மீன்
ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.
முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.
முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.
-
முல்லா ஸ்பெஷல்
அதிர்ஷ்டமான மனிதன்
முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர்.
முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா. துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா.
காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.
‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார்.
‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா.
தளபதியின் சமரசம்
மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.
முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.
இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.
மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.
கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.
கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.
மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.
பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.
நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.
முல்லா ஏன் அழுதார்?
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.
அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”
கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.
எந்த வீட்டுக்குப் போவது ?
ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு செய்யப்பட்டிருந்தது
பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது.
ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.
முல்லாவில் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட
பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” ... என்றார்.
முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே
அமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”... என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாக
முடிந்த மகிழ்ச்சியில் ” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு
நான் போவது ?” என்று கேட்டார்
more
-
இதுவரை சுமார் 1,500 ஆண்களுடன் உறங்கிய இங்கிலாந்து பெண்
இங்கிலாந்து பெண்ஒருவர் தான் இதுவரை சுமார் 1500 பேருடன் செக்ஸ் உறவை பகிர்ந்து கொண்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அவர்களில் பெரும்பாலானவர்கள் மற்றபெண்ளின் கணவர்கள் அல்லது பாய்பிரண்ட்டுகளாம். மேற்கு லண்டனின் செல்சியா பகுதியில் வாழும் அந்தபெண்ின் பெயல் மேர் சிமோன். அவர் ஆண்கள்,பெண்கள்மற்றும் தம்பதியினரின் தாம்பத்திய வாழ்க்கையை மெருக்கேற்ற உதவும் செக்ஸ் மருத்துவராக வேலை பார்த்து வருவதாகக் கூறிக் கொள்கிறார். அதே நேரத்தி்ல் நான் விபச்சாரப் பெண் அல்ல என்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக கூறும் அவருக்கு தற்போது வயது 54. இது குறித்து அவர் கூறுகையில், அடுத்தபெண்ணிகள் கணவர் அல்லது பாய்பிரண்டுடன் உறங்கி சம்பாதித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு விலைமாது அல்ல. ஒருவருடைய செக்ஸ் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், அதற்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்திலும் தான் இந்த சேவையை செய்து வருகிறேன். இதற்காக அவர்கள் தரும் பணத்தில் தான் என் வாழ்க்கை நடக்கிறது. சேவைக்காக செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி தவறில்லை. பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்கும், நான் வழங்கும் அறிவுரைகளுக்காகவும் என்னிடம் வரும் ‘நோயாளிகள்’ காசு கொடுக்கிறார்கள். செக்ஸ் சுகத்துக்காக அல்ல. நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை முன்னேற்றம் காண, மாறுதல் பெற உழைத்திருக்கிறேன். இதன்மூலம் அவர்களது மனைவிகள் அல்லது கேர்ள்பிரண்டுகளும் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. குழந்தை வேண்டும் சில பெண் களுக்கு வேறு சில பெண்கள் வாடகை தாயாக குழந்தை பெற்று தருகிறார்கள். அதேபோல் தான் செக்ஸ் விஷயத்தில் உதவ ஆளில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி வருகிறேன். எனது வாடிக்கையாளர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது நம்பிக்கை உண்டாக்கி வருகிறேன். அவர்கள் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்களுடன் உற்சாகமாக செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன். சில சமயங்களில் மனைவிக்கு முன்னால் அவர்களது கணவருடன் செக்ஸ் கொண்ட அனுபவமும் உள்ளது. அதன்மூலம் அவர்கள் இல்லற வாழ்க்கையை எப்படியிருக்க வேண்டும் என்பதை அந்த தம்பதிகள் புரிந்து கொள்வார்கள். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எனது வாடிக்கையாளர்களை சந்தித்து வருகிறேன். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆலோசனை வழங்குவேன். எனது வேலை முழு திருப்தி அளிக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். எந்தவொரு சமயத்திலும் இந்த வேலைக்கு ஏன் வந்தோம் என எண்ணியது கிடையாது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த சேவையை தொடரவிருக்கிறேன். செக்ஸ் பிரச்சனைகளை தீர்ப்பவர் என்ற முறையில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.
more
-
பிரித்தானிய நடிகர் மிஸ்டர் பீனின்(MR Bean) கடன்அட்டையிலும் மோசடி: இலங்கையர் இருவர் கைது

பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணையத் தளத்தைப் பயன்படுத்தியே இந்த மோசடியை மேற்கொள்ள இவர்கள் முயன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால் மெதிவக தெரிவித்தார்.
ஏச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த இருவரையும் கைது செய்திருந்தனர்.
அத்துடன் பிரித்தானியாவில் உள்ள தமது நண்பர்கள் மூலமாகவே இவர்கள் இருவரும் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் மலையகப் பகுதியில் உள்ள ஒரு இணையத்தள ஸ்தாபனத்திலிருந்தே இந்த முயற்சியை மேற்கொண்டதாக அறியக்கிடைக்கிறது.
more
-
தலைமைப் பண்புகளுக்கு உதாரண புருஷர் அஷ்ரப்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் தலைவராகவும் விளங்கிய எம். எச். எம். அஷ்ரபின் 9 ஆவது நினைவு தினம் இன்று.
தலைமைப் பண்புகளுக்கு பொருத்தமான உதாரணப் புருஷராக வாழ்ந்து வரலாறு படைத்தமையினால் தான், மக்களுக்குப் பிடிக்கும் மக்கள் தலைவனாக மலர்ந்தார் மர்ஹ¥ம் அஷ்ரப்.
தலைவர்கள் என்போர் மூன்று வழிகளில் உருவாகுகின்றனர். கூட்டமொன்றில் தெரிவு செய்யப்படும் ஒருவர், சமூகத்தின் முன் தலைவராக அறிவிக்கப்படுகின்றார்.
இவர் தெரிவான தலைவர். அதிகார பீடத்திலிருக்கும் அக்கிராசனர் தன் விருப்பம் போல் ஒருவரைத் தலைவராக நியமிக்கப்பட்டு, சமூகத்தின் முன் தலைவராக நிறுத்தப்படுகின்றார். இவர் நியமிக்கப்பட்ட தலைவர்.
மக்களால் விரும்பி ஏற்று மக்களாலே போற்றிப் புகழப்படும் ஒருவரே, மக்கள் தலைவராக - சமுதாயத்தின் தலைவராக சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுகின்றார்.
இம்மூன்று வகை தலைவர்களில் முதலிரு தலைவர்களும் பதவி மாற்றம் ஆட்சி மாற்றம் கால மாற்றம் காரணமாக, இடையில் காணாமல் போய்விடுவர்.
இதற்கு வரலாற்று வழியில் பல உதாரணங்களைக் காண முடியும். ஆனால் - மக்களால் விரும்பி ஏற்று, மக்கள் தலைவனாக அங்கீகரிக்கப்படும் தலைவரே, வரலாற்றில் இடம் பெறுவார். இம்மூவகைத் தலைவர்களில் நாம் இன்று நினைவுகூரும் மர்ஹ¥ம் அஷ்ரப், மக்கள் தலைவராக வாழ்ந்தவர்; மறைந்தும் மக்கள் மனங்களில் வாழ்பவர்.
இலங்கையில் முஸ்லிம் சமூகம் என்பது, எடுப்பார் கைப்பிள்ளையாகவே 1981 வரை இருந்து வந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். பேரினவாத பெரும்பான்மைக் கட்சிகளில் ஒட்டியும் பற்றியுமே முஸ்லிம்கள் தங்கியிருந்தனர். அக்காலத் தலைவர்களும் காலத்தின் சூட்சுமம் கருதி, அவ்வழியிலேயே மக்களை வழிநடத்தினர்.
தேர்தற் காலங்களில் தேவைப்பட்டோர், ஆட்சி அமைத்ததும், அமைச்சர்களாய் ஆனதும் மறக்கப்பட்டவர்களாக ஆயினர். அவர்கள் போட்ட மிச்ச சொச்சங்களிலே திருப்தி காணும் சமூகமாகவே முஸ்லிம்கள் இருந்தனர். இதுவே நாட்டுக்கு (1948) சுதந்திரம் கிடைத்த பின்னரும் நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர் அரசியலாக இருந்து வந்தது.
இந்த அரசியல் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதா? என சிந்திக்கத் தலைப்பட்டார் அஷ்ரப். தேசிய அரசியலின் நகர்வுகள் இன்னொரு சிறுபான்மை இனத்தவர்களான தமிழ் சகோதரர்கள் தம் எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தொடங்கி விட்ட நிலைமை அவ்வப்போது நாட்டின் நாலா பகுதிகளிலும் இடம்பெற்று வரும் இனமுரண்பாட்டு மோதல்கள் என்பன, தலைவர் அஷ்ரபின் சிந்தனையை துரிதப்படுத்தின.
இந்த சிந்தனை கருகட்டலின் பிரசவம்தான் முஸ்லிம் களுக்கென தனித்துவம் பேண தனிக் கட்சியொன்று தேவை என்ற காலத்தின் கட்டளையை, தட்டிக்கழிக்க முடியாத பொறுப்புணர்வில் அவரால் அங்குரார்ப் பணஞ் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும்.
தலைவர் அஷ்ரப் 1981 இல் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அங்குரார்ப்பணஞ் செய்த பின், இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற குழந்தையை ஈன்றளித்துவிட்டு, தலைவர் அஷ்ரப் வாளாவிருக்க வில்லை. நாடெங்கும் பயணஞ் செய்து, சமுதாய உடன்பிறப்புக்களை சந்தித்துப் பேசினார். மேடை போட்டு முழங்கினார்.
சமுதாயத்தின் எதிர்கால நலனுக்காக காலத்தின் தேவையை உணர்ந்து தன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை கொள்கைகளை திட்டங்களை நடவடிக்கைகளை விளக்கிப் பேசி, சமுதாயத்தை விழிக்கச் செய்தார். சமுதாய இளைஞர்களின் இதயங்களைத் தொட்டார்.
இதன் விளைவாக, ஊரெங்கும் கிளைகள் உருவாகின. முஸ்லிம்கள் சிந்திக்கலாயினர். முஸ்லிம் இளைஞர்கள் அணி திரண்டனர். சமுதாயத்தின் துறைசார் நிபுணர்களை பிரமுகர்களை பெருந்தகைகளை நேரில் சந்தித்தார். அவர்களையும் சிந்திக்கத் தூண்டிவிட்டார். இந்த ஆரோக்கிய வளர்ச்சி, தலைவர் அஷ்ரபின் நம்பிக்கைகளை மேலும் உறுதி செய்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விண்ணப்பித்தார். நல்ல நோக்கங்களை (நிய்யத்துக்களை) அல்லாஹ் நிறைவேற்றி வைப்பான் என்ற நியதியின்படி, அல்லாஹ்வின் பேரருளால் 1986 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த அங்கீகாரத்தின் பின், நாட்டில் நடந்த நகர சபை, மாகாண சபை, நாடாளுமன்ற தேர்தல்களில் எல்லாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை போட்டியிடச் செய்தார். முஸ்லிம் இளைஞர்களை தேர்தற் களத்தில் குதிக்கச் செய்து, அபேட்சகர் தெரிவி லும் தலைவர் அஷ்ரப் பழைய முறை களை புறம் தள்ளிவிட்டு புதிய முறை யினை கையாண்டு புரட்சி செய்தார்.
பணக்காரர்கள் மேதாவிகள் மேட்டுக்குடியின் வாரிசுகள் போன்றவர்கள் மட்டுமே, தேர்தல்களில் போட்டியிடத் தகுதி பெற்றவர்களாக தெரிவு செய்யப்பட்டு, தேர்தற் களத்தில் நிறுத்தப்படும் பாரம்பரியம், நீண்டகால நடைமுறையாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்த அளவுகோல்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, சமுதாயப் பற்றுறுதி ஒன்றையே உரிய தகுதியாகக் கொண்டு அபேட்சகர்களை தெரிவு செய்தார்; அரசியலுக்கு அறிமுகஞ் செய்தார்.
ஒதுங்கியிருந்த சமுதாயப் பிரமுகர்களை எல்லாம், சமூகத்திற்கு சேவையாற்ற முன்வரும் படி அறைகூவி அழைத்தார். சமுதாய நலனுக்காக தொண்டாற்ற முன்வந்த படையினரை சமுதாயப் போராளி எனப் பெயரிட்டு அழைத்தார்.
தேர்தல்களில் ‘சமுதாயப் போராளிகள்’ வெற்றி பெறுவார்களா? தோல்வியுறுவார்களா? என்பதை தலைவர் அஷ்ரப் சிந்தித்ததைவிட, அரசியல் விழிப்புணர்ச்சி சமுதாய விடியலுக்கான தெளிவு நாட்டு சூழலை எடையோடும் அரசியல் அறிவு என சமூகத்தாரிடையே எழுச்சி பெற வேண்டும் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்தார்.
இதற்காக தேர்தல்களை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தினார். இன்றில்லாவிட்டாலும், நாளை அல்லது அடுத்த தேர்தலில் என் சமூகம் விழிப்படைந்தால் அதுவே என் வெற்றி என் சமுதாயத்தின் வெற்றி எனத் தூர நோக்கோடு காய் நகர்த்தினார். காரியமாற்றினார்.
தலைவர் அஷ்ரபின் இந்த காய் நகர்த்தல்கள் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ஏறிய ஒவ்வொரு படித்தரங்களும் தலைவர் அஷ்ரபை சராசரி தலைவர்களிலிருந்தும் வேறுபடுத்தி உயர்த்தி, சாணக்கியமிக்க, சாதூர்ய தலைவராக உருவாக்கின எனக் கூறினால், நேர்நின்று சிந்திப்போர் ஒப்புக் கொள்வர்.
சராசரி அரசியல் தலைவன் அடுத்த தேர்தல் வெற்றியை மனதிற் கொண்டே செயற்படுவான். ஆனால் அரசியல் ஞானியோ அடுத்த சந்ததியை இனிவரும் தலைமுறைகளை உத்தேசித்தே பணியாற்றுவான் என அரசியல் அறிஞர்கள் கூறுவர். நம் தலைவர் அஷ்ரபும் நிகழ்கால தேர்தல் வெற்றியை விட, எதிர்கால அரசியல் விழிப்புணர்ச்சி என் சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையில் செயல்பட்டதால், அரசியல் ஞானியாகப் புகழப்படுகின்றார்.
இத்தகைய அரும்பெரும் தலைவனின் சீடர்கள் அவரின் மறைவினை அடுத்து, உதிரிக் கட்சிகளை துவக்கி, அதன் நிழலில் ஒதுங்கி, ஒற்றுமை என்னும் கயிற்றை கைவிட்டு, பிளவுண்டு சராசரி அரசியல்வாதிகளாகத் தொழிற்படுவது வேதனையைத் தருகிறது.
தலைவர் அஷ்ரப் எந்த சமுதாயத்தின் ஒற்றுமையைப் போகும் இடமெல்லாம் வலியுறுத்தி, ஒன்றுதிரட்டி, அரசியல் பலத்தைக் குவித்தாரோ, அந்த ஒற்றுமை இன்று சீர்குலைந்து காணப்படுவது, தலைவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகாது.
நாமெல்லாரும் தலைவர் அஷ்ரபின் விசுவாசமான சீடர்களாக தலைவர் அஷ்ரப் அணி திரட்டிய சமுதாயப் போராளிகளாக இருப்பது உண்மை என்றால், வேற்றுமைகளை வேரறுத்து ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் படிப்போமாக! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வசனத்தின்படி நாம் ஒன்றுபட்டு, நம் உரிமைகளை வென்றெடுப்போமாக? சமுதாயம் ஒன்றுபட்டால் தான் தலைவரின் வழியில் அரசியல் பேரம் பேசி, சமுதாய விடியலுக்கான அனுகூலங்கள் பலவற்றையும் பெறமுடியும்.
நாம் ஒன்றுபடாவிடில், என்றும் பல கட்சிகளில் பிரிந்தே நிற்போமானால், அது எதிரிகளுக்கு வாய்ப்பாகவே அமையும். நம் சமூகம் மீண்டும் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடும். பேரினவாதக் கட்சிகளின் எடுப்பார் கைப் பிள்ளையாக நம் சமூகம் இருப்பதை விட , அணைக்கும் அருமந்த பிள்ளையாக இருப்பதே, அனைத்திற்கும் நல்லது என்பதை நாம் ஒவ்வொருவரும் தூரநோக்கோடு சிந்திப்போமாக!
எஸ்.எம். சஹாப்தீன்-Thinakaran
more
-
கடந்த காலத்தில் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்காக நாம் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்றுதிரள வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவிப்பு
நீண்ட நெடுங்காலமாக மக்கள் துன்ப துயரங்களுக்குள்ளாகிய நிலையில் ஜனாதிபதி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் மக்களின் துன்ப துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ். வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சித் திணைக்கள நூலகத் தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலங்களில் கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை கடந்த கால தலைமைகள் உதாசீனம் செய்தமையினால் தமிழ்பேசும் மக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கடந்த காலத்தில் இழந்தவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக நாம் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்றுதிரள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோருக்கு உள்ளுராட்சித் திணைக்களத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதுடன் உள்@ராட்சித் திணைக்களத்தின் ஊடாக பயிற்ச்சிகளைப் பெற்ற தொண்டர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட உள்ளுராட்சி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
more
-
பிரபாகரன் - சர்வதேசம்: யார் வலையில் யார்? தெய்வீகன்
முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட அளவிற்கு அரசியல் ரீதியில் தமது கொள்கைகளை வகுத்துக்கொள்ளவில்லை என்றும் சர்வதேச அரசியலைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிப் போக்கினால்தான் இன்று அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுவிட்டது என்றும் பல்வேறு வகையான வியாக்கியானங்களை விடுதலைப்புலிகளை ஆரம்பம் முதலே எதிராக விமர்சித்துவந்தவர்கள் மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் எல்லா வெற்றிகளுக்கும் சாமரம் வீசிய பலரும்கூட அவர்களுடன் கூடிநின்று தற்போது தடம் மாறி தத்துவம் பேசத் தலைப்பட்டுவிட்டார்கள்.
இந்நிலையில், முப்பதாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்மக்களின் உரிமைகளுக்கும் அவர்களின் அரசியல் வாழ்வுக்கும் அவர்களது அபிலாஷைகளுக்கும் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு எத்தகைய நிலையில் இன்று தமது ஆயுதப்போராட்டத்தை மௌனித்திருக்கிறது? அது எவ்வாறான பொறுப்பை யாருக்கு வழங்கிச் சென்றிருக்கிறது என்பது தொடர்பான ஆழமான பார்வை அவசியமாகிறது.
சர்வதேசம் என்று தம்மைக் கூறி தம்மை உலக மக்களின் மனசாட்சியாகவும் நிரந்தர நீதிவான்களாகவும் காண்பித்துக்கொள்ளும் பன்னாட்டுச் சமூகம், ஈழப்போராட்டம் தனது உச்சத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வருட இறுதியில் நடந்துகொண்ட விதம், அனைவரும் அறிந்த ஆய்வுக்கு உட்படுத்தத் தேவையற்ற விடயம்.
ஒவ்வொரு நாடும் வன்னியில் இடம்பெற்ற பாரிய மனிதப்பேரவலத்துக்கு அறிக்கைகளில் அழுது வடித்ததே தவிர, செயல் ரீதியாக எதுவுமே செய்யத் துணியாத - செய்ய முடியாத - தன்நேச பின்னணி கொண்ட அரசியல் சிக்கலுக்குள் அந்நாடுகள் சிக்கிக்கிடந்தன.
020222oslo_peace_agreement
மனச்சாட்சி உடைய சிறிய நாடு முதல் வல்லரசு வரை வரிசையில் நின்றவைகளில் ஒரு பகுதியினர் இந்தியாவை மீறி ஈழப்பிரச்சினையில் தலையிட்டு, விரிந்துகிடக்கும் அந்நாட்டின் வியாபாரச் சந்தைக்கு தம்மை வில்லனாக வரித்துக்கொள்ள விரும்பவில்லை. அதேவேளை, ஈழப்பிரச்சினையை நிரந்தரமாக பகைத்துக்கொள்வதன் மூலமும் சிறிலங்காவை ஆதரித்துக்கொள்வதன் மூலமும் தமக்குக் கிடைக்க கூடிய சகல ஆதாயங்களையும் உருவிக்கொள்வதில் இன்னோர் அணி நாடுகள் கவனமாகச் செயற்பட்டன.
தமது புகோள அரசியல் நலன் சார்ந்த பின்னணியை மட்டும் முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிநிரலுடன் ஈழப்பிரச்சினையைக் கையாளத்தொடங்கிய சர்வதேசத்தின் நோக்கங்கள், சிந்தனைகள் எப்போதுமே ஈழத்தமிழர் பிரச்சினையை நேரடியாகச் சந்திப்பதாக இருந்ததில்லை. தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு தருகிறோம் என்று வந்த நாடுகள் அனைத்துமே, “விபத்தில் அடிபட்டு தண்ணீர் தண்ணீர் என்று முனகியவனுக்கு புரியாணி வாங்கி தருகிறோம்” - என்று அருகே போய்நின்று ஆசை வார்த்தை காண்பிப்பதுபோல, முதலைக்கண்ணீர் வடித்துவிட்டு, தாம் வாரிச்சுருட்டுவதற்கு அங்கு என்ன கிடக்கிறது என்பதில் அவதானமாய் இருந்தனவே தவிர, தமிழர் பிரச்சினையின் உண்மையான வடிவத்தை உள்வாங்கிக்கொள்ள அவை தயாராக இருந்ததில்லை.
இதேவேளை, இந்தச் சர்வதேச சமூகம் தமக்குள் அடிக்கடி போட்டுக்கொண்ட அரசியல் கணக்குத்தான், ஈழத்தமிழர் பிரச்சினையையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் பயன்படுத்தி, தமது ஆதாயங்களை எவ்வளவுக்குப் பேரம் பேசிக்கொள்ளலாம் என்பது. இந்து சமுத்திரத்தின் ஆதிக்கப்பிடியை நாடி பிடித்துப்பார்த்து, அதற்கு ஈழத்தமிழர் பிரச்சினையைப் பகடைக்காயாக்கி உருட்டி விளையாடி தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலேயே சர்வதேசம் ஆரம்பம் முதல் ஒரேகுறியாக இருந்தது. இந்தத் திட்டத்தின் இன்னொரு வடிவத்தை ஈழப்போரின் இறுதிக்கட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இந்த வருட இறுதியில் சர்வதேசம் இன்னொரு தடவை அரங்கேற்றிப் பார்த்தது.
தமது அரசியல் விடிவுக்காகப் போராடிய சிறுபான்மையினத்தின் முப்பதினாயிரம் போ் பெரும்பான்மையினத்தவர்களால் ஐந்து மாதத்தில் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களுக்காகப் போராடிய விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டது. இவை எவற்றையுமே தடுக்கவோ தட்டிக்கேட்கவோ நாதியற்ற ஈனப்பிறவிகளாக இருந்த நீங்கள், எமக்கு என்ன தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்.
அதாவது, இவ்வளவு காலமும் தமது அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திவந்த ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு பயங்கரமான போரைக் கட்டவிழ்த்துவிட்டபோது, விடுதலைப்புலிகளை இந்தத் தடவையும் பிரதான விளையாட்டுப் பொருளாக மாற்றி, தமது திட்டத்தின் இன்னோர் அம்பை எய்தது. சிங்களப்படைகளின் கொடூரம் தமிழர் தாயகத்தின் எட்டுத்திக்கும் எம ராச்சியம் நடத்திக்கொண்டிருந்தபோது, பிரபாகரனையும் அவரது படைகளையும் சிங்கள இராணுவத்திடம் சர்வதேசம் சரணடையக் கோரியது. அது நடக்காது போனதால், பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையுமாவது ஏதாவது ஒரு நாட்டுக்கு எடுத்துவிடவேண்டும் என்ற நோக்கில் இறுதிக்காலப்பகுதியில் நோர்வேயின் ஊடாக தூது அனுப்பிப் பார்த்தது. பின்னர், முன்றாம் தரப்பிடம் சரணடையக்கோரும் படிமுறையையும் கேட்டுப்பார்த்தது. அதாவது, விடுதலைபுலிகளை தற்போதைக்கு அடக்கிவைத்திருந்துவிட்டு தமது தேவைகள் ஏற்படும்போது மீண்டும் ஒரு தடவை சிறிலங்காவிற்குள் அவர்களை ஏவி விட்டு, தமது காரியங்களைச் சாதிக்கலாம் என்று தமது இராஜதந்திர காய்களை நகர்த்தி பார்த்தது. (எழுபதுகளில் ஜே.வி.பி.க்கு எதிராக சிறிலங்கா அரசு கங்கணம் கட்டி கொலைப்படலத்தை அரங்கேற்றியபோது, இதேநோக்கத்துடன்தான் அதன் அப்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்கவைக் காப்பாற்றி லண்டனுக்கு அனுப்பிவைத்த இந்தியா, சிறிலங்கா பிற்கால கட்டத்தில் தன்னுடன் முரண்டுபிடிக்க ஆரம்பித்தபோது, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சிறிலங்காவிற்குள் அவரை அனுப்பிவைத்தது.)
ஒட்டுமொத்தத்தில், தமது அரசியல் விளையாட்டுகளுக்கும் ஆளை ஆள் மறைமுகமாக மடக்குவதற்கும் பலம்வாய்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயன்படுத்தி ஆண்டாண்டு காலத்துக்கும் அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்பது சர்வதேசத்தின் தீராத கனவாகியிருந்தது. அவ்வாறு தாம் மேற்கொண்டுவரும்போது, தமது இந்த நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக, விடுதலைப்புலிகளை காரணம் காண்பித்தே, ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டு போவது சர்வதேசத்தின் இன்னொரு மனக்கணக்காக இருந்துவந்தது.
இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளிவைத்தாற்போல், தமிழ்மக்களின் பிரச்சினையைத் தொடர்ந்தும் பகடைக்காயாக வைத்து தமது நலன்களை முன்னெடுத்துவந்த சர்வதேசத்தின் மிகப்பெரிய திட்டத்தை உடைத்து, இராஜதந்திரம் என்ற போர்வையில் அவர்கள் சிறிலங்காவுடன் பேணிவந்த உலக ஒழுங்கைச் சிதைத்து, தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், சர்வதேசத்தை பாரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.
leaderவிடுதலைப்புலிகளை முன்வைத்து தமது நீண்ட நிகழச்சிநிரலை அரங்கேற்றலாம் என்ற கனவுடன் பயணித்த சர்வதேசம், இந்த முடிவை எதிர்பார்க்கவேயில்லை. பன்னாட்டுச் சமூகம் இன்று திகைத்துப்போய் நிற்கிறது. விடுதலைப்புலிகளின் முடிவினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னமும் மீளவேயில்லை. மாற்றுத்திட்டத்தைத் தேடிக்கண்டுபிடிப்பதற்குக் கூட இன்று வழியின்றித் திண்டாடிக்கொண்டிருக்கிறது சர்வதேசம். இன்றையநிலையில், தமிழ்மக்களின் விடிவுக்கு நிச்சயம் பதில் கூறவேண்டிய கட்டாயநிலைக்குள் சர்வதேசம் விடுதலைப்புலிகளால் தள்ளபட்டிருக்கிறது என்பதும் இதிலிருந்து சர்வதேசம் தப்பவேமுடியாது என்பதும்தான் உண்மை.
நாளை நோர்வேயோ இன்னொரு நாடோ, இனியொரு நாட்டில் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அனுசரணை வழங்கப்போவதாக போய்நின்றால் -
“தமது அரசியல் விடிவுக்காகப் போராடிய சிறுபான்மையினத்தின் முப்பதினாயிரம் போ் பெரும்பான்மையினத்தவர்களால் ஐந்து மாதத்தில் கதறக் கதறக் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களுக்காகப் போராடிய விடுதலை அமைப்பு சிதைக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் செய்த அரசு கைகளில் இரத்தக்கறையுடன் இன்றும் சுதந்திரமாக உலகவலம் வந்துகொண்டிருக்கிறது. இவை எவற்றையுமே தடுக்கவோ தட்டிக்கேட்கவோ நாதியற்ற ஈனப்பிறவிகளாக இருந்த நீங்கள், எமக்கு என்ன தீர்வைப் பெற்றுத்தரப்போகிறீர்கள்” - என்று முகத்தில் காறி உமிழ்ந்தால், அதற்கு “ஆபத்பாந்தவர்களான” இந்த அனுரசரணையாளர்களிடம் என்ன பதில் இருக்கப்போகிறது?
ஆகவே, இன்றைய நிலையில், தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டிய கட்டாயநிலைக்குள் சர்வதேசம் தள்ளப்பட்டிருக்கிறது. இராஜதந்திரம் என்றும் அரசியல் சாணக்கியம் என்றும் ஒற்றைச்சொற்களின் ஊடாக ஈழத்தமிழர் விவகாரத்திற்குள் ஒளித்து ஓடி விளையாடித்திரிந்த சர்வதேசத்தின் நோக்கங்களும் திட்டங்களும் தோலுரித்துக்காட்டப்பட்டு அதற்கு தற்போது மிப்பெரிய பணி விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருக்கிறது. தான் கொடுத்த மருந்தைத் தானே உட்கொள்ளவேண்டிய திரிசங்குநிலைக்குள் பன்னாட்டு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. எதற்குமே தொலைநோக்குத் திட்டத்துடன் சிந்திக்கத் தொடங்கும் உலக அரசியல் வட்டத்தில், பன்னாட்டுச் சமூகம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்று பெற்றுக்கொடுக்காவிடின், அதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதும் அதற்கு மிகத்தெளிவாகத் தெரியும்.
அதாவது, தமிழ்மக்களுக்கான புதிய காவலாளிகளாக சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.நன்றி : ஈழநேசன்.கொம்
more
-
ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தையின் வயிற்றில் இரட்டைக்குழந்தைகள்
சீனாவில், பிறந்தவுடன் கைவிடப்பட்ட ஒரு குழந்தையை குழந்தைகள் இல்லாத பெற்றோர் அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தனர். ஒரு வயதுடைய காங் மெங்ரூ (Kang Mengru) என்ற அந்த பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள ஆபூர்வம் நடந்துள்ளது.
அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை (Kang Mengru) கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில் அக்குழந்தை இறக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அக்குழந்தையின் வளர்ப்பு பெற்றோரிடம் அறுவை சிகிச்சைக்குரிய போதிய பணமில்லாததால் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மக்களிடமிருந்து தேவையான நிதியை வசூலித்து வருகின்றனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.
இக்குழந்தைக்கு நடக்கவிருக்கும் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து அக்குழந்தை நலமுடன் வாழ ஆண்டவனை பிரார்த்திப்போமாக.
more
-
இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம்
இண்டெர்நெட் எல்லோருக்குமானது தான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவுமேற்றது.மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படி தான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும்.
இண்டெர்நெட்டின் எல்லையில்லா தன்மையும் அதன் வரம்புகளற்ற தன்மையுமே அதன் பலபவீனமாக அமைந்து விடுவதுண்டு.
எதற்கு இந்த முன்னுறை என்றால் இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ஒன்றை அறிமுகம் செய்யத்தான்.ஐயம்ஹலால் என்னும் பெயரில் அந்த தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது.
டச்சு கம்பெனி ஒன்று இதனை உருவாக்கியுள்ளது.இண்டெர்நெட்டில் நல்ல தகவல்களோடு ஆபாடசமான சங்கதிகளும் உள்ளன. உண்மையான இஸ்லாமியர்கள் இதனை விரும்பமாட்டார்கள்.அதற்காக இண்டெர்நெட்டை பயன்படுத்தமலும் இருக்க முடியது.என்ன கவனத்தோடு பயன்படுத்த வேண்டும்.
எத்தனை தான் கவனமாக இருந்தாலும் சமயங்களில் வேண்டாத தகவல்களும் ஆபாசமான படங்களும் எட்டிப்பார்த்து சங்கடத்தை தருவதுண்டு.
இந்த சங்கடத்தை தவிர்த்து நல்லவிதமான தகவல்களை மட்டுமே தருவது தான் ஐயம்ஹலால் தேடியந்திரத்தின் நோக்கம்.இஸ்லாமியர்கள் தவறு என்று கருதக்கூடிய பதங்களை தவிர்த்து விட்டு தேடல் முடிவுகளை இது படியலிட்டு தருவதாக கூறுகிறது.
எனவே இஸ்லாமியர்கள் இதில் சங்கடமில்லாமல் தேடலாம்.
இது போன்ற தனி தேடியந்திரம் அவசியமா என சிலர் நினைக்கலாம்.அவரவர் தேவை மற்றும் மனநிலையை பொருத்தது இது.
சிறுவர்களின் நலனுக்காக தகவல்களை வடிகட்டும் வசதியை பயன்படுத்துவது போல ஒருவரின் உணர்வு சார்ந்த வடிகட்டலை பயன்படுத்துவதும் சரியே.
என் தனிப்பட்ட அனுபவத்தை சொல்வதாயின் பலமுறை பணிசர்ந்த புகைப்படஙக்ளை தேடும் போது குறிச்சொற்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஆபாச புகைப்படஙகள் வந்து நிற்பதை பார்த்திருக்கிறேன். இப்படி ஆபாச படங்கள் வடிகட்டப்பட்டு தேவையான புகைப்படங்கள் மட்டுமே தோன்றுவது நல்லாது தானே.இணைப்பு :http://www.imhalal.com/நன்றி : cybersimman
more
-
தடங்கள்-2. ஆட்லறிக்கான ஒரு சண்டை II (ஒரு போராளியின் கதை )
மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது. எத்தனைபேர் இரவு நித்திரை கொண்டிருப்பார்களென்று தெரியவில்லை. எந்நேரமும் ‘லைன்’ பண்ணக்கூடியவாறு அனைவரும் தயாராகவே இருந்தார்கள். நான்குமணிவரை புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி நடந்தபடிதான் இருந்தது.எல்லோரையும் வரச்சொன்னார்கள். தேவராஜ் அண்ணைதான் கதைத்தார். எல்லோரையும் குளத்தடிக் கோவிலுக்குச் சென்று ஒதுக்குப்புறமாக நிற்கும்படி சொல்லப்பட்டது. நாங்கள் அணியணியாக நடந்தே சென்றோம். விசுவமடுக் குளத்தின் ஒரு தொங்கலில் காட்டுக்குள் சற்று உட்பக்கமாக ஒரு சைவக் கோவில் இருந்தது. மிகப்பெரிய ஆலமரமொன்றில் அடியில் ஒரு சிறுபீடமும் அதில் கடவுளின் சிலையொன்றும் இருந்தது. கடவுள் யாரெனச் சரியாகத் தெரியாது, அனேகமாய் காளியாகவோ வைரவராகவோ இருக்க வேண்டும். பெரிய சூலமும் வேறு சிலவும் அக்கடவுளுக்குரிய பொருட்களாய் அங்கிருந்தன. முன்பே அப்பகுதி எமக்குப் பழக்கமானதே. அது மக்கள் நடமாட்டத்துக்குரிய பகுதியன்று. ஆனாலும் வருடத்துக்கொரு முறை அக்கிராம மக்கள் அங்குவந்து பெருமெடுப்பில் ஒரு திருவிழாவைச் செய்துவிட்டுச் செல்வார்கள்.
நாங்கள் சென்ற அந்த அதிகாலை அவ்வருடத்துக்குரிய திருநாள். நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்றிருந்தார்கள். திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. ஒருபக்கத்தில் உருவந்து ஆடுபவர்கள், இன்னொரு பக்கம் கிராமிய நடனங்கள், இன்னொரு பக்கம் விருந்து சமைப்பவர்கள் என்று அமர்க்களமாக இருந்தது. ஒருவர் கத்திமேல் நின்று ஆடிக்கொண்டிருந்தார். நாங்கள் ஓர் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பகுதியை அண்டி ஏற்கனவே இயக்க முகாம்கள் இருந்ததால் அவர்கள்தான் திருவிழாவைப் பார்க்க வந்துநிற்கிறார்களென மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.ஐந்து மணிக்கு தேவராஜ் அண்ணை வந்து எல்லோரையும் ஒதுக்குப்புறமாக அணிவகுக்கச் சொன்னார்.‘இயக்கம் ஒரு வேலையா உங்களை எடுத்திருக்கு. கடுமையான பயிற்சியையும் முடிச்சிட்டியள். பயிற்சியில எடுத்ததைச் சண்டையில காட்டவேண்டிய நாள் வந்திட்டுது. இப்ப நாங்கள் நகரப்போறம். எங்கட நகர்வு வெளியில ஒருத்தருக்கும் தெரியக்கூடாது. அதால லொறிக்குள்ளதான் எல்லாரும் இருக்க வேணும். நீண்டநேரம் புழுதி குடிச்சுக் கொண்டு இருக்க வேணும். கஸ்டம்தான், சமாளிச்சுக் கொள்ளுங்கோ. நாங்கள் இரவே நகர்ந்திருக்க வேணும். ஆனால் பயிற்சி நேரம் காணாதபடியா கடைசிவரைக்கும் நிக்கவேண்டியதாப் போச்சு. போயிறங்கிய இடத்தில மிச்சத்தைக் கதைப்பம்.’அவர் கதைத்து முடிக்கும்போதே திருவிழாக் காரர்களால் வடை, கெளபி என்பன எமக்கென்று தந்தனுப்பப்பட்டன. ‘உங்களுக்குக் காலமச் சாப்பாட்டை எப்பிடிக் குடுக்கிறதெண்டு யோசிச்சுக் கொண்டிருந்தம், எல்லாம் சரியாயிட்டுது. போயிறங்க பின்னேரமாயிடும். இனி அங்கதான் மத்தியானச்சாப்பாடு. ‘பம்’ பண்ணிறதுக்கு மட்டும் இடையில காட்டுக்குள்ள நிப்பாட்டுவம். அவ்வளவுதான்.’கிடைத்தவற்றைப் பங்கிட்டு எடுத்துக்கொண்டு காட்டோரமாக நகர்ந்து அணைக்கட்டுப் பக்கமாக வந்தோம். இன்னும் சரியாக விடிந்துவிடவில்லை. எமக்காக இரண்டு லொறிகள் காத்திருந்தன. இரண்டிலும் ஈரடுக்குளில் ஆட்லறி எறிகணைப் பெட்டிகள் ஏற்றப்பட்டிருந்தன. இரண்டு லொறிகளிலும் ஆட்களைப் பங்கிட்டு ஏற்றிக் கொண்டுப் புறப்பட்டோம். இதுவரை எமக்கு நேரடியாக எதுவும் சொல்லப்படவில்லை. எங்கோ தாக்குதல் நடக்கப் போகிறது. அங்கிருக்கும் ஆட்லறிகளைக் கைப்பற்றி அவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தப்போகிறோம் என்றளவில் நாம் ஊகித்திருந்தோம். ஏற்கனவே ஆனையிறவில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் நினைவிலிருந்தது.
போகுமிடம் யாருக்கும் தெரியவில்லை. வாகன ஓட்டுநருக்குச் சொல்லப்பட்டிருந்தது முல்லைத்தீவுக்குப் போகவேண்டுமென. அவரும் முல்லைத்தீவு போவதற்குப் போதுமான டீசலோடு வந்திருந்தார். இடையில் பாதைமாறியபோதுதான் விடயத்தைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார். லொறிக்குள் முற்றாக அடைக்கப்பட்ட நிலையில் நாம். வன்னியில் தார்ச் சாலைகள் இல்லை. கிறவற் புழுதியைக் குடித்தபடி லொறிக்குள் நாம் அடைபட்டிருந்தோம். பின்கதவு நீக்கல் வழியாக எங்கால் பக்கம் போய்க்கொண்டிருக்கிறோமென்று பார்த்துச் சொல்வதற்கு இருவர் நின்றிருந்தனர். மிகுதி அனைவரும் ‘பாட்டுக்குப் பாட்டு’ போட்டி நடத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தோம்.புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் பக்கமாக லொறி திரும்பியதை அறிந்தோம். பிறகு மன்னாகண்டலடியில் காட்டுக்குள் கொண்டுசென்று சிறிது ஓய்வுக்காக நிறுத்தப்பட்டோம். பிறகு மீண்டும் பயணம்.மாங்குளம் சந்தியில் சிறிது சலசலப்பு. அதற்கு முதல்நாள்தான் மாங்குளப் பகுதியில் விமானக் குண்டுவீச்சு, எறிகணை வீச்சு என்று அமர்க்களம் நடந்திருந்தது. அதுவரை மாங்குளத்தில் தங்கியிருந்தவர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். லொறியைப் பாதையோரம் நிறுத்திவிட்டு எங்காவது பாண் வாங்கலாமென்று தேவராஜ் அண்ணை திரிந்து பார்த்தார். எல்லாக் கடைகளும் பூட்டு. மாங்குளம் நகரம் வெறிச்சோடத் தொடங்கியிருந்தது. உள்ளிருந்த நாம் ஓட்டுநர் பக்கத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டிருந்தோம்.முதல் அரைமணி நேரத்தில் குறைந்தது ஐநூறு எறிகணைகளாவது எம்மால் ஏவப்பட்டிருக்க வேண்டுமென்பது எமக்குரிய கட்டளையாகச் சொல்லப்பட்டது. பயிற்சியில் செய்ததைப் போன்றே மூச்சைப்பிடித்து நெருப்பாக நின்றால்தான் இது சாத்தியம்.மீண்டும் பயணம் தொடங்கியது. ஜெயசிக்குறு முனையில்தான் எங்கோ சண்டை நடக்கப்போகிறதென்று விளங்கிவிட்டது. அதற்குள் உள்ளிருந்த இரண்டொருவர் சத்தி எடுக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை தொடர்ந்தும் உள்ளே வைத்திருக்க முடியாது. உடுப்பை மாற்றி வெறும்மேலோடு சரத்தைக் கட்டியபடி மேலே ஏற்றிவிட்டோம். பார்த்தால் பொதுமக்கள் போன்றுதான் தோன்றும். அவர்களுள் ஒருவன் கொஞ்ச நேரத்திலேயே மீளவும் கிழே வந்துவிட்டான். ‘மேல இருந்து கொப்புகளிட்ட அடிவாங்கிறதைவிட கீழயே இருக்கலாம்’ என்றான்.இப்போது எங்களில் பலர் நித்திரை கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். வேறு வழியில்லை. பயணம் எப்போது முடியுமென்று தெரியாது. பசிக்கத் தொடங்கிவிட்டது. தண்ணியை அதிகம் குடித்தால் அடிக்கடி இறங்க வேண்டி வருமென்பதால் அதிலும் கட்டுப்பாடுதான்.அந்த நெடிய பயணம் மாலை மூன்றுமணியளவில் முடிவடைந்தது. ஒரு காட்டுப்பகுதியில் இறக்கிவிட்டார்கள். இடம்தெரிந்த சிலர் சொன்னார்கள் அது ஈச்சங்குளமென்று. நாம் நின்ற இடம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் அருகிலுள்ள காட்டுப்பகுதி. எமக்குச் சற்றுத்தள்ளிப் பார்த்தால் வேறும் பல அணிகள் நின்றிருந்தன. அவர்கள் இரவோடு இரவாகவே நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். காட்டுக்கரையோரம் ஒடிய வாய்க்காலொன்றில் முகங்கழுவி கொஞ்சம் செந்தளிப்பானோம். கறிபணிஸ் தரப்பட்டது. உண்மையில் அது தாக்குதலணிகளுக்கு வந்த மாலைச் சிற்றுண்டி. எமக்கான மதிய உணவு கிடைக்கவில்லை. தாக்குதலணியாக நாம் நகராததால் எமக்கான உணவு வழங்கல்களில் சிக்கல்கள் இருந்தன. நாம் எந்தப்படையணி, யாருடைய ஆட்கள் என்ற விபரங்களைச் சொல்ல முடியாத நிலையும் இருந்தது.மாலை ஐந்து மணிக்கு ராயு அண்ணை வந்து சேர்ந்தார். அப்போதுதான் அன்றிரவு நடக்கப்போகும் தாக்குதல் பற்றியும் எமது பணிகள் பற்றியும் விரிவாக விளங்கப்படுத்தப்பட்டது.ஜெயசிக்குறு இராணுவம் மீதுதான் தாக்குதல். ஓமந்தை வரை முன்னேறி வந்திருக்கும் இராணுவத்தின் பின்பகுதியில் – குறிப்பாக தாண்டிக்குளம் பகுதியில் ஊடறுப்புத் தாக்குதலொன்று நடைபெறப்போகிறது. தாண்டிக்குளம் மைய முகாமில் பத்து வரையான ஆட்லறிகள் இருக்கின்றன. தாக்குதலணிகள் அந்த முகாமைக் கைப்பற்றும். ஆட்லறிகளைக் கைப்பற்றியதும் நாம் அவற்றைக் கொண்டு இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும். வேவுத் தகவல்களின்படி இரண்டு 130 மி.மீ ஆட்லறிகளும் இருக்கின்றன. அவற்றை முடிந்தளவுக்கு எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவர முயற்சிப்போம். ஏனையவற்றைக் கொண்டுவரப்போவதில்லை. அங்கிருந்தே தாக்குதல் நடத்துவதுதான் எமது கடமை.
எமது தாக்குதல்கள் அனைத்தும் தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கியே அமைய வேண்டும். எக்காரணம் கொண்டும் வவுனியாப் பக்கம் தாக்குதல் நடத்தக்கூடாது. வவுனியா மீதான தாக்குதல் அங்கிருந்து நேரடியாக வழிநடத்தும் முன்னணி அவதானிப்பாளரின் உதவியோடே செய்யப்பட வேண்டும். ஏனென்றால் அது பொதுமக்கள் வாழும் பகுதி. அவ்வேலையை இயக்கத்தின் ஆட்லறிப்பிரிவு செய்து கொள்ளும். எமக்கு இலக்கின் ஆள்கூறுகள் எவையும் கட்டளையாக வழங்கப்படா. ஏற்கனவே வரைபடத்தின்படி தூரம், கோணம் என்பவற்றைக் கணித்து வைத்திருந்தோம். ஓமந்தையில் பரந்திருக்கும் இராணுவத்தின் பகுதிமீது சரமாரியாகக் குண்டுகள் பொழிய வேண்டும். குறிப்பிட்ட ஓமந்தை வட்டத்துக்குள் எங்கு எறிகணை விழுந்தாலும் சரிதான். தாண்டிக்குளம் ஊடறுப்பு நடந்தபின்னர் ஓடந்தையில் நிற்கும் அவ்வளவு இராணுவத்தினரும் தொடர்பற்று சுற்றிவளைக்கப்பட்ட நிலையில்தான் இருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.முதல் அரைமணி நேரத்தில் குறைந்தது ஐநூறு எறிகணைகளாவது எம்மால் ஏவப்பட்டிருக்க வேண்டுமென்பது எமக்குரிய கட்டளையாகச் சொல்லப்பட்டது. பயிற்சியில் செய்ததைப் போன்றே மூச்சைப்பிடித்து நெருப்பாக நின்றால்தான் இது சாத்தியம். அதன்பிறகு கட்டளைப்படி சுழற்சிமுறையில் தாக்குதல் நடத்த வேண்டும். இதற்கிடையில் பீரங்கிகளைத் துப்பரவாக்கும் பணி, களஞ்சியத்திலிருந்து எறிகணைகளை பீரங்கிக்கருகில் கொண்டுவருதல் என்று பணிகள் இருந்தன. காயக்காரரை அப்புறப்படுத்தும் வழியோ நேரடி வழங்கலோ இன்றி நிற்கும் ஓமந்தை இராணுவத்தை (கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர்) முற்றாகத் துடைத்தழிப்பது இயக்கத்தின் இரண்டாம் கட்டத் திட்டமாக இருந்திருக்க வேண்டும்.நாம் எதிர்கொள்ளப்போகும் அச்சுறுத்தல் மிக அதிகளவில் இருக்குமென்பதும் தெளிவாகச் சொல்லப்பட்டது. ஒருகட்டத்தில் எதிரியின் முழுக்கவனமும் எம்மீதுதான் திரும்பும். வான்வழித் தாக்குதல்கள், எதிரியின் ஆட்லறித் தாக்குதல்கள் என அனைத்தும் எம்மை நோக்கியே நிகழ்த்தப்படும். அதற்குள் நின்றுதான் சமாளிக்க வேண்டும். எமது சூட்டுவலுவை நம்பியே ஏனைய தாக்குதலணிகள் களமிறங்குகின்றன. விடிவதற்குள் எவ்வளவு விரைவாக வெற்றிகளைக் குவிக்கிறோமோ அவ்வளவு நல்லது என்பது அறிவுறுத்தப்பட்டது. [எமக்குத் தெரியாமலேயே எமக்கான வான்பாதுகாப்புக்காக இரண்டு கனரக ஆயுதங்களைக் கொண்ட கடற்புலிப் போராளிகளின் அணிகள் சரா அண்ணன் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்தன என்பது மறுநாட் காலைதான் தெரிந்தது.]
மிகத் தெளிவாக அனைத்தும் விளங்கப்படுத்தப்பட்டு விட்டன. கேள்வி நேரத்தில் எவருக்கும் கேள்வியிருக்கவில்லை. பல உணர்வுகளின் கலவையாக அப்பொழுது அமைந்திருந்தது. இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலாக – இதுவரை இல்லாத மிகப்பெரும் தாக்குதலாக இது அமையப்போகிறது. அதில் அதிமுக்கியமான பணி எமக்குத் தரப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் எதிரியின் மிகப்பெரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முளையிலேயே கிள்ளியெறியப்படுமென்பதோடு கிடைக்கப்போகும் ஆட்லறிகள் இனிவருங் காலத்தில் தேடித்தரப்போகும் வெற்றிகள் அளப்பெரியவை. இதுவரை இரண்டு ஆட்லறிகளை வைத்தே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த இயக்கம் (புளுக்குணாவ ஆட்லறி அதுவரை சமர்க்களங்களில் பயன்படுத்தப்படவில்லை) இனி என்னவெல்லாம் செய்யும்? இந்தத் தாக்குதல் முடிவில் இப்போது எம்மோடு நிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கப் போவதில்லை என்பதும் எமக்குத் தெளிவாக விளங்கியிருந்தது. ‘எல்லாத்தாலயும் போட்டு நொருக்குவான்’ என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எமது ஆட்லறிச் சூடுகளைக் கட்டுப்படுத்தாமல் இயக்கத்தின் தாக்குதலை முறியடிக்க முடியாதென்பதுதான் நிலைமையாக இருக்கப் போகிறது.ஒவ்வோர் அணியாக ராயு அண்ணை கதைத்தார். எல்லாம் சரியாக நடக்க வேண்டுமென்ற தவிப்பு அவரிடமிருந்தது. ‘ஆட்லறி கிடைச்ச உடன களைப்பைப் பாக்காதைங்கோ. பல்லைக் கடிச்சுக்கொண்டு கொஞ்சநேரம் அடியுங்கோ. நாங்கள் ஒவ்வொண்டா அடிச்சுக் கொண்டிருந்தால் அது திகைப்பா இருக்காது. முதல் அரைமணி நேரத்தில நீங்கள் அடிக்கிற அடியில ஓமந்தை ஆமி இனி சண்டைபிடிக்கிற நினைப்பையே விட்டுப் போடவேணும். அப்பதான் கொஞ்ச இழப்புக்களோட சண்டை ரீமுகள் வெல்லலாம். தொடக்கத்தை வைச்சுத்தான் எங்கட நடவடிக்கையின்ர நீட்சி தீர்மானிக்கப்படும்’.அணிகளுக்கான வரைபடங்கள், ரோச் லைட்கள், தொலைத் தொடர்புக் கருவிகள், பற்றறிகள், அலைவரிசை எண்கள், சங்கேதச் சொல்லட்டை மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கப்பட்டன. திட்டப்படி நாங்கள் முன்னகர்ந்து ஓரிடத்தில் காத்திருக்க வேண்டும். அது தாண்டிக்குளம் ஆட்லறி முகாமிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. முகாம் கைப்பற்றப்பட்டதும் நாம் அங்கு ஓடிச்செல்ல வேண்டும். உள்நுழையும் எமக்கு தேவராஜ் அண்ணை தான் பொறுப்பாக வருகிறார். ஓர் ஆட்லறியுடன் தான் இயக்கம் இச்சண்டையைத் தொடங்குகிறது என்பது விளங்கியது. நாம் பயிற்சியெடுத்த ஆட்லறி இச்சண்டையில் பங்குபற்றவில்லை.
இருட்டத் தொடங்கியது. ஏற்கனவே அக்கம்பக்கத்திலிருந்த சண்டையணிகள் நகர்ந்துவிட்டிருந்தன. நாங்கள் அணியணியாக இடைவெளிவிட்டு நகரத் தொடங்கினோம். போகும் வழியில் நான் தேவராஜ் அண்ணனுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர் மேலதிக விவரங்கள் சிலவற்றைச் சொன்னார். தாக்குதலணிகள் இன்றிரவு ஊடறுப்பைச் செய்யப் போகின்றன. ஆனால் ஆட்லறி முகாமைக் கைப்பற்றும் அணிகள் முன்பே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உட்புகுந்துவிட்டன. லெப்.கேணல் ஜீவன் தலைமையில் ஜெயந்தன் படையணியின் ஓரணியும் அவர்களோடு கரும்புலிகளின் ஓரணியும் முன்பே உள்நகர்ந்துவிட்டன. வெளிக்காப்பரண்களைக் கைப்பற்றி பிறகு மைய முகாம் வரை செல்வது சிலவேளை பலன்தராது என்பதால் இத்தெரிவு. சமநேரத்திலேயே வெளிக்காப்பரண் வரிசையும் ஆட்லறிகள் நிறுத்தப்பட்டிருந்த மைய முகாமும் தாக்குதலுக்குள்ளாகும். இன்று (09/06/1997) அதிகாலைவரை இருந்த வேவுப்புலிகள் பத்து ஆட்லறிகளும் அம்முகாமில்தான் இருப்பதாக உறுதிப்படுத்திவிட்டுப் பின்வாங்கியிருந்தனர்.இரவு பதினொரு மணியளவில் எமக்கான நிலைகளையடைந்து விட்டோம். தாக்குதல் தொடங்குவதற்கும், அதன்பின் ஆட்லறிகள் கைப்பற்றப்பட்ட செய்தி வருவதற்கும்காத்திருந்தோம். எமக்கு எதிரியுடனான நேரடிச் சண்டை வர வாய்ப்பில்லை. அப்படியான சந்தர்ப்பத்தைத் தவிர்க்கும்படி மிகக்கடுமையாக அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.தாக்குதல் நடந்த அன்றைய இரவு முழுவதும் ஓமந்தையிலிருந்த ஆட்லறிகளைக் கொண்டு இராணுவம் ஓர் எறிகணையைக் கூட ஏவவில்லை. ஆட்லறிகள் ஓமந்தையிலிருப்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாதென்பதற்காக இராணுவம் அடக்கி வாசித்தது.குறுகுறுப்பாக இருந்தது. ஆட்லறி தொடர்பான செய்முறைகளை மீளவும் நினைவுபடுத்திக் கொண்டோம். போனவுடன் யார்யார் என்னென்ன செய்ய வேண்டுமென அணிக்குள் மீளவும் குசுகுசுத்துக் கொண்டோம்.அந்த நேரம் வந்தது. 10/06/1997 அதிகாலை தாக்குதல் தொடங்கியது. டோபிட்டோக்கள் வெடிக்கும் சத்தங்கள், மோட்டர் எறிகணைகளின் சத்தங்களோடு இயக்கத்தின் சண்டை தொடங்கியது.நாம் செய்திக்காகக் காத்திருந்தோம். திட்டத்தின்படி அரைமணி நேரத்துக்குள் ஆட்லறிகள் கைப்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சண்டை தொடங்கி சில நிமிடங்களில் எதிரியின் MI-24 தாக்குதல் வானூர்தி ஒன்று வந்துவிட்டது. எங்கு தாக்குவதென்று சரியான தெரிவில்லாமல் சகட்டு மேனிக்கு அவ்வானூர்தி தாக்குதலை நடத்தியது.‘கோதாரி இப்பவே வந்திட்டான். அப்ப விடிய விடிய எங்களுக்கு நல்ல சமா தான்’ என்று சொல்லிக் கொண்டோம்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. எமக்கான செய்தி வந்து சேரவில்லை. ஏதோ பிசகு நடந்துவிட்டதென்று தெரிந்தது. ஆனால் தாக்குதல் வெற்றியாகச் செல்கிறது என்பது விளங்கியது. சண்டை தொடங்கிய இடத்திலிருந்து சத்தங்கள் இன்னுமின்னும் எதிரியின் பகுதிக்குள் முன்னேறிக்கொண்டிருந்தன. இயக்கம் ஏவிய மோட்டர் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் இடமும் இன்னுமின்னும் முன்னேறிக்கொண்டிருந்தது. ஆனால் எமக்கான செய்தி மட்டும் இன்னும் வரவில்லை. எதிரி சகட்டு மேனிக்குத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். நாமிருந்த பகுதிகளைச் சுற்றியும் எறிகணைகள் வீழ்ந்தன.தாக்குதல் தொடங்கி இரண்டு மணிநேரமாகிவிட்டது. இன்னும் நாங்கள் அப்படியேதான் இருந்தோம். எல்லோருக்கும் சலித்துவிட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடும் ஆயத்தத்தோடும் இருந்த எமக்குச் சலிப்பு ஏற்பட்டது. மெதுமெதுவாக அந்தத் தகவல் பரவத் தொடங்கியது.‘காம்ப் உடனயே பிடிச்சாச்சாம். ஆனா ஆட்லறியள்தான் அங்க இல்லயாம்.’ஆம்! திட்டமிட்டபடியே ஆட்லறிகள் இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அம்முகாம் கைப்பற்றப்பட்டது. ஆனால் தேடிப்போன ஆட்லறிகள் அங்கே இருக்கவில்லை. அந்த முகாம் தாக்குதலில் கரும்புலிகளான மேஜர் நிவேதன், மேஜர் யாழினி, கப்டன் சாதுரியன் ஆகியோர் வீரச்சாவடைந்திருந்தனர்.தாக்குதலணிகள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருந்தன. தாண்டிக்குளம் முகாமுட்பட பல முகாம்களடங்கிய நிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது. எதிரியின் ஆயுதக் களஞ்சியமொன்று எரிந்தழிந்தது. தாக்குதல் உலங்கு வானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்டது. விடியும்வரை தாக்குதலணிகள் முன்னேறிச் சென்றன. ஓமந்தையில் நின்ற இராணுவம் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. வவுனியாவுக்கும் ஓமந்தைக்குமிடையிலான கண்டிவீதியும் அதைச் சுற்றி இராணுவம் கைப்பற்றி வைத்திருந்த பகுதிகளும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.தாண்டிக்குளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்லறிகளுக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. சற்றுத் தள்ளி நிறுத்தியிருக்கலாம், வேறேதாவது முகாமுக்கு மாற்றியிருக்கலாம் என்று கருதி விடியும்வரை சண்டை தொடர்ந்தது. விடியும்போது வவுனியா நகர்ப்பகுதித் தொடக்கம் மறுபக்கத்தில் ஓமந்தை இராணுவத்தினர் வரையும் புலிகள் கைப்பற்றி நிலைகொண்டிருந்தனர். அந்தப் பகுதிக்குள் ஆட்லறிகள் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியபின் அணிகளைப் பின்வாங்கும்படி கட்டளையிடப்பட்டது. அதுவரை நிலையெடுத்திருந்த இடத்திலேயே நாம் இருந்தோம். எம்மையும் பின்வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. வெளிச்சம் பரவத் தொடங்கிவிட்டதால் எதிரியின் வான்தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. எல்லாவற்றுக்குள்ளாலும் தப்பி நாம் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தோம்.
எல்லோரும் எரிச்சலில் இருந்தார்கள். பலர் இப்படியொரு ஏமாற்றத்தைச் சந்தித்திருக்க மாட்டார்கள். என்ன நடந்திருக்கும்? நேற்று அதிகாலைவரை ஆட்லறிகள் அங்கிருந்தனவென்றால் பகலில்தான் எங்கோ நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். தாக்குதல் நடத்தப்படப் போகிறது என்பது முன்னமே தெரிந்துவிட்டதோ? அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சண்டை நன்றாகத்தான் நடந்துள்ளது. எதிரி கடும் இழப்புக்களைச் சந்தித்திருந்தான் என்பதோடு எமது தரப்பில் உயிரிழப்புக்கள் குறைவாகவே இருந்தன. தாக்குதல் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும்.இயக்கத்துக்கு அதிஸ்டம் கைகூடவில்லையென்றுதான் சொல்லவேண்டும். ஆட்லறிகளை அள்ளிவரும் சந்தர்ப்பம் இரண்டாவது தடவையாகவும் இயக்கத்துக்கு இல்லாமற் போனது.பிறகு என்ன நடந்ததென்று இயக்கம் உறுதிப்படுத்திக் கொண்டது. நாம் தாக்குதல் நடத்திய அன்றுபகல் ஐந்து ஆட்லறிகளை ஓமந்தைப் பகுதிக்கும் ஏனையவற்றை வவுனியாப் பகுதிக்கும் எதிரி இடம் மாற்றியிருந்தான். ஓமந்தையிலிருந்து புளியங்குளம் நோக்கி இரண்டொரு நாட்களில் மிகப்பெருமெடுப்பில் ஓர் இராணுவ நடவடிக்கையைச் செய்வதற்கு எதிரி திட்டமிட்டிருந்தான். அதன் ஒருகட்டமாகவே இந்த ஆட்லறிகளை நகர்த்தியிருந்தான். தாண்டிக்குளப் பகுதி மீதான தாக்குதலால் கிடைத்த பலன்களிலொன்று புளியங்குளம் மீதான எதிரியின் தாக்குதல் பிற்போடப்பட்டது. புளியங்குளத்தில் மறிப்புச்சமர் செய்வதற்குரிய போதிய ஆயத்தத்துக்கான கால அவகாசத்தை இத்தாக்குதல் இயக்கத்துக்கு வழங்கியது.தாக்குதல் நடந்த அன்றைய இரவு முழுவதும் ஓமந்தையிலிருந்த ஆட்லறிகளைக் கொண்டு இராணுவம் ஓர் எறிகணையைக் கூட ஏவவில்லை. மோட்டர் தாக்குதலை மட்டுமே நடத்தியது. ஆட்லறிகள் ஓமந்தையிலிருப்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாதென்பதற்காக இராணுவம் அடக்கி வாசித்தது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை நோக்கி முன்னேறிய புலிகளின் அணிகள் இராணுவத்திடமிருந்து கடும் எதிர்ப்பையும் எதிர்கொண்டன.தாண்டிக்குளச் சண்டையைத் தொடர்ந்து தொடர்ச்சியான ஒரு நடவடிக்கையை இயக்கம் பெரிதாகத் திட்டமிட்டிருந்தது. இவ்வூடறுப்புத் தாக்குதல் நடத்தப்பட முன்பு வவுனியா நகர்ப்பகுதிகளுக்குள் சில சிறப்புப் பதுங்கித் தாக்குதலணிகள் நகர்த்தப்பட்டிருந்தன என்பதைப் பின்னர் அறிந்தோம். ஆட்லறிகளைக் கைப்பற்றவெனச் சென்ற அணிகள் தவிர்த்து ஏனைய தாக்குதலணிகளுக்கு இத்தாக்குதலின் பின்னாலிருந்த ‘ஆட்லறி கைப்பற்றும்’ விடயம் முதலில் தெரிந்திருக்கவில்லை. வழமை போன்ற ஓர் ஊடறுப்புத் தாக்குதலும் ஆயுதங்களை அள்ளலுமாகவே அவர்கள் நினைத்திருந்தனர்.இயக்கத்துக்கு அதிஸ்டம் கைகூடவில்லையென்றுதான் சொல்லவேண்டும். ஆட்லறிகளை அள்ளிவரும் சந்தர்ப்பம் இரண்டாவது தடவையாகவும் இயக்கத்துக்கு இல்லாமற் போனது.
more
-
பிரபாகரன் தமிழீழப் பிரகடனமும் பத்திரிகையாளர் மகாநாடும்
வன்னியில் தமிழீழ அரசாங்கம் நடத்திய அனைவரும் எமலோகத்தில் கூடியிருந்தனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு எமலோகத்தில் ஒரு தமிழீழ அரசாங்கத்தை நடத்துவதற்கு எந்தவித பிரச்சனையும் இருக்கவில்லை. அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் கூட எமலோகத்தில் இருந்தார்.
தியாக தீபம் திலீபன் பெரு மகிழ்ச்சியில் இருந்தார். நீ முன்னாலை போ நான் பின்னாலை
வாறன் என்று சொல்லி தன்னை எமலோகம் அனுப்பிய என்னுடைய ஈகைப் பெருந்தலைவன் எமலோகத்திற்கு வந்து தான் கொடுத்த வாக்கைக் காப்பற்றியுள்ளான். எமலோகத்தில் தலைமை இல்லாமல் தவித்த என்னுடைய குறையைப் போக்கியுள்ளார். அதே போல கரும்புலிகள் உட்பட மாவீரர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தனர். நீங்கள் பேங்கோடா நானும் பின்னாலை வருவன் என்று தங்களுடன் குறூப் போட்டோ எடுத்து வழியனுப்பிய
தலைவன் தாங்கள் எதிhபாராத விதத்தில் மிக விரைவாக தங்களுடன் எமலோகத்தில் இணைந்ததையிட்டு பெருமையடைந்தனர். எமலோகத்தில் தன்னுடைய உறுப்பினர்களுடன் இணைந்து கொண்ட பிரபாகரனை உடனடியாக பத்திரிகையாளர்களையும் அரசியல்வாதிகளையும் அழைத்து மாநாடு ஒன்றை நடத்தி தமிழீழப் பிரகடனத்தைச் செய்யும்படி தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் ஆலோசனை வழங்கினார். இல்லாவிட்டால் இங்குள்ள மாற்றியக்கத் தலைவர்களுக்கு நாங்கள் கட்டுப்படவேண்டிய நிலைமை ஏற்படும். .
இங்கு ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன், ஒபரோய்த் தேவன், ஜெகன்
மாணிக்கதாசன், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று எங்களால் எமலோகம் அனுப்பப்பட்ட பல தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எமலோகத்தில் அவர்களுக்குக் கீழ் இயங்கமுடியாது. அதனால் உடனடியாக பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி நீங்கள்தான் எமலோகத் தேசியத்தலைவர் என்பதை பகிரங்கமாக அறிவித்து விடுங்கள் என்ற பாலசிங்கத்தின் ஆலோசனையை ஏற்று உடனடியாக எமலோகத்தில் பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டது.
புலிகளால் எமலோகம் அனுப்பப்பட்ட பல பத்திரிகையாளர்கள் அங்கு இருந்தமையால் பிரபாகரனுக்கு அந்த மாநாட்டைக் கூட்ட பெரிய சிக்கல் எதுவும்இருக்கவில்லை.
மாநாடு ஆரமபமானது. பாரிய பாதுகாப்புப் பரிசோதனைகளின் பின் மாநாடு ஆரம்பமானது. வன்னியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனுக்கு அருகில் இருந்தவர்களில் கருணாவைத் தவிர மற்ற அனைவரும் இருந்தனர். பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மெய்ப்பாதுகாவலன் கடாபி அருகில் நின்றிருந்தார். அரசியல்ப் பொறுப்பாளர் சூனா. பானா தமிழ்ச்செல்வன் வழக்கமான சிரிப்புடன் அருகில் வீற்றிருந்தார். பிரபாகரனால் எமலோகம் அனுப்ப்பட்ட அரசியல் தலைவர்கள் பலரும் மாட்டில் கலந்து கொள்ள உத்தரவிடப்
பட்டிருந்தது. ராஜீவ் காந்தி, பிரேமதாசா ஆகியோர் கூட மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்கள்.
மாநாடு ஆரம்பமானது அன்ரன் பாலசிங்கம் தனது வழமையான ஜொனிவோக்கர் செருமலுடன் பேசத் தொடங்கினார்.
அன்பார்ந்த எமலோகத் தமிழீழ மக்களே நாங்கள் எமலோகத்தில் இந்தத்திடீர்ப் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டியதன் காரணம் நாங்கள் பூலோகம் கடந்த தமிழீழத்தை எமலோகத்தில் பிரகடனம் செய்யவுள்ளோம். அது மட்டுமலாது பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் எமது எமலோகத் தேசியத் தலைவரிடம் கேள்விகளைக் கேட்கலாம். தத்துவார்த்தமான கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்வேன், ஏனைய கேள்விகளுக்கு எமது எமலோகத் தேசியத் தலைவர் மிஸ்டர் பிரபாகரன் பதில் சொல்வார். நீங்கள்
கேள்விகளை ஆரம்பிக்கலாம்.
ஈழநாடு பத்திரிகையாளர் சண்முகலிங்கம் எழுந்தார். நீங்கள் என்னைக் கடத்திக் கொண்டுபோய்க் கொலை செய்தீர்கள். என்னுடைய உடலையாவது எனது மனைவிபிள்ளைகளிடம் ஒப்படைத்திருக்கலாம். அவர்கள் காடாத்தி அந்தியேட்டி. திவசமாவது செய்திருப்பார்கள்.
பாலசிங்கம் ஆவேசத்துடன் குறுக்கிட்டு இஞ்ச வாரும் எங்கடை தலைவருக்கே பூலோகத்திலை அந்திரட்டி செய்யுறதோ இல்லையோ எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கினம்.அந்திரட்டி செய்யாமல் உம்மைப் போலை ஆயிரக்கணக்கிலை பூலோகத்தலை இருக்கினம். உமக்கு எமலோகம் வந்தும் கொழுப்பு அடங்கேல்லை. இஞ்சையும் காணாமல் போகப்போறீர்;. பொத்திக் கொண்டு உதிலை இரும்.
இந்தப் பதிலை எதிர் பார்க்காத சண்முகலிங்கம் நடுங்கியபடிஆசனத்தில் அமர்கிறார்.
கேள்வி கேட்பதற்காக கை உயர்த்திய ஒருவரைப் பார்த்து நீர் கேளும்
என்று பாலசிங்கம் கைவிரலைக் காட்டுகிறார். அவாதான் பிரேமதாசா
ஆய் புவன்
மம துன்ன சல்லி.
மம துன்ன ஆயுத,
மம விஸ்வாச கலா ஓபவ,
நமுத் ஒப மாவ மறுவா
இவர் சொல்லிறது எனக்கு விளங்கேல்லை. இங்கை யாராவது இவர் சொன்
னதை ட்றான்ஸ்லேற் பண்ணுங்கோ
நான் உங்களுக்கு சல்லி தந்தது.
நான் உங்களுக்கு ஆயுதம் தந்தது.
நான் உங்களை எவ்வளவு நம்பினேன்.
நீங்கள் என்னை ஏமாத்திப் போட்டீங்க
இவ்வாறு தமிழ்த் தெரிந்த சிங்களவர் ஒருவர் பொழி பெயர்த்தார்.
அண்ணை உவன் ஆயுதம், காசு தந்தது சரி ஆனா சல்லி சீமந்து எப்ப தந்தவன். என்று பிரபாகரன் பாலசிங்கத்தின் காதுக்குள் குசுகுசுக்க சல்லி எண்டிறது காசைத்தான் தலைவர் சொல்லுறது. நான் கொழும்பிலை கொஞ்ச நாள் ஜேணலிஸ்ற்றா இருந்தனான் எனக்குத் தெரியும்.சரி உவன் கேட்டதுக்கு பதிலைச் சொல்லுங்கோ.
நாங்கள் யாரையும் ஏமாத்திறதில்லை. அவையள்தான் எங்களிட்டை ஏமாறுகிறவை. பிரேமதாசாவின்ரை கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. என்று பிரபாகரன் பதில் சொன்னார்.
பிரேமதாசா சிரிக்கிறார்.
மிஸ்டர் பிரபாகரன் சேய் வீ நெவர் சீற் எனிபொடி. பீப்பிள் சீற் தெம்செல்வ்.
வீ ஆர் நொட் றெஸ்பொன்சிபிள் போர் பிரேமதாசா கில்லிங்.
சரி நீங்கள் சொல்லுங்கோ ராஜீவ் காந்தியைப் பார்த்து பாலசிங்கம்
விரல் நீட்டுகிறார்.
ஐ ஆம் ராஜீவ் காந்தி.
மை மதர் வோஸ் ஹெல்ப்பிங் யூ.
ஐ வோஸ் ஹெல்ப்பிங் யூ.
இவ் ஐ கேம் ரு த பவர் எகெய்ன் ரமில்ஸ் புறொப்லம் வில் பி
சோல்வ்ட்.
பட் யூ அசாசினேற்றட் மீ.
தற்ஸ்வை ஐ ஆம் ஹியர் அன்ட் யூ ஆர் ஹியர்.
அதர்வைஸ் யூ வில் பிகம் சீவ் மினிஸ்டர் போர் நோத் ஈஸ்ற்.
வை டிட் யூ கில் மீ.
ராஜீவ் காந்தி என்னண்ணை சொல்லிறான்
என்ன சொல்லிறானெண்டால் தலைவர் தன்ரை தாய் எங்களுக்கு உதவி செய்தவாவாம். தான் உதவி செய்தவனாம். தான் திரும்பவும் பதவிக்கு வந்திருந்தா தமிழற்றை பிரச்சனை தீர்ந்து வடக்கு கிழக்குக்கு நிங்கள் முதலமைச்சரா வந்திருப்பியளாம். ஆனால் நீங்கள் என்னைக் கொலை செய்து போட்டியளாம். அதாலைதான் தானும் நீங்களும் எமலோகத்திலை இருக்கிறமாம். அறுவாங்கள் இங்கை வந்தும் பழசையெல்லாம் தோண்டிறாங்கள் இதுக்கு நீங்கள் கவனமாப் பதில் சொல்லவேணும். இதுக்கு பூலோகத்திலை நடந்த பத்திரிகையாளர் மாநாட்டிலை சொன்ன மாதிரி அது ஒரு துன்பியல் சம்பவம் எண்டுதான் பதில் சொல்லவேணும்.
பிரபாகரன் செருமிக் கொண்டு அஅஅஅஅ அது ஒரு துன்பியல் சம்பவம்.
மிஸ்டர் பிரபாகரன் சேய் இற் வோஸ் ஏ ட்ராஜெடி.
ராஜீவ் சிரிக்கிறார்.
அடுத்ததாக கை உயர்த்திய ஒருவரைப் பார்த்து பாலசிங்கம் விரலை
நீட்டுகிறார். நான் அல்பிரட் துரையப்பா
நான் சிங்களக் கட்சியிலிருந்து யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்தனான். நாற்றம் நிறைந்த யாழ்நகரை ரோமாபுரி போல மாற்றிக் கொண்டிருந்தனான். ஆனால் நீங்கள் என்னைத் துரோகியெண்டு எமலோகம் அனுப்பிப் போட்டு நீங்களும் எமலோகத்துக்குத்தா வந்திருக்கிறியள். என்னைப் போல ஆக்கள் உங்கடை தமிழீழ இலட்சியத்துக்கு தடையாக இருக்கிற துரோகிகள் என்று எமலோகம் அனுப்பினனீங்கள். பிறகெப்படி உங்கடை தமிழீழப் போராட்டம் தோற்றுப் போனது.
வாயை ஒருபக்கமாக கோணிக்கொண்டு பிரபாகரன் பேச ஆரம்பித்தார்.நாங்கள் துரோகியளைப் போட்டுத்தள்ளினது உண்மை. ஆனால் எங்கடை தமிழீழப் போராட்டம் தோற்று போகவில்லை. போராட்டம் என்பது தோற்பதுமில்லை வெல்வதுமில்லை. அது தொடரும். இன்று எமது தமிழீழ இலட்சியப் போராட்டம் எமலோகம் வரை தொடர்கிறது. அப்படித் தொடர்வதுதான். போராட்டம்.பதில் சொல்லி விட்டு பிரபாகரன் பாலசிங்கத்தைப் பார்த்து சிரிக்கிறார்.
நான் சென்ற் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா. நான் எனது மாணவர்களை இலங்கை ராணுவத்தோடை கிறிக்கற் விளையாடவிட்டதென்று என்னை எமலோகம் அனுப்பினனீங்கள். அப்பிடி அனுப்பினனீங்கள் பிரேமதாசாவிட்டை ஆயுதங்கள் வாங்கி இலங்கைராணுவத்தோடை சேர்ந்து நிண்டு இந்திய ராணுவத்தோடை சண்டை பிடிச்சனீங்கள். கொழும்பு கில்டன் ஹொட்டலிலை நிண்டு சாப்பிட்டனீங்கள். அப்ப நீங்கள் துரோகிகள் இல்லையோ?
நாங்கள் எந்தப் பேயோடையும் கூட்டுச் சேருவம்.நாங்கள் பிரேமதாசாவோட சேர்ந்தது ஒரு ராஜதந்திரம். சிரித்துக் கொண்டு பிரபாகரன் பதிலளித்தார்.
தயவு செய்து பழசுகளை தோண்டாதைங்கோ. எமலோகமாவது ஒளிமயமாக இருக்க வேணுமெண்டுதான் நாங்கள் இந்த மாநாட்டைக் கூட்டினனாங்கள். பிளீஸ் டோன்ற் டிக் இன் த பாஸ்ற். கேள்வி கேட்க எத்தனித்த இன்னொருவரைப் பார்த்து பாலசிங்கம் விரலை நீட்டுகிறார்.
நான் உங்களால் எமலோகம் அனுப்பட்ட சாதாரண பொதுமகன்; யாழ்ப்பாணத்திலை இரும்புப் பட்டறை வச்சிருந்தனான். வரி கேட்க வந்தவர்களிடம் வன்னியிலை தானே உங்கடை நிர்வாகம் இருக்கு. யாழ்ப்பாணத்திலை இருக்கிற நான் ஏன் உங்களுக்கு வரி கட்டவேணும் எண்டு கேட்டதுக்காக என்னை எமலோகம் அனுப்பி வச்சனீங்கள். இப்ப எமலோகத்திலையும் நாங்கள் வரிகட்டவேணுமோ?
பிரபாகரன் முறைத்தபடி எங்கடை நிர்வாகம் எங்கையெல்லாம் இருக்கோ அங்கை நீங்கள் வரி கட்டித்தான் ஆகவேணும்.
அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
கேள்வி கேட்க முற்பட்ட ஒருவரைப் பார்த்து பாலசிங்கம் விரலை நீட்
டுகிறார். நான் தராக்கி சிவராம். உங்களை நம்பினதாலை நான்
எமலோகம் வரவேண்டி ஏற்பட்டது. ஆனா நீங்கள் எப்படி எமலோகம்
வந்தீர்கள் தேசியத் தலைவர் அவர்களே!.
நான் எனது தளபதியளைத் தான் நம்பியிருந்தனான். சமாதன காலத்திலை
திண்டு கொழுத்த தளபதியளாலை நிண்டு அடிபடேல்லாமல் போச்சு. கரும்
புலியளாலையும் ஏலாமல் போச்சு. வேறை வழியில்லாமல் சனத்தை நூற்றுக்
கணக்கிலை போட்டுத்ள்ளி படங்கள் வீடியோக்கள் எடுத்து வெளிநாடுகளுக்கு
காட்டிப்பாத்தன். ஒரு நாடும் திரும்பிப் பாக்கேல்லை. வெளிநாடுகளிலை என்
ரை ஆக்களை வச்ச பஸ்ஸை மறிச்சு, றெயினை மறிச்சு, றோட்டுகளை
பிளக் பண்ணி ஆர்ப்பாட்டம் செய்ய வச்சன். ஒண்டுக்கும் பலனில்லாமல் போச்
சு. ஆமிக்காரனும் மோட்டுத்தனமா அடிக்கத் தொடங்கியிட்டான். என்னைச் சுத்
தி நிண்ட சனங்களும் விட்டிட்டு ஓடியிட்டுதுகள். அமெரிக்கன் ஏதாவது செய்
து சண்டையை நிப்பாட்டுவான் எண்டு பாத்தால் அவனும் கணக்கிலை எடுக்
கேல்லை. சறண்டர் பண்ணிறதைத் தவிர வேறை வழியில்லையெண்டு சறண்
டர் பண்ணினன். ஆனால் சிங்களவன் தலையைப் பிளந்து போட்டான். இதுக்
குப் பிறகு எமலோகம் வராமல் எங்கை போறது.
அடுத்து நீங்கள் பாலசிங்கம் விரல் காட்ட
நான் ஒரு தமிழீழப் பிரியன் உங்களுக்காக உளவு பாத்ததுக்காக மாற்றியக்கம் என்னை எமலோகம் அனுப்பிவிட்டார்கள். உங்களுடைய புலனாய்வுத்துறை இங்கும் இயங்குமா?
எங்கடை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் இங்கு வந்திருப்
பார் எண்டு நினைச்சனான். அவர் என் இன்னும் எமலோகம் வரவில்லை என்று
எனக்கு விளங்கவில்லை. ஆனால் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கை எனக்
கிருக்கிறது. அவர் வந்து சேர்ந்ததும் புலனாய்வுத்துறை எமலோகத்திலும்
இயங்கும்.
தமிழீழ வான்படை எமலோகத்தில் இயங்குமா தலைவா? மாற்று இயக்கத்தை அழித்ததற்காக சோடா உடைத்துக் கொடுத்த தமிழீழப்பிரியன் ஒருவர் கேள்வி கேட்டார்.
நிச்சயம் எங்கடை வான்படை இங்கும் இருக்கும் தற்போது எங்களிடம்
விமானங்கள் இல்லை. இப்போது என்னிடம் புஷ்பக விமானம் மட்டும்தான்
இருக்கிறது. அது எனது தனிப்பட்ட தேவைக்காக வைத்திருக்கிறேன். எமது
சர்வதேசத் தொடர்பாளர் கே.பி இன்னும் எமலோகம் வரவில்லை. அவர் வந்து
சேர்ந்ததும் வேறு லோகங்களுடன் தொடர்பு கொண்டு விமானங்களை கொள்
வனவு செய்வார். எமது வான் படைகள் பலப்படுத்தப்படும்.
தேசியத் தலைவர் அவர்களே எமலோகத்தில் மாவீரர் உரை
நிகழ்த்துவீர்களா? புலிகளின் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி கேட்டார்.
ஆம் வழக்கமாக மறைவான இடத்திலிருந்து மாவீரர் உரையாற்றி அதனை மக்கள் கேட்டார்கள். ஆனால் இம்முறை எமலோகத்தில் மாவீரர்கள் மத்தியிலே நின்று மாவீரர் உரையாற்றப் போகிறேன். என்னை இங்கு பார்த்ததில் மாவீரர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மாநாடு முடிவடைகிறது. கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதென்று ஏற்கனவே மிரட்டப்பட்ட புலிகளால் எமலோகம் அனுப்;பப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,மாணவர்கள், மற்றும் சில பத்திரிகையாளர்கள் அமைதியாக வெளியேறுகின்றனர்.-தமிழ் நாசம்-
more
-
விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் அருள் மொழி இடம்பெயர் முகாமில் கைது,சொகுசு வாகனத்தில் ஏறிச்சென்றார்கள் ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்டர்
விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் அருள்மெளலி இடம்பெயர் முகாமில் கைதுஅருள்மெளலி தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டுவந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலித் தலைமை முதல் சாதாரண போராளி வரையில் இரகிய தகவல் சேகரிப்பு பணிகளை இவர் மேற்கொண்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் குறித்த தகவல்களையும் அருள்மெளலியே திரட்டி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
more
-
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தில் விடுதலைப் புலிகளும் பங்குதாரர்கள்
விடுதலைப்புலிகள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் பல அரச நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்ய விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிடம் இருந்து ஸ்ரீலங்கா ரெலிகொம் பங்குகளை மலேசியத் தமிழரான ஆனந்த கிருஷ்ணனின் மெக்சீஸ் நிறுவனம் அதிக விலையில் கொள்வனவு செய்திருந்தது. இந்த கொள்வனவு தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக ஜே.வி.பி. மாத்திரமல்லாது தொழிற்சங்கங்களும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன.
ஆனந்த கிருஷ்ணனின் மெக்சீஸ் நிறுவனம், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் 49 வீத பங்குகளை கொள்வனவு செய்துள்ளது. மெக்சீஸ் நிறுவனத்தை ரெலிகொம் பங்குகளை பெறும் கொடுக்கல் வாங்கல்களுக்காக இலங்கைக்கு அழைத்து சென்றவர்கள், ஜனாதிபதிக்கு நெருக்கமான ரொஷான் காரியபெரும மற்றும் பிரியந்த காரியபெரும ஆகிய இருவரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறிது காலத்தில் மெக்சீஸ் நிறுவனம் இவர்கள் இருவரையும் நீக்கி விட்டு, அதன் இலங்கை பிரதிநிதியாக திவயின பத்திரிகையின் அரசியல் செய்தியாளர் மனோஜ் அபேவீரவை நியமித்தது. தற்போது மனோஜ் அபேவீரவே மெக்சீஸ் நிறுவனத்திற்கான இலங்கையின் அனைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். மெக்சீஸ் தொலைபேசி நிறுவனம் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள பல நிறுவனங்களுக்கு சொந்தக்காராக இருக்கும் யாழ்ப்பாணத்தை பூர்கமாக கொண்ட ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் செல்வந்தர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













