September 06, 2009 இலிருந்து 23 இல் 9 புதிய இடுகைகளைக் காண்பிக்கிறது. பழைய இடுகைகளைக் காண்பி
September 06, 2009 இலிருந்து 23 இல் 9 புதிய இடுகைகளைக் காண்பிக்கிறது. பழைய இடுகைகளைக் காண்பி
-
சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்; மன்னிப்புக் கோராவிடின் மாற்று நடவடிக்கை
சனல் – 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி பொய்யென்பதை நிரூபித்து அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அறிக்கைகளை அத்தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்புவதுடன் எம்மிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.
இன்றேல் மாற்று நடவடிக்கை எடுக்க நேரும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை இக்காட்சிகளை ஒளிபரப்பிய அல் ஜெஸிரா, சி. என். என். போன்ற நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி நிறுவனங்கள் தமக்குக் கிடைக்கும் இதுபோன்ற வீடியோ மற்றும் தகவல்களை எம்மிடம் உறுதிப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, அதனைத் தருவோர் தொடர்பில் தெளிவோடு செயற்படுதல் அவசியமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனல் – 4 தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் :-
னல் – 4 விவகாரத்தின் சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் எமது வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் அறிவித்துள்ளதுடன் ஜே. டி. எஸ்., ஐ. என். எஸ். ஜீ. போன்ற பெர்லினில் இயங்கும் அமைப்புக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
பெர்னிலில் இயங்கும் இந்த அமைப்பில் ரஞ்சித் லொக்பைல் என்பவர் பொறுப்பாகவுள்ளார். எமது தூதரகத்தினூடாக நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இது தொடர்பான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.
ஐ. என். எஸ். ஜி. என்ற இவ் அமைப்பு பெர்லினில் இயங்கும் அமைப்பாகும். இதில் பலர் அங்கத்தினர்களாக உள்ளனர். யோகநாதன், சிவசாமி சிவராஜா, திருமதி தினுஜா கிருஷ்ண சுப்பிரமணியம், நடராஜா என பெயர் கொண்டவர்களும் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த அமைப்பு 2009 ஆகஸ்ட் முதலாம் திகதியிலேயே ‘ப்ளொக்ஸ்டொப்’ ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கு ஜொனதன் மில்லர் என்பவரே பொறுப்பாளராகச் செயற்படுகின்றார்.
இச்செயலானது எமது நாட்டையும் படையினரையும் களங்கப்படுத்தும் செயல் என்பதால் இது விடயத்தில் நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. இதனால் நாம் இவ்விவகாரத்தை சுயாதீன பரிசீலனைகள் மூலம் விசாரித்து வருகின்றோம். இது தொடர்பில் 4 பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் விஞ்ஞானத்துறை நிபுணர் ஒருவரும் இது தொடர்பில் சுயாதீன பரிசீலனைகளை மேற்கொண்டார்.
இவர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலை சம்பந்தமான சுயாதீன விசாரணைகளில் ஈடுபட்டவர்.
இந்த நான்கு பரிசீலனைகளிலிருந்தும் கிடைத்துள்ள முடிவுகளின்படி மேற்படி வீடியோக் காட்சி கையடக்கத் தொலைபேசி கெமராவில் பிடிக்கப்பட்டதல்ல என்பது புலனாகிறது.
நேற்றும் மேற்படி விவகாரம் தொடர்பில் சகல தூதுவர்களுக்கும் அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளோம். ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய நாட்டை நேசிக்கும் சகலரும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளில் செயற்பட வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை லலித் திசாநாயக்க எம்.பி. நேற்றுச் சபையில் சமர்ப்பித்ததுடன் அமைச்சர் மஹிந்த சமரவீர, ஜே. வி. பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் இவ்விவாதத்தில் உரையாற்றினர்.
more
-
நடுவானில் 104 பயணிகளுடன் பறந்த விமானத்தை கடத்திய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
7 முறை வட்டமிட வேண்டும்.
மத்திய அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் சுற்றுலா தலம் கன்கன், இந்த இடத்துக்கு அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இங்கு இருந்து ஒரு விமானம் மெக்சிகோ சிட்டிக்கு புறப்பட்டது. இதில் பொலிவியா நாட்டை சேர்ந்த பாதிரியார் ஒருவர் பயணம் செய்தார்.
அவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இருக்கையில் இருந்து எழுந்து தன்னிடம் வெடிகுண்டுகள் இருப்பதாகவும் விமானத்தை கடத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். அவர் பெயர் ஜோஸே மார் புளோர்ஸ் பெரைரா (Jose Mar Flores Pereira).
இவர் மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தின் மீது விமானம் 7 முறை வட்டமிடவேண்டும் என்று கூறினார். அதன்படி விமானம் விமான நிலையத்தின் மீது 7 முறை வட்டமடித்தது.
மெக்சிகோ நாட்டு ஜனாதிபதி பெலிப்பே கால்டெரான் கார்சியா லூனாவுடன் பேசவேண்டும் என்றும் கோரினார். இதை ஏற்று ஜனாதிபதி கால்டெரான் தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு விமான நிலையத்துக்கு விரைந்தார்.
இதற்கிடையில் விமானம் மெக்சிகோ சிட்டியில் தரை இறங்கியது. அதிரடிப்படையினரும், மீட்புக் குழுவினரும் விமானத்துக்குள் அதிரடியாக புகுந்து பாதிரியாரை கைது செய்தனர். அவர் தெய்வீக நோக்கத்துக்காக தான் விமானத்தை கடத்தினேன். மெக்சிகோ சிட்டிக்கு பூகம்ப ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
அதில் இரந்து அந்த நகரத்தை காப்பாற்றுவதற்காகவே விமானத்தை கடத்தினேன் என்றும் விமான நிலையத்தை 7 முறை சுற்றி வந்ததால் அந்த ஆபத்து நீங்கி விட்டது என்றும் அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
விமானம் கடத்தப்பட்ட நாள் புதன்கிழமை ஆகும். அன்றைய தினம் ஆண்டு மாதம், நாள் என எல்லாமும் 9-9-9 ஆக தான் இருந்தது.
இதை திருப்பி போட்டால் எல்லாமே. 6-6-6 ஆக வரும். இந்த எண் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானது. விமானத்தை கடத்துவதற்கு புனித ஆவி உதவியாக இருந்தது என்றார்.
விமானத்தில் இருந்த அவரை பொலிஸார் கைது செய்தபோது அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
இந்த கடத்தல் நாடகம் அரை மணிநேரத்தில் முடிந்து விட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரைஇறங்கினார்கள்.
கைதானனபாதிரியார் மெக்சிகோ நாட்டில் 17 ஆண்டுகள் தங்கி இருந்துள்ளார். அவர் இளமைப்பருவத்தில் போதை அடிமையாக இருந்து இருக்கறார்.
முன்னாள் கைதியாகவும் ருந்து இருக்கறார். இந்த கடத்தலில் வேறு யாராவது அவருக்கு உதவி செய்து இருக்கிறார்களா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
more
-
தமிழ் நாட்டில் இன்னும் மடையர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் தா.பாண்டியன்
இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்
இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,
தமிழ் சமுதாயத்தையே வேறோடு அழிக்க ராஜபக்சே அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்தியாவின் மத்திய அரசு மனசாட்சி இல்லாமல் துணை போகிறது.
இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களின் கற்பப் பைகள் எடுக்கப்படுகிறது. ஆண்களின் ஆண்மை சக்திகள் அழிக்கப்படுகிறது.
தமிழ் சமுதாயம் அழிக்கப்படுவதற்கு இந்தியாவே முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டண் ஆகியோருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் பெரும் வேதனையாக உள்ளது.
3 லட்சம் தமிழர்கள் மின்சார வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை. உணவு சரியாக கிடைப்பதில்லை.
முகாம்களில் தமிழ் மருத்துவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மருத்துவர்களிடம் கூட மருத்துவம் பார்க்க அனுமதிக்க மறுக்கின்றனர்.
பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. காரணம் முகாம்களில் நடக்கும் அநீதிகளை வெளி உலகத்துக்கு காட்டி விடுவார்கள் என்பதால்தான்.
உண்மைகளை உலகத்துக்கு உணர்த்திய பத்திரிகையாளர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்படுவது மிகவும் கொடுமையானது.
மீண்டும் ஈழப்பிரச்சனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் என்றார்.இலங்கைத் தமிழரே இவர்களை கோமாளிகளாக பார்க்கும் போது இந்திய அரசுக்கு தெரியாதா? இப்படி தமிழன் முன்னேறனும் என்றால் தமிழ் நாட்டு மக்கள் தமிழ் தலைவர்களை புறக்கணிக்க வேண்டும் !
more
-
இலங்கை மீது ‘நெற்றிக்கண்ணை’த் திறக்கும் மேற்குலக ‘சிவபெருமான்களும்’, அடிபணிய மறுக்கும் ‘நக்கீர’ மகிந்த அரசும்!
- வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகின் விமர்சனங்களும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் இதில் முன்னிலை வகிக்கின்றன. பிரித்தானியா இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ‘சூரியன் அஸ்தமிக்காத’ சாம்ராஜ்யமாக கொடிகட்டிப்பறந்த நாடு. பிரித்தானியாவின் மூத்த பிள்ளை போன்ற அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகின் ‘பொலிஸ்காரனாக’ தன்னைத்தானே நியமித்துக்கொண்ட நாடு. எமது இலங்கை சுமார் 250 வருடங்களாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் உழன்ற நாடு. எமது நாட்டை கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக ‘சிப்பிலியாட்டி’ வரும் இனப்பிரச்சினைக்கும், கடந்த 25வருடங்களாக நாம் ‘அனுபவித்த’ உள்நாட்டுப் போருக்கும் காரணகர்த்தாக்கள் இந்த பிரித்தானியரே. தமது நாட்டில் பிரித்தானியரின் கொடூரமான காலனித்துவ ஆட்சிக்கெதிராக இந்திய மக்கள் தொடுத்த வீரம்செறிந்த சுதந்திரப் போராட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் சுதந்திரத்தை பெற்றுத் தந்தது. ஆசியாவில் பிரித்தானியாவின் பிடி தகர்ந்த பின்னர் பிரித்தானியா பல்லு விழுந்த சிங்கம் போலானது.
பிரித்தானியா விட்டுச்சென்ற இடத்தை எடுப்பதற்கு அமெரிக்கா முன்வந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அது சீன மக்களின் புரட்சியை அடக்க முயன்று படுதோல்வியடைந்தது. அதன் பின்னர் கொரிய மக்களின் சுதந்திரப் போராட்டத்தையும், வியட்நாம் உள்ளிட்ட இந்தோ – சீன மக்களின் தேச விமோசனப் போராட்டத்தையும் அடக்க முற்பட்டு மூக்குடைபட்டது. தனது தாழ்வாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கியூபாவின் புரட்சியையும், அதன் தலைவர் ஃபிடல் காட்ஸ்ரோவையும் கழுத்தைத் திருகிக் கொல்ல பலமுறை முயன்று தோற்றுப்போனது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து சோசலிச சோவியத் யூனியன் சக்திமிக்க நாடாக மாறி, பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோசலிசப்பாதைக்கு மாறி, சீனா, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளில் புரட்சி வெற்றி பெற்ற பின் ஆசிய – ஆபிரிக்க நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் காலனித்துவத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டங்கள் தீச்சுவாலையாக கிளர்ந்து எழுந்தன. இவையெல்லாவற்றிலும் அமெரிக்கா தலையிட்டு அவமானகரமாக தோல்வியையே தழுவியது.
முதலில் பிரித்தானியாவும் பின்னர் அமெரிக்காவும் கடந்த 300ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆதிக்கம் செய்ய முயன்ற போதிலும், அதையெல்லாம் உலக மக்கள் வெற்றிகரமாக முறியடித்து வந்துள்ளனர் என்பதே உலக வரலாறு. இருந்த போதிலும் அவர்கள் தமது உலக ஆதிக்கப் பேராசையை விட்டபாடாக இல்லை. தமது நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அவர்களது ஆக்கிரமிப்பு படைகள் இன்று அந்நாடுகளின் சுதேச மக்களுடன் போரிடுவதற்கு அதுவே காரணம். அதேவேளையில் தமது ஆக்கிரமிப்பு நோக்கங்களை எதிர்க்கும் சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா, வெனிசுலா, ரஷ்யா, ஈரான், லிபியா போன்ற நாடுகளுடனும் மறைமுக அரசியல் - பொருளாதாரப் போராட்டங்களை, அமெரிக்க – பிரித்தானியா தலைமையிலான மேற்குலகம் நடாத்தி வருகின்றது. இந்த அணிவகுப்பில் இலங்கையில் தற்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசையும் இந்த மேற்குலக சக்திகள் தமது எதிரணியில் நிறுத்தி வைத்து, அதன் மீதும் தமது தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை மீதான தாக்குதலை மேற்குலக சக்திகள் ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன என்பது சிந்தனைக்குரியது. பொதுவாக புதிதாக சுதந்திரமடைந்த பெரும்பாலான ஆசிய – ஆபிரிக்க நாடுகளில் தேசிய இனப்பிரச்சினையே பிரதான பிரச்சினையாக இருந்து வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையிலும் அதுவே உண்மை நிலவரமாகும். இந்த நாடுகளை கைப்பற்றி ஆட்சிசெய்த மேற்கத்தைய காலனித்துவ சக்திகளே அந்நாடுகளில் இனப்பூசல்களை உருவாக்கிவிட்டுச் சென்றவர்கள். புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகள் தமது சுதந்திரத்தை ஸ்திரப்படுத்த முடியாமலும், பொருளாதார சுபீட்சம் பெறமுடியாமலும், தொடர்ந்தும் மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளில் தங்கியிருப்பதற்காகவே, அந்த நாடுகளில் இனப்பூசல்கள் உருவாக்கப்பட்டதுடன், அதை மேற்குலக சக்திகள் பயன்படுத்தியும் வந்துள்ளன. இதை இலங்கையின் வரலாற்றில் இருந்து தெளிவாகக் காணமுடியும்.
மேற்குலக சக்திகள், ஒருபக்கத்தில் இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தை சுதந்திரத்துக்குப் பின் முதன்முதலில் நடைமுறைக்குக் கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்த அதேவேளையில், மறுபக்கத்தில் பிரிவினைவாதத்தை கிளப்பிய தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ விடுதலைப்புலிகள் போன்றவற்றையும் ஆதரித்து வந்துள்ளதிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும். உள்நாட்டு மோதல்களைப் பயன்படுத்தி தமது நலன்களை ஈடேற்றிக் கொள்வதே மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளின் எழுதப்படாத இயங்கு விதியாக இருந்து வருகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசு வன்னியில் தொடுத்த இறுதி யுத்தத்தின் போது இது நன்கு தெளிவாகியது. புலிகளின் தலைமைத்துவத்தை நேரடியாகவே தலையிட்டுக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்கு நாடுகள் பகீரதப் பிரயத்தனம் எடுத்தன. இந்தியா மட்டும் இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு நாடாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த மேற்கு நாடுகள் இலங்கைக்குள் அத்துமீறிப் புகுந்து பிரபாகரனையும் அவரது சகாக்களையும் காப்பாற்றிச் சென்றிருப்பார்கள். மேற்கு நாடுகள் இறுதி நேரத்தில் தலையிட்டு எப்படியும் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தபடியால் தான், பிரபாகரனுக்கு ஆரம்பத்திலேயே தப்பியோட வாய்ப்பிருந்தும், அவர் அவ்வாறு ஓடாமல் கடைசி நிமிடம் வரை காத்திருந்து மரணிக்க நேர்ந்தது. அமெரிக்கா எப்படியும் காப்பாற்றும் என பிரபாகரன் உறுதியாக நம்பியிருந்ததாக, வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி தமிழகத்தில் புகலிடம் தேடியிருக்கும், புலிகளின் மிகமுக்கிய ஆலோசகரான மு.திருவாவுக்கரசு ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு வழங்கிய நேர்காணலில் ஒப்புக்கொண்டிருக்கறார் என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
மகிந்த ராஜபக்ச அரசு மேற்குலகின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களையும் மீறி, புலிகளை முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதே இன்று மேற்குலகம் இலங்கை மீது அறிவிக்கப்படாத ஒரு ‘போரை’த் தொடுத்திருப்பதற்குக் காரணமாகும். அதுமாத்திரமின்றி புலிகளை அழிப்பதற்கு மேற்குலகிற்கு பிடிக்காத சீனா, ரஷ்யா, முன்னாள் சோவியத் குடியரசுகள், இந்தியா, பாகிஸ்தான் என்பனவற்றிடம் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்கியமையும் அவற்றுக்கு கோபமூட்டிய நடவடிக்கையாகும்.
இந்த மேற்குலக நாடுகள் ஜனநாயகத்தின் பெயரால், பல நாடுகளில் உண்மையான ஜனநாயக அரசுகளை குழிதோண்டிப் புதைத்த நடவடிக்கைகளை யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கத்திற்கும் ஆயுதங்கள் விற்று, புலிகளுக்கும் ஆயுதங்கள் விற்று இலாபமீட்டவும், ஆதிக்கத்தை நிலைநாட்டவுமே அவை விரும்புகின்றன. இலங்கையில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தை, சகல விதமான பயங்கரவாத செயல்களையும் பயன்படுத்தி புலிகள் போன்ற ஒரு இயக்கம் சீர்குலைக்க முயல்வதைப்பற்றி மேற்குலத்திற்கு எவ்விதமான கவலையும் இல்லை. அவ்வாறான ஒரு இயக்கத்தை அழிக்க முற்படும்போது மட்டும் ஜனநாயகத்தின் பெயரால் , மனித உரிமையின் பெயரால் அதைத் தடுப்பதற்கப் படாதபாடுபடுகின்றன.
இப்பொழுது இலங்கையில் யுத்தம் முடிவுற்றுவிட்டபடியால், இலங்கை இனி பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்தி வேகமான வளர்ச்சியை அடைந்துவிடும் என்பதுதான் மேற்குலக ஆதிக்க சக்திகளின் தற்போதைய கவலையாகும். அதனால் தான் அவை சர்வதேச நாணயநிதியம் வழங்கவிருந்த கடனுதவியை தடுப்பதற்கு பல வழிகளிலும் முயன்றன. அது இயலாமல் போனதும் ஐரோப்பிய யூனியன் ஆடை ஏற்றுமதி சம்பந்தமாக இலங்கைக்கு வழங்கிவரும் ஜி.எஸ்.ரி வரிச்சலுகையை இப்பொழுது நிறுத்திவிட முயல்கின்றன. மேற்குலகின் இந்த முயற்சி மறைமுகமான ஒரு பொருளாதாரத் தடையாக இருந்தபோதிலும், இலங்கை அரசு அதற்கு மசிந்து கொடுப்பதாகவில்லை. இலங்கையின் இலங்கையின் இந்தத் துணிச்சலுக்கு அதன் தலைமைத்துவத்தின் உறுதியான தேசிய – சுயாதீனக் கொள்கைகள் மட்டும் காரணமல்ல.
இன்று உலக அரங்கின் பொருளாதாரச் சமவலுநிலை வெகுவாக மாறிவிட்டது. ஒருகாலத்தில் மேற்குலகின் கைகளிலேயே உலகின் 90 வீதமான கொருளாதார வளங்களும், அந்நியச் செலாவணி கையிருப்புகளும் இருந்தன. அமெரிக்காவின் டொலர் நாணயம் இரண்டாவது தங்கமாக, சில வேளைகளில் அதற்கும் மேலாக கணிக்கப்பட்டது. ஆனால் இன்று மிகப்பெரிய சோசலிச சீனாவும், மிகப்பெரிய ஜனநாயக இந்தியாவும், புத்தெழுச்சி பெற்றுவரும் ரஷ்யாவும், எண்ணெய் வளமிக்க ஈரான், வெனிசுலா, லிபியா போன்றவையும் உலக செல்வத்தின் கணிசமான பகுதியை தம்வசம் வைத்திருக்கின்றன. மறுபக்கத்தில் கட்டுப்பாடற்ற ஏகபோக மூலதனப் போட்டி காரணமாக மேற்கத்திய முதலாளித்துவ உலகம் முழுவதும் அண்மையில் பெரும் பொருளாதார சுருக்க நிலை (நெருக்கடி) ஏற்பட்டது. அதிலிருந்து விடுபடுவதற்குக் கூட அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் சீனாவிடம் கெஞ்சி உதவிகேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சீனப் புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் மேற்குலகம் ஒன்று திரண்டு, புதிய சீனாவை உலக வரைபடத்திலிருந்து அழித்து விடுவதற்காக, அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடை விதித்த நிலை எங்கே, இன்று அதே நாட்டிடம் தமது மீட்சிக்காக கையேந்தும், கெஞ்சும் நிலை எங்கே? வருங்காலத்தில் உலகப் பொருளாதாரம் மேலும் மேலும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து செல்லக்கூடிய அறிகுறிகளே அதிகம் தென்படுகின்றன. (அதைத்தான் சீன மக்களின் பெருந்தலைவர் மாஓ ‘மேலைக்காற்றை கீழைக்காற்று ஒரு நாள் மேவும்’ என சொல்லிச் சென்றாரோ?) இதன் காரணமாக மேற்குலகம் ஒரு வெறிபிடித்த நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது. உலக வளங்களை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மூன்றாவது உலகயுத்தம் ஒன்றை அவை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் சின்னஞ்சிறிய இலங்கை மேற்குலகின் மிரட்டல்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நிற்பதன் விளைவாகவே, உலக அரங்கில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அத்தனை நாடுகளும் இலங்கையை ஆதரித்து நிற்கின்றன. இதை சில மாதங்களுக்கு முன்னர் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத் தொடரின் போது இலங்கையை கண்டித்து மேற்குலகின் பின்னணி ஆதரவுடன் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தற்பொழுது இலங்கைக்கு எதிராக மேற்குலகால் விடுக்கப்பட்டு வரும் பொருளாதாரத்தடை முயற்சிகளும் இவ்வாறே முறியடிக்கப்படுவது நிச்சயம். உலகின் சக்திவாய்ந்த நாடுகளான சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு அரசியல் - ராஜதந்திர ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் உதவக் காத்திருக்கின்றன. அதுமாத்திரமின்றி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முறை மேற்கத்திய நாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வழிமுறையைக் கொண்டது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குலகம் அரசியல் உள்நோக்குடன் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுவரும் சீர்குலைவு நடவடிக்கைகளை இலங்கை அரசு தனது மக்களினதும், நட்பு நாடுகளினதும் உதவியுடன் உறுதியுடன் எதிர்த்துப் போராடி வருகின்ற போதிலும், அதன் பக்கத்திலும் பல முக்கியமான குறைபாடுகள் இல்லாமல் இல்லை. வன்னியில் இறுதி யுத்த நடவடிக்கையின் போது சொல்ல முடியாத இழப்புகளுடன் இடம்பெயர்ந்து வந்து, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும் அவர்களைது சொந்த இடங்களில் குடியேற்றும் விடயத்தில், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியான முறையில் முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பல தரப்பினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் நியாயம் இல்லாமல் இல்லை. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்க்கையில், அவர்களது மன ஆதங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.
இன்னொரு காரணத்துக்காகவும் இலங்கை அரசாங்கம் இதில் உடனடிக் கவனம் செலுத்துவது அவசியம். வன்னியில் புலிகளின் தலைமையை காப்பாற்ற முடியாமல் போன மேற்குலக சக்திகள் இப்பொழுது இந்த இடம்பெயர்ந்த மக்களை வைத்து இலங்கை அரசுக்கெதிரான தமது நாசகார அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. மீள்குடியேற்ற விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் போர்வைக்குள் இயங்குகின்ற, உண்மையான அரசியல் - நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற அரசுயந்திரமான அதிகார வர்க்கமே மீள்குடியேற்ற விடயத்தில் ஏற்படுகின்ற தாமதத்திற்கு காரணம் என்ற போதிலும், நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கின்ற அரசாங்கமே அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவும், பொறுப்புக் கூறவும் கடமைப்பட்டுள்ளது.
அடுத்ததாக, இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நீடித்த தீர்வைக் காண்பதிலும், இலங்கை அரசாங்கம் தனது உறுதிப்பாட்டையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தாத ஒரு சூழலே நிலவுகின்றது. தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கி, அவர்களை நாட்டின் தேசிய வாழ்வில் ஒன்றிணைப்பதற்கான முயற்சிக்கு எதிராக, அரசாங்கத்திற்குள்ளும் வெளியேயும் மட்டுமின்றி, இராணுவத்திற்குள்ளும் இருக்கின்ற சில பேரினவாத சக்திகள் கிளப்பும் எதிர்ப்புக்களால், இலங்கை அரசாங்கம் ஒரு தயக்க நிலைக்கு, செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தூரதிஸ்ட வசமான நிலையால் மீண்டும் பிரிவினைவாத – பயங்கரவாத சக்திகள் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து நிலவுவதுடன், மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் அவ்வாறான ஒரு நிலைக்கு தூபம் போடுவதையும் காண முடிகிறது. இது இலங்கையின் எதிர்காலத்திற்கு பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
எனவே இத்தகைய ஒரு சூழ்நிலையில், நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் உடனடி – நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசர அவசியமாக சில நடவடிக்கைகளை உடனடியாகவும் உறுதியாகவும் எடுக்க வேண்டும் என்பதே அனைத்து ஜனநாயக சக்திகளினதும், தேசபக்த சக்திகளினதும் தற்போதைய வேண்டுகோளாகும்.
more
-
இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் அடக்குமுறை, படங்கள் ,வீடியோ



காசாவில் இஸ்ரேலிய பயங்கரவாத அமைப்பினரின் கொடுமைகளுக்கு ஒரு அளவேயில்லை.மக்கள் அத்தியாவசிய பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய பெரும் கெடுபிடிகளை விதித்துள்ளனராம்.இதனால் துணிமணிகள்,மருந்துகள்,பால், அரிசி ,முட்டை கோதுமை,இறைச்சிக்கான கால்நடை, எண்ணெய்,உப்பு ,சர்க்கரை போன்ற தானியங்கள் கூட கடத்தப்பட்டு தான் விற்கப் படுகின்றதாம்.
எகிப்து மற்றும் அண்டை நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள்
ராஸா என்னும் இடத்தில் பூமிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்திற்கு படத்தில் உள்ளது போல எந்திர ராட்டின உதவியுடன் சப்ளை செய்யப்படுமாம்.வியாபாரிகள் லிப்ட் ஷாப்ட் போல அவர்கள் கடைகளில் வைத்திருப்பார்களாம்.பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் சப்ளை ஆகும் பொருட்கள் கூலியாட்கள் மூலம் மேலே ஏற்றப் படுமாம். இந்த வருடம் மட்டும் மண் சரிந்து விபத்துக்குள்ளாகி சுரங்கத்துக்குள்ளேயே 45 பேர் சமாதியாகினராம்.
நேரிடையாக வணிகம் செய்யும் போதே அநியாய விலைவாசி உள்ள காலகட்டத்தில் உணவுப்பொருட்களை இப்படி கடத்தப்படுவது மூலம் நான்கு மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியது உள்ளதாம்.
ஒவ்வொரு வருடமும் ஈகைத் திருநாளை இப்படித்தான் இறைச்சிக்கான கால்நடை இன்றி பெரும்பாடுபட்டு கொண்டாடுகின்றார்களாம்.
இறைவன் கருணையுள்ளவன் அவன் இனியாவது பாலஸ்தீனியர்களை கொடிய இஸ்ரேலிய யூத இனத்தவரிடமிருந்து காக்கட்டும்.
படுகொலை செய்யப்பட்ட ஐயாயிரம் இளம் பிஞ்சுகளின் மரணத்திற்கு என்றாவது ஒருநாள் இந்த மாபாதகர்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்.2007 ஆம் ஆண்டு தீவிரமாக காஸாவை பிடித்த சைத்தான்கள் இந்த வருடமாவது விலகுவார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
more
-
அகதி முகாம் மக்களை விடுவிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க முடியும்: தொலைபேசி இலக்கங்கள் (009411) 2 395524, (009411)2395512
அகதி முகாம் மக்களை விடுவிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க முடியும்: தொலைபேசி இலக்கங்கள் (009411) 2 395524, (009411)2395512
வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கு விரும்பும் உறவினர் நண்பர்கள் விண்ணப்பிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடைக்கலம் வழங்க விரும்புவோர் விசேட விண்ணப்பப் படிவமொன்றை பூர்த்தி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக உறவினர்கள் மற்றும் ஏனையோர் அகதி முகாமில் உள்ள நபர்களுக்கு அடைக்கலம் வழங்க விரும்பினால் அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சிற்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அடைக்கலம் வழங்க விருப்பம் தெரிவிப்போர் குறித்த நபர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் இருப்பிடங்களை வழங்குவதாக உறுதியளிக்க வேண்டுமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த விண்ணப்பப் படிவங்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வது மற்றும் அவற்றைப் பூர்த்தி செய்வது குறித்த தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். (009411) 2 395524, (009411)2395512
more
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ்மீது செருப்பு வீசிய நபர் விடுதலை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ்மீது செருப்பு வீசிய நபருக்கு கார், வீடு, பணம் என குவியும் அன்பளிப்பு!!கடந்த டிசம்பரில் பக்தாத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் மீது பாதணிகளை வீசி பிரபலமடைந்த ஈராக் நாட்டு பத்திரிகை நிருபர் முன்டாசர் அல் ஜெய்திக்கு கார், வீடு, பணம் என பல்வேறு பரிசுப்பொருட்களை தரத் தயார் என்று ஏராளமானவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். புஷ் மீது பாதணி வீசிய குற்றத்திற்காக அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஈராக் நீதிமன்றம் 3ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதால் அவர் அடுத்த திங்கட்கிழமை விடுதலை ஆகவுள்ளார். அவர் விடுதலையாகப் போகும் செய்தி கேள்விப்படவே அவருக்கு பரிசில்களை வழங்குவதற்காக பலர் காத்திருக்கின்றனர். இதற்காக பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். இந்த தகவலை த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. நிருபர் இதற்கு முன்பு வேலை செய்த நிறுவனத்தின் அதிபர் 4படுக்கை அறை வசதிகொண்ட வீட்டை கட்டிமுடித்து அவருக்கு இதை இலவசமாக வழங்க தயாராக உள்ளாராம். இதுதவிர அவருக்கு கார்கள் மற்றும் வாகனங்கள் என்பனவற்றையும் கொடுக்க பலரும் தயாராக உள்ளனர். மேலும் அவர் வேலைசெய்த பத்திரிகை அலுவலகத்துக்கு நிறையபேர் தொடர்பு கொண்டு பணம் தருகிறேன் அவரது உடல் நடல் பேண மருத்துவ செலவை ஏற்கிறேன் என்றெல்லாம் தெரிவித்துள்ளனர். மொராக்கோவில் வசித்து வந்த ஈராக்கியர் ஒருவர் முன்டாசர் திருமணம் செய்துக் கொண்டு உல்லாசமாக இருக்க தனது மகளையே தருகிறேன் என்று தெரிவித்துள்ளாராம்.
more
-
ஆஸ்கர் விருது பெற்ற “ஸ்லம்டாக்” படச்சிறுவனின் தந்தை மரணம்

ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த சிறு வனின் தந்தை மரணம் அடைந்தார்.
பிரபல ஹாலிவுட் டைரக்டர் டேனிபாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழந்தை நட்சத்திர மாக அசாருதீன் நடித்து இருந்தான். இவன் மும்பை தாராவியில் உள்ள குடிசை பகுதியில் தங்கியிருந்தான்.
ஆக்கிரமிப்பில் குடியிருப்பதாக கூறி அவனது குடிசையை மும்பை மாநகராட்சி இடித்தது. எனவே தங்க வீடு இன்றி இருந்த அவனுக்கு டேனி பாயலின் ஜங்கோ டிரஸ்ட் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டது.
அந்த வீட்டில் அவன் கடந்த சில நாட்களாக குடியிருந்து வந்தான். இந்த நிலையில் அவனது தந்தை முகமது இஸ்மாயில் காச நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நோய்க்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
more
-
புளொட் நகரசபை உறுப்பினர்கள் பதவி சத்தியப்பிரமாணம்! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)சார்பில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்று (10.09.2009) காலை நகரசபை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் தந்தை செல்வா நற்பணி மன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகிய இறைபணிச் செம்மல் வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு.க.பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம் ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி அமரர் உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.




















































more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


