Advertisement



August 23, 2009 இலிருந்து 26 இல் 7 புதிய இடுகைகளைக் காண்பிக்கிறது. பழைய இடுகைகளைக் காண்பி
August 23, 2009 இலிருந்து 26 இல் 7 புதிய இடுகைகளைக் காண்பிக்கிறது. பழைய இடுகைகளைக் காண்பி
  • எமக்குவேண்டியது தமிழர்களின் உரிமைகள் மட்டுமே, அதை யார் பெற்றுத்தருகின்றார்கள் என்பது முக்கியமல்ல!!!
    புலிகளின் கப்பல் விமானம் போன்ற போர்தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற ஏனைய பொருட்கள் போரிற்கு முன்னரே வேறு நாடுகளுக்கு அதாவது புலிகளுக்கு உதவிரவுகின்ற அல்லது புலிகள் உதவிவழங்குகின்ற நதாடுகளுக்கக் கொண்டு செல்லப்பட்டன. அவை குறித்த நேரத்தில் திரும்பி வருவதிலும் தகுந்த வெளிநாட்டுத் தொடர்பில் ஏற்பட்ட தாமதமும் இலங்கை அரசுக்கு பன்னாட்டு ஆதரவும் இப்போரை புலிகளின் பால் தோல்வியடையச்செய்தது.

    மக்களுக்கோ இலங்கை அரசிற்கோ தெரிந்ததிலும் பார்க்க புலிகளின் சர்வதேசத்தொடர்பு மிக அதிகம். இந்திய பிரதமர் கொலைசெய்யப்பட்டதற்கும், இலங்கையில் ஈழப்போரிற்கும் தொடர்பில்லை. கொலையின்மூலம் மென்மேலும் இந்தியாவிடம் பகையினைச்சந்திப்போம் என்று தெரிந்திருந்தும், இக்கொலை இடம்பெற்றமைக்குக்காரணம்??? இந்தியா ஆசியாவின் வல்லரசு… பலம்பொருந்திய நாடு. அந்நாட்டின்வளர்ச்சியில் பெரிதும் ஆர்வமாக இருந்தவர் அமரர் ராஜீவ்காந்தி, எனவே அவரின் மரணம் பலருக்கு நிம்மதிப்பெருமூச்சினை விடச்செய்தது. அதற்குப்புலிகள் உடந்தையாக இருந்ததனால் அவர்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன???

    ஆசியாவில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் அடிப்படைவசதியில்லாமல் போராடும் போராட்ட அமைப்புக்கள் இருக்கின்றன… 25வருடங்களுக்கு முன்னரே பல்வேறு நாடுகளில் இராணுவப் பயிற்சியைப் பெறுமளவிற்கு எமது போராட்டக் குழுக்கள் இருந்தனர் என்றால், புலிகளுக்கு பணத்தடை இல்லாது இருக்கும் போது அவர்களுக்கு எத்தகைய தொடர்பு இருந்திருக்கும்.

    அதுமட்டுமல்லாது, புலத்தில் இருக்கும் புலிகள் இயக்கத்தவர்கள் வசதிவாய்ப்போடு உல்லாசமாக சுகபோக வாழ்வை மேற்கொண்டு வந்தபோது, ஈழத்தில் போராடுவோர் அங்கேயே போராடி மடிந்துகொண்டிருந்தனர். அதிலும் குறிப்பிட்டபிரதேசத்தவர் போராடும்போது, மற்ற பிரதேச போராளிகள் பெருமைகளையும் ஆழுமையினையும் மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஆரம்பத்தில் விக்ரர் மன்னார்ப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்தபோது, அவருடைய போர்த்தந்திரம் மற்றும் போராளிகளின் பலம் சொல்லொண்ணாதவை.

    இன்னொருபுறம் எமது பார்வையினைச் செலுத்துவோம். தமிழ்த் தேசியம் - ஆரம்பகால தமிழர்களின் கடவுச்சீட்டில், இனம் இலங்கைத்தமிழ் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது, இலங்கையர் என்று மட்டும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை வெளிநாடுகளில் வெளிநாட்டுத்தேசியத்தைப் பெற்றுக் கொள்வோர்கள், தமது கடவுச்சீட்டில் இலங்கை தமிழ் ஜேர்மானியர், இலங்கை தமிழ் பிரித்தானியர், இலங்கை தமிழ் இத்தாலியர், இலங்கை தமிழ் நோர்வேஜியன், இலங்கை தமிழ் கனேடியர்… என்று பிரிவிட்டுக்காட்டியதில்லை. அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதோடு பெருமையாகவும் “ எனக்கு வெளிநாட்டு பாஸ்போட்” என்று மார்தட்டுகின்றோம். ஏன் இங்கும் எமது அடிப்படைத்தேசியம் குறிக்கப்படவில்லை என்று உங்கள் ஆர்ப்பாட்டம் தொடரவில்லை!

    இலங்கையில் எல்லா உரிமைகளும் இருக்கின்றன… நாம் தான் அவற்றைக் கோட்டைவிட்டோம். விடுதலைப்புலிகள் ஆரம்பத்தில் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

    தற்போது வடக்கில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமைக்குக் காரணம் புலிகளே!!!

    பௌத்த குருமார்கள் அடிக்கல் நாட்டுகின்றனர்… சிங்கள அமைச்சர்கள் முக்கிய விடயங்களில் பங்குபெறுகின்றனர்… இங்கு தமிழ்க்கலாசாரம் எங்கே? தமிழ் அமைச்சர்கள் எங்கே? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே? இந்து மற்றும் கிறீஸ்தவ மதகுருமார்கள் எங்கே? இதனால்தானே போராட்டம் தொடங்கியது…!!! இதற்கு ஆயுதம் தேவையில்லை, அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அதிகாரிகள் அகிம்சையில் குரல்கொடுத்தால் போதுமானவை. அப்படியும் குரல்கொடுக்கவில்லை என்றால் அனைத்து தமிழ்க்கட்சிகளும் இந்த விடயத்தில் இணைந்து குரல்கொடுக்கவேண்டும்… தற்போது மனோகணேஷன் கொடுக்கின்ற குரலிலும் பார்க்க புலிகள் மக்களுக்காகக் கொடுக்கின்றகுரல் தளர்ந்துவிட்டது. இது இப்படியிருக்க, மேற்சொன்ன விடயத்திற்கு மீண்டும் கொண்டுசெல்கின்றேன்… தமிழீழப் போராட்டத்தில் பிடிவாதமாக உள்ளவர்கள் இரண்டுதேசியத்தை உடையவராக இருக்கவேண்டும் அல்லது, தனி இலங்கைத் தேசியத்திலேயே இருக்கவேண்டும்… காரணம் நான் தமிழீழத்தான் தமிழீழத் தேசியத்தை உடையவன். எப்போதும் எந்த தேசியத்தையும் பெற்றுக்கொள்ளமாட்டடேன் என்று அடம்பிடிக்கவேண்டும்.

    எமது தேசத்தில் உள்ள தேசியத்தில் திருத்தங்களை ஏற்படுத்த மனமில்லாதவர்கள் அன்னியனிடம் மண்டியிட்டு அவனுடைய தேசியத்தை பெற்றபின்னர், அந்த தேசியத்திற்கு எப்படி நம்பிக்கையாக இருப்பார்கள்…??? அப்படி அந்நிய தேசதேசியத்திற்கு நம்பிக்கையாக இருப்பவர்கள் எப்படி தமிழ்த் தேசியத்திற்காகப் போராடுவார்கள்??? அதனை எப்படி அந்நாடுகளின் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளமுடியும்… தமது தேசியத்திற்கு குந்தகம்விளைவிப்பவர்கள் இலங்கையர் என்று விண்ணப்பங்களை ஒதுக்கமாட்டார்களா??? தேசியம் வழங்குவதனை நிராகரிக்கமாட்டார்களா? சட்டத்தால் தடுக்கமாட்டார்களா???

    நியாயம் கேட்பதற்காக புலத்தில் ஊர்வலங்கள் மேற்கொண்டபோது, பலதமிழர்களுக்கு பிறநாட்டுக் காவலாளிகள் தடியடிகொடுத்தனர், மறியலிலும் வைத்தனர்… ஊர்வலங்களுக்குத் தடையும் விதித்தனர். நீதி கோரும் இடத்திலே இத்தகைய நிலையிருக்க, இலங்கையில் வன்முறையில் சட்டத்திற்குப்புறம்பாக எமது செயற்பாட்டை மேற்கொண்டால் எப்படியிருக்கும்.

    இப்படியிருக்க புலத்தில் தேவையற்வ விடயங்களில் ஈடுபட்டமைக்குப்பதிலாக அகத்தில் ஏன் இப்போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடாது… “இப்ப இலங்கையில செய்தால் தடாதான்” என்று ஒதுக்கத்தேவையில்லை இப்பவும் அதற்கெல்லாம் முறையுண்டு…

    அதற்கு முதலில் தற்போதைய அரசிற்கு அதிகாரியாக இருப்பவர்களுக்குத் தூபங்காட்டவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்டுபதவியில் இருப்பவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும். அவர்கள் நன்மைதான் செய்வார்கள் என்று நம்பவேண்டும். எப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்பட்ட விடுதலைப்புலிகள் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்று நம்பினோமோ அதனிலும் மேலாக மக்களின் விருப்பங்களை நம்பவேண்டும்.

    புலிகளின் பெயரில் என்ன இருக்கிறது… இப்போதும் அதன் தடைகளை நீக்கச்சொல்லி பணத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக, மக்களின் எதிர்காலத்திற்கு எது அவசியமோ அதை செயற்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுசரி, புலிகளின்பெயரில் பல சொத்துக்கள் இருந்தால் அதை மீட்பதில் அதனைச் சார்ந்தோர் தலைதெறிக்க ஓடுவதில் பிரியமாக இருக்கின்றனர். புலிகளின் பெயர் எமக்குமுக்கியமல்ல எமக்குவேண்டியது தமிழர்களின் உரிமைகள் மட்டுமே, அதை யார் பெற்றுத்தருகின்றார்கள் என்பது முக்கியமல்ல!!!

    இப்போது புரிகின்றது திரு சொல்கைம் விலகியதற்கு காரணம்… இல்லை… இல்லை… விலக்கியதற்குக்காரணம்… அவரின்போக்கு விடுதலைக்கு வழிவகுத்திருக்குமோ இல்லையோ தமிழர்களின் உரிமைகளுக்கு வழிகுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை –

    புலத்தான்

    more
  • ஈழம் முதலாவது கொரில்லாத் தாக்குதல்
    தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.

    பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.

    குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

    அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும், "செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல; அவரை நம்பிப் போக வேண்டாம்' என்று அவர் தடுத்தார்.

    இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை "செட்டியை'த் தொடர வைத்தது.

    யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல் கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான்.

    இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல் பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட இயக்கத்துக்கு "தமிழ்ப் புதுப்புலிகள்' (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப) என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும் விடுதலையாவதுமாக இருந்தார்.

    "செட்டி'யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், "என்னை அவர் வழிக்குக் கொண்டு செல்ல முடியாது - முடிந்தால் அவரைத் திருத்துவேன்' என்று சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது. இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று.

    பின்னர், பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.

    அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

    இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:

    ""பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை நிறுவிக்கொண்டது'' என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான "விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு').

    அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: ""ஆயுதப் போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக் கையாண்டோம்'' என்றும் கூறுகிறது.

    தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து அவ்வெளியீடு கூறுகையில், ""அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப் போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது'' என்று தெரிவிக்கிறது.

    இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விவரிக்கையில், ""கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப் பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்'' என்றும் தெளிவுபடுத்துகிறது.

    அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும், அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், ""எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ் உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள் வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.

    இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.

    மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள் ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்'' என்று தங்களது கொள்கைத் திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

    தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர் துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.

    துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது.

    உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும், இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச் செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது.

    இந்தச் சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம் "விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும் சட்டம் வகை செய்தது.

    "ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக' இவர்களின் வெளியீடு கூறுகிறது.

    1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர், முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே நாளில், விடுதலைப் புலிகள் "ஆவ்ரோ' விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து வெளிப்படுத்தினர்.

    இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார்.

    இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன் முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.

    பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத் தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த உயர்வு வழங்கப்பட்டதால், அதைக் கண்டிக்கும் வகையில், காங்கேயன்துறை வீதியில் ராணுவ ஜீப் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இருவர் பலியானார்கள். விடுதலைப் புலிகள் வரலாற்றில் ராணுவத்தின் மீதான முதலாவது கொரில்லாத் தாக்குதல் இதுவே ஆகும். இந்தத் தாக்குதலை சார்லஸ் ஆன்டனி (சீலன்) நடத்தினார். பெருமளவில் ஆயுதங்களும் இந்தத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.

    இதே போன்று நெல்லியடி போலீஸ் நிலையம் மீது தாக்குதல், கடற்படையினர் மீது தாக்குதல், சாவகச்சேரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் எனப் பல முயற்சிகள் இவ்வியக்கத்தால் நடத்தப்பட்டன.

    இவ்வகையான தாக்குதல்கள் யாவும் இந்திய அரசு அளித்த பயிற்சிகளுக்கு முன்பே நடந்தவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

    போராளிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது என்பது ஈரோஸிலிருந்து தொடங்கியது. பிரிட்டனில் பி.எல்.ஓ. பிரதிநிதியுடன் ஈரோஸ் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி லண்டனில் வாழ்ந்த ஈரோஸின் செயலாளர் ஈ.இரத்தினசபாபதி, பெய்ரூட் சென்று, அல் ஜிகாத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பின் முதல் குழு பயிற்சி பெற்றுத் திரும்பியது. அடுத்த குழுவில் விடுதலைப் புலிகளிள் சிலரையும் ஈரோஸ் அமைப்பு சேர்த்துக்கொண்டது. இவ்வாறு பயிற்சி பெற்ற போராளிகள், யாழ்ப்பாணம் பகுதியில் குழு, குழுவாகப் பயிற்சி அளித்தனர்.

    more
  • புலிகளின் போரியல் நுட்பங்களைஅறிவதற்கு விரும்பும் வல்லரசுகள்

    விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

    பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்-பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது.

    இதுகுறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்களையோ வாங்கி, போரில் வெற்றி பெறவில்லை- இது அந்த நாட்டு எம்.பிக்களுக்குத் தெரியாது போல இருக்கிறதென்று கிண்டலடித்திருந்தனர் அவர்கள்.

    1996ம் ஆண்டு பிரித்தானியா பத்து 30மி.மீ பீரங்கிகளையும், அதற்கான 6,000 ரவைகளையும் வழங்கியிருந்தது. இவை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்தப்படுவதற்காக வாங்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை அரசு வெளிப்படையாக ஆயுதங்களை வாங்கவில்லை. ஆனால் பின்னர் 30மி.மீ பீரங்கிகளுக்கான ரவைகளைக் வாங்க முற்பட்டபோது- அவற்றை விற்க பிரித்தானியா மறுத்து விட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பிரித்தானிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினாலும், அரசபடைத் தளபதிகளாலும் நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஏளனப்படுத்தப்பட்டிருக்கிறது.

    அதேவேளை, இப்படிப்பட்டதொரு சூழலில் பிரித்தானியாவிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அதாவது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக அமைந்த- கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணியின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு பிரித்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம். இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு இப்படியொரு தகவலை வெளியிட்ட காலகட்டமானது- இது உண்மையா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆயுத உதவியின்றியே போரை நடத்தி வெற்றி பெற்றதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில் தான் இந்தத் தகவலும் வெளியாகியிருக்கிறது.

    பிரித்தானியா தம்மிடம் அனுபவங்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று பெருமைப்படும் விதத்தில் இலங்கையின் கருத்துகள் அமையவில்லை. புலிகளுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைத் தர மறுத்த பிரித்தானியா, இன்று போரின் அனுபவங்களை பெறுவதற்குத் தம்மிடம் கெஞ்சுகிறதென்று- அந்த நாட்டைக் கொச்சைப்படுத்தும் விதத்திலேயே இலங்கைப் படையதிகாரிகளின் கருத்துகள் அமைந்துள்ளன.

    இலங்கைப் படைகள் புலிகளுக்கெதிரான போரில் பெற்ற வெற்றி முக்கியமானதொன்று தான். அதற்காக அந்த வெற்றிக்கு இலங்கை மட்டும் உரிமைகொண்டாட முடியாது. அத்தோடு இது உலகத்தில் நிகழ்ந்திராத ஒன்றெனக் கூறிப் பெருமை கொள்ளவும் முடியாது. உலகில் எங்குமே- வல்லரசுகளால் கூட, நிகழ்த்த முடியாத அற்புதத்தை நிகழ்த்தியிருப்பதாக இலங்கைப் படைகள் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருக்கின்றன.

    ஆனால், 1950 இல் மலேசியாவில் விடுதலை கோரிய ஆயுதப்போராட்டத்தை பிரித்தானியா முழுமையாக நசுக்கியிருந்தது. பஞ்சாபில் சிக்கியர்களும், காஷ்மீரில் முஸ்லிம்களும், கிழக்கு மாநிலங்களில் இடதுசாரி மாவோயிஸ்டுகளும் தனிநாடு அமைப்பதற்கு ஆயுதப் போராட்டங்களை நடத்தியபோதும் இந்திய அரசு அவற்றை தோற்கடித்திருந்தது. இப்படிப் பல உதாரணங்கள் இப்போது வந்து விட்டன.

    இந்த வரிசையில் மற்றொன்றாகவே இலங்கைப் படைகளின் வெற்றியும் அமைந்திருக்கிறதே தவிர- எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான ஒன்றாக இருக்கவில்லை. புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர்- முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- இந்தப் போரில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்ள, உலகமே தம்மிடம் வரிசையாக வந்து நிற்கப் போவதாகக் கூறியிருந்தார்.

    புலிகள் இயக்கம் உலகில் மிகவும் வல்லமை பெற்றதொரு இராணுவ அமைப்பாக- முப்படைகளையும், மரபுசார் படையணிகளையும் கொண்டதாக இருந்தது உண்மை. அப்படிப்பட்டதொரு இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது இலங்கைப் படைகளுக்கு முக்கியமானதொரு வெற்றி தான். அதுபோலவே இந்தப் போரின் மூலம் சிறந்த அனுபவங்களை அவர்கள் பெற்றிருப்பதும் மறுக்க முடியாதது.

    சில நாட்களுக்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மோதறையில் உள்ள கவசப் படையணியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர்- இலங்கை இராணுவத்தின் கிளர்ச்சி முறியடிப்பு போருபாயங்களை அறிந்து கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

    எனவே வெளிநாடுகள் இராணுவங்களுக்கு கிளிர்ச்சி முறியடிப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு, முல்லைத்தீவில் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இங்கு பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், முல்லைத்தீவில் பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவரே, பின்னர் அதை மறுத்தார். முல்லைத்தீவில் பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கப்படாது தென்பகுதியில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

    புலிகளைத் தோற்கடித்தது பற்றி அனுபவங்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் படைகள் ஆசைப்படுவது முக்கியமானதொரு விடயமே. ஆனால் இந்தப் பெருமை இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமே புலிகள் தான்.

    ஒருவரின் குணத்தை அவரது நண்பன் யார் என்பதைக் கொண்டு முடிவு செய்யலாம். அதுபோன்றே ஒரு படையின் பலத்தை அறிய அந்தப் படையின் எதிரியைக் கொண்டே மதிப்பிடலாம் என்பார்கள்.

    இந்த வகையில் புலிகளின் பலம்- திறன்- ஆற்றல் ஆகியனவே, இந்த முறியடிப்புப் போருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறது.

    புலிகள் இயக்கத்தின் போரியல் வளர்ச்சி பற்றி, அவர்களின் திறன் பற்றி சர்வதேச இராணுவ விற்பன்னர்கள் பலரும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று நேரில் அறிந்திருந்தனர்.

    இப்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்ட விதம் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர். அதேவேளை, இலங்கைப் படைகளின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றி அறிந்து கொள்ள பிரித்தானியா ஆசைப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருப்பது தான் ஆச்சரியம்.

    ஒரு கட்டத்தில் புலிகளைத் தோற்கடிக்க சர்வதேசம் உதவ முன்வரவில்லை என்று கூறியது அரசாங்கம்.

    பின்னர் சில ஆசிய நாடுகளைத் தவிர வேறு மேற்குநாடுகள் உதவவில்லை என்றும் கூறியது.

    இப்போது பிரித்தானிய ஆயுதங்களின் மூலம் புலிகளைத் தோற்கடிக்கவில்லை என்கிறது.

    இந்தியாவின் உதவியைப் பெறவில்லை என்கிறது.

    இப்படிப் பல உண்மைகளை மறைத்து தமது இராணுவ வல்லமையை- வெற்றியை மிகைப்படுத்திக் கொள்வதில் இலங்கை அரசும், படைகளும் முயற்சி செய்து வருகின்றன.

    இலங்கைக் கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றிய அறிந்து கொள்ள பிரித்தானியா விருப்பம் வெளியிட்டது உண்மையானால்- அதற்கான பெருமையும் புலிகளுக்கேயுரியது.

    கடற்புலிகளின் கடல் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது- நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படை அறிமுகப்படுத்திய விசேட படகுப் படையணி (Special Boat Squadron-SBS) மற்றும் துரித நடவடிக்கைப் படகு அணி (Rapid Action Boat Squadron -RABS) ஆகியனவாகும். இலங்கைக் கடற்படையில் விசேட படகுப் படையணி 1993இல் அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஈழப்போர் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போதும் இது செயற்பட்டது. அதேவேளை துரித நடவடிக்கைப் படகு அணி தான் நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

    இந்தப் படையணிகளின் உருவாக்கமே புலிகளின் தோல்விக்குக் காரணம் என்று கூற முடியாது. இந்தப் படையணிகளுக்கு வழங்கப்பட்ட படகுகள், ஆயுதங்கள் தான் முக்கிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.

    கடற்படையின் சுடுபல சக்தியை அதிகரிக்கும் வகையிலும், கடற்கரும்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு ஏற்ற வகையிலுமே இந்தத் தந்திரோபாயத்தைக் கடற்படை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போது கடற்படை அழிவுகளை சந்தித்ததற்கான காரணங்களை ஆராய்ந்த போது- ஒற்றை இயந்திரம் கொண்ட சண்டைப் படகுகளும், குறைந்த சூட்டு வலுவும் தான் தமது பலவீனம் என்று கண்டறிந்தது.

    புலிகள் தமது பாரிய சண்டைப்படகுகளில் 250 குதிரைவலு கொண்ட நான்கு இயந்திரங்களைப் பொருத்தியிருப்பர். சிறிய சண்டைப் படகுளில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு இயந்திரம் பழுதானால் கூட மற்றதைப் பயன்படுத்தித் தப்புவதற்கு இது வாய்ப்பானது. இதன் அடிப்படையில் தான் கடற்படை தமது தந்திரோபாயத்தை மாற்றியமைத்தது.

    இதற்கான ஆய்வுகளின் போது புலிகளின் தாக்குதல் படகுகளே முன்மாதிரிகளாக எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்று வகையான படகுகள் உருவாக்கப்பட்டன. இதில் பெரியது- 17 மீற்றர் நீளமானது. இது கட்டளை மற்றும் சண்டைப் படகுக்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. இரண்டரை மீற்றருக்கு எழும்பும் அலைகளையும் சமாளித்துப் பயணம் செய்யக் கூடியது இந்தப் படகு. இரண்டாவது வகைப் படகு 14மீற்றர் நீளம் கொண்டது.

    அடுத்தது- 23அடி நீளத்தை கொண்டது. இதற்குப் பெயர் அரோ (Arrow) இது 1.25 மீற்றர் உயருமான அலைகளிலும் லாவகமாகப் பயணம் செய்யக் கூடியது. 14மீற்றர் மற்றும் 17மீற்றர் நீளமான கரையோர ரோந்துப் படகுகளில் 250 குதிரை வலுக்கொண்ட நான்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 37 நொட்ஸ் வேகத்தில் இவை பயணம் செய்யும் இந்தப் படகுகளில் 23மி.மீ இரட்டைக்குழல் பீரங்கி (23 mm Double-barrel gun) ஒன்று, சிங்கப்பூர் தயாரிப்பான 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் (CIS 40 mm Automatic Grenade Launcher) ஒன்று, 12.7மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டன.

    23அடி நீளம் கொண்ட ‘அரோ’ தாக்குதல் படகுகளில் 250 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 35 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. இதில் 23மி.மீ பீரங்கி அல்லது 12.7மி.மீ துப்பாக்கி மற்றும் 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் என்பன பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் கடற்புலிகளின் செறிவான சுடுபல சக்தி கடற்படையால் தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தந்திரோபாயம் கடற்புலிகளிடம் இருந்து கடற்படை கற்றுக் கொண்டது தான். அரோ வகைப் படகுகள் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் கடற்படைகளின் பாவனையில் உள்ளது. ஆனால் அவற்றில் ஆகக் கூடியது 12.7மி.மீ துப்பாக்கியைத் தான் பொருத்தியிருக்கிறார்கள். இந்தப் படகுகளில் 20மி.மீ, 23மி.மீ பீரங்கிகளையும ;பொருத்தி கடற்சமர்களை நடத்த முடியும் என்று இலங்கைக் கடற்படைக்குக் காட்டிக் கொடுத்ததே புலிகள் தான். இப்போது அந்த உத்தியைத் தான் பிரித்தானியா கேட்பதாகக் கூறிப் பெருமைப்படுகிறது இலங்கை அரசு.

    அதைவிடக் கடற்படை வடிவமைத்த அரோ வகைப் படகுகள் கூடக் கடற்புலிகளின் படகுகளை மாதிரியாக்கக் கொண்டே வடிவமைக்கப்பட்டவை.

    கடற்புலிகளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைக் கடற்படையின் படகுகள், தந்திரோபாயங்களைப் பற்றி அறிந்துகொள்ள பிரித்தானியா விரும்புகிறதென்றால் அது இலங்கைக் கடற்படைக்குரிய பெருமையல்ல.

    புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்- அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் போரியல் நுட்பங்களை, தந்திரோபாயங்களை- கற்றுக் கொள்ள வெளிநாடுகள் விரும்புகின்றன என்றால்- அதற்காக பெருமைப்படக் கூடியது இலங்கை அரசு அல்ல. புலிகள் இயக்கமே

    more
  • வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் அம்பாறையில் சுட்டுக்கொலை அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி இரவு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்களும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

    இவர்கள் கடந்த 17ம் திகதி வவுனியா முகாமிலிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
    இவர்கள் இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாக சக உறவினர்களிடம் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர். இதன் பின்னர், அந்த உறவினர்கள் தமது இரண்டு உறவினர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து முகாம்களில் தொண்டுப் பணியில் ஈடுபட்டுள்ள செடெக் அமைப்பிடம் முறையிட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து அந்த அமைப்பினர் தமது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லையென அறியப்படுகிறது.

    செடெக் நிறுவனத்தில் உள்ள இலங்கைத் தலைவரான டேமியன் பெரேரா என்ற கத்தோலிக்க மதகுரு மாலை வேளைகளில் ஜனாதிபதியின் நண்பர் சமுகத்துடன் விருந்துகளில் கலந்துகொள்பவர் எனத் தெரியவருகிறது. எனவேதான், இதுகுறித்து எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

    எவ்வாறாயினும், இவ்விருவரும் விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளில், மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பயிற்சி கல்லூரியின் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ஜாமடீன் கொலையுடன் இவர்கள் நேரடியாக தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    காவல்துறை அத்தியட்சகர் கடந்த ஏப்ரல் 5ம் திகதி கல்முனை மருதமுனைப் பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

    கந்தபோடி மற்றும் சீலன் ஆகியோரே இவ்வாறு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    கந்தபோடியின் மனைவி ஒரு சிங்களப் பெண். இவர் கைதுசெய்யப்பட்ட விசாரணை செய்தபோது வெளியான தகவல்களுக்கமையவே கந்தபோடி வவுனியா முகாமில் மறைந்திருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

    more
  • தற்கொலைத் தாக்குதலில் சவூதி இளவரசர் மயிரிழையில் உயிர் தப்பினார்

    சவூதி அரேபிய இளவரசரும் துணை உள்துறை அமைச்சருமான முகம்மது பின் நயிப்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்று சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அதன் விபரம் வருமாறு, அல்-கொய்தா தீவிர வாதிகளுக்கு எதிராக சவூதி அரேபியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் சவூதி அரேபியா குற்றவியல் நீதிமன்றம் 330 அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு பல்வேறு தண்டனை, அபராதம் போன்றவற்றை விதித்தது. சிலர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது.

    சவூதி அரேபிய அரசின் இந்த நடவடிக்கை அல்-கொய்தா தீவிரவாதிகளை கோபம் அடையச் செய்தது. இந்த நிலையில் கடந்த 19ந் திகதி சவூதி அரேபிய அரசு 44 அல்-கொய்தா தீவிர வாதிகளை கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான எந்திர துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அல்-கொய்தா தீவிரவாதிகளிடம் இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சவூதி அரேபிய உள்துறை தான் இதற்கு காரணம் என்று நினைத்து பழிவாங்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இந்த நிலையில் நோன்பு மாத கூட்டுப் பிரார்த்தனைக்கு சவூதி அரேபிய இளவரசரும் துணை உள்துறை மந்திரியுமான முகம்மது பின்நயுப் ஏற்பாடு செய்திருந்தார். பிரார்த்தனை முடிந்ததும் இளவரசரிடம் வாழ்த்து தெரிவிக்கவும் மனு கொடுக்கவும், பலர் அவர் அருகில் சென்றனர்.

    அப்போது அல்-கொய்தா தற்கொலை தீவிரவாதி ஒருவன் திடீரென தன் உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டான். இதில் சவூதி இளவரசர் முகம்மதுக்கு காயம் ஏற்பட்டது.

    மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். அவரை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அல்-கொய்தா தீவிரவாதிகள் தற்போதுதான் முதன் முதலாக சவூதி அரச குடும்பத்துக்கு எதிராக தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    more
  • இலங்கை அரசும்... தமிழ்நாடு கவர்னர் மகனும்..! சீமானின் சீறலும்….
    தமிழக கவர்னர் பர்னாலாவின் மகனான ஜஸ்ஜித் சிங்கையும் சிங்கள அரசையும் சம்பந்தப் படுத்திக் கிளம்பி இருக்கும் உளவு தொடர்பான பரபரப்பு, ஈழ ஆதர வாளர்கள் மத்தியில்... பெரிய அளவிலான அதிர்வைக் கிளப்பி இருக்கிறது! ‘ஜஸ்ஜித் சிங் இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம்தான் அதிர்வுக்கான காரணம்!’ என்ற முன்னுரையோடு நம்மிடம் பேசினார் கள் ஈழ ஆதரவாளர்கள். ‘இலங்கை அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உளவு உபகரணங் களைப் பொருத்தும் ஒப்பந்தத்தை ஜஸ்ஜித் சிங்கின் 'பர்னாஸ்' கம்பெனி பெற்றிருக்கிறது. இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் பின்னணிதான் எங்களை அச்சமடையச் செய்திருக்கிறது.

    ‘வன்னிப் பகுதியில் மீண்டும் புலிகளோ, ஈழ ஆதரவாளர்களோ ஊடுருவ முடியாமலும், கடலோரப் படகுப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஏற்பாடுகளையும் கவர்னரின் மகன் நிறுவனம் செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இலங்கை அரசு வைத்துள்ள கோரிக்கை. அதற்கு தலையாட்டியதால்தான் கவர்னர் மகன் கம்பெனிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இலங்கை அரசின் ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. இதை சிங்கள அரசு எப்படி வெளியில் பரப்புகிறது தெரியுமா? 'பார்த்தீர்களா... தமிழக கவர்னரின் மகனே எங்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறார்' என்று மார்தட்டுவதாக இருக்கிறது. கிட்டத்தட்ட ராஜபக்ஷேவின் ராஜதந்திரத்தின் இன்னொரு பரிமாணம்தான் இது!’ என்று கவர்னர் மகன் மீது புகார் வாசிக்கிறார்கள்.

    ஜஸ்ஜித் சிங்கை தலைவராகக் கொண்ட 'பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' என்கிற நிறுவனம், சென்னை வேப்பேரியில் இயங்கி வருகிறது. அதே நிறுவனத்தின் உபநிறுவனம்தான் உளவு உபகரணங் களை சப்ளை செய்கிறது. இதன் துணைத்தலைவராக (ஆபரேஷன் பிரிவு) சிவாஜிராவ் என்பவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனத்தைப் பற்றி விசாரித்தோம்.

    'கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செக்யூரிட்டி சேவையை முதலில் அளித்துவந்தது பர்னாஸ் நிறுவனம். ஒரு நிறுவனத்தின் முழுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள், அவற்றை இயக்கும் கம்ப்யூட்டர் சப்ட்வேர், ஹார்டுவேர் என அந்த நிறுவனம் வளரத் தொடங்கியது. பாதுகாப்புத் துறையில் சர்வதேசத் தரத்துடன் தனக்கென ஒரு இடத்தை குறுகிய காலத்தில் பிடித்தது பர்னாஸ் நிறுவனம். சென்னை மாநகர போலீஸ் துறை, பிரபல கல்லூரிகள், பிரபல மருத்துவமனைகள், சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் என பல இடங்களிலும் பர்னாஸ் கம்பெனிதான் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியிருக்கிறது.


    இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்தபடியே, கடற்கரைப் பகுதியை தொலைதூரத்தில் இருந்து கம்ப்யூட்டர் உதவியுடன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் செட்டப்பை ஏற்படுத்த சிங்கள அரசு முடிவெடுத்தது. சில கோடிகள் மதிப்பிலான ஒப்பந்தத்தை தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பர்னாலாவின் மகன் ஜஸ்ஜித் சிங் பெற்றிருக்கிறார்!' என்றார்கள் பர்னாஸ் கம்பெனியைப் பற்றி அறிந்தவர்கள்.

    இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து முழங்கத் தொடங்கி இருக்கும் இயக்குநர் சீமானிடம் பேசினோம். 'கவர்னர் பர்னாலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் போன்ற முக்கியஸ்தர்களின் குடும்ப விழாக்களுக்குகூட பர்னாலாவின் மகனான ஜஸ்ஜித் சிங்தான் போய் வருகிறார். தமிழகத்தின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கி வலம் வரக்கூடிய ஒருவர், சிங்கள அரசுடன் உளவு சம்பந்தமான ஒப்பந்தம் போட்டிருப்பதை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்? அப்படியென்றால், கவர்னரின் மகனுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான தொடர்பு என்ன? தமிழகத்தின் அனுதின நிகழ்வுகளை கவனித்து அப்படியே இலங்கையிடம் ஒப்பிக்கும் வேலையை கவர்னரின் மகனுடைய நிறுவனமே செய்யும் திட்டத்தில் இருக்கிறதென்றால், தமிழர்களுக்கு என்னதான் பாதுகாப்பு? நம்முடைய கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்தும் கொடூரங்கள் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த மண்ணில் நடக்கப் போகிறதோ... இனியும் எங்களின் 'நாம் தமிழர்' இயக்கம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கவர்னரின் மகன் சிங்கள அரசுடனான உறவை அறுத்தெறியா விட்டால், ஒட்டுமொத்தத் தமிழகமும் போராட்டத்தில் குதிக்கும்!' என ஆவேசப்பட்டார் சீமான்.

    'பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் துணைத்தலைவரான சிவாஜிராவை தொடர்புகொண்டு பேசினோம். 'இது முழுக்க முழுக்கத் தொழில் சார்ந்த ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தின் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிராக எங்கள் நிறுவனம் செயல் படாது என்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம். தவிர தமிழக நிலைமைகளை இலங்கை அரசுக்கு நாங்கள் உளவு சொல்கிறோம் என்பது ஜமுக்காளத்தில் கடைந்தெடுத்த பொய். சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலக அளவில் செக்யூரிட்டி பிசினஸில் நாங்கள் மிகவும் பிரபலமாகி வருகிறோம். இதனால் இந்தியாவுக்கு அந்நியச் செலவாணி பெருகும் என்பதை ஏன் யாரும் நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்? கண்காணிப்பு குறித்த பணிக்காக இலங்கை அரசு சார்பில் உலக அளவிலான டெண்டர் அறிவிக்கப்பட்டது. அதில் எங்கள் நிறுவனம் உட்பட மொத்தம் 23 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அந்தப் போட்டியில் நாங்கள் ஜெயித்தோம். சரியாகச் சொல்வதானால், இலங்கையிலுள்ள ஏ.டி.எம். சென்டர்கள், வங்கிகள், அரசு அலுவலகங்களை வீடியோ கேமராக்கள் உதவியுடன் கண்காணிப்பதுதான் எங்கள் வேலை!

    இது எதுவுமே தெரியாமல், அல்லது தெரியாதது போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்பினார்கள். அதன் விளைவாக, சர்ச்சையே வேண்டாம் என்று இலங்கை அரசு எங்களுக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி நாங்கள் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் வாங்கியிருக்கலாம். ஆனால், எப்போது தமிழர்களுக்கு எதிராக எங்களைச் சித்திரிக்கத் தொடங்கினார்களோ... அப்போது அந்த ஒப்பந்தம் மீது எங்களுக்கு அக்கறையில்லை. அப்படியரு காரியத்தில் நாங்களோ, எங்கள் கம்பெனியோ எக்காரணம் கொண்டும் ஈடுபட மாட்டோம்.

    இதோ, இப்போது மலேசிய அரசு எங்கள் நிறுவனத்துக்கு அதன் ரயில்வே இலாகாவின் சார்பாகக் கண்காணிப்பு பணிகள் செய்யும் ஒப்பந்தத்தைக் கொடுத்திருக்கிறது. சர்வதேச நிறுவனங்களுக்கு நிகராகக் கண்காணிப்பில் ஒரு புது தொழில் நுட்பத்தை உருவாக்கியிருக்கும் எங்களை யாரும் பாராட்ட வேண்டாம், தயவு செய்து அதைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்!'' என்று முடித்தார் சிவாஜிராவ்.

    சீமான் தரப்பினரோ, 'தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று கேட்டதற்கு 'புல்லு பிடுங்கத்தான்' என்று ஒருவன் சமாளித்தானாம். தென்னை மரத்தில் ஏது புல் என்று மடக்கியதும், 'அதான் இறங்குகிறேன்' என்றானாம். அந்த கதைதான் சர்ச்சை கிளப்பியதும் இவர்கள் வாபஸ் வாங்கிவிட்டு சமாளிப்பதும்!' என்கிறார்கள்.

    (ஆனந்தவிகடன்)

    more
  • நலமா அன்புள்ள திருமதி - தமிழினி (பிரபாகரன் உணவு சமைக்கும் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது )
    மே 18க்குப் பிறகு எதிர்ப்பாளர்களோஒழிந்தான் பயங்கரவாதிஎனக் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில்,
    விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் (அரசியல்) பிரிவின் தலைவியுமான உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்திலிருந்து இந்த மடல்.

    உங்களை, இன்று தரைமட்டமாகிவிட்ட கிளிநொச்சியில் இருந்த பெண்கள் பிரிவின் அலுவலகத்தில் சந்தித்த நாளை நினைத்துக்கொள்கிறேன்.

    தீர்க்கமான விழிகள், ஒப்பனைகளின் சுவடறியாத கருமையான முகம், அழுத்தி வாரிப் பின்னப்பட்ட சிகை, ஆண்களுடையதைப் போன்ற சட்டை, நகைச்சுவை கலந்த உரையாடல், புதிய விஷயங்களை, குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள பெண்கள், பெண்ணிய அரசியல் பற்றிய உங்களது ஆர்வம் எல்லாம் என் நினைவில் தோன்றுகின்றன.

    அப்போது அங்கே ஓரளவு அமைதி நிலவிக்கொண்டிருந்த காலம்.
    ஓயாது நடைபெற்றுக்கொண்டிருந்த கொடிய போரினிடையே நீங்கள் சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தீர்கள்.
    A9 நெடுஞ்சாலை அப்போது திறக்கப்பட்டிருந்தது.

    புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் வசித்துக்கொண்டிருந்த சுற்றங்கள் தத்தம் குடும்பங்களோடு வந்திருந்து விடுமுறைகளைக் கழித்துக்கொண்டிருந்தனர்.
    பள்ளிகளும் மருத்துவமனைகளும் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
    இன்னும் சில ஆண்டுகளுக்குள் எல்லாம் அழிந்து மண்ணோடு மண்ணாகக் குருதிச் சேற்றுக்குள் புதையுண்டு போய்விடும் என்பதை அறியாமல் அனைவரும் தத்தமது வீடுகளையும் கோவில்களையும் புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்.

    சரி, நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் தமிழினி?
    மே 28ஆம் தேதி வவுனியாவில் உள்ள உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்த நீங்கள்  போலீஸாரால் கைதுசெய்யப்பட்டதாக இணையத்தில் படித்தேன்.
    உங்கள் இயற்பெயர் சிவத்தாய் என்பதையும் அதிலிருந்து தான் அறிந்துகொண்டேன்.
    நீங்கள் உயிரோடிருப்பது குறித்துச் சந்தோஷப்படுவதா?

    அல்லது சிங்கள ராணுவத்திடம் பிடிபட்டது பற்றிப் பதற்றம் கொள்வதா எனத் தெரியவில்லை.
    உங்களை நலம் விசாரிக்கும் கொடூரமான அபத்தத்திற்காக என்னை மன்னியுங்கள்.
    கடந்த ஆறு மாதங்களாக ஈழமண்ணில் நடைபெற்று வரும் கொடிய நிகழ்வுகளாலும் அதை முன்னிறுத்தித் அரங்கேறிவரும் நாடகங்களாலும் மிகுந்த மனநெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் பல இரவுகளில் உங்களை என் கனவுகளில் காண்கிறேன்.

    படையணியில் இருந்த ஆயிரக்கணக்கான பெண் புலிகளின் தற்போதைய நிலை என்ன தமிழினி?

    சங்கடம் தருகிற, வேதனையை மூட்டுகிற, அச்சுறுத்துகிற கேள்வி இது.

    எறும்புகளைப் போல நசுக்கி அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் உயிர்களுக்கு முதலாவதாக ராஜபக்சேவும் பிறகு  விடுதலைப்புலிகளும் பதிலளிக்க வேண்டும்.

    பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் காத்திரமான தோழிகளையும் உங்களோடு சந்தித்திருந்த எனக்கு, உங்களுடைய தற்போதைய நிலை பற்றிக் கிடைக்கப்பெறும் தகவல்கள் தாங்கொணாத் துயரத்தை அளிக்கின்றன.

    போர்க்களத்தில் உயிர் துறப்பதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கும் நீங்கள் தயாராகவே இருந்தீர்கள். ????
    மிக நிராதரவான நிலையில் நீங்கள் இராணுவத்தால் கால்கள் துண்டிக்கப்பட்டு
    முல்லைத் தீவின் காடுகளுக்குள் வீசப்படுகிறீர்கள் என்னும் செய்திகளைக் கேட்கும்போது
    மனப்பிறழ்வுக்குள்ளாவது தவிர வேறு எதுவும் செய்யவியலாத கையறுநிலையை உணர்கிறேன்.
    இறுதிநொடிவரை தன்னுடன் நின்ற (படையணிகள் சொந்த விருப்பத்தின் பேரில் அல்லது வேறு வழியற்ற நிலையில் தன்னோடு நின்ற) மக்கள் என யாரைப் பற்றியும் யோசிக்காமல் போரை நடத்திச்சென்ற பிரபாகரன்மீது வெறுப்பும் கோபமும் எழுகிறது.

    இவற்றிலெதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் போகலாம் தமிழினி.

    ஆனால் புலிகளின் தலைமை, முப்பதாண்டுகளாகப் பின்பற்றிவந்த அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டப் பாதையின் விளைவாய் நேர்ந்த விபரீதங்களுக்கும் கொடூரங்களுக்கும் பதிலாய்

     நீங்களோ பெயர் தெரியாத ஏராளமான தோழர்களோ கொல்லப்படுவதை,

    சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதை,

    அவமானப்படுத்தப்படுவதை,

    பாலியல்
    பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவதை

    உங்களின் தீவிர விசுவாசியாக இல்லாவிடினும்

    என்னால் தாங்கிக்கொண்டுவிட முடியவில்லை

    செய்வதற்கு ஏதுமில்லை என்றாலுங்கூட.


    புலிகளின் வீரவரலாறு, துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் உண்மை வரலாறு இருக்க முடியும்.

    ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் அந்த துயிலும் மாவீரர்கள் அனைவரையும்துரோகிகள்என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது.
    ஒரு இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது.
    பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டி வந்த புலிப்படையணிகளை, நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில் இருந்து போர்முனை சென்ற சூரியப் புதல்விகளான புலிகளின் பெண்கள் படையணிகளை வெறும்பயங்கரவாதிகள்எனப் புறந்தள்ளிவிட முடியாது.
    அதே நேரத்தில் எந்தவொரு நியாயத்தின் பெயராலும்  ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட யாருக்கும் உரிமையில்லை.
    காணாமல் போனவர்களின் நிலையைக் கண்டறிவதில் சட்டப்படியும் நியாயப்படியும் அக்கறை காட்டாத இலங்கைப்  அரசின் சட்டங்களும் நீதிமன்றங்களும் உங்களைப் போன்றவர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் சொல்லப்போவதில்லை.

    சிறைச் சுவர்களின் பின்னால் நீளும் அந்த இருள்வெளியில் நிகழக்கூடிய அபாயங்கள் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் உள்ள சிங்கள இன  கொண்டாட்டங்களாக மாறியிருப்பது நிலைமையை மிகப் பயங்கரமானதாக்கியிருக்கிறது.
    பக்தர்களின் மனநிலையில் இப்போதுகூட மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை.
    இப்போதிலிருந்தே நவம்பர் மாதம் மாவீரர் நாளை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டமிட்டுவருவதாகச் செய்தி.

    நீங்கள் சிறையிலிருந்து வெளிவருவீர்களா?
    உங்களை மீண்டும் சந்திக்க முடியுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை தமிழினி.
    உங்களையும் உங்களைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களையும்
    முடிவற்ற துயரப் பாதைக்கு இட்டுச்சென்று,
    அவமானகரமான அடிமைகளாக வாழும்படி கைவிட்டுச் சென்றுவிட்ட 
    தலைவரின்மீது கடும் கோபமும் வெறுப்பும் வருகிறது.
    ஆனால் ஒடுக்குமுறைகள் உள்ளவரை போராட்டம் இருக்கும்.
    நம்முடைய தவறுகளுக்கும் கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறுதான் தீர்ப்பெழுதும் அல்லவா தமிழினி?

    more

Featured Video

Photos