Advertisement



  • அமெரிக்கா ஏற்காத சர்வதே யுத்த குற்ற நீதிமன்றத்தை, ஏற்றுக்கொள்ள முடியாது: உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாத சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
    உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாத சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
    கடந்த காலங்களில் யுத்தக் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
    எனினும், யுத்த குற்ற நீதிமன்றத்தினை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் சொந்த நாட்டிலேயே குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும், சர்வதேச நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் நம்பிக்கை இல்லை எனவும் சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
    உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவே சர்வதேச யுத்த நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கை மட்டும் ஏன் சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக பரவலாக சர்வதேச சமூகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    more
  • டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தாக்கப் பட்டுள்ளது
    புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் மீது இன்று பிற்பகல் 3 மணியளவில் மர்மக் கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கும்பலில் சுமார்  30  பேர் இருந்ததாகவும், தூதரகக் கட்டடம் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இவர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியமை காரணமாக, உயர்ஸ்தானிகரகத்தின் கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
    இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை.
    தற்போது அந்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்தச் சம்பவத்தையடுத்து, கூடுதல் பாதுகாப்பு தேவையென்று தூதரக அதிகாரிகள் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
    அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது.

    more
  • ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை ஒரு போதும் அடிப்பணிந்த நிற்காது
    ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுபிகின்ற ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசு ஒரு போதும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கைட்டி அடிப்பணிந்த நிற்காது என ஏற்றுமதி வர்த்தக அமைச்சர் என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

    அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று  இடம்பெற்றது. இந்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

    இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜி எல் பீரிஸ் ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் பல பிழையான கருத்துக்கள் இந்த நாட்டில் நிலவி வருவதாக குறிப்பிட்டார்.

    ஊதாரணமாக இந்த நாட்டில் தற்போதுள்ள எதிர்கட்சிகள் இந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தமது அரசியல் இலாபத்திற்காக பல்வேறு வழிகளில் கையள்வதுடன், இதனை அரசியல் இலாபம் கருதி அரசியல் வியாபாரமாக மாற்றியுள்ளதகாவும் கூறினார்.

    உண்மையில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் ஆராய்ந்துகொண்டிருப்பதாவும் இது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் அரசாங்கமும் நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளதுடன், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆவணங்களையும்; தகவல்களையும் வழங்குவர் எனினும் எதுவித விசாரணைகளுக்காகவும் இலங்கை அரசாங்கம் அவர்கள் முன் கைட்டி அடிப்பணிந்து நிற்காது எனவும் அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

    இறைமையுள்ள நாடு ஒருபோதும் இதற்கு அனுமதிக்க மாட்டாது எனவும் தாம் தமது சுயகௌரவத்தை ஒருபோதும் இழக்க தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

    எனினும் இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் இந்த ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பு தொடர்பில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு இந்த வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள எடுக்கப்படவேண்டி அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை புதிய கண்ணோட்டத்தில் பார்;க்கவேண்டுமெனவும், பயங்கரவாதம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்நிலையில், பொருளாதார அபிவிருத்திக்காகவும், நாட்டின் வளாச்சிக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வாரிச்சலுகையை நீடித்து உதவ வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வாரிச்சலுகையினால் 7200 பொருட்கள் வரிச்சலுகையுடன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், இதில் ஆடைத்துறையும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

    தேசிய வருமானத்தில் பிரதான இடம்வகிக்கின்ற இந்த ஆடைத்துறை, ஜிஎஸ்பி பிளஸ் வாரிச்சலுகை கிடைக்காவிடின் பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் வாய்ப்புள்ளதாலும், இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் நிலையிருப்பதனாலும் ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வாரிச்சலுகையை நீடித்து வளர்ந்து வரும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு தமது உதவியை வழங்கவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

    more
  • குருநாகல் குண்டுவெடிப்பில் பாடசாலை சிறுமியும் சாரதியும் பலி

    குருநாகலில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை குருநாகல், உடுவல்பொலவில் வேனொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்த மாலியாதேவ பாலிகா வித்தியாலய மாணவியான எரந்திகா திஸாநாயக்கவும் (12 வயது) உயிரிழந்துள்ளார். அதேவேளை வேனின் சாரதியும் உயிரிழந்துள்ளார்.ஏனையோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

    more
  • ஒபாமா கொல்லப்படுவாரா?

    அமெக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொல்லப்படுவார் என நீங்கள் நினைக்கிறீர்களா என வினவும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பொன்றை "பேஸ்புக்' இணையத்தளத்தில் வெளியிடப்பட்டமை தொடர்பில் அமெக்க இரகசிய சேவை பிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
    மேற்படி வாக்கெடுப்பில் "ஒபாமா கொல்லப்படுவாரா?' என்ற கேள்விக்கு பதிலாக "இல்லை, இருக்கலாம், ஆம், ஆம் அவர் சுகாதார நிதி ஒதுக்கீட்டை குறைத்தால்' ஆகிய விடைகள் பிரசுக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பில் "பேஸ்புக்' இணையத் தளத்தின் கொள்கை பேச்சாளர் விபரிக்கையில், ""நாம் இந்த இணையத்தள வாக்கெடுப்பை வெளியிட்டவர்களைக் கண்டறிய இரகசிய சேவையுடன் இணைந்து பணியா ற்றுகிறோம். ஆனால் அவர்கள் தமது விசாரணைகள் தொடர்பில் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை'' என்று கூறினார்

    more
  • சமாவோ தீவில் சுனாமி அனர்த்தம் : 100க்கும் அதிகமானோர் பலி
    பசுபிக் பெருங்கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலும் நாசமாகின.

    மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோளில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    டோங்காவில் 5 பேர் பலி...

    அருகில் இருக்கும் டோங்கா தீவிலும் சுனாமி தாக்கி 5 பேர் பலியானார்கள். மேலும், இந்த சுனாமி அலைகள் நியூசிலாந்து வரை வந்தன. அங்கு குறைந்த உயர சுனாமி அலையே வந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    சமோவா தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாகும்.

    அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாவோ சென்றடைந்துள்ளன.

    more
  • 600 சீனர்கள் முஸ்லிம்களாக மாறினர்


    சவுதி, செப். 29: சவுதியின், மெக்கா மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக, 450 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தை பல கோடி ரூபாய் ஒபந்தத்தில் சீன ரயில்வே கம்பெனி ஒன்று எடுத்துள்ளது. இந்த கம்பெனியில் வேலை பார்த்த, 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில் முஸ்லிம்களாக மதம் மாறினர்.

    இது குறித்து மெக்காவைச் சேர்ந்த அதிகாரி அப்துல் அசிஸ் அல்குதைரி கூறுகையில், "சீனர்கள் பணியாற்றிய பகுதியில், அவர்கள் மொழியில், இஸ்லாமிய புத்தகம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில், இந்த மதமாற்றம் நிகழ்ந்துள்ளது' என்றார்.

    ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றும், 5,000 சீன பணியாளர்கள் இடையே, இஸ்லாம் தொடர்பான தகவல்களை பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

    more
  • சொத்துக்களை முடக்கி கொண்டு தப்பியோடுவதில் புலம்பெயர் புலிகள் தீவிரம்!
    புலம் பெயர் நாடுகளில் தமிழீழ மண்மீட்பு நிதி என்று திரட்டப்பட்ட பணத்தினை முடக்குவதில் புலம்பெயர் புலிகள் தீவிரம். கடந்த மே 18ம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளின் புலிகளுக்குள் முரண்பாடுகளும் விரிசல்களும் தலைவிரித்தாடி வருகின்றன.


    வாங்கப்பட்ட சொத்துக்களை பிரிப்பது, சேகரிக்கப்பட்ட நிதியை பங்கீடுபோட்டு கொள்வது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, பிரிட்டன், ஜேர்மன், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனிநபர் பெயர்களில் வாங்கப்பட்ட வர்த்தக நிலையங்கள, உணவகங்கள், ஆலயங்கள், ஊடகங்கள் என்பனவற்றை பங்கீடுபோடுவது அவ் முதலீடுகளை விற்று பணத்தினை எடுத்துக் கொண்டு வேறு மாநிலங்கள், நாடுகளில் தமது சொந்த தொழில்கள் என்று ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மிக தீவிரமாக ஜரோப்பிய நாட்டில் இடம்பெற்று வருகின்றது.



    வன்னியில் யுத்தம் இறுதிகட்டத்தை அடைந்து கொண்டிருந்தபோது கூட சுவிற்சர்லாந்தில் உள்ள தமிழ்மக்கள் மத்தியில் புலிகள் பெருமளவு நிதியை திரட்டியுள்ளனர். பல தமிழ்மக்களை கொண்டு வங்கிகளில் கடனாக பணம் எடுத்து தரும்படி கோரி 10,000 தொடக்கம் 25,000 வரையிலான சுவிஸ் பிராங்குகள் கடனாக எடுத்து கொடுக்கப்பட்டதும். இதனால் கடன் எடுத்து கொடுத்தவர்களின் குடும்பங்களிற்குள்ளேயே குடும்ப பிரச்சினைகளும் எழுந்துள்ளன.



    நிதி எவ்வாறு எல்லாம் சேகரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சேகரித்த புலிகள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். பனியிலும், குளிரிலும் உழைத்து சம்பாதித்த பணத்தினை சுறண்டிக்கொண்ட புலிகள் இன்று அவ் பணத்துடன் தமக்கென்று ஒர் உல்லாச வாழ்வை மேம்படுத்திக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.




    more
  • மாகாண நிர்வாகத்தில் கருணா தலையிட்டால் சிறையில் அடைப்பேன். பிள்ளையான்

    கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்துவரும் தருணத்தில் கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினரிடையேயான அதிகாரப்போட்டி தீவிரமடைந்து வருவதுடன், அவை கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்வில் அச்சத்தை தோற்றுவித்து பலத்த சந்தேகங்களையும் உண்டுபண்ணி வருகின்றது.

    கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்த்தில் உள்ள பிரதேச செயலர் அலுவலகங்கள் போன்ற மக்களுடன் மிகவும் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ள அலுவலகங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன், அங்குள்ள அதிகாரிகளுக்கு மிகவும் அதிகார தோரணையிலான கட்டளைகளை வழங்கிவருவதாகவும், அக்கட்டளைகள் தனது கட்சியின் எதிர்கால நலன் சார்ந்தாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    எதிர்பாராத விதமாக எவ்வித முன்னறிவித்தலும் இன்றி அலுவலகங்களுக்குச் செல்லும் முதலமைச்சர் அங்குள்ள அதிகாரிகள், மக்களுடன் பேசும்போது, நியமன எம்பி முரளிதரன் மற்றும் ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதி ஆகியோருக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தலையிடுவதற்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும் இங்குள்ள அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் அவர்களின் எவ்வித ஆலோசனைகளுக்கோ அன்றில் கட்டளைகளுக்கோ செவி மடுக்க கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அவ்வாறு அவர்களின் செயற்திட்டங்களுக்கு கீழ்படிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கருணா, பாரதி ஆகியோர் கிழக்கு மாகாண நிர்வாகத்தினுள் தங்கள் மூக்கை நுழைப்பார்களேயானால் அவர்களை சிறையில் அடைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு முதலமைச்சர் பிள்ளையான் அலுவலகங்களுள் நுழையும்போது அங்கு கடமைகள் நிமித்தம் சென்றிருக்கக்கூடிய மக்கள் வெளியேறுவதற்கோ, புதிகாக காரியாலய வளாகத்தினுள் எவரும் உள்நுழைவதற்கோ முடியாதவாறு பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும்போது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகின்றது. 

    நன்றி :நிதர்சனம் .நெற்

    more
  • மாவீரர்களை பிரதேச ரீதியாக , சாதிரீதியாக ஓரங்கட்டிய நோர்வே புலிகள்.
    நோர்வேயில் பாதுகாப்பு பிரிவின் இரகசிய கவனிப்புடன் திலீபன் > சங்கர் > குமரப்பா புலேந்திரன் ஆகியோரின் நினைவு தினங்கள் நேற்றயதினம் ஒஸ்லோவில் நடைபெற்றது.


    இந்த மூவரும் யாழ்பாணத்தை சேந்தவர்கள்.

    ஆனால் இதே திகதியில் இதே காலப்பகுதியில் கடந்த 30 வருட யுத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த பல நுற்றுக் கணக்கான போராளிகள் நினைவுகூரப்படாது ஒஸ்லோவில் அவமதிக்கபட்டுள்ளனர்.
    நேற்றயதினம் கிளெநொச்சி நகர் மீட்பின்போது 403 போராளிகள் இறந்தனர் ஆனால் அவர்கள்ஒஸ்லோவில் நினைவு கூரப்படவில்லை.
    லெப்.கேணல் சுபன் நினைவு தினம் 25ம்திகதி ஆனால்அவர் நினைவு கூரபடவில்லை.

    அவருடைய படம் அகற்றபட்டிருந்தது அல்லது காணவில்லை.

    முல்லை கடற்பரப்பில் நீரடி கரும்புலி தாக்குதல் நடாத்தபட்டபோது 3 கரும்புலிகளும் லெ.கேணல் சூட்டா நினைவுநாளும் அதே 26 திகதி நேற்று முன்தினம் ஆனால் அவர்களின் படங்கள் அகற்றபட்டிருந்தது.
    இதற்கும் அப்பால் இதே வாரத்தில் நடந்த நகர்கோவில்பாடசாலை படுகொலையை நினைவுகூரத்தெரியாத நோர்வே புலிகள்

    மூத்த உறுப்பினர் பரமதேவா
     திருமலை மாவட்ட துனை தளபதி சுரேந்திரன்
     மணலாறு மாவட்ட தளபதி அரவிந்தன்
     ஆகியோரை அவமதித்து

    அவர்களை மாவட்டரீதியாக ஒருங்கட்டி பிரதேச ரீதியாக புறந்தள்ளி 

    நோர்வெ புலிகள் யாழ்பாணத்து மாவிர்களுக்கு மட்டும் மாலைபோட்டு கூத்தாடினர்.
    இவர்களின் படங்கள் இல்லை என்று நோர்வெ புலிகள் சொல்லவரலாம்.

    இது பம்மாத்து

    நோர்வே புலிகளிடம்

    எந்த இடத்தில் இத்தனை மாவீரர்களின் படங்களும்உண்டு என்பதனை

    இந்த செய்தி எழுதுபரால் காட்டமுடியும்.

    more
  • இந்தியா தப்பிவிட்டது
    பிரபாகரனிடம் இந்தியாவை கொடுத்திருந்தால் அப்துல்கலாம் கனவு நிறைவேறியிருக்கும்:சீமான்

    பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.

    ’’புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    பாகிஸ்தானும்,சீனாவும் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது ஏன் இந்தியாவுக்கு புரியமாட்டேங்குது.

    அண்ணன் பிரபாகரன் எப்போதுமே இந்தியாவை தன் நட்பு நாடாகத்தான் பார்த்துவந்தார். அதனால்தான் இந்தியாவை பாதுகாத்து வந்தார். ஆனால் சிங்களவன் இந்தியாவுடன் நெருங்கியே இருந்தான்.

    இந்தியா-சீனா எல்லைப்பிரச்சனை வந்தபோது சீனாவுக்குத்தான் ஆதரவாக இருந்தான் சிங்களவன். இப்போதும் ஆதரவாகத்தான் இருக்கிறான். இந்தியா உள்நோக்கத்துடனேயே உதவுகிறது என்று சரத்பொன்சேகா சொல்லியிருக்கிறார். ஈழம் கிடைத்திருந்தால் எப்போதும் நட்பாகவே இந்தியா இருந்திருக்கும்.

    2020ல் இந்தியா வல்லராக ஆகும் என்று அப்துல்கலாம் கனவுகண்டார். அந்த கனவு நிறைவேறுவது மாதிரி தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

    பிரபாகரனிடம் இந்தியாவை ஒப்படைத்திருந்தால் 2020ல் அல்ல; இன்னும் 5 ஆண்டுகளிலேயே உலகின் மிக பெரும் தேசமாக இந்தியாவை மாற்றியிருப்பார்.( இப்போது வன்னி இருப்பதைபோல )அப்துல்கலாம் கனவு வெகு சீக்கிரமே நனவாகியிருக்கும்’’என்று பேசினார்.

    more
  • காடுகளில் அநாதரவாக்கப்பட்ட புலிப்போராளிகள் – புதிய இணைவுகளின் அவசியம்! : கேசவன்

    எண்பதுகளின் பின்னான தமிழ் பேசும் மக்க்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான தற்காப்பு யுத்தம் என்பதும் எதிர்ப்பரசியல் என்பதும், புலிகள் என்ற எல்லலைக்குள் குறுக்கப்பட்டிருந்தது. இந்தக் குறுகிய எல்லைக்குள் புலிகளின் பாசிசக் கூறுகள் வளர்ந்து செல்ல இதன் மறுபுறத்தில், சிங்கள மக்கள் மத்தியிலிருந்த சிங்கள பௌத்த பாசிசத்தின் எதிர்ப்பு சக்திகளும், இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்த முற்போக்கு அரசியலுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் மனிதாபிமான சக்திகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பரசியலிலிருந்து அன்னியப்படுத்தப்பட்டனர்.
    அரசியற் பின்னடைவு..
    ஈராக் மக்கள் மீதான அமரிக்க அழிப்புயுத்தத்திற்கு எதிராகவும், ஆப்கனிஸ்தானில் ஐரோப்பிய அமரிக்கக் கூட்டுக்கள் நடத்தும் மனிதப்படுகொலைகளுக்கு எதிராகவும், பலஸ்தீனிய ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராகவும் தெருவில் இறங்கிக் குரலெழுப்பும் எந்த ஐரோப்பிய முற்போக்கு சக்திகளும் இலங்கைப் பிரச்சனை குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. புலிகளின் அரசியற் தவறு என்பது சிங்கள பௌத்தப் பேரின வாதம் நிகழ்திக் கொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்பிற்கு எதிரான பாரிய அரசியற் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
    விரும்பியோ விரும்பாமலோ புலிகளோடு தங்களை இணைத்துக் கொண்ட ஆரம்ப நிலைப் போராளிகளில் பலர், அதன் பின்புலத்திலிருந்த அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், சிறீலங்கா அரசின் மூர்க்கத் தனமான அடக்குமுறைக்கு எதிரான ஒரே எதிர்ப்பியக்கம் என்ற அடிப்படையிலேயே இணைந்திருந்தனர்.
    போராட்டத்தின் இன்றைய தேவை..
    புலிகளின் அழிவிற்குப் பின்னர் இவர்களில் ஒரு பகுதி அன்னிய நாடுகளுக்ளை நோக்கி இடம் பெயர்ந்திருந்தனர் என்பது தவிர, ஒரு குறித்த சிறு பகுதியினர் இலங்கையின் காடுகளுக்குள் மறைந்திருக்கின்றனர். சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் இனவழிப்பிற்கு எதிராக  தற்காப்பு யுத்தம் என்பது இன்றைய அரசியற் சூழலில் அவசியமானதும் அவசரமானதுமாகும். 80 களில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்கு முறைகெதிரான ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் அவசியத்திலும் அதிகமாக இன்று அதன் தேவை அதிகமாகவே உணரப்படுகிறது. இந்த யுத்தம் புலிகளின் சிந்தனை முறையின் அடிப்படையில் புலிகளின் பழைய தலைமை முன்னெடுக்கப்படுமாயின் மறுபடி இன்னொரு பாசிசமே வளர்த்தெடுக்கப்படும்.
    இலங்கைக்கு மட்டுமல்ல, தெற்காசியாவிற்கும் ஏன் மொத்த மனிதகுலத்திற்குமே அபாயகரமான அடக்கு முறையின் சின்னமாக அமைந்திருக்கும் சிறீலங்கா அரசிற்கெதிரான தற்காப்பு யுத்தம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களையும், மலையக மக்களையும், ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்படும் பெரும்பாலான சிங்கள மக்களையும், மனிதகுலத்தின் மீது பற்றுள்ள உலக மக்களையுமே இணைக்கவல்லது.
    சிந்தித்தால் கூட சிறையிலடைத்துச் சித்திரவதைக்குட்படுத்தும் சிறீலங்கா அரச பாசிசத்திற்கு எதிரான எதிரான எதிர்ப்பரசியல் என்பது இலங்கையின் எல்லைக்கு வெளியில் அன்னிய தேசங்களில் கூட சாத்தியமற்றது என்றாகிவிட்ட விரக்தி மிக்க சூழலில் காடுகளிலிருக்கும் எஞ்சிய, புலிகளின் அரசியல் சிந்தனை முறைக்குட்படாத போராளிகளின் அரசியல் நகர்வுகள்  உடனடியான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. ஆரம்ப நிலைப் போராளிகளாக இருந்த புலிகளின் பாசிச சிந்தனைகளுக்கு உட்படாத சில குழுக்கள் கூட வன்னிப் பகுதிக்காடுகளில் அனாதரவாக விடப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் கசிகிறது. இவர்கள் நடத்தவல்ல தற்காப்பு யுத்தம் மட்டுமே உடனடியான இடைவெளியை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.
     தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுமே அரச அடக்குமுறைகெதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெளியை ஏற்படுத்த வல்லது.
    புதிய இணைவுகளின் அவசியம்
    புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவு வியாபாரிகள் இப்போராளிகள் குறித்து எந்த அக்கறையும் காட்டத் தயாரில்லை. இப்போராளிகளின் அன்றாட வாழ் நிலை என்பதே கேள்விகுள்ளாகப் பட்டுள்ள சூழலில், இவர்களில் அழிவையே எதிர்பார்க்கும் புலி சார் புலம் பெயர் வியாபாரிகள், இலங்கை அரச பாசிச சார்புநிலை நோக்கியே தம்மைக் கட்டமைத்துக்கொள்கின்றனர். “பிரபாகரன் வாழ்கின்றார்” என்று அரசியல் வியாபாரம் நடத்த்திக்கொண்டிருக்கும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இவர்களின் இன்னொரு எதிரிகள்.
    இலங்கை அரசு வனப்பகுதிகளைச் சார்ந்த கிராமங்களில் இராணுவக் குவிப்பை நிகழ்த்தி வருகிறது. இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு நடவடிக்கைகள் காடுகளை நோக்கி மறுபடி மேற்கொள்ளப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
    இடதுசாரிகளின் வரலாற்றுக்கடமை..
    இந்த நிலையில் ஒரு புறத்தில் இப்போராளிகளின் முற்போக்கு அரசியற் சக்திகளுடனான இணைவும், மறு புறத்தில் அவ்வாறான அரசியற் சக்திகள் போராளிகளின் இருப்பை உறுத்திப் படுத்துவதும், அவர்களின் அரசியல் நகர்வு சிறிலாங்கா அரச பாசிசத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் தற்காப்பு யுத்தமாக பரிணாமமடைய உதவுவதும், இன்றைய வரலாற்றுக் கடமை.
    தமிழ் பேசும் சிறுபான்மை மக்களில் போராட்டத்தை சர்வதேசிய அரசியலின் ஒரு பகுதியாகக் கருதும், இந்தியாவெங்கும் பரந்திருக்கும் முற்போக்கு சக்திகளும், முற்போகு இயக்கங்களும் அபாயகரமான இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரகப் போராடவல்ல இந்த சந்தர்ப்பததைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாவோயிஸ்டுக்கள் மீதான இந்திய அரச பயங்கரவாதம் நத்திகிராமிலும், லால்காரிலும், இன்னும் பல கிராமங்களிலும் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. இந்திய அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பொதுவான போராட்டம் என்ற தளத்தில் இலங்கைப் போராளிகளுடன் ஏற்படுத்தப்படுகின்ற இணைவு என்பது புலம் பெயர் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியர்கள் போன்ற அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றிணைக்கும் வலிமைபெற்றது. தென்னாசியாவின் மக்களின் விடுதலைக்கு ஆரம்பப் புள்ளியாக அமையவல்லது. வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற காலப்பகுதியில், தமிழ் நாட்டிலே கருணாநிதி அரசின் அடக்குமுறைகளுக்கு மத்தியில், விட்டுக்கொடுப்பற்ற போராட்டங்களை நடத்திய இடதுசாரி முற்போக்கு சக்திகள் இந்தச் சந்தர்ப்பத்தை நிராகரிக்க மாட்டார்கள்.
    இந்தியாவின் மறு கோடியில் இந்திய மேலாதிக்கவாததை எதிர்த்த நேபாள மாவோயிஸ்டுக்களின் போராட்டம் குறித்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்திய மாவோயிஸ்டுக்களிடம் தோற்றுப் போய்விட்டதாக இந்தியப்பிரதமர் கண்ணீர் வடிக்கிறார். ஆக, போராட்டங்களும் எதிர்பியக்கங்களும் தோற்றுப்போய்விடவில்லை. புதிய அரசியலும், புதிய இணைவுகளும், புதிய தந்திரோபாயமும் தான் இன்றைய தேவை என்பதை இலங்கையிலிருக்கும் போராளிகள் உணர்ந்துகொள்வார்கள். அதிகாரத்தின் பின்னணியில் அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளுடனன்றி, மக்கள் மீது பற்றுள்ள போராட்ட சக்திகளுடனான இணைவு என்பதே அனாதரவாகக் காடுகளில் வாழ்கின்ற ஆரம்ப நிலைப்  போராளிகளைப் புதிய தென்னாசிய அரசியல் சக்திகளாக மாற்றியமைக்க வல்லது.
    புலிகளின் அரசியல் என்பதும் அதன் சிந்தனை முறை என்பதும் அபாயகரமான பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும். இதன் தலைமட்ட உறுப்பினர்கள் அந்த சிந்தனை முறையில் உறியவர்கள். இச்சிந்தனை முறை தகர்த்தெறியப்படவேண்டும். இதன் சரியான தலைமை என்பது இந்திய இடதுசாரி அணியின்டமிருந்தே எதிர்பார்க்கப்படலாம்.

    more
  • எழுந்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும் விழுந்துக்கொண்டிருக்கும் பாடசாலைகளும்







    பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது.தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.
    பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக்கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியலான் பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது.
    பள்ளிவாசல்கள் இப்படி எழுந்து வரும்போது முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியே நிற்கின்றன. கல்வி தொடர்பான முஸ்லிம்களின் வரலாறு கசப்பானதாகவே இருந்து வருகிறது. காலா காலமாய் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள்.
    பாடசாலைகள் கீழே விழுந்துக்கொண்டிருக்கின்றன.
    பள்ளிவாசல்கள் மேலே மேலே எழுந்துக்கொண்டிருக்கின்றன.
    பள்ளிவாசல்கள் சமுதாயத்தின் மத்திய நிலையங்கள் என்று மார் தட்டுவோர் கூட அதை ஒரு சுலோகமாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். பாடசாலைகளையும் பள்ளிவாசல்களையும் ஒரே கண்ணால் பார்க்காமல் ஓரவஞ்சனையோடு பார்க்கவே பழகிவிட்டார்கள்.
    முஸ்லிம் சமூகத்தில் பள்ளிவாசலும், பாடசாலையும் இரண்டு துருவங்களாக இருந்து வருகின்றன. இந்த முரண்பாடான நிலை சமூகத்தில் அறிவில்லாதோர் ஆள்பலத்தை அதிகரிக்கச் செய்கிறது. அறிவீனத்தை தமக்கு சாதகமாக்கும் இந்த முயற்சி திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சர்வதேச சதியாகும். அந்தச் சதிக்கு வெளிநாட்டுப்பணம் இஸ்லாமிய இயக்கங்களினூடாக இரைக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.
    அறிவின்றி வளரும் ஆன்மிகம் சமூகத்தில் பிரச்சினைகளையும், பிளவுகளையும் தோற்றுவித்து வருகிறது. இது எங்களுக்கு வேதனையைத் தந்தாலும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
    இலங்கை முஸ்லிம்கள் கல்வி ரீதியில் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றனர். சனத்தொகைக்கு ஏற்ப பாடசாலைகள் அதிகரிக்கப்படாதது பாரிய குறையாக இருக்கிறது. முஸ்லிம் பாடசாலைகளின் பற்றாக்குறையால் அல்லது பௌதிக வளப்பற்றாக்குறையால் கல்வி பெற மாற்று மத பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
    மாற்று மத பாடசாலைகளில் முஸ்லிம் மாணவ மாணவிகள் கலாசார ரீதியிலான பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். சில மாற்று மத பாடசாலைகள் முஸ்லிம் மாணவர்களை முற்றாக நிராகரித்தும் வருகின்றன.
    குறிப்பாக கொழும்பு நகரத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் கல்வியில் பாரிய பின்னடைவை எதிர்நோக்குகின்றார்கள். மிக நெரிசலான வாழ்க்கையும் வறுமையும் கல்வியிலிருந்து அவர்களை தூரமாக்கி வருகிறது.
    நெரிசலான தோட்டங்களில் வாழ்கின்ற கொழும்பு மாணவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளில் ஒழுங்கான மலசல கூட வசதியில்லாத காரணத்தால் பாடசாலைக் கல்வியில் ஆர்வமில்லாமல் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
    நெரிசலான தோட்டங்களில் வாழும் இவர்களுக்கு போதிய மலசல கூட வசதியில்லாததால் (இருபது அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளுக்கு இரண்டு அல்லது மூன்று மலசல கூடங்களே இருப்பதால்) காலை வேளையில் ஏற்படும் நெருக்கடி இவர்களை பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல வாய்ப்பளிப்பதில்லை. நேரம் தாழ்த்தி பாடசாலைக்கு செல்லுவதில் உள்ள தயக்கம் காலப்போக்கில் இவர்களை பாடசாலைக் கல்வியிலிருந்து தூரமாக்கிவிடுவதாக அதிர்ச்சி தரும் தகவலை அந்த ஆய்வு வெளியிட்டுள்ளது.
    மறுபுறம் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப பாடசாலைகள் அபிவிருத்தியடையாத நிலையும், இருக்கின்ற பாடசாலைகள் குறைந்த பௌதிக வளங்களை கொண்டிருப்பதுவும் இந்த பின்னடைவிற்கான முக்கிய காரணங்களாகும்.
    சமூகத்தின் இரண்டு கண்களாக பள்ளிவாசல்களும், பாடசாலைகளும் கணிக்கப்பட வேண்டியுள்ளன. ஆனால் இலங்கை சமுதாயம் பள்ளிவாசல்களை மட்டும் கட்டிப்போட்டு அழகு பார்க்கின்ற கைங்கரியத்தையே கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறது.
    இரண்டு கண்களில் ஒன்று மிளிர்ந்துக்கொண்டும் ஒன்று குருடாகிக் கொண்டும் செல்கிறது. வெளிநாட்டுப் பணம் கூட பள்ளிவாசல்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணத்தை கொண்டு வந்து கொட்டும் தஃவா இயங்கங்கள் கல்விப் பிரச்சினைகளை, பாடசாலை பிரச்சினைகளை அவர்கள் முன்வைக்கும் போது கல்வியை உயிர்ப்பிப்பது என்னவோ மாற்று மத விவகாரம் போல் நினைத்து முகம் சுளித்து நழுவி வருகின்றன.

    “பிள்ளைகளுக்கு ஒழுங்காக படிக்க வகுப்பறைகள் இல்லை உதவி செய்யுங்கள்” என்று இந்த இயக்கங்களிடம் கேட்டால்,
    “தொழுகை அறை ஒன்று கட்டித்தரட்டுமா?” என்று மூடனைப்போல் பதில் தருகிறார்கள். பசிக்கு உணவு கேட்கும் போது உங்கள் தலைக்கு அணிய ஒரு தொப்பி தரட்டுமா? என்று கேட்பது போல் இவர்களின் பதில் இருக்கிறது.
    “உங்கள் பாடசாலை பிரச்சினையை நாங்கள் பலருக்கு அறிவித்திருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்” என்று
    உம்மத்தின் பிரச்சினையை அவர்கள் பொறுப்பேற்காது, கல்விப் பிரச்சினை என்ன பெரிய பிரச்சினையா என்பது போல் அதை எங்களது பிரச்சினையாக்கி காலத்தை மெதுவாக கடத்துகிறார்கள்.
    முஸலிம் உம்மத்தின் உண்மையான பிரச்சினைகளை ஓரம்தள்ளிவிட்டு வேறு ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு வேலை பார்க்கும் இவர்கள் ஒரு விபரீதத்தோடு விளையாடுகிறார்கள்.

    இதை வாசிக்கும் உங்களுக்கு பொறுப்புள்ளவர்களாய் காட்டிக்கொள்ளும் இவர்கள் “ மூடர்களைப் போல் பதில தருகிறார்களா? என்று நீங்களே யோசிக்கலாம். மூடனைப்போல் பதில் தருவதற்கு உண்மையில் அவர்கள் மூடர்கள் அல்லர்.
    கல்வி, பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி விழி பிதுங்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்களே முஸ்லிம்கள் ! உண்மையில் அவர்கள்தான் மூடர்க்ள.
    இந்த இயக்கவாதிகள் படு புத்திசாலிகள் !
    காரணம் கொழும்பில் உள்ள முஸ்லிம் சமுதாயம் கல்வி கற்றால், கல்வியில் முன்னேற்றம் கண்டால், பொருளாதார வளர்ச்சி கண்டால்...
    இஸ்லாத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடாத்தும் இவர்களின் போலி தத்துவங்கள் தவிடுபொடியாகும்.
    இவர்களது தலைமையகங்கள் பெட்டிப் படுக்கைகளோடு தத்தமது நாட்டுப் புறங்களுக்கு நாடு கடத்தப்படும் என்று யதார்த்தத்தைப் புரிந்துதான் இவர்க்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை புரம்தள்ளி, கல்விக்கு கரம் கொடுக்காத இந்த ஈனச் செயலை செய்து வருகிறார்கள்.
    இந்த இயக்கங்களுக்காக அந்நிய சக்திகளின் ஆசிர்வாதத்தோடு அரபுகளின் கோடிக்கணக்கான கருப்புப் பணம் ( வங்கிகள் ஊடாக மட்டுமல்ல) கொழும்பில் வந்து கொட்டப்படுகிறது. இவற்றால் கொழும்பு மக்களுக்கு ஒரு துரும்பும் கிடைப்பதில்லை. தத்தமது இயக்கம் ஆதிக்கஞ் செலுத்தும் ஊர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டுமே இது செலவிடப்படுவதாக குற்றம் சாட்டவும் படுகிறது. கொழும்பு முஸ்லிம்கள் கல்வி, பொருளாதார பிரச்சினைகளுக்காக கையேந்தி நிற்கிறார்கள். அவர்களைக் கவனிக்க யாருமே இல்லை.
    பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அல்லல் படுகின்றார்கள். முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாட்டால் அந்நிய மத பாடசாலைகளுக்கு செல்லும் பிள்ளைகளும், பெற்றோரும் முஸ்லிம் ஆடை அணிந்து வரக் கூடாது என்று அச்சுறுத்தப்படுகிறார்கள்.
    கொழும்பு 15 சென் அந்தனீஸ் மேரி மாக்ரட் பாடசாலை பாலர் பிரிவில் கல்வி கற்ற 14 முஸ்லிம் மாணவிகள் உயர் பிரிவிற்கு சேர்க்கப்படவி்ல்லை காரணம் உயர்பிரிவிற்கு அவர்கள் நீண்ட காற் சட்டை அணிந்து செல்வதை ஏற்றுக்கொள்ளாத பாடசாலை நிர்வாகம் கடந்த ஒன்பது மாதங்களாக அவர்களின் கல்விக்கு தடை விதித்துள்ளது. இந்தப் பிள்ளைகளின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராடுவதற்கு விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே இணைந்துள்ளனர்.
    அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிழலில் குர்ஆனின் ஆட்சியை நிலை நிறுத்த கனவு காணும் கொள்கைவாதிகளோ, விரல் ஆட்டும் சுன்னத்தைக் கூட விடமாட்டோம் போராடி மரணிப்போம் என்று வீராப்பு பேசுகின்ற புரட்சிவாதிகளோ ஷரீஆ உடைக்காக தனது கல்வி உரிமை பறிக்கப்பட்டு முலையில் முடங்கிக் கிடக்கும் பிஞ்சு உள்ளங்களுக்காக பேச முன்வரவில்லை.
    இப்படி பல சம்பவங்கள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றது.
    முஸ்லிம் என்றே ஒரே காரணத்திற்காக கல்வி மறுக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கின்றார்கள் என்றால் அதற்கு யார் பொறுப்பு? இஸ்லாமிய அகீதாவையும், ஆட்சியையும், சமூக அமைப்பையும் பற்றி கதறிக்கொண்டிருப்பவர்களால் ஏன் இவற்றை கண்டுகொள்ள முடியாமல் இருக்கிறது. ஷிர்க்கையும், பித்அத்தையும் வேரறுக்க வந்தோரால் இதனை எப்படி பார்த்தக்கொண்டிருக்க முடிகிறது.
    முஸ்லிம்களுக்கு ஒழுங்கான பாடசாலைகள் இருந்தால் அந்நிய மத பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதே! அந்நிய பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளை பலத்த உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவது இப்போது அதிகரித்து வருகிறது.
    முஸ்லிம் பாடசாலைகளின் தரத்தையும் வளங்களையும் அதிகரிக்க இந்த இயக்கங்கள் எதுவுமே செய்யத் தயாராக இல்லை. முஸ்லிம் சமூகத்தின் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல் இந்த இயக்கங்கள் முரண்டு பிடிக்கின்றன. பள்ளிவாசல்கள் கட்டுவதும், கிணறு வெட்டுவதும், உழ்ஹிய்யா கொடுப்பதும் மட்டும் தான் உயரிய பணிகள் என்ற மனப்பாங்கை இவை மெது மெதுவாக மக்கள் மனங்களில் பதித்தும் வருகின்றன.
    இஸ்லாம் வேண்டி நிற்கும் அடிப்படை கல்வி, பொருளாதார செயற்பாடுகளிலிருந்து முஸ்லிம் உம்மத்தை வேறுபக்கம் திசை திருப்பும் இந்த வெளிநாட்டு பணத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
    பாடசாலைகளை முற்றாக நிராகரித்து விட்டு பள்ளிவாசல்களை கட்டும், மாடுகளை வெட்டும், கிணறுகளை வெட்டும் இந்த இயக்கங்களின் செயற்பாடுகளின் அந்தரங்கம் என்ன?
    சிந்தித்துப்பாருங்கள்!
    உண்மையில் கல்வியின் எழுச்சி ஒரு சமுதாயத்தின் எழுச்சியாகும், அந்த எழுச்சியின் ஆணி வேர் தான் பாடசாலைகள், கல்விக் கூடங்கள். ஒரு சமுதாயத்தின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்றால் இந்த சமுதாயத்தின் கல்வி சார்ந்த செயற்பாடுகளை பாடசாலைகளை செயலிழக்கச் செய்ய வேண்டும் பலமிழக்கச் செய்ய வேண்டும்.
    கல்விக் கூடங்கள், பாடசாலைகள் அறிவை வளர்க்க துணை செய்கின்றதன. பள்ளிவாசல்கள் ஆன்மிகத்தை வளர்க்க துணை செய்கின்றன. இவை இரண்டும் சரி சமமாக செயற்பட்டால்தான் சமுதாயத்தால் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
    பள்ளிவாசலினதும் பாடசாலையினதும் இந்த சமநிலையை சீர் குலைக்கும் சதியாகத் தான் இந்த இயக்கங்களின் செயற்பாடுகளை பார்க்க முடிகிறது.


    “பள்ளிவாசல்களை மட்டும் கட்டுவோம்” அல்லது “ உழ்ஹிய்யா மட்டும் தான் கொடுப்போம் பாடசாலைக்கு தருவதற்கு எம்மிடம் பணம் இல்லை” என்ற செயற்பாடுகளைப் பார்க்க முடிகிறது.
    கொழுமபில் அதிகமாக பள்ளிவாசல்கள் கட்டப்பட்டிருந்த போதும், ஆன்மீக ரீதியிலான வழிகாட்டல் சமூகத்திற்கு கிடைக்கவில்லை. இன்று முஸ்லிம் இளைஞர்கள் அதிகமானோர் பல குற்றச்செயல்களுக்காக அகப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒழுங்கான கல்வியறிவு இவர்களுக்கு கிடைக்காததே இதற்குரிய காரணமாகும். கொழும்பில் குற்றச் செயல்களுக்கு பெயர்போன ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறியிருக்கிறது.
    இந்த பயங்கர நிலையிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமாக இருந்தால் கல்வி ரீதியிலான ஒரு எழுச்சி அவசியமாகின்றது. கல்வி ரீதியிலான பிரச்சினைகள் ஆராயப்பட்டு துரித பரிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த அழிவில் நின்றும் மீட்டெடுக்க துரித வேலைத்திட்டம் அவசியமாகிறது.
    ஆனால் இது நடைபெறுகிறதா? சமுதாயத்தின் பின்னடைவை கருத்தரங்குகளின் தலைப்புகளாக வைத்து வெளிநாடடு காசு பறிக்கும் கைங்கரியங்களாக மடடும்தானே நாம் இதனைப் பார்க்கிறோம்?
    பள்ளிவாசல்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறைச்சாலைகளுக்கு செல்வோர் தொகை எப்படி அதிகரிக்கிறது? சிறை செல்வோர் தொகை குறைய வேண்டுமே?
    வைத்தியர்களும், வைத்திய சேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க நோயாளர்களும் அதிகரிக்கின்றார்கள் நோய்களும் அதிகரிக்கின்றன.
    இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
    ஒரு தொழில் நுட்ப கோளாரே இந்த சமூகத்தில் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.
    பள்ளிவாசல்கள் கட்டிய அதேயளவு பாடசாலைகள், கல்விக் கூடங்கள் கட்டியிருந்தால் நிச்சயம் இதில் மாற்றம் நிகழ்நதே இருக்கும். ஆன்மீக, அறிவியல் வழிகாட்டல் சமமாக கிடைத்திருக்கும்.
    பள்ளிவாசல் மட்டுமே கட்டும் இந்த கலாசாரம் விபரீதத்தைத் தான் விதைத்து வருகிறது. அதனால்தான் பள்ளிவாசல் எழுகின்ற அதேவேளை பாடசாலை விழுந்துக்கொண்டிருக்கிறது. கல்வித்தரம் விழுகிறது. வெறுமனே பள்ளிவாசல்கள் அதிகரிக்கப்படுவதால் மட்டும் சமுதாயம் சீர்பெறுவதில்லை என்ற உண்மையை இதிலிருந்து விளங்க முடிகிறது.
    ஒருவன் மனிதனாக வாழ்வதற்கு அவனுக்கு அறிவும் ஆன்மீகமும் அவசியம். அவனுக்குரிய அறிவிற்கான , கல்விக்கான அத்தனை வாசல்களையும் அடைத்து விட்டு வெறுமனே பள்ளிவாசல்களை மட்டும் கட்டிப்போடுவதால் ஓர் ஒப்பற்ற சமுதாயம் எப்படி உருவாகும்?
    இநத உண்மையை இஸ்லாத்தின் எதிரிகள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். இந்த எதிரிகளின் மறைமுக வழிகாட்டலிலும், பண உதவியிலும் இயங்கும் இந்த இயக்கங்கள் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திடும் வேலைத்திட்டங்களுக்கு ஒரு போதும் உதவப்போவதுமில்லை.
    கல்விஅபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள், வறுமை ஒழிப்பு, வீடமைப்பு, தொழில் வாய்ப்பு, அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற அத்தியாவசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதை மறுத்தும், இருட்டடிப்பு செய்தும் வருவதிலிருந்து இவை தெளிவாக தெரிகின்றன.
    மாறாக, இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை வேறுபக்கம் திசைதிருப்பிவிட்டு பள்ளிவாசல்கள் கட்டுவதிலும், உழ்ஹிய்யா பகிர்வதிலும் உள்ள மர்மம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு தளத்தை இலங்கையில் உருவாக்குதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
    அறிவு இல்லாத ஆன்மீகம் மிகவும் பயங்கரமானது. அது நஞ்சை விடக் கொடியது. அறிவில்லாத வாழ்க்கை விஷத்தோடு விளையாடுவதற்கு ஒப்பானதாகும். இன்றைய ஆப்கானிஸ்தான் அதற்கு சிறந்த உதாரணம். அறிவில்லாத ஆன்மிக வாதிகளை எந்த நாசகார சக்தியாலும் இலகுவாக இயக்க முடியும். ஆப்கான் தாலிபான்களை போஷித்து வளர்த்த அமெரிக்கா அதன் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு இந்த அறிவில்லாத ஆன்மிகத்தை ஆயுதமாக பாவித்தது. இன்று அமெரிக்கா முஸ்லிம் நாடுகள் மீது நடாத்தும் அனைத்து கொடுமைகளுக்கும் ஆப்கான் காரணமானது. அடிப்படையானது.
    அமெரிக்காவிற்கும் அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் தேவை நான் மேலே கூறிய அறிவில்லாத ஆன்மீகம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், அரபு மன்னராட்சி்ககும் தம் அரசியலை சீராக கொண்டு செல்ல இந்த அறிவில்லாத ஆன்மீகம் உறுதுணையாய் இருக்கிறது. எனவேதான் கல்வி நிராகரிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் மட்டும் உயிராக்கப்படுகின்றன. அறிவில்லாத ஆன்மீகத்திற்கு உரமூட்டப்படுகின்றது. தஃவா என்ற போர்வையில் கல்விக்கு எதிராக ஒரு மௌனமான சதி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
    எனவே அறிவில்லாத சமுதாயம் ஒன்றை நிர்மாணிக்கும் செயல்திட்டத்தை இஸ்லாத்தின் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்காக இந்த இயக்கங்கள் செய்து வருகின்றன. அதற்காகவே பள்ளிவாசல் மட்டும் கட்ட பணம் வருகிறது. மாடு அறுக்க மட்டும் பணம் வருகிறது. ஸக்காத் பெயரளவில் நிறைவேற்றப்படுகிறது. பாடசாலைகள் முற்றாக நிராகரிக்கப்படுகின்றன. இந்த கசப்பான உண்மையை புத்திஜீவிகளால்(?) புரிந்துக் கொள்ளமுடியாமல் இருப்பதுவும் ஒரு புதிராகத்தான் இருக்கிறது.
    சிலவேளை ... வயிற்றுப் பசியை அடக்கிக் கொண்டு இவர்கள் இஸ்லாத்திற்காக எழுந்து நின்றால்,
    சொந்த உழைப்பில் உண்டு அல்லாஹ்வின் தீனை என் சொந்த உழைப்பில், சொந்த பணத்தில் மேலோங்கச் செய்வேன் என்று எழுந்து நின்றால்...
    வெளிநாட்டுப் பணத்த வீசியெறிந்து விட்டு அல்லாஹ்வினதும், அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தை மட்டும் வைத்தே தஃவா செய்வோம் என்று எழுந்து நின்றால்... முஸ்லிம் உம்மத்தின் பிரச்சினைகனை ஒழுங்காக புரியும் பாக்கியத்ததை அல்லாஹ் நிச்சயம் இவர்களுக்குக் கொடுப்பான்.
    நான் மேலே பதித்தவை சமுதாயம் எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் சவால்கள். இந்த இயக்கங்கள் பள்ளிவாசல்களோடு சேர்த்து பாடசாலைகளையும் கட்ட வேண்டும் ! பாடசாலை மற்றும் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க அரபுகளின் சதகா ஸக்காத பணத்தை இவர்கள் கொண்டு வந்து கொட்ட வேண்டும். மாடு அறுக்க கோடிக்கணக்காய் கொடுக்கும் அரபுகள் பாடசாலைக் கட்டுவதற்கு ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்?
    இதில் ஒரு மர்மம் மறைந்திருப்பது உங்களுக்குப் புரிகிறதா?அந்தப் பணம் உண்மையில் முஸ்லிம்களின் பணமல்ல. முஸ்லிம்களின் பணம் என்ற் போர்வையில் முஸ்லிம்களை திசை திருப்ப இலங்கைக்கு வரும் எதிரிகளின் பணம் என்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடியும். இந்த எதிரிகளின் வேலைத்திட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்கும் தரகர்களாக தான் இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன.
    இந்த இயக்கங்களுக்கு பணம் வழங்கும் அரபு உளவு நிறுவன எஜமானர்கள் அமெரிக்காவின் நண்பர்களான இருக்கின்றார்கள். அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்து முஸ்லிம்களை கொலை செய்வதற்கு அமெரிக்காவிற்கு பக்கபலமாக இந்த அரபு எஜமானர்கள் இருக்கின்றார்கள்.


    இந்த அரபுகளுக்கு முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் இரக்கம் இருக்கிறதா? அப்படியிருந்திருந்தால் முஸ்லிம்களை கொல்லும் அமெரிக்க விமானங்களை தமது அரபு பூமியில் தரையிறக்கி அவற்றிற்கு இலவசமாக எண்ணெய் வழங்கியிருப்பார்களா?
    இஸ்ரேலோடு கைகுலுக்கும் அமெரிக்க கைகளை இந்த அரபுகளால் பற்றத்தான் முடியுமா?


    ஈராக்கில் பள்ளிவாசல்களை குண்டு போட்டு தகர்க்கும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் அரபுகள் இலங்கையில் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவி புரிகிறார்கள்.


    ஒரு இடத்தில் அல்லாஹ்வின் இல்லங்களை உடைக்க உதவி புரிகிறார்கள்.


    ஒரு இடத்தில் அல்லாஹ்வின் இல்லங்களை அமைக்க உதவி புரிகிறார்கள்.


    இது வேடிக்கையாக இல்லையா? இது முரண்பாடாக இல்லையா?

    எத்தியோபியா சோமாலியாவில் பட்டினியில் முஸ்லிம்கள் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் இறக்கும் போது பார்த்துக்கொண்டு சுவர்க்க வாழ்வை அனுபவிக்கும் அரபு எஜமானர்கள் உழ்ஹிய்யா இறைச்சிக்கான மாடுகளுக்கான பணத்தை எத்தியோபியா சோமாலியாவிற்கு அனுப்பாமல் இலங்கைக்கு அனுப்புகிறார்கள். (இது இலங்கையில் பௌத்த முஸ்லிம் உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்த அமெரிக்க அரபு உளவு நிறுவனங்கள் வகுத்துள்ள ஒரு வியூகம் )
    அது அமெரிக்க நிற வெறியால் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயில் இருக்கும் கறுப்பு மனிதனுக்கு உதவக்கூடாது என்ற அமெரிக்க கொள்கைக்கு ஆதரவான அரபு நிலைப்பாட்டை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
    எனவே அரபு உளவு நிறுவனங்களின் பணத்தால் இந்த இயக்கங்கள் பெறும் உதவியால் எழுந்து வரும் பள்ளிவாசல்களின் பின்னணியில் ஒரு சமுதாயத்தின் எதிர்காலம் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

    எங்கள் பிள்ளைகள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக கடந்த ஒன்பது மாதங்களாக கல்வி மறுக்கப்பட்டு ( இந்த ஜனநாயக நாட்டில்) மூலையில் முடங்கிக் கிடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாமல் போயுள்ளது..

    ஹிஜாப் அணிந்து பாடசாலை வரக் கூடாது என்ற தடையால் பாதையில் வைத்து தனது ஹிஜாபை கழற்றி பைக்குள் திணித்து , நீண்ட காற்சட்டையை முழங்கால் தெரிய மடிக்கும் அவலம் வருவதை தடுக்க முடியாமல் உள்ளது.

    பாடசாலைக்கு பக்கத்தில் வசித்தும் மாற்று மத பாடசாலை என்ற காரணத்திற்காக வாசல் மூடப்பட்டு அவமானப்படும் அவலத்தைப் போக்க முடியாமல் உள்ளது.

    இந்த அவலம் பற்றி, இஸ்லாத்தைக் காப்பதற்காகவே செயற்படுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் இயக்கங்களை நிலை என்ன?

    இஸ்லாத்தை மறந்து விட்டு, இயக்கத்தை வளர்க்கும் சிந்தனையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த இயக்கங்கள் பணம் வழங்கும் எஜமானர்களை திருப்திப் படுத்தும் நயவஞ்சகத்தனத்திலிருந்து மீண்டு... இஸ்லாத்தை வளர்த்து அல்லாஹ்வை மட்டும் திருப்தி படுத்தும் உயரிய பணிக்காக எழுந்து வரவேண்டும்.

    அவகாசம் நிறையவே இருக்கிறது....!
     நன்று
    ஏ.அசீஸ் நிசாறுத்தீன்

    more

Featured Video

Photos