந்தராத்து அடிப்படையில் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு புலி உறுப்பினரொருவரால் ஜமால்தீன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். இதற்காக மருதமுனை அல்ராஜ் முகவரான சுலைமா லெவ்வை நஜிமுல் றஹ்மான் என்பவர், புலி உறுப்பினரான வீரா என அழைக்கப்படும் 13ம் கொலனியைச் சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன் என்பவருக்கு 10 இலட்சம் ரூபா கொந்தராத்து வழங்கியுள்ளாரென விசாரணைகளில் அம்பலமாகியிருக்கிறது. கொந்தராத்தாகக் கொடுக்கப்பட்ட தொகை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த முகம்மது காசிம் ஹம்ஸா, என்பவரூடாக அல்ராஜ் உரிமையாளர் வழங்கியுள்ளார். நற்பிட்டிமுனை காசிமே 10லட்சம் ரூபாவை புலிஉறுப்பினரான செல்லத்தம்பி தேவேந்திரனிடம் கையளித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென கல்முனைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீனை அல்-ராஜ் முகவர்நிலைய உரிமையாளரான நஜிமுல் றகுமானின் கட்டளைப்பிரகாரம் தான்தான் சுட்டுக்கொலை செய்ததாக புலிஉறுப்பினரான வீரா என்றழைக்கப்படும் செல்லத்தம்பி தேவேந்திரன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். காரைதீவு விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
more
-
புலிகளின் தற்போதய தலைமை செயலகம் பனாகொட இராணுவ முகாமா? - திடுக்கிடும் தகவல் அம்பலம்.
புலிகளின் தற்போதய தலைமை செயலகம் பனாகொட இராணுவ முகாமா? - திடுக்கிடும் தகவல் அம்பலம்.
புலிகளின் தலைமை செயலகம் எனவும் புலிகளின் தளபதி எனவும் பல முன்னைநாள் கிழக்கு தளபதிகள் பரபரப்பாக சர்வதேசத்தில் நிலை கொண்டுள்ள புலிகளின் தளபதிகள் போராளிகளுடன் உரையாடி வருகின்றனர்.
இவர்கள் தாம் காடுகளில் இருப்பதாகவும் போராடி வருவதாகவும் சிங்கள இராணுவத்தை கொல்லபோவதாகவும் விறுவிறுப்பாக பேசி வரகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புடன் இவர்கள் தொலைபேசியில் மட்டும் தொடர்பு வைத்துள்ளார்கள்.
ஆனால் உண்மை வடிவம் என்பது வேறு என்று லங்கைகாடியன் என்ற இணையத்தின் ஆசரியர் நிலந்த இலங்கமுக விபரித்துள்ளார்.
அதாவது தளபதி றாமுடைய மனைவி பிள்ளைகளைகடத்திய இராணுவம் இரகசியமாக தளபதி றாமைஉயிருடன் பிடித்தது.
உயிருடன் பிடிபட்ட றாமுக்குரிய அனைத்துவசதிகளும் செய்து கொடுக்கபட்டு கே.பி முதல்கனடாவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு புலிகளை ஒருங்கினைக்குமாறு ராமினூடாக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு உத்தரவு கொடுத்துள்ளது.
1) முதல்கட்டமாக புலிகளின் முக்கியஸ்தர்களை தளபதி றாமையும் தயாமேகனையும் வைத்து ஒருங்கமைத்தல்.
2) தயாமோகனுக்கு கடவுச்சீட்டு கொடுத்து மலேசியா கொண்டு சென்று கே.பியை பிடித்தல்.
3) டென்மாக் நோர்வே கனடா லண்டன் மற்றும் பல ஜரோப்பிய நாடுகளில் உள்ள புலிகளின் பிரதம இயங்கு சக்திகளுடன் தொர்புகளை ஏற்படுத்தி ஒலிபதிவுகளை பதிவு செய்து அவர்களை ஒருங்கமைத்து நீண்டகாலத்தில் பொறிகள் அமைத்து கடத்தி செல்லுதல்.
4) இதன் ஊடாக ஜரோப்பாவில் மறைந்துள்ள அனைத்து புலிகளையும் ஒழுங்கமைத்து புலிகள் என்ற இயக்கத்தை இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவே இயக்குதல்.
5) ஜரோப்பாவில் புலிகள் என்ற இலங்கை இராணுவபுலனாய்வு பிரிவின் ஒட்டு குழு ஒண்றைஉண்மையான புலிகளின் பிரபலமான தளபதிகளைவைத்து இயக்குதல்.
இதன் ஊடாக ஒட்டுமொத்த புலிகள் அமைப்புக்கு ஆப்பு இறுக்குதல் ஆகிய 5 திட்டங்கள் வரையபட்டு செயற்படுத்தபட்டு வருவதாக நிலந்த இலங்கமுவவின் கட்டுரை சுட்டி காட்டுகிறது.
முதல்கட்டமாக கே.பி மொசாட் இந்திய > இஸ்ரேலி> மலேசிய சதியில் மாட்டியுள்ளார். தற்போது கே.பி மாட்டியுள்ளதை தொடர்ந்து இலங்கை புலனாய்வு பிரிவு ஜரோப்பாவில் உள்ள 05 புலிகளின் முக்கிய புள்ளிகளை தூக்கும் திட்டத்தை தீட்டியுள்ளதாக அறியமுடிகிறது. இந்த செய்தி லங்காகாடியனை ஆதரமாகவைத்து எழுதபட்டது ஆகவே எமக்கு உண்மை பொய் தெரியாது.
more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
