Advertisement



  • நோர்வே புலிகளின் புலனாய்வுத் துறையை சேர்ந்த ஒருவர் கொழும்பில்.
    நோர்வே நாட்டில் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் கொழும்பு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக நோர்வேத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வேயில் புலிகளின் புலனாய்வு வேலைகளின் நிமிர்தம் நிறுவப்பட்டுள்ள ரிப்டொப் எனும் கடையில் காசாளராக  செயற்பட்டுவரும் இவர் நோர்வே நாட்டில் உள்ள புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் எனக் கூறப்படுகின்றது.

    யாழ்பாணம் பாசையூர் பிரதேசத்தை சேர்ந்த இவர் நோர்வேயில் புலிகள் சார்பாக இடம்பெற்ற பல ஆர்பாட்டங்களின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்டு வந்துள்ளதுடன் அவ் ஆர்பாட்டங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தாக்கியமைக்காக பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். குறிப்பிட்ட விசாரணைகளின் போது அவர் சில ஊடகவியலாளர்களை புலிகள் சார்பாக விசாரித்தது உண்மை என ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

    நோர்வே பிரஜாஉரிமையை பெற்றுக்கொண்டுள்ள ரொபின் என பலராலும் அறியப்படும் இவர் புலிகளின் இறுதிக்காலம் வரை புலிகளின் பிரதி புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கபில் அம்மானின் கட்டளையின் கீழ் செயற்பட்டுவந்ததாக நோர்வே புலிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

    புலிகளின் ஊடுருவல்களுக்கு இலக்காகியுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை இவர் பேணிவந்ததாக நம்பப்படுகின்றது. அத்துடன் ஈபிடிபி மற்றும் ஈபிஆர்எல்எப் அமைப்புக்களில் நெருங்கிய உறவினர்களை கொண்டுள்ள இவர் அவர்களின் உதவியுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

    more
  • மலேசிய விசேடப் பிரிவே, கே.பி.யை கைதுசெய்து இலங்கையிடம் ஒப்படைத்தது - புதிய தகவல்கள்
    விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானது என தேசிய புலனாய்வுத்துறையின் சிரேஸ்ட அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

    அவர் மேலும் தகவல் தருகையில், "மலேசியா விசேடக் குழு" (Malaysian Special Bureau - MSB) அதிகாரிகளே கே.பி.யைக் கைதுசெய்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் கூறினார்.

    இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கே.பி. தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹேன்தா விதாரணவின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மலேசிய விசேடக் குழுவினால் (MSB) கைதுசெய்யும் பாரிய திட்டத்திற்கு மலேசியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா பெரும் பங்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

    மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் மலேசியாவில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரலாயத்திற்கு அனுப்பப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.

    உதய பெரேரா மலேசியாவில் பணியமர்த்தப்பட்ட நாள் முதல், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணித்து அதுகுறித்து மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரவினர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    கே.பி. போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் மலேசியாவில் வாழ்வது, அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என உதய பெரேரா தொடர்ந்தும் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையிலேயே கே.பி. குறித்து அதிகூடிய கவனம் செலுத்த மலேசிய விசேடக் குழு ஆரம்பித்துள்ளது.

    அதன்பின்னர், கே.பியை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரச தலைவர் மட்டத்தில் மலேசிய தலைவர்களிடம் வேண்டுகோளொன்றை விடுக்குமாறு MSB அதிகாரிகள் பிரதி உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், ஜூலை மாத இறுதியில், சிங்கப்பூரில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் விசேட கூட்டத்தின் போது, கே.பி.யை கைதுசெய்து இலங்கையிடம் கையளிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய வெளிவிவகார அமைச்சரிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இராஜதந்திர ரீதியாக இரு நாடுகளுக்குமிடையே இவ்வாறான இணக்கப்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கே.பி. மலேசியா சென்றிருந்ததை இலங்கையின் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் கே.பி. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் மூலமே கே.பி மலேசியா சென்றமையை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக கே.பி.யும் இதுகுறித்து அறியாதிருந்துள்ளார். இதன் காரணமாகவே, கே.பி. இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

    இந்த தொலைபேசி அழைப்பை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கே.பி.யின் செய்மதி தொலைபேசி இலக்கத்தைத் பெற்றுக்கொண்ட பாதுகாப்புத் தரப்பினர், இதுகுறித்து ஆராயுமாறு அமெரிக்க மற்றும் மலேசிய தொலைத்தொடர்பு நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனிடையே, கே.பி. செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி, மலேசியாவிலிருந்தே வழங்கப்பட்டதை MSB அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இந்தத் தகவல்களுக்கமைய கே.பி. தங்கியிருந்த, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள "ரியூன்" விடுதியை முற்றுகையிட்ட MSB அதிகாரிகள், கே.பி.யின் சாரதி "அப்பு" வை கைதுசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கே.பி. வேறிருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதற்கிடையே, MSB அதிகாரிகள் "அவசரமாக ஒருமுறை வெளியே வாருங்கள்" என "அப்பு"வைப் பயன்படுத்தி கே.பி.யின் தொலைபேசிக்கு தகவலொன்றை வழங்கிப்பட்டதை அடுத்து விடுதியைவிட்டு வெளியே சென்ற கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    இந்த முற்றுகையின் போது எந்தவொரு இலங்கை பாதுகாப்பு அதிகாரியும் பங்கேற்கவில்லை. கே.பி. கைதுசெய்யப்பட்டதை அடுத்து MSB அதிகாரிகள் இதுகுறித்து பிரதி உயர்ஸ்தானிகருக்கு தகவலளித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடியதன் பின்னர், தாய்லாந்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கே.பி.யை ஒப்படைப்பதென இணக்கம் காணப்பட்டது.

    இதுதொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ள மலேசிய பாதுகாப்புத் தரப்பினர், இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் சந்தேக நபரொருவரை பாங்கொக் விமான நிலையத்தில் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கே.பி. என தாய்லாந்து அரசாங்கத்திடம் இனங்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் இணக்கம் கண்டுள்ளனர்.

    இதனடிப்படையில், ஓகஸ்ட் 6ம் திகதி, இலங்கை விமானப்படையினரால் பயன்படுத்தப்படும் விமானமொன்றின் மூலம் பாங்கொக் விமான நிலையத்திற்குச் சென்ற இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலர் எவ்விதத் தடங்கல்களும் இன்றி கே.பி.யை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளனர்.

    இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி.யிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்டதைப்போன்று கே.பி. ஒரு பெரிய தலைவர் அல்லவெனவும், அவர் அறிந்திருக்கும் தகவல்கள் வரையறையானவை எனவும் எமது இணையத்தளத்திற்கு தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

    more
  • வன்னியில் தமிழ் மக்களுக்கு புலிகள் என்ன செய்தார்கள்?: அகதியாகியுள்ளவர்களின் அவலக்கதை
    கொழும்பிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு வாகனமொன்;றில் புறப்பட்டுச்சென்றோம். அனுராதபுரம் கடக்கும்வரை எங்கள் பிரயாணம் சுமுகமாக இருந்தது. வழியில் எதுவித இராணுவ செக்கிங்கும் இல்லை. தம்புள்ளையில் நாங்கள் காலை உணவை சாப்பிட்டோம் மதவாச்சியை அடையும் முன்பே வழியெங்கும் இராணுவத்தினரை காணமுடிந்தது. அவர்கள் எமது வாகனத்தை நிறுத்தி விசாரிக்க ; ஆரம்பித்ததும், .எங்கள் பாஸ்போட்டை தயாராக வைத்திருக்கத ்தொடங்கினோம். கொழும்பில் ஒவ்வொரு பயணத்தின் போதும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இராணுவபொலிஸாரால் தடுத்து விசாரிக்கப்பட்டோம் ஆரம்பத்தில் சற்று எரிச்சல் மனத்துக்குள் ஏற்பட்டாலும் பின்பு அவர்கள் தங்களில் கடமையை சரியாக செய்வதைப்பார்த்து மதிப்பு வந்தது. மிகவும் மரியாதையாகவும் தொழில் முறையாகவும் நடந்து கொண்டார்கள்.

    மதவாச்சியில் நான் மூன்று வருடங்கள் முன்பு வாழ்ந்திருக்கின்றேன்;. இப்பொழுது அந்தப் பகுதி முற்றாக அடையாளம் மாறிவிட்டது. பெரும்பாலான பிரதேசம் இராணுவமயமாகிவிட்டது. அந்தப்பாதையால் வந்த சகல வாகனங்களும் சோதனைக்காக நிறுத்தப்பட்டு, பயணிகளுடன் அவர்களின் உடைமைகளும் கீழே இறக்கப்பட்டு பரிசோதித்து மீண்டும் ஏற்றினார்கள்.

    இந்தச் சோதனைக்கு நாங்களும் எங்கள் வாகனமும் இலக்காகினோம். வெளிநாட்டு அமைச்சின் வாகனமாக இருந்தபோதிலும் எங்கள் வாகனத்துக்கு எந்த சலுகையும் இல்லை. சாதாரண மக்கள்போலத்தான் நாங்களும் நடத்தப்பட்டோம்.

    எங்கள் வாகனத்தின் உள்பகுதி மட்டும்ல்லாது, அது ஒரு கிடங்குக்கு மேல் செலுத்தப்பட்டு செசியின் கீழ்பகுதியும் பரிசோதிக்ப்பட்டது. கமராவை எடுத்துச் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அதிகாரியை தொடர்பு கொண்டபோது எங்களுக்கு கமராவை எடுத்து செல்ல அனுமதி கிடைத்தாலும் படங்கள் எடுக்கக்கூடாது என்ற உறுதி மொழி எங்களிடம் இருந்து பெறப்பட்டது
    மதவாச்சியில் பரிசோதனைகள் முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆகி மதியமாகிவிட்டது. மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி பிரயாணம் செய்யுபோது நூறுமீட்டர்களுக்கு சில இராணுவத்தினர் பாதையின் இருமருங்கும் முள்பற்றைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இந்த இந்தவீதியில் 80-83 ஆண்டுகளில் நடு இரவை கடந்த பின்பும் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறேன். ஒருநாள்; போட்டார் சைக்கிளை ஓட்டமுடியாமல் தள்ளிக்கொண்டு சென்றதும் நினைவுக்கு வந்தது.

    நடந்த போர் மிகவும் உக்கிரமானது. இரண்டு பகுதியினரும் வாழ்வா சாவா எனும் நிலையில் யாராவது ஒருபகுதி அழிந்தால்தான் போர் முடியும் என்ற நிலையில் போராடி இருக்கிறார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகள் தரப்பில் சிறுவர்கள் இணைக்கப்பட்டது போல் இலங்கை இராணுவத்திலும் பல மீசை முளைக்காத சிறுவர்கள் பலர் இருப்பதாக எனக்குத் தென்பட்டது. இவர்களுக்கு வயது பதினெட்டாக இருக்கலாம் ஆனால் பச்சைப்பாலகர்போல் எனது கண்ணுக்கு தெரிந்தார்கள். உலக சரித்திரத்தில் இழப்பை மட்டுமே நிகரலாபமாக பெற்றது மட்டுமல்ல முழு சிங்கள மக்களையும் இராணுவ மயப்படுத்திய போரை நடத்தியதற்கு இலங்கைத்தமிழர் பெருமை கொள்ளமுடியும் என்ற எண்ணம் ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

    வவனியாவில் இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்வதற்கு முன்பாக இந்த முகாம்;களின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பவரான பிரிகேடியர் இலக்ஸ்மண் பெரேராவை தேடிச்சென்றோம். இவரிடம் பலகேள்விகளை கேட்பதற்கு தயாரகவும் இருந்தோம். நாங்கள் கொழும்பில் நிற்கும் போது சுமார் 35 பேர் மூளைக்காய்ச்சலினால் முகம்களில் இறந்திருப்பதாக ஒரு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் மூலம் கேள்விப்பட்டிருந்தோம். இதுசம்பந்தமாக முகாம்களில் வேலை செய்யும் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுடனும் தொடர்பு கொண்டதுடன் அமைச்சர் ஒருவரிடமும் இதைப் பற்றி விசாரித்திருந்தோம். அத்தோடு இங்கிலாந்து பத்திரிகை ஒன்றில் 1500 பேர் இறந்தார்கள் என்ற சேதியும் எமது மனதில் குடைந்து கொண்டிருந்த விடயமாகும். முகாம் பொறுப்பதிகாரி முகாம்களில் நடந்த இறப்புகள் பதிந்த பதிவு பத்தகத்தை எடுத்து காண்பித்து இதுவரையில் முகாம்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 800 க்கும் குறைவாக இருக்கிறது என்று கூறினார். இவரது கூற்று எமக்கு ஆறுதல் தந்தாலும் இதே விடயத்தை நாங்கள் சந்தித்த வவுனியா அரசாங்க அதிபரிடமும் அதே வேளையில் முகம்களில் வேலை செய்யும் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் விசாரித்து உறுதிப்படுத்தினேம்.

    இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் பல நிறுவனங்கள் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் மூலம் வேலை செய்கின்றன.. இப்படிப்பட்ட 54 உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இங்கு வேலை செய்கின்றன. வுவனியாவிலும் மற்றும் சுற்றுப் பகுதியிலும் உள்ள உறவினர்கள் இங்கு வந்து பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் விரும்பத்தகாத விடயங்களை அரசாங்கம் எளிதில் மறைக்கமுடியாது.

    நாங்கள் அங்கிருந்து வவுனியா கச்சேரிக்குச் சென்று அரசாங்க அதிபரான திருமதி சார்ள்ஸ் அவர்களைச் சந்தித்தோம். இதற்கு முன்பும் அவுஸ்திரேலியாவில் இருந்து அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன். இந்தப் பெண்மணி மிகவும் மரியாதைக்குரியவராகவும் தோற்றம் அளித்தார். ஏழு நாளும் வேலைசெய்யும் இவரது வார்த்தைகள் தங்கு தடையின்றியும் தன்னம்பிக்கையாகவும் வெளிவந்தன.

    சொந்த நாட்டைவிட்டு ஓடி பல பொய்களை உரைத்து வாழ்வும் வசதிகளையும் பெற்ற பின்பு தாங்கள்தான் தமிழ் ஈழத்தின் தாய்க்;குலம் எனக் கூறி வருடத்துக்கு சிலதடவை மஞ்சள்சேலை கட்டும் பலரையும் பார்த்திருக்கின்றேன். அத்துடன் இரவு நேர வானொலிகளில் விடுதலை வீராவேச வசனங்களை அள்ளித் தெளித்துவிட்டு குறட்டை விட்டு தூங்கி விடுபவர்களையும் அறிந்துள்ளேன்.

    புலம்பெயர் சூழலில் இப்படியான தாய்க்குலங்கள் நிறைந்த சமூகத்தில், நெருக்கடியான காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் துணிவாகவும் மிகத்திறமையாகவும் பணியாற்றும் திருமதி சார்ள்ஸ் போன்றவர்களே எமது சமுதாயத்தில் கௌரவிக்கப்படவேண்டியவர்கள்.

    போர் நடந்து கொண்டிருக்கும் போது பல தடவை ஐக்கிய நாட்டு தொண்டு நிறுவனங்களை சந்தித்து பெருந்தொகையான மக்கள் அகதிகளாக வருவார்கள் அதற்கு ஆயத்தமாக முகாம்களை தயார் படுத்த வேண்டும் என தாங்கள் கேட்டதாகவும் ஆனால் அவை அதைச் செய்யவில்லை. போர் இப்படி சடுதியாக முடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை என திருமதி சார்ள்ஸ் கூறினார்

    அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வவுனியா கலாச்சார நிலையத்துக்கு சந்திக்கச் சென்ற போது வழி எங்கும் அவர் தேர்தல் சுவரொட்டிகளில் அவர் காட்சி தந்தார். மதியம் இரண்டு மணியாகியதால் அமைச்சரின் அலுவலகத்தில் மதிய உணவு தரப்பட்டது. மீன் குழம்பும் சோறும் அந்தநேரப் பசிக்கு அருமையாக இருந்தது.

    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நானும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே அறிமுகமானவர்கள். சாதாரண மிருகவைத்தியராக இந்தியாவுக்கு இலங்கைநெருக்கடியிலிருந்து தப்பி இந்தியாவில் தமிழகம் சென்ற என்னை தமிழர் நல மருத்துவ நிதியத்தின் செயலாளராக 84 இல் பிரேரித்ததன் மூலம் என்னை தமிழர் அரசியலில் ஞானஸ்த்தானம் செய்து வைத்தவர் டக்ளஸ் தேவானந்தா..

    மதிய உணவை உட்கொண்டவாறே நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் “ இந்தத் தேர்தலை அரசாங்கம் வைத்திருக்கக் கூடாது. இது மிகவும் விரைவில் வந்துவிட்டது. மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து முகாம்களில் இருக்கும்போது நீங்கள் ஒரே ஒரு தமிழ் அமைச்சர் அமைச்சர் மட்டும்தான் உள்ளே சென்று மக்களைப் பார்த்து அவர்களின் குறைநிறைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசும் வாய்ப்புள்ளவர்;. தேர்தல் பிரசாரத்தில் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நீங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் இடம் பெயர்ந்த மக்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்” என்றோம். தமிழர்கள் மத்தியில் அரசியல்தலைமை ஏற்படுத்த இந்தத் தேர்தல் வாய்ப்பளிக்கும் என்பது அவரதும் அவர் சார்ந்தவர்களதும் பதிலாக இருந்தது.

    வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கி பிரயாணம் செய்தபோது வழியெங்கும் இராணுவத்தினர் தொடராக துப்பாக்கிகளுடன் நின்றார்கள். சிங்கள இனத்தின்; முழுச் சக்தியும் இந்தப்போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான ஒரு இராணுவ தயார் நிலைக்கு கொண்டு வருவதற்கு விடுதலை பலிகளின் பன்முகத்தன்மையான தாக்குதல்கள் வழிவகுத்துள்ளது. இப்பொழுது விடுதலைப்புலிகள் காற்றில் நீராவி போல் மறைந்து விட்டார்கள் ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் யுத்தம் இல்லாத நாட்டில் உள்ள இராணுவமாக மீண்டும் திரும்புவது பாரிய சவாலாக இருக்கும்.

    இந்தப்பிரதேசம் கிடுகால் வேயப்பட்ட கொட்டில்களும் பிளாஸ்ரிக் கூடாரங்களும் நிறைந்த வெளியாக மன்னார்- மதவாச்சி வீதியின் இருமருங்கும் காட்சியளித்தது. மனிதர்கள் ஆங்காங்கு கூட்டமாக வெட்டாமல் விடப்பட்ட மரங்களின் கீழ் நின்றார்கள். சிறுவர்கள் விளையாடிக் கொண்டு நிற்பது எனது கண்களுக்குதெரிந்தது. எண்பதுகளில் சென்னையில் நான் பார்த்த சேரிகளை நினைவுக்கு கொண்டுவந்தது. இங்கு பிளாஸ்ரிக் கூடாரங்களும் கொட்டில்களுக்கு முன்பாக உள்ள திறந்த வெளியும் வித்தியாசமாக இருந்தது.

    செட்டிகுளத்தைச் சுற்றிய பிரதேசம் மிகவும் அடர்ந்த காடுகளைக் கொண்டது. மதவாச்சியில் வேலை செய்த காலத்தில் சிங்கள நண்பர்களோடு பன்றி வேட்டைக்கு வரும்போது இந்த காடுகளுக்குள் பல இடங்களில் நிமிர்ந்தபடி நடந்துசெல்ல முடியாது. மரக்கிளைகளை வெட்டாமல் செல்வதாயின் தவழ்ந்தபடிதான் செல்ல வேண்டும்.

    இந்தக் காடுகள்தான் இலங்கை அரசுடன் போராட ஆரம்பித்த தமிழ் இளைஞர்கள் 70 களில் கரந்துறைந்த பிரதேசம். இங்குதான் இன்ஸ்பெக்டர் பஸ்ரியாம்பிள்ளையும் அவரது சில சகாக்களும் கொலை செய்யப்பட்டனர். இதேபிரதேசத்தில் தமிழ் மக்களை அகதிகளாக வைத்திருப்பது என்பது முப்பத்தைந்து வருடங்களுக்குப்பின்னர், ஒரு முரண்நகையான விடயம் என்பது தெரியவில்லையா?

    கடைசிப்போரில் முள்ளிவாய்க்கால்; பகுதியில் இருந்து உயிர் தப்பி வந்தவர்கள் தங்கியிருந்த முகாமைப் பார்க்க வேண்டும்; என நாங்கள் கேட்டுக்கொண்டோம் .அவர்களைப் பார்க்கச் செல்லும் வழியில் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கதிர்காமர் முகாமுக்குச் சென்றோம்.

    டொக்டர் நரேந்திரன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், செல்லையா மனேரஞ்சன் ஆகிய மூவரும் இந்த ஆண்டு (2009) ஏப்பிரல் முதல் வாரத்தில் இந்த முகாமுக்குச் சென்றிருந்தார்கள். இந்த முகாம் பலவசதிகளைக் கொண்டதாக ஒரு கிராமம் போல் காட்சி அளித்தது. இராணுவத்தினர் இங்கும் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

    நாங்கள் அங்கே சென்றதும் எங்களைச் சுற்றி மக்கள் கூடினார்கள். மக்களுடன் பேசுவதற்காக ஆரம்பித்ததும் ஆறுபேர் தொடர்ச்சியாக தங்களுக்கு நடந்தவிடயங்களைப் பற்றி கூறத்தொடங்கினார்கள். இவர்களது சகல குற்றச்சாட்டுகளும் விடுதலைப்புலிகளுக்குஎதிராகவே இருந்தன. இவர்கள் குரல்களில் இருந்த ஆவேசம் அழுகை ஆத்திரம் என்பன இவர்கள் இராணுவத்தால் இப்படி விடுதலைப்புலிகளின் மீது குற்றம் கூறும்படி பழக்கப்பட்டவர்களாக எனக்கு தோன்றவில்லை. மேலும் இவர்கள் கூறிய சம்பவங்கள் சிலவற்றிற்கு நடந்த நாட்கள் கிழமை எனக் குறிப்பிட்டார்கள்.

    இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளில்; சில:-

    அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் நடேசனும் கடற்படைக்கு பொறுப்பான சூசையும் இளவயதான பிள்ளைகளைப் பிடிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல பெற்றேர்கள் இதற்கு மறுத்த போது அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். சில பெற்றோர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஓரு தகப்பன் சொன்னார்:- தனது படித்த மகளுக்கு வங்கியொன்றில் கொடுக்கப்பட இருந்த வேலை விடுதலைப்புலிகளின் வற்புறுத்தலின் பேரில் இறுதி நேரத்தில் அவர்கள் சார்ந்த ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாம் தனது பதினாறு வயது மகனை இயக்கத்துக்கு அழைத்து சென்று தேவிபுரத்தில் இரண்டு நாள் வைத்திருந்து விட்டு ஏதோ காரணத்திற்காகப் புலிகள் சுட்டுக்கொன்றதாகவும் கண்ணீர் சொரிய அந்தத்தந்தை சொன்னார்.

    கிளிநொச்சி அருகேயுள்ள தர்மபுரத்திலிருந்து விடுதலைப்புலிகள் பின் வங்கும் போது அங்குள்ள தங்களின் உணவுக் குதத்தை எரியூட்டினார்கள். இதே வேளையில் மக்கள் உணவற்றிருந்தார்கள். இச்சம்பவத்தின்போது மக்கள் உணவை மீட்பதற்காகப்; போராடியபோது சிலர் அந்த நெருப்பில் எரிந்தார்கள்.

    விடுதலைப்புலிகளின் ஆட்சேர்ப்புக்குப் பயந்த பல பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள், பக்குவப்பட்டதும் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள்;. இதனால் பல குழந்தைகள் குழந்தைகளை பெற்றிருப்பதை காணமுடிந்தது..

    சில இளம் பெண்கள் திருமணமாகி கர்ப்பவதியாகியிருப்பின் தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்காக புலிகளே கிளிநொச்சி வைத்தியசாலையில் கர்ப்பச்சிதைவை செய்திருக்கிறார்கள். இப்படிகருச்சிதைவின்போது இறந்தயுவதிகளை வீராங்கனைகளாக வீர மரணம் அடைந்ததாக பெற்றோரிடம் பொய் சொல்லி சடலத்தை கொண்டுவந்து கொடுப்பார்களாம்.

    சாமத்தியப்பட்ட பெண்பிள்ளைகளை வீட்டின் பின்னால் கூடுபோல் கட்டி அதற்குள் வைப்பது யாழ்ப்பாண தமிழ்மரபு. அந்த கூட்டுக்குள் புகுந்த புதுக்குடியிருப்பு அரசியல் துறை பொறுப்பாளர் இளம் பரிதியின் ஆட்களினால் ஒரு சிறுமி பக்குவப்பட்டு ஏழே நாளில் இயக்கத்திற்கு கடத்தி செல்லப்பட்டதாக ஒருவர் சொன்னார்.

    வலைஞர்மடத்தில் உள்ள தேவாலயத்தில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக கத்தோலிக்க மத குருமாரிடம் பொறுப்பு கொடுத்;திருந்தவர்கள் சொன்னது:-. மார்ச் மாதம் இருபத்தினான்காம் திகதி விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் இளம்பரிதியின் ஆட்கள் வந்து அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரை தள்ளி விழுத்திவிட்டு அவரை பயமுறுத்தி பிள்ளைகளை பலாத்காரமாக கடத்திச் சென்று விட்டனர்;. இளம்பரிதிக்கு தகவல் கொடுத்து வரவழைத்தது மற்றைய பாதிரிமார்கள்தான் என்பது எங்களுக்குத் தெரியும்.

    இந்த சம்பவத்தின் பின்பு இந்தத் தேவாலயம் பீரங்கியால் தாக்கப்பட்டது
    விடுதலைப்புலிகளின் வரிக்கொடுமை தாங்க முடியாதது. கத்தரிக்காய் தேங்காய் எல்லாவற்றிற்கும் 10 வீதம் வரி போடுவார்கள். நாங்கள் பத்தாயிரம ரூபாய்க்கு ரைப்ரையிட்டர் வாங்கியபோது 1000 ரூபாய்; வரி போட்டார்கள்.

    விடுதலைப்புலிகளிடம் இருந்து பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க நிலத்தில் கிடங்குகளை கிண்டி அவர்;களை உள்ளே இறக்கி விடுவோம். புலி;கள் பிள்ளை பிடிக்க வரும்போது அதன் மேல் இருந்து விடுவோம். சிலவேளையில் அதிக நேரம் விடுதலைப்புலிகள் நின்று விசாரித்ததனால் சுவாசிக்க முடியாமல் பிள்ளைகள் இறந்துவிட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

    இந்தக்காம்பில் இருப்பவர்களின் மற்றுமொரு குற்றச்சாட்டு, லண்டன் ஐ பி சி பற்றியது. இந்த வானெலி யுத்தகாலத்தில் மட்டுமல்ல யுத்தம் முடிந்த பின்பும் பொய்ப்பிரசாரங்களைச் செய்து மக்களை குழப்புவதாக எங்களிடம் கூறினார்கள்.

    இந்தக்காம்பை சேர்ந்தவர்கள் தேக ஆரோக்கியமாகவும் இருந்ததுடன் அரசாங்கத்துக்கு நன்றி கூறியதும் வியப்பானது. ஒருவர் தான் வரும்போது உடுத்த உடையோடு வந்ததாகவும்., இ;ப்பொழுது ஐந்து சோடி உடைகளுடன் இருப்பதாகவும் சொன்னார்.

    நாங்கள் வலயம் 5 என்ற முகாமுக்கு சென்றோம். இந்த முகாம் இறுதியாக போர ;நடந்த இடத்தில் இருந்த மக்களை கொண்டுள்ளது. இந்த முகாமிற்கு நாங்கள் சென்ற போது மக்கள் எண்ணிக்கை கணக்கீடு நடந்து கொண்டிருந்தது. பலரை வெளியே காண முடியவில்லை. அந்த முகாமில் உள்ள சிறிய ஆஸ்பத்திரிக்கு எங்களால் சென்று பார்க்க முடிந்தது. அங்கே இருந்த மருந்துகளும் வைத்திய வசதிகளும் திருப்திகரமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. கடும்நோயால் வருந்தும் பெண்ணொருத்தியை வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் அவதானித்தோம். அங்கு தன்னார்வமாக நோயாளர்ளை கவனித்துவரும் பெண் தனக்கு எது வித உபகார சம்பளமும் தருவதில்லை என எங்களிடம் குறைபட்டுக் கொண்டாள்.

    இந்த முகாமில் தண்ணீர் பிரச்சினை பொதுவாகத் தெரியவில்லை. பலர் குழாய்க்கிணறுகளில் இருந்து வரும் தண்ணீரை வாளிகளில் எடுத்து குளிப்பதையும் பலர் வரிசையாக குடங்களுடன் தண்ணீருக்கு காத்து நிற்பதையும் பார்த்தேன்.

    ;இங்கு குழந்தைகள் பெண்கள் மெலிந்து ஆரோக்கியம் குன்றிய நிலையில் இருந்தார்கள். ஒரு சிறுவனது கையை பிடித்து பார்த்தபோது சிரங்குப்புண் இருப்பது தெரிந்தது. இதைப்பற்றி விசாரித்தபோது எங்களோடு வந்த இராணுவ அதிகாரி, “ இது மட்டுமல்ல பொக்கிளிப்பான் செங்கமாரி போன்ற நோய்களோடு நடக்க முடியாமல்தான் இந்த மக்கள் எங்களிடம் வந்தார்கள். அவர்கள் இருந்த நிலையை நீந்கள் அந்த நேரத்தில் பாத்திருக்க வேண்டும்” என பதில் கொடுத்தார்.

    அச்சமயம்; ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த டொக்டர் நரேந்திரன் ‘இதைக் கேளுங்கள்’ எனக் கூறி என்னை அழைத்தார்.

    மெலிந்து வாடிபோய் இருந்த முப்பது வயதிற்கும் கீழ் உள்ள ஓரு பெண் ஆறு மாத குழந்தையை தூக்கி வைத்திருந்தாள். எத்தனை குழந்தைகள் என்ற கேள்விக்;கு ஆறு குழந்தைகள். அது மட்டுமல்ல எனது சகோதரியும் கணவரும இறந்து விட்டதால் அவர்களின் நாலு பிள்ளைகளை நான் வளர்க்கிறேன் என்றாள்

    இந்தப் பெண் முகாமில் இருந்து வெளியேறும்போது இவளது குடும்பத்தின் நிலை என்ன என்ற கேள்வி எனது மனதில் எழுந்தது.

    இந்த முகாமின் ஒருபகுதியில் பெரிய குடிசைகள் தொடர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் குடிசைகளுக்கு சிறிது தூரத்தில் கழிப்பறைகளும் மற்றைய முகாம் கழிப்பறைகளிலும் பார்க்க பெரிதாக இருந்தன. அவற்றின் கதவுகள் திறந்தபடி இருந்ததால் அவைகள் மிக சுத்தமாக இருப்பது தெரிந்தது.

    இதைப்பற்றி நாங்கள் கேட்ட போது இது பிராமணர் வசிக்கும் குடிசைகள். இவை அவர்களுக்கான கழிப்பறைகள் என்றார் பிரி;கேடியர் லக்ஸ்மண் பெரேரா.

    அவர்களது குடிசைகளை நோக்கிச் சென்ற போது குடிசைகளுக்கு அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களிடம், எங்களுடன் வந்திருந்த சிவநாதன், “நீங்கள் ஏன் கடைசிவரையும் அங்கே நின்றீர்கள்?”- என்று கேட்டபோது, “நாங்கள் அதுக்குள் அகப்பட்டுக் கொண்டோம்” என்றார்கள். அத்துடன் தங்கள் மத்தியில்; பலாத்காரமாக குழந்தைகளை இயக்கத்திற்கு சேர்க்கும் செயல்களில் புலிகள் ஈடுபடவில்லை என்றும் கூறினார்கள்; புலிகள் மட்டுமல்ல இலங்கை இராணுவமும் பிராமண சமூகத்தினரை கௌரவமாக நடத்தியிருப்;பதை அறியமுடிந்தது..

    84 -87 இடைப்பட்டகாலத்தில் இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மத்தியில் சுமார் மூன்று வருடங்கள் வேலை செய்துள்ளேன். இருநாறுக்கு மேற்பட்ட அகதி முகாங்களுக்கு பல தடவைகள் சென்றிருக்கிறேன். அப்பொழுது என் மனதில் உற்சாகம் இருந்தது. பல மைல் தூரங்கள் அகதி முகாங்களுக்கு மதிய வெய்யிலில் நடந்து சென்றிருக்கின்றேன். அந்த முகாம்;கள் மக்கள் சில நாட்கள் மட்டும் தங்குவதற்காக தமிழ் நாட்டு கரையோரங்களில் அமைக்கப்பட்ட புயல் பாதுகாப்பு மண்டபங்கள். அவையோடு ஒப்பிடும் போது இவை எவ்வளவோ தரமானவை.

    உற்சாகத்துடன் ஓடி ஓடி வேலை செய்ய முடிந்தது. ஆனால் வவுனியா- செட்டிகுளம் இடைத்தங்கல் அகதி முகாம்களை பார்த்துவிட்டு திரும்பும்போது மனதில் கனதியான சோகம்தான் நிறைந்திருந்தது. இந்த முகாங்களுக்கு மீண்டும் வருவது என்பது என்னால் முடியாத காரியமாக இருக்கும்.

    ஏன்?

    ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தை இளம்பராயத்தில் பார்த்த எனக்கு இப்போது அந்த செட்டிகுளப் பிரதேசம் போரட்டத்தின் ஈமக்கிரியைகள் நடைபெறும் பிரதேசமாக தெரிவதனாலா?

    அல்லது. எமது மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் துர்ப்பாக்கிய நிலையா?

    குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாக ஈழ விடுதலைப் போரட்டம் போய் விட்டதாலா?எனது நெஞ்சில் முள்ளாக உருத்திய கேள்விகளுக்கு விடை கிடைக்கவி;ல்லை. கனத்த இதயத்துடன் கொழும்பு நோக்கி புறப்படும்போது, சமூகத்தில் கேள்விகள் கேட்காது முட்டாளாக அந்த சமூகத்தின் போக்கில் செல்வதில் வரும் சுகத்தை தவறவிடுகிறேன் என்ற சுயபச்;சாதாபம் சிறிதாக நெஞ்சின் ஓரத்தில் குமிழிவிடுவது தெரிந்தது.


    ஆஸ்திரேலியாவிலிருந்து நடேசன்

    நன்றி; உதயம்

    more
  • புலிகளே புலிகளை காட்டிகொடுக்கும் துரோகிகள்!
    வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் பதுங்கியுள்ள புலிகளை புலிகளே காட்டிகொடுக்கும் துரோகம் இடம்பெற்றுவருவதாக இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

    படையினரால் கைது செய்யப்பட்டும் சரணடைந்துள்ள புலிகளே இவ்வாறான காட்டி கொடுப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும், முகாம்களில் மக்களுடன் மக்களாக பதுங்கியுள்ள புலிகளையே படையினர் வசம் சிக்கியுள்ள புலிகளின் முக்கியஸ்தர்களான தயாமாஸ்ரர், பொட்டு அம்மான், தமிழினி போன்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் காட்டி கொடுப்பதாகவும், தமது சகாக்களையே காட்டி கொடுக்கும் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஜீப் வண்டிகளில் பாதுகாப்பாக அழைத்து வரப்படுகின்றார்கள்.
    புலிகளின் காட்டி கொடுப்பின்பேரிலேயே புலிகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் ஆசிய நாடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கூட புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள அதிகாரி போட்டி காரணமாக உருத்திரகுமார் என்பவரால் காட்டி கொடுக்கப்பட்டார் என்றும், இவர் மட்டுமல்ல 1980களில் இந்தியா செல்வதற்காக வடமராட்சி மணற்காட்டு பகுதியில் படகுக்காக காத்திருந்த குட்டிமணி போன்றவர்கள் கூட பிரபாகரனால் காட்டி கொடுக்கப்பட்டவர்தான் என்பதை மறந்துவிட முடியாது.
    காட்டி கொடுப்புக்கும் கழுத்தறுப்புக்கும் பழக்கப்பட்ட புலிகள் காட்டி கொடுத்தார்கள்; என்ற பெயரில் எத்தனை அப்பாவி பொதுமக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், சமய பெரியார்கள், மதகுருமார், சக இயக்க உறுப்பினர்களை துரோகிகள் என்ற பெயரில் வீதி வீதியாக சுட்டுக்கொன்ற புலிகள், இன்று இடைத்தங்கல் முகாம்களுக்குள் பதுங்கியிருக்கும் தமது சகாக்களை காட்டி கொடுக்கும் துரோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    உண்மையாகவே தமிழினத்தை காட்டிகொடுத்தவர்கள் புலிகளே ஆவர், தமது சகாக்களையும் உண்மையான உணர்வுடனும் இன உணர்வுடன் போராடிய தமிழர்கள் பலரை துரோகிகள் என்று காட்டி கொடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்ட புலிகள், ஏனையவர்களை பார்த்து துரோகிகள் என்று முத்திரை குத்துவதானது வேடிக்கைக்குரியது. புலிகள் தமக்கு தாமே சூட்ட வேண்டிய நாமம்தான் துரோகியாகும். தமிழினத்தையோ விடுதலை போராட்டத்தையோ வேறு எவரும் காட்டி கொடுக்கவும் இல்லை கழுத்தறுப்பு செய்யவும் இல்லை என்பதை புலிகளுக்காக குரல் இன்றுவரை குரல்கொடுப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
    இ.சிவசுந்தரம்
    வவுனியா

    more
  • இலங்கைக்குள் CIA அதிகாரிகள் பிரவேசித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு சந்தேகம்
    அமெரிக்க புலனாய்வுத் துறையின் (CIA) அதிகாரிகள் சிலர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர்  எமக்கு தெரிவித்தார்.
     
    இந்தியப் புலனாய்வுப் பிரிவான ஷறோவினால், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள தகவலுக்கமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் எந்த நோக்கத்திற்காக இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை அறியமுடியாதுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.


    எவ்வாறாயினும், இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் காணப்படும் எண்ணெய்க் கனிமம் குறித்து ஆராய்வதற்கு அமெரிக்காவினால் அனுப்பப்பட்டுள்ள குழுவின் நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தகவலளித்தார்.

    more
  • பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஜேசுதாஸின் நெருங்கிய உறவினர் ஆனந்த் ஜோனுக்கு 59 வருட சிறைத்தண்டனை!
    அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான, இந்தியாவின் சென்னையை சேர்ந்த ஆனந்த் ஜான் அலெக்சாண்டருக்கு (35), அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம், 59 வருட சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    கடந்த 2002 முதல், 2007 ஆம் ஆண்டு வரை, ஏராளமான இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது, 14 வழக்குகள் தாக்கல் செய்யபப்ட்டு, இவருக்கு எதிராக இளம்பெண்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால், இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக,நீதிமன்றம் தெரிவித்துள்ளது


    அமெரிக்காவின் பிரபல மாடல்களான பாரிஸ் ஹில்டன், மேரி பிளிஜ் போன்றவர்களுக்கும் ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்துள்ள ஆனந்த், மாடல் அழகிகளை பிரபல்யப்படுத்துவதாகவும், வாய்ப்பு தருவதாகவும் கூறியே பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டாப்பட்டார்.

    இதனை அடுத்தே வழக்கை விசாரித்த நீதிமன்றம் இச்சிறைத்தண்டனையை அவருக்கு வழங்கியது.

    தீர்ப்பை கேட்டதும், கதறி அழுத ஆனந்த் ஜான், தன் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் படி, நீதிபதியிடம் மன்றாடினார். எனினும் கோரிக்கையை ஏற்க மறுத்தார் நீதிபதி.


    “எனினும் இது குறித்து, ஆனந்த்தின் குடும்பத்தினரும், நெருங்கிய வட்டாரத்தினரும், கடும் அதிருப்தி அடைந்திருப்பதுடன், ‘அமெரிக்காவில், ஆடை வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியின் காரணமாகவும், ஆனந்த்திற்கு அமெரிக்க திரையுலக பிரபலங்களிடம் காணப்படும் செல்வாக்கு காரணமாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவே இச்சோடிக்கப்பட்ட வழக்கு நடாத்தப்பட்டு, அவரை வீழ்த்தும் முகமாக இத்தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.”

    இவர், பிரபல பின்னணி இசைப்பாடகர் ஜேசுதாஸின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    more
  • கைசெய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியின் பின்னணியில் பலம்வாய்ந்த அரசியல்வாதிகள்.
    புலிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி புலிகளின் பல பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றஞ்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்எஸ்பி லக்ஸ்மன் கூரேயின் பின்னணியில் ஆழும் அரசின் மிகவும் சக்கிவாய்த அரசியல்வாதியும், பிரதமர் பதவியை இலக்கு வைத்து இருப்பவர் ஒருவரும் இருப்பதாக லங்கா இரிதா எனும் சிங்களப் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

    பொலிஸ் அதிகாரி யாழ்பாணத்தில் இருந்து கம்பஹா விற்கு இடமாற்றம் பெறுவதற்கும் அவருடைய பதவி உயர்விற்கும் குறிப்பிட்ட அரசியல்வாதியே தனது செல்வாக்கை பயன்படுத்தியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பத்திரிகை தெரிவிப்பதுடன், அமைச்சர்களான ஜெயராஜ் பெர்ணான்டோப்பிள்ளை, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீது புலிகளின் தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு குறிப்பிட்ட அரசியல்வாதியின் தூண்டுதலிலேலே பொலிஸ் அதிகாரி புலிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    அத்துடன் ஜனாதிபதியை கொல்வதற்காக அவர் விமானமூலம் சென்று இறங்கவிருந்த இடம்ஒன்றில் சக்திவாய்ந்த கிளேமோர் குண்டொன்றை புதைத்து வைத்திருந்தாகவும் அதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் சமையற்காரரான முஸ்லிம் இராணுவக்கோப்ரலின் உதவியையும் பெற்றிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது.

    இவ்வாறான செயற்பாடுகளுக்கு லக்ஸ்மன் கூரே மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள புலிகளிடம் இருந்து கட்டளைகளைப் பெற்றுள்ளதாகவும், இதன்பொருட்டு அவர் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நியமன எம்பியாக பாராளுமன்றம் நுழைந்த ஒருவருடன் நெருங்கிய உறவைப்பேணி வந்தகாகவும், புலிகளின் பழைய கொலைப்பட்டியலில் உள்ள முக்கியஸ்தர்களை இலக்கு வைப்பதே இவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்திட்டங்கள் என தெரியவருகின்றது.

    more
  • ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்-பண்டிட் வைத் ப்ரகாஷ்
    இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின்
    சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி
    விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர்
    இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை
    செய்திருப்பார்கள்.

    ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச
    இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து
    வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய
    அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட்
    வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

    பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா
    உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு
    கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க
    இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின்
    தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

    இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான
    கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார்.
    ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல்,
    ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை
    எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை
    ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை
    நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

    1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது,
    கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

    2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு
    இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று
    சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

    3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத்
    என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
    சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள்.
    அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

    ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ்
    என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு,
    சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே
    அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ்
    மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

    4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார்
    என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின்
    புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது
    என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்..

    5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று
    வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில்
    பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

    6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம்
    கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர்
    ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

    7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை
    வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும்
    சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில்,
    ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

    8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும்
    எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது.
    முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன்
    ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

    9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி
    அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும்
    சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன
    சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும்.
    அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே
    போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள்,
    ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும்
    வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும்
    நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில்
    குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன்
    வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக
    தெரிகிறது.

    பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது
    மீர் அப்துல் மஜீத்.

    இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!

    ஆங்கிலத்தில் படிக்க http://comparativestudy.blogspot.com


    Thanks  AKP Group

    more
  • மே-17 வரை நந்திக் கடற்கரை யில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்…
    எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

    வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

    ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். “”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

    இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன். “பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

    sweetdreams1
    இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

    வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

    எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

    அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

    உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

    எங்கு கொண்டுபோகிறார் களோ, என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

    இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

    பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயி ரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

    more
  • மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் -பிரகாஷ்ராஜ் மனைவி கோரிக்கை
    மனைவியிடம் விவாகரத்து கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு முடியும்வரை மாதம் ரூ.2 லட்சம் வீதம் பிரகாஷ்ராஜ் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அவரது மனைவி லலிதகுமாரி நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் ஆனந்தனின் மகளும், நடிகை யுமான லலிதாகுமாரிக்கும், பிரகாஷ்ராஜுக்கும் திருமணம் நடந்தது. நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கைதான் லலிதாகுமாரி ஆவார். நல்ல தம்பதிகளாக வெளியுலகுக்குத் தெரிந்தாலும், இருவருக்குமிடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

    இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் பரஸ்பர சம்மதத்தோடு பிரிந்துவிடலாம் என பிரகாஷ்ராஜ் வற்புறுத்தியதாகவும், அதற்கு லலிதகுமாரி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே லலிதாகுமாரியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டுமென்று பிரகாஷ்ராஜ் குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை முதலாவது குடும்பநல நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஆனால் லலிதாகுமாரி கணவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ராமலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    பிரகாஷ்ராஜும், லலிதாகுமாரியும் நேற்று முன்தினம்நீதிமன்றத்துக்கு வந்தனர். நீதிமன்ற ஆலோசனை மையம் முன்பு இருவரும் ஆஜரானார்கள். மைய உறுப்பினர்கள் இருவரிடமும் நீண்டநேரம் விசாரணை செய்து சமாதானம் செய்ய முயன்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் இந்த வழக்கில் எந்த தீர்வும் ஏற்படவில்லை. எனவே, மீண்டும் இவர்களிடத்தில் ஆலோனைகளை கூறி சமரசம் ஏற்படுத்தி வைப்பதற்காக இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


    ‘2 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும்’

    இந்நிலையில், நேற்று லலிதாகுமாரி மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் தனது கணவரிடமிருந்து மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் கேட்டிருந்தார் லலிதகுமாரி. தனது மனுவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

    எனது கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், நான் வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனது 2 பெண் குழந்தைகளையும் நான்தான் கவனித்து வருகிறேன். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், கல்வி செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. எனது கணவர் பிரகாஷ்ராஜ் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.

    எனவே இந்த வழக்கு முடியும்வரை எனக்கும், எனது 2 பெண் குழந்தைகளுக்கும் மாதம் சுமார் ரூ.2 லட்சம் வீதம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    மாதம் தனக்கு ஆகும் செலவு விபரங்களைப் பட்டியல் போட்டும் அவர் கொடுத்துள்ளார். இந்த மனு செப்டம்பர் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    more
  • சிவாஜிலிங்கம் இன்னும் கனவுலகிலேயே இருக்கிறாரா????
    பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்! - TNA (TELO)சிவாஜிலிங்கம் எம்பி

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, ‘இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்… சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!” என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார்.


    இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்து விட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம். பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம்.


    தேசிய தலைவர் இறந்து விட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை. நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான். மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.

    more
  • இது பச்சைப் பொய் அல்ல, பகல் கொள்ளை!: அவுஸ்திரேலியத் தமிழர் தலையில் மா அரைக்கும் முயற்சி
    பொய்களில் பல வகைகள் உண்டு. ஆயிரம் பொய் சொல்லி என்றாலும் ஒரு கலியாணத்தை நடத்தலாம் என்பார்கள் நம் முன்னவர்கள். அதாவது நல்ல காரியம் ஒன்றுக்காக பொய் சொல்வது தவறில்லை என்பது அதன் பொருள்.

    ஆனால் பணத்தை ஒரு சிலர் தமது தேவைகளுக்காக கொள்ளையடிப்பதை அதற்காக பொய் சொல்வதை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.ரிஆர்ஓ என்று பலராலும் அறியப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் அவுஸ்திரேலியக் கிளை கடந்த 20ம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை பார்த்தபோது, தமிழர்கள் தலையில் எப்படியெல்லாம் மா அரைக்கமுடியும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

    கடந்த இரண்டு மாதங்களில் அந்தக் கழகம் 65ஆயிரம் அவுஸ்திரேலிய டாலர்களை வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு செலவிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

    இது எவ்வளவு பெரிய பொய் என்பதை எத்தனை அவுஸ்திரேலியத் தமிழர்கள் புரிந்துகொண்டிருப்பார்களோ தெரியவில்லை. அவுஸ்திரேலியாவில் குடியேறியிருப்பவர்களில் கணிசமானவர்கள் அதிஉயர் பதவிகளில் அங்கு பணியாற்றும் புத்திஜீவிகள். அவர்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்காக சிறிய தொகைப்பணத்தை கொடுப்பது என்பது சாதாரணமான விடயம்தான்.

    ஆனால் அவ்வாறு திரட்டிய பணத்தை வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு செலவிட்டோம் என்று கூறுகின்றார்கள் என்றால், அதன் அர்த்தம் என்ன.

    அந்த அறிக்கையை படிக்கின்றவர்கள் படு முட்டாள்கள் என்று அந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் நம்பியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்கள் முழுக்க முழுக்க சிறிலங்கா அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டுவருகின்றது. அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு அதனை நிர்வகித்துவருகின்றது. இப்படியிருக்க இலங்கையில் மாத்திரமன்றி, உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட புனர்வாழ்வுக்கழகம் எப்படி வன்னியில் உள்ள அகதிகளுக்கு பணத்தை செலவிடமுடியும் என்று ஒரு அவுஸ்திரேலியத் தமிழனும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஒருபுறம் இந்த முகாம்களில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்வதாக கூப்பாடு போட்டுக்கொண்டு,

    மறுபுறம் தாமே அந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உயிர்பிச்சை கொடுத்துக்கொண்டிருப்பதுபோல பிரச்சாரம் நடக்கிறது.

    அவுஸ்திரேலிய ரிஆர்ஓ கடந்த இரண்டு மாதங்களில் செலவிட்ட 65ஆயிரம் டாலர்கள் எப்படி செலவிடப்பட்டது என்பதற்கு வேறு விபரங்கள்.

    பணிசும் காலை ஆகாரமும், விதவைகளுக்கு பண உதவி உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்.... இப்படித்தான் அந்த அறிக்கை விபரிக்கின்றது.இவ்வுதவி அங்குள்ள சில சமூகசேவை நிறுவனங்களுடாகவே நிறைவேற்றப்படுகின்றது என்கிறது அந்த அறிக்கை. பணிசும் காலை ஆகாரமும் வாங்கிக் கொடுத்திருக்கிறது இந்த கழகம். அதன் அர்த்தம் என்ன, மதிய உணவும் இரவு நேர உணவும் அவர்களுக்கு கிடைக்கின்றது. அதனால் நாங்கள் காலை ஆகாரம் வழங்குகின்றோம் என்பதுதானே. அடப்பாவிகளே! பொய் சொல்லும் போதும் கொஞ்சமாவது சிந்திக்கவேண்டாமா? இந்தப் பொய்யை என்ன பொய் என்பது தான் இன்னமும் தெரியாமலிருக்கின்றது.

    பச்சைப் பொய் என்பதல்ல, இது பகல்கொள்ளை!

    அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ்வானொலி ஒன்று கொஞ்சம் மேலேபோய், மகசீன் சிறையில் உள்ள தமிழ்க்கைதிகள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர்களில் ஒருவரை பேட்டிகாண்பதாகவும் கதையளக்கிறது. மகசீன் சிறையில் உள்ள ஒருவர் தொலைபேசியில் பேட்டியளிப்பதுஎன்றால் அவரிடம் கைத் தொலைபேசி இருக்கவேண்டாமா? அப்படி அவரிடம் கைத் தொலைபேசி இருக்கிறது என்றால், அதன் அர்த்தம் அவர் ஒரு விஐபி போல சிறையில் கைக்கப்பட்டிருக்கிறார் என்பதல்லவா? அரசியல் தலைவரோ அல்லது வர்த்தகப்பிரமுகரோ சிறையில் அடைக்கப்பட்டால் சிலவேளைகளில் கைத் தொலைபேசி வைத்திருக்க மறைமுகமாக அனுமதியளிபார்கள்.

    புலிச் சந்தேகநபர் ஒருவரிடம் கைத் தொலைபேசி இருக்கிறது என்றால்?இது அவுஸ்திரேலியத் தமிழர் தலையில் மா அரைப்பதாகாதா?

    more
  • தொழுகையை விட்ட என் தோழனே...!

    அஸ்ஸலாமுஅலைக்கும்!
    தொழுகையை விட்ட என் தோழனே...!

    புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு
    நல்லதாக அமையட்டுமாக! ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது
    நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும்
    உண்டாகட்டுமாக!

    தொழுகையை விட்ட என் சகோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில்
    அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்
    கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக்
    கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட
    இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில்
    தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில்
    அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ?
    அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம்
    சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ? நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும்
    படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது
    உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச்
    செய்துவிட்டானோ? உனது மனச் சாட்சியை சாகடித்துவிட்டு உன் உள்ளத்தில்
    குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ?

    நன்றாகத் தெரிந்துகொள் சகோதரனே! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக
    வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ
    ஒருநாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது
    உனக்குத் தெரியாதா? அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக்
    கொண்டு செல்ல இயலும்? நீ பிறக்கும்போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட
    இல்லாமல் பிறந்தாயே! நீ போகும்போது அதையேனும் உன்னால் எடுத்துக்
    கொண்டு செல்ல இயலுமா? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம்
    அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்து வாழ முடிகின்றது?
    இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது
    சன்னிதானத்தில் எழுப்பப் படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனை
    சந்திப்பாய்? உன்னை படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு
    இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்? நீ என்னை
    படைக்கவில்லையென்று சொல்வாயா? நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று
    சொல்வாயா? நீ என்னை காக்க வில்லையென்று சொல்வாயா?

    நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போதென்று
    நீ அறிவாயா? இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட
    இருக்கலாம். அந்த நாள் வந்துவிட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள
    உன்னால் முடியுமா? இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா? முடியவே
    முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை விட்டுச்
    செல்லும்போது உனக்கு வழித் துணையாக வருவது எது? துன்புறுத்தும்
    வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா?
    சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஒரேயொன்றைத் தவிர - அதுதான் நீ
    செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள்.
    அதைத்தான் நீ உலகத்தில் சேமிக்கவில்லையே! நீ உண்டாய், உடுத்தாய்,
    உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே!
    அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள்
    செல்லவில்லையே! அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன்
    பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப்
    பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா? உனக்கென நீ இறைவனிடம்
    பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று
    எண்ணுகின்றாயா? அது ஒருபோதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...

    போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில்
    முடிகின்றது; யவ்வனம் விருத்தாபியத்தில் முடிகின்றது; அன்பு பிரிவில்
    முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை
    என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.

    தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம்
    என்பதற்குரிய எளிய அடையாளம் என்பது உனக்குத் தெரியாதா? அது ஒருவனிடம்
    இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறிய மாட்டாயா?

    நபியவர்கள் கூறினார்கள்...
    "இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட
    ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப்
    பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான்
    தொழுகையாகும். (அதுவும் அறுந்துவிட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி
    விடும்) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)

    தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும், வழிகேடுமாகும் என உனக்குத்
    தெரியாதா? நபியவர்கள் "எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள
    வேறுபாடே தொழுகைதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ, அவன் காபிராகி
    விட்டான்" என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை
    எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில்
    அல்லாஹ்விடத்தில் நீ முஸ்லிம்தானா? தொழாதவன் காபிர் என நபியவர்கள்
    கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???


    "நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர்
    எனக் கணிக்கமாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்).

    இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள்...
    "தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம்
    செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ, அவன்
    துரதிஷ்டவாதியும், பெரும் பாவியுமாவான்". என்கின்றார்கள்.

    என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும், நேரம் கிடைக்கும்போது
    தொழுவது முனாஃபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?

    அல்லாஹ் சொல்கின்றான்...

    நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதிசெய்ய எத்தனிக்கின்றனர். ஆனால்
    அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள்
    தொழுகைக்குச் செல்லும்போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை
    மிகச் சொற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை. (குர்ஆன் 4:142)

    நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸூபஹூத் தொழுகையையும் விட மிகவும்
    சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை
    அவர்கள் அறிந்துவிட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து
    நக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள்
    சொல்லியிருப்பது உன் செவிகளில் விழ வில்லையா?

    பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு
    வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக்
    காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் நீயோ
    நிரந்தரமாகப் பள்ளி வாயிலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!

    கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவு உண்டல்லவா?
    அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னைவிடக்
    கேவலமான ஐவறிவுள்ள மிருகங்கள், பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக்
    கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப் பொழுதுகூட அவை
    இருந்ததில்லையே!

    அல்லாஹ் சொல்கின்றான்...

    நிச்சயமாக வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும்,
    நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில்
    பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸூஜூது செய்(து வணங்கு)
    கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை
    விதிக்கப் பட்டுவிட்டது. அன்றியும் எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ
    அவனை கண்ணியப் படுத்துபவன் எவனுமில்லை. நிச்ச்கயமாக அல்லாஹ் நாடியதைச்
    செய்கிறான். (குர்ஆன்22:18)

    ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம்
    இருக்க முடிகின்றது? ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு
    இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே? உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை
    உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப்
    படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு
    கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு
    மனசாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா? மனிதா!
    ஐயறிவுள்ளா மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னைவிட அல்லாஹ்விடம் மதிப்புப்
    பெறுவதும், அவற்றைவிடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு
    வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?

    என்னருமைச் சகோதரனே! நிச்சயம் மரணம் வரும். நீ என்றோ ஒருநாள் இறந்து
    விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால்
    உன்னைவிட நஷ்டத்துக்கும், கை சேதத்திற்குமுரியவன் வேறு யார்? கப்ரிலே
    உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா?
    மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப்
    பார்த்தாயா?

    நபியவர்கள் கூறியதை கொஞ்சம் கேள்!!
    "ஜூம்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக்
    கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு
    விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும். (ஆதாரம்:
    முஸ்லிம்)

    தொழுகையை பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப்
    பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்த கூட்டத்தில் மறுமையில்
    எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ? கேள் நண்பா! நபியவர்கள்
    சொல்லியிருப்பதைக் கேள்! "யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி
    நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும்,
    வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிவிடும். எவர் அதனைச் சரிவர
    நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக்கு அது ஒளியாகவோ, வெற்றியாகவோ,
    வழிகாட்டியாகவோ ஆகிவிடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான்,
    உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்." (ஆதாரம்: முஸ்லிம்)

    அல்குர் ஆன் சொல்வதைக் கேள்!...
    "யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு
    (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம்
    குருடனாக எழுப்புவோம். அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வை
    உள்ளவனாகத்தானே இருந்தேன், என்னை ஏன் குருடனாக எழுப்பியிருக்கின்றாய்? என
    வினவுவான். அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான், ஏனெனில் (உலகில்) எனது
    அத்தாட்சிகள் உன்னிடம் வந்தபோது அவற்றை மறந்து (குருடன் போல்)
    வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்)
    மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை
    நம்பாது காலத்தை விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம்.
    இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும்
    நிரந்தரமானதுமாகும். (குர்ஆன் - தாஹா:124)

    ஆகவே நண்பா! நீ இன்று, இப்போதே நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ
    போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி
    விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப் படுத்தக் கூடாதா? காலம்
    பொன்னானது. அதை இதுவரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது
    போதும், இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ
    திருந்துவதற்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும்
    வீணாக்கி விடாதே!

    போதும் நண்பா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு
    விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச் சுமைகளை அவன்
    முன்னிலையில் இறக்கி வை. ஆம் .. தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது
    பாவங்களுக்காக மன்னிப்பு கோரிடு. அழு, அழு - நன்றாக அழு.. உன் இதயச்
    சுமை குறையும் வரைக்கும் அழுதிடு. இனிமேல் பாவஞ் செய்வதில்லை,
    தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதில்லை என
    உன்னுடன் நீயே உறுதிமொழி எடுத்துக் கொள்.

    (அல்லாஹ்வை ) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து
    நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையா? தமக்குத் தாமே அநியாயம்
    செய்து கொண்ட எனது அடியார்களே!..நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை)
    விட்டும் நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப்
    பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும்,
    கிருபையுள்ளாவனுமாவான். (குர்ஆன் - அல்ஹதீத்: 53)

    ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டு விட்டால், அவனது விசயத்தில் என்னென்ன
    இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா? இதோ கேள்!


      * தொழுகையை விட்டவன் காபிராக ஆகிவிடுகிறான்.
      * அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது.
      * அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.
      *அவனை குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம்
    செய்யவும் கூடாது.
      * அவனுடைய மகளுக்கு அவன் வலியாக இருந்து திருமணம் முடித்து வைக்கவும் கூடாது.
      * அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால்
    அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.
      * அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.
      * அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக்கூடாது.
      * அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி
    முடித்திருந்தால் அந்த திருமணத்தை ரத்து செய்யவேண்டும்.
      * அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே
    மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளாய்கள் கூட அவனது
    குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.

    பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது
    என்பதைப் பார்த்தாயா? ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது
    பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா? இன்றே
    நீ தவ்பாச் செய்யலாமல்லவா? ஆம். அதை தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம்
    தஞ்சமடைந்து விடு. அவன் உன்னை கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்?
    அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை. கடவுளை நம்பினார்
    கைவிடப் படார்.

    அதேபோல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்துவிடு.
    இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகிவிடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி
    தோண்டி புதைத்துவிடு. அவற்றின் பக்கம் இனிமேல் தலைவைத்துக் கூட
    உறங்காதே. அடிக்கடி அல்லாஹ்வின் வல்லமைகள் பற்றி - அவன் உனக்களித்துள்ள
    எண்ணிலடங்காத அருட்கொடைகளை எண்ணிப் பார்! அவனுக்கு வழிப்பட்டோருக்கு
    வழங்கவிருக்கும் இன்பங்களையும், மாறு செய்தோருக்குக் கொடுக்கவிருக்கும்
    தண்டனைகள் பற்றியும் கொஞ்சம் யோசி! அப்போது அல்லாஹ்வின் அச்சம் உனக்கு
    உண்டாகும். நல்ல மனிதர்களுடன் அதிகம் தொடர்பை ஏற்படுத்திக் கொள். உன்
    தீய நண்பர்களை விட்டு விடு. அவர்கள்தான் உன் அழிவுக்குக்
    காரணமாயிருந்தவர்கள். அவ்வாறே தீய பழக்கங்களிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக
    விடுபட்டு விடு. பயன் தரும் நூல்களைப் படிப்பதை வழக்கத்தில் கொள்.
    குறிப்பாக இஸ்லாமிய நூல்களை படி. அதனால் உன் ஈமான் அதிகரிக்கும். உன்
    பாவங்கள், தீய பழக்கங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். யார்
    மரணம் எப்போதென்று யாருக்கும் தெரியாது. எனவே நீ மரணிக்குமுன் உனக்குத்
    தேவையானவற்றை உன் மறுமை வாழ்வுக்குத் தேவையானவற்றை இப்போதே சேகரித்து
    வைத்துக்கொள்! நாளை நீ மரணித்து விட்டால்.. கூட இருப்பவர்கள் ஐயோ
    பாவம்!! ஒரு நல்ல மனிதன் மரணித்து விட்டானே என நான்கு பேராவது
    அனுதாபப்படும் அளவுக்காவது நல்லவனாக வாழ். உலகில் உன்னுடன்
    வாழ்ந்தவர்கள்தான் நாளை உன்னைப்பற்றி இறைவனிடம் சாட்சி சொல்பவர்கள்
    என்பது நபிமொழி. நீ நல்ல முறையில் வாழ்ந்தால்தானே அவர்கள் நல்லபடியாக
    சாட்சி சொல்வார்கள். எனவே நீ குறைந்த பட்சம் ஒரு நல்ல முஸ்லிமாக
    வாழ்ந்து மரணித்தால்தான் நீ உலகில் பிறந்ததற்கும், வாழ்ந்ததற்கும் ஒரு
    அர்த்தம் இருக்கும். இல்லையேல் அனைத்துமே வீண்!!!

    எனவே இன்றே நீ தவ்பாச் செய். நல்லவனாகிவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்.

    (எம் அனைவருக்கும் இறையருள் உண்டாகட்டும்).

    more

Featured Video

Photos