-
நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன்?
முன்தாஜர் அல் ஜெய்தி
நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.
எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.
நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.
அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.
வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.
ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.
என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”
குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.
ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.
எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.
more
-
‘அடிப்பாரா ரம்லத்…?’ எகிறும் நயன்தாரா!
என்னை அடிக்க ரம்லத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் என்னை அடிக்க முயன்றால் நான் யார் என்று காட்டவேண்டி வரும் என்ரு நடிகை நயன்தாரா கூறியுள்ளார். நடிகர் - இயக்குநர் பிரபுதேவா காதலித்து கைப்பிடித்தது ரம்லத்தை. ஆனால் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு ரம்லத்தை விட்டுப் பிரிந்து நயன்தாராவுடன் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்து விட்டார். இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதோடு, தனி பங்களாவில் குடித்தனம் நடத்துவது வரை போய் விட்டார்களாம். இந்நிலையில் சமீபத்தில் தான் இயக்கிய முதல் இந்திப் படமான வான்டட் ப்ரிமியர் ஷோவுக்கு நயன்தாராவுடன் ஜோடியாகச் சென்ற பிரபுதேவா, பத்திரிகையாளர்களையும் ஜோடியாகவே சந்தித்து பேட்டி கொடுத்தார். இதன் எதிரொலியாக, பிரபுதேவா மனைவி பிரபல பத்திரிகையாளர்களை தனித்தனியாக அழைத்து தனது குமுறலை பேட்டியாகத் தந்தார். அதில், அடுத்தவர் கணவர் மீது ஆசைப்பட்டு அபகரித்துக் கொள்ளும் நயன்தாரா போன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், நயன்தாராவை எங்காவது இனி நேரில் பார்த்தால் அடிப்பேன் என்றும் கூறியிருந்தார் ரம்லத். இது பற்றி கேரளாவில் இருந்த நயன்தாராவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், “பிரபுதேவாவுடன் காதலா என பத்திரிகையாளர்கள் தொடர்ந்து நச்சரித்த போதும் பல முறை தெளிவான என் பதிலைக் கூறிவிட்டேன்.
என்னை அடிக்க அவர் யார்… என்ன உரிமையிருக்கிறது அவருக்கு?
ரம்லத் என்னை நேரில் பார்க்கும்போது அதை நான் பார்த்துக் கொள்வேன். என்னை சபிக்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் தகுதியோ, உரிமையோ கிடையாது. எனது வாழ்க்கையை நான்தான் முடிவு செய்ய வேண்டும்.
என்னைப் பற்றி என் குடும்பத்தாருக்கு நன்றாக தெரியும். அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். மற்றவர்களின் பேச்சுகளை பற்றி நான் கவலைப்படவில்லை…” என்றார் நயன்தாரா.
more
-
செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் உரிய நேரத்தில் போதிய அளவில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டிகளின்போது உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும், முழுத் திறமையுடனும் விளையாட முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் மன நல நிபுணர் பேடி அப்டன் ஆகியோர் இணைந்து நான்கு பக்கங்களில் இதுகுறித்து விளக்கி இந்திய வீரர்களுக்குக் கொடுத்துள்ளனராம். அதில், செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால், டெஸ்டோஸ்டிரான் அளவு கூடும். இதனால் உடலுக்கும், மனதுக்கும் புதுத் தெம்பு கிடைக்கும், ஆவேசம் வரும். போட்டிகளில் முழுத் திறமையை வெளிப்படுத்த உதவும். அதற்கு மாறாக சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் இவை அனைத்தும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கையில், செக்ஸ் தவிர சரியான முறையில் சாப்பிடுவது, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பலவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இந்திய அணியினர் செக்ஸ் குறித்து தயக்கமோ, அச்சமோ படக் கூடாது என்றும் கிர்ஸ்டனும், அப்டனும் அட்வைஸ் செய்துள்ளனராம். மேலும் செக்ஸ் குறித்த தவறான நம்பிக்கைகளைக் களையவும் அவர்கள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
செக்ஸ் தவிர உணவுப் பழக்க வழக்கம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வயிற்றில் அசிடிட்டி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எப்படி, உடற்பயிற்சி வழக்கங்கள், சர்க்கரை வியாதி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி, என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளதாம்.
இவை தவிர மனதை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொள்வது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
நான்காவது அம்சமாக, வெளிநாடுகளுக்குப் போய் விளையாடும்போது இந்தியா அதிக அளவில் தோல்வியுறுவது ஏன் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இதை விளக்க இந்தியாவின் வரலாறு மற்றும் இந்தியா புரிந்த போர்கள் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி பயிற்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனராம்.
இந்த அறிக்கை இந்திய வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது, புத்துணர்ச்சியுடன் அவர்கள் ஆடுவார்களா என்பதை சாம்பியன்ஸ் டிராபியின் முடிவில்தான் தெரிந்து கொள்ள முடியும்.
more
-
சுவீடன் தலைநகரில் ஹெலி மூலம் வினோத கொள்ளை
சுவீடன் தலைநகர் ஸ்ரோக்ஹோல்மில்(stokholm) திகதி 20 காலை 9 மணிக்கு ஒரு வங்கிக் கட்டிடத்தின் மேல் ஹெலி கொப்ரரில் வந்து இறங்கிய இருவர் வங்கியினுள் சென்று முப்பது கோடி சுவீடிஷ் குரோனர் பணத்தை கொள்ளையிட்டு ஹெலி கொப்ரரிலேயே
தபிச் சென்று பின் ஹெலி கொப்றரை காட்டினுள் கைவிட்டு ,காரில் தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர் , என்னமா யோசிக்கிறாங்கப்பா
more
-
சினிமா காட்டும் தாடிவைத்த பயங்கரவாதம்.
தற்போது வந்து பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் படம் உன்னைப் போல் ஒருவனில் இருந்து ரோஜா வரை சமூகம் பாதித்துள்ள பயங்கரவாதத்தையே முன்னிலைப்படுத்துகிறது.
இவர்கள் காட்டும் பயங்கரவாதம் அல் உமா, அல்கெய்தா, ஒசாமா பின்லேடன் என்று இஸ்லாமிய பயங்கரவாதத்தையே கருப்பொருளாக பேசுகிறது. நம்மை பேசவைக்கிறது.
இதில் தற்போது கமல் மோகன்லால் நடித்து ஓடிக்கொண்டு இருக்கும் படம் ‘உன்னைப்போல் ஒருவன்” படத்திலும் பயங்கர? வாதத்தையே பேசுகிறது. உயர் தொழில் நுட்பம்,பல கோடி செலவீடு, பன்மொழியில் வெளியீடு... விளம்பரம்... சுருதி ஆசன் இசை என்று ஸ்டார் வேல்யு படத்தை தந்திருக்கிறார்கள். இப்படம் இந்தியாவை ஆட்டிவைப்பது அதுவும் பயங்கரவாதத்தில் இஸ்லாமிய மதத்தையே நோக்கி தாக்குதல் வழக்கம் போல தொடுத்து இருக்கிறது.
அதாவது பயங்கரவாதம் என்றால் முஸ்லிம் (கொச்சையாக சொல்ல வேண்டுமானால் துலுக்கன் அப்படித்தான் என்ற முத்திரை ). அமெரிக்க முன்னிலைப்படுத்திய பயங்கரவாத்த்தின் விளைவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இந்தி திரைப்பட நடிகர் சாருகான் போன்றோர் அமெரிக்க நிறுவனத்தால் அவமானப்படுத்தப்பட்டது நினைவு கூற வேண்டும்.
ரோஜா, அரண்,மஜ்ஜுனு,வாரணம் ஆயிரம்,உன்னைப்போல ஒருவன் போன்ற படங்களைச் சொல்லலாம். நினைவுக்கு வராத்தால் கண்டிப்பாக நீண்ட படவரிசை இதில் விடுபட்டு இருக்கும்.
இந்திய இறையாண்மையை காக்க, மூவர்ண கொடியைக்காக்க கண்டிப்பாக தீவிரவாதியை அதுவும் முஸ்லிம் தீவிரவாதி காட்டினால் தான் அப்படம் முழுமையடையும்.
அல் உமா, அல்கெய்தா, ஒசாமா பின்லேடன் போன்ற பயங்கர வாத சொற்களை அடிக்கடி பயன்படுத்தவேண்டும். மீசை இல்லாமல் தாடிவைத்து இருப்பார்கள். தர்காகளின் பின்னனியில் தொழுகையும் நெட்வொர்க் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என்று காட்சி அமைப்புகள் ஓடும். ஆர்டிஎக்ஸ்? பாம் வெடிக்கையில் குழந்தைகள் பெண்களின் உடல் சிதரும். இஸ்லாமிய தீவிரவாதிகள் சிரிப்பார்கள்.இந்தியாவை கேவலப்படுத்துவார்கள்.
ஆனால் உன்மை...
பயங்கரவாதத்தை ஒரு மதத்தில் அதுவும் இஸ்லாமிய மதத்தில் போய் நிறுத்திவிடுகிறார்கள். இந்துமத பயங்கரம், அரச பயங்கரவாதம் முற்றிலும் மறைக்கப்பட்டுவிட்டது.
மின்சாரம் இல்லாத கிராமங்கள் இருக்கிறதோ இல்லையோ தீண்டாமை இல்லாத கிராமங்கள் இல்லை.
சாதியின் பயங்கரவாதம் எங்கே ?
பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடும் பயங்கரம் எங்கே ?
தனியார்மய பயங்கரம்?
பட்டினி தற்கொலைகள்?
சுற்றுச்சூழல் கொள்ளையிடும் நவீன நடவடிக்கைகள் பயங்கரம் இல்லையா ?
பக்கத்தில் நடைபெறும் சிங்கள அரசின் இன அழிப்பு பயங்கரம் கலை இலக்கியத்தில் இடமில்லையா ?
மோடி நடத்திய குஜராத் படுகொலை ...
நாகாலாந்து படுகொலை...
கருப்புச்சட்டங்களின் மனித உரிமை மீறல்கள்?
போன்ற அத்திமீறல்கள் பயங்கரவாதமில்லையா ?
பக்கத்தில் ஈழத்தில் நடந்த அரச பயங்கரம் இவர்களுக்கு தெரிவதில்லை.
ஆனால் பேசுவார்கள்
புலிகளின் பயங்கரம் ?.....
சயனைடு குப்பிகளைப்பற்றி... என்று இவர்களின் எல்லை சுறுங்கிபோய்விடும்.
அரச பயங்கரம், அத்துமீறல் எல்லாநாடுகளிலும் இருக்கிறது.
ஆனால் சினிமா போன்ற ஊடகங்களில் இவற்றுக்கு எல்லாம் இடமில்லை.
எனென்றால் அது அரசாட்சி. அரசு நிர்வாகம் என்று ஊடகங்கள் பதில் சொல்லும்.
ஒவ்வொரு கலை இலக்கிய நிகழ்விலும் தெரிந்தோ தெரியாமலோ அரசியலை சொல்கிறது. அதற்கு ஒரு நலன் இருக்கிறது.
மணிரத்தினம் முதற்கொண்டு கமல்வரை இவர்களின் சமூகப்பார்வை தாடிவைத்த தீவிரவாதத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும் வரை தமிழ் திரைக்கு சிகரங்கள் எட்டாதவையே.
more
-
நயன்தாராவை கைது செய்ய வேண்டும் -பிரபுதேவா மனைவி
என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்’ என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் ‘இனி பிரிக்க முடியாது’ எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள். 12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான். இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை. இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த ‘வான்டட்’ என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள். ‘இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை’ என்று பதில் அளித்தார்கள். நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப் பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர். இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத். இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் ‘துரோகம்’ பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார். அவர் கூறியிருப்பதாவது:…
“எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.
சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.
அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?
அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்…
நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன ‘நோக்கத்துக்காக’ இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.
இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.
நயன்தாராவைக் கைது செய்யுங்கள்…
நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.
இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.
மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.
சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..
நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.
இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்…” என்று கதறி்யுள்ளார் ரமலத்
more
-
கைது ஒருவர் ஸ்தலத்தீலேயே தற்கொலை.
வவுனியா உப்புளும பிரதேசத்தில் தற்கொலைதாரிகள் என சந்தேகிக்கப்படும் இரு பெண்புலிகளை பொலிஸார் கைது செய்தபோது அவர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.
காலிப்பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா விரைந்த காலி விஷேட பொலிஸ் பிரிவினர், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரின் உதவியுடன் குறிப்பிட்ட பெண்புலிகள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்தபோது ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இவ்வீடு புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் நெருப்பு என்பவருக்கு சொந்தமானது எனவும், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அப்பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதைத்து வைத்திருந்த தற்கொலை அங்கிகள் 3, சீ4 ரக வெடிமருந்துகள் 6 கிலோக்கிராம், டெற்னேற்றர்கள் 10 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
more
-
ராஜனி திராணகம படுகொலை தொடர்பாக வெளிவராத உண்மைகள்!
(இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை கீழே)
என் சத்தியப்பதிவு 21 - 09 - 2005
எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!
1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.
அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?
இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.
அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.
எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.
இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.
மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.
இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.
மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.
சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.
எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.
1989ம் ஆண்டில் யாழ். மருத்துவபீட மாணவன்
more
-
வேட்டை நாயின் விலை ரூ. 3 கோடி;அதை வரவேற்க 30 கார்கள் : சீனாவில் அதிசயம்
அரிய வகை வேட்டை நாய்க்கு மூன்று கோடி ரூபா செலவழித்து, அதை வரவேற்க 30 விலையுயர்ந்த கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார் ஒரு சீனப் பெண்மணி.
மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனப் பொருளாதாரத்தின் அபரிமித வளர்ச்சியால் அந்நாட்டில் நிறைய கோடீஸ்வரர்கள் உருவாகி வருகின்றனர்.
2009 ஏப்ரல் வரை கணக்கிட்டதில் எட்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் அங்கு கோடீஸ்வரர்கள். இப்படி வகை தொகையில்லாமல் சீனாவின் வளர்ச்சி இருப்பதால் அந்நாட்டினர் பணத்தைத் தண்ணீராக செலவழிக்கவும் தயங்குவதில்லை.
'வாங்' என்ற கோடீஸ்வரி பெண்மணி, நாய் வாங்க மூன்று கோடி ரூபா செலவழித்துள்ளார். 'வாங்'கும் அவர் நண்பரும் ஒரிஜினல் திபெத்திய வேட்டை நாய்க்காக அலையோ அலை என்று அலைந்து திரிந்தார்களாம்.
கடைசியில் ஒருவழியாக திபெத்தின் 'குயிங்காய்' மாவட்டத்தில் ஒரு பெண்மணியிடம் அந்த நாய் இருப்பது அவருக்குத் தெரிந்தது. விடுவாரா 'வாங்'?
'வாங்' இருப்பது வடமத்திய சீனாவின் 'ஷான்க்ஸி' மாவட்டம். அங்கிருந்து பறந்தார் 'குயிங் காய்'க்கு. மூன்று கோடி ரூபா கொடுத்து அந்த நாயை வாங்கிவிட்டார்.
18 மாத வயதான 'யாங்ட்ஸ்' என்ற அந்த நாயோடு திரும்பினார். அந்த நாயை வரவேற்க 'ஜியான்' ஏயார்போர்ட்டில் 30 கருப்பு நிற மெர்சிடஸ் - பென்ஸ் கார்கள் வந்து நிற்க வேண்டும் என்று உத்தரவிட்டார் வாங்.
விமானத்திலிருந்து கார் வரை 'யாங்ட்ஸ்'க்கு சிவப்புக் கம்பள வரவேற்பு( கொஞ்சம் ஓவர் தான்) வேறு.
'தங்கத்துக்குக் கூட விலை உண்டு. என் செல்லத்துக்கு விலையே கிடையாது' என்று 'யாங்ட்ஸை' கொஞ்சி மகிழ்கிறார் 'வாங்'.
ஒரு குட்டி நாய் வாங்குவதென்றாலே வாயைப் பிழக்கும் நம்மவருக்கு இது ஓர் அதிசயத் தகவல் தானே?
more
-
ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை நவீன பிரபாகரன் என்று கூறிய இந்த ஈரோஸ் தலைவர்(?) பிரபாகரன் யார்..?? (கட்டுரை)
மேற்படி ஈரோஸ்பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் பேட்டிக்காக ஊடகங்களின் பின்னால் கேட்டலைவதொன்றும் புதிய விடயமல்ல. ஊடகங்களுக்கு உதவிகளைப் புரிவது போன்று நடித்துக் கொண்டு ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல பல மாங்காய்களை அடிக்க முயலும் இவரை ஊடகங்கள் விரைவில் புரிந்து கொள்ளும். ஈரோஸ் பிரபா தனது பேட்டியில் தாம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையென்பது போலவும், தமது வெட்கக்கேடான தேர்தல் தோல்விகளை இன்னுமே ஒப்புக்கொள்ள முடியாத மனநிலையிலும் இருப்பதையே அவர் வெளியிட்டுள்ள பேட்டி எடுத்துக் காட்டுகின்றது. அவர் தனது பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாநகரசபையில் போடப்படாத 6ஆயிரம் வாக்குகள் ஈரோஸ் அமைப்பின் வாக்குகளே. அதனையும் புளொட் அமைப்பினரே தடுத்தனர். நாம் புலிகள் எனக் கூறியே அதனைப் புளொட் அமைப்பினர் தடுத்தார்கள். அந்த வாக்குகள் போடப்பட்டிருந்தால் நாம் வவுனியா மாநகரசபையைக் கைப்பற்றியிருப்போம். வவுனியா தமது கோட்டை எனக்கூறும் புளொட் அமைப்பு அங்கு போடப்பட்ட 22ஆயிரம் வாக்குகளில் 4ஆயிரம் வாக்குகளையே பெற்றிருந்தது. இதிலிருந்தே இவர்களது நிலைமை புரிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். (வவுனியாவில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் புளொட் அமைப்பினர் என்பதை இவர் குறிப்பிட மறந்து விட்டார்.) அத்துடன் யாழ்ப்பாணத்தில் குருநகர், பாசையூர் போன்ற பகுதிகளில் ஈ.பி.டி.பியினர் மக்களை வாக்களிக்க விடாது பகிரங்கமாகவே தடுத்தனர். இதன் காரணமாகவே யாழ். நகரிலும் ஈரோஸ் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு முழுக்காரணமும் ஈ.பி.டி.பியினரே. ஈ.பி.டி.பிக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகள் எமக்கு எழுத்துமூலமாக ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இதுவரையில் 242 குற்றச்சாட்டுக்கள் முழு ஆதாரங்களுடன் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுக்களாக எமக்குக் கிடைக்கப்பெற்ற கடத்தல், கப்பம்பெறுதல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவரே தற்போது யாழ். மாநகரசபையின் பதில் மேயராக பொறுப்பெடுக்கவுள்ள றேகன் என்பவராவார் எனவும் பிரபா தனது பேட்டியில் கூறியுள்ளார். (ஈபிடிபி குறித்து ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நீதிமன்றத்தையோ மனிதஉரிமைகள் அமைப்புக்களையோ ஏன் இதுவரை இவர் நாடவில்லை? என்பதும் எமக்குப் புரியாத புதிர் தான்.)
மீண்டும் ஒரு நவயுக பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார். அவர்தான் டக்ளஸ் தேவானந்தா. இவரது தலைமையிலான ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் செய்யும் கடத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் கட்டுக்கடங்காதவை. அதேபோன்று புளொட் அமைப்பினர் வவுனியாவில் செய்யும் கடத்தல்கள், கொலைகளும் கட்டுக்கடங்காதவை. இந்த அமைப்புக்கள் இரண்டுமே அராஜக ஆயுதக்குழுக்களாகும். புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டு இயங்குபவர்களே. ஆனால் நாம் தனித்தே இயங்குபவர்கள். நாம் வெளிநாட்டில் செய்துள்ள சில முதலீடுகளால் பெறும் நிதிகள் மற்றும் சுயதொழில் மூலமும் பெறும் பணத்தினைக் கொண்டும், வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்கள் அனுப்பும் பணம் என்பவற்றின் ஊடாகவுமே எமது அமைப்பினை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஈரோஸ் அமைப்பின் தலைவரெனக் கூறிக் கொள்ளும் பிரபா என்கிற ராஐமனோகரன் பிரபாகரன் நேற்று ஊடகமொன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். (இதேவேளை ஈரோஸ் தலைவர் அமரர் சங்கர்ராஐpன் மகனான லண்டனில் உள்ள நேசன் என்வரும் தானே ஈரோஸ் தலைவரென உரிமை கோருவது தனிக்கதை.)
அத்துடன் அவர் தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தில் தமது வண்டவாளங்களை வெளிக்கொணர்ந்த ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை. ஊடகங்கள் சிலவற்றைப் பற்றி அவர் பேட்டியளிக்கையில், அதிரடி இணையம் உள்ளிட்ட சில இணையங்கள் எமக்கெதிரான சில பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. எனினும் அவை தொடர்பில் ஊடகங்களிலோ, பொலீஸ் நிலையத்திலோ பதிவுகள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்ல இவர் ஊடகவியலாளரின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் புளொட் மற்றும் ஈ.பி.டி.பியையும் தாக்கிப் பேசுவதையே தனது பதிலில் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். (யாரைப்பற்றியாவது அன்றில் எந்தவொரு செய்திகளையும் ஊடகங்கள் வெளியிடும் போது அவை தவறென்றால் முதலில் அதனை நாகரீகமான முறையில் அவ்வூடகங்களுக்கே மறுப்புத் தெரிவிக்க வேண்டும் இரண்டாவதாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டு புலம்பித் திரிவது எந்தவகையில் நியாயம்??)
முன்னர் இந்த ஈரோஸ் பிரபா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த காலகட்டத்தில் தமது அமைப்பின் அலுவலகத்தில் புலி உறுப்பினர்களை மறைத்து வைத்திருந்த காரணத்தினால் இராணுவத்தினர் அந்த அலுவலகத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது இவர் தனது ஒரு கையையும், தனது மகனாரையும் இழந்திருந்தார். இதனைத் தொடர்ந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுவிஸ் அரசின் உதவியுடன் சுவிஸ் தூதரகத்தின் அனுசரணையுடன் இவர் தனது மனைவி மற்றும் ஏனைய பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சுவிஸ்லாந்திற்கு மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்.
இவர் சுவிஸி;ல் இருந்த காலகட்டத்தில் சுவிஸ் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஏற்பட்ட தொடர்புகளினால் ஏற்பட்ட அதீத நட்பு காரணமாக மீண்டும் ஈரோஸ் அமைப்பைக் கட்டியெழுப்புவது என்று கூறிக்கொண்டு தனது மனைவி பிள்ளைகளை சுவிஸ் சோஷியல் பணத்தில் (கூப்பனில்) அங்கேயே தங்க வைத்து விட்டு, மீண்டும் இலங்கை வந்து விட்டார்.
தற்போதுகூட இவர் சுவீசிலுள்ள வவுனியாவைச் சேர்ந்த குடும்பமொன்றின் 70வயதுக்கு மேற்பட்ட வயோதிபர் ஒருவரை மிரட்டி அவரிடம் பலவந்தமாக கையொப்பம் பெற்றுக் கொண்டு அந்தக் குடும்பத்தின் வவுனியா வீட்டைப் பலவந்தமாகப் பறித்து அந்த வீட்டில் அலுவலகம் அமைத்துள்ளார். இதுபற்றி புளொட் அமைப்புக்கு எழுத்துமூலமான முறைப்பாடும் கிடைக்கப் பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து சுவிஸில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவர் மழுப்பலான பதிலையே வழங்கி வந்துள்ளார். இதன் காரணத்தினால், இவர் எப்போது சுவிஸ் வருவார், இவருக்கு “நல்லபதிலை” வழங்க வேண்டுமென்று குறித்த வயோதிபரின் உறவினர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் பகிரங்கத்திற்கு வரவேண்டிய விடயமாகும்..
இலங்கைக்கு வருமுன் இவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டு அவர்மூலம் ஏனைய தலைவர்களையும் சந்தித்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டு தான் சுகபோகமாக வாழலாம் என்ற மிகப்பெரும் கனவுடன், தனது மனைவியையும் பிள்ளைகளையும் சுவிஸ்லாந்தின் சோஷல் (உதவிப்) பணத்தில் வாழட்டும் என நட்டாற்றில் தவிக்க விட்டுவிட்டு, மீண்டும் இலங்கை சென்ற இவர். பெற்ற உதவிகளையும் உதவிகளைப் புரிந்த தலைவர்களையும் மறப்பதற்கு நீண்டநாட்கள் செல்லவில்லை. தனது குடும்பத்தை நட்டாற்றில் விட்ட இவர் தனது குடும்பத்தையே காப்பாற்ற முடியாத நிலையில் எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார் என்பது புரியவில்லை.
இவர் சுவிஸில் இருந்த காலகட்டத்தில் இவரது உயிர் நண்பராக இருந்த முஸ்லிம் அன்பரொருவரின் சிறு குழந்தையைக் கடத்திச் சென்று காசு பறிக்க முயன்ற குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்பட்டு தற்போதும் பொலீஸ், நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. அதேபோன்று இவர் சுவிஸ்லாந்தின் சூரிச் பிரபல்ய சிவப்புவிளக்குப் பகுதியான லங்ஸ்ராசா என்னுமிடத்தில் அமைந்துள்ள மிகப்பிரபல்யமான இரவு விடுதியை அமைத்து செயற்பட்டு வந்தவர். பின்னர் இவருடன் அதில் இணைந்து செயற்பட்ட நண்பர் ஒருவரை ஏமாற்றி பணம் சொத்து உள்ளிட்ட அனைத்தையும் இவர் சுருட்டிக்கொண்டு இரவு விடுதியையும் மூடிவிட்டு சென்றார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்தப் பிரபா மீது நிறையவே உள்ளன.
இவர்கள் வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாமிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்களை விடுவித்தமையும் ஆதாரபூர்வமாக பொலீஸ் நிலையத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது. அந்த ஆதாரபூர்வமான தகவல்களை பெயர் விபரங்களுடன் வெளியிடவும் தயார்நிலையில் உள்ளோம். எனினும் இதனால் பொதுமக்கள் சிலர் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாதென்பதற்காக அது தவிர்க்கப்பட்டுள்ளது. இவர் அரசுடன் சேராமலா வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்? இவரது தேர்தல் பணிகளுக்கு யார் பணம் வழங்கியது? இவரை நாட்டுக்கு அழைத்தவர் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே. டக்ளஸ் தேவானந்தாவின் உதவியிலேயே நாட்டுக்கு வந்து அவரின் உதவியிலேயே தமது அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு தற்போது டக்ளஸ் தேவானந்தாவையே தாக்கி வருகின்றார்..
எது எவ்வாறாயினும் ஈரோஸ் பிரபாவுடன் சேர்ந்து கூட்டுஅரசியல் நடத்தலாம் என எதிர்பார்த்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவருடைய பின்புலம் பற்றி அறிந்து கொண்ட போது இவரைக் கைநழுவ விட்டுவிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முதுகில் சவாரி செய்யச் சென்றிருந்த ஈரோஸ் பிரபா அமைச்சர் டக்ளசினால் கைவிடப்பட்ட நிலையில் புளொட் அமைப்பின் கதவுகளைத் தட்டினார். அவர்களும் கதவுகளை இறுக்கி மூடிய போது இந்திய றோவிடம் ஒட்டிக் கொண்டார். கிழக்கு மாகாணத்தில் தேர்தல்கள் இடம்பெற்ற போது இந்திய றோவின் உதவியுடன் தேர்தலில் குதித்தவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (அரசுக்கு) எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆசனமொன்றைப் பெற்றுக் கொண்டார். பின்னர் கிழக்கு மாகாண தேர்தலில் பங்குகொண்ட போது குறுகியகால இடைவெளியில் இவருடைய சுயரூபத்தை அறிந்து கொண்ட மக்கள் இவரைத் தூக்கி எறிந்தனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அரசுடன் இணைந்து கொண்டு வவுனியா உள்ளுராட்சி மன்றம் மற்றும் யாழ் தேர்தல்களில் பங்கு கொண்டு மண்கவ்வினார். தற்போது இவர்களுக்கு மக்களிடம் உள்ள ஆதரவை அறிந்து கொண்ட அரசு இவர்களை எட்டத் துரத்தஉள்ள நிலையில் அரசு போடும் எலும்புத் துண்டுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் அவமானம் ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இது எப்படியிருக்கு??
திரு.துரியோதனன் -யாழ்ப்பாணம். (thanks… ATHIRADY)
more
-
பிரபாகரனின் அரிய வீடியோ காட்சிகள் 1985-1989 (videos)
இந்திய இராணுவ அதிகாரியுடனான சந்திப்பு,பிர்த்தானிய அரசுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்க்க மறுப்பதையும் கூறும் விளக்க உரை ,ஹெலிகொப்ரர் விஜயம் ,இன்னும் பல வீடியோக்கள் .
more
-
கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள்!
புலிகளின் சிறுகுழு ஒன்று தமது தற்கொலைதாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் கொழும்பு மாநகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஒளிந்திருக்கின்றது என மேற்கு மாகாண நடவடிக்கைகளுக்கு பொறுப்பான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் செயற்படுகிறார்கள் தற்கொலைக் குண்டுதாரிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கின்றது. பொலிஸாரும் இராணுவத்தினரும் பல இடங்களில் ஆயுதங்களை மீட்டுள்ளனர். படையினரின் 60 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களை பயங்கரவாதிகள் குழப்பும் சாத்தியம் உள்ளதால் நகரிலும் சுற்றுப்புறங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மே 19 ஆம் திகதி நந்திக்கடல் ஏரிப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் தாக்குதல் ஒன்றுதானும் இடம்பெறவில்லை எனினும் மட்டக்களப்பில் சிப்பாய் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
more
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் காயம்
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகை தந்துள்ளார்.
ஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சரின் வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் அமைச்சருக்கு கால்களிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் மெய்பாதுகாவலர் மற்றும் சாரதிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பி விட்டார் என்று பிந்திகிடைத்த தகவல் உறுதிப்படுத்துகிறது .
தகவல் தந்த பெயர் குறிப்பிடாத அன்பருக்கு நன்றி
more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



