Advertisement



  • வருகிறார் இன்னொரு அரசியல் 'வியாதி'

    இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடும்,ஓடாகா தேயும்,பக்கம் பக்கமாக அறிக்கை விடும் பழ.நெடுமாறன், திருமாவளவன், வைகோ, ராமதாஸ், விஷ(ய)காந்து குரூப்பில் புதிதாக அரசியல்வாதி என்ற அரிதாரத்தைப் பூசி ஒட்டிக் கொள்ள துடிக்கிறார் 'நாம் தமிழர் இயக்கத்தின் சீமான்'.


    புத்தரைப் போன்று திடீரென்று "ஞான உதயம்" அடைந்த சீமான் இலங்கைத் தமிழர்களைப் பற்றியும், இந்தியாவில் தடை செய்யப்பட இயக்கமான விடுதலைப் புலிகள் பற்றியும் கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கிறார்.


    இபொழுது இவ்வளவு அக்கறை காட்டும் சீமான், இத்தனை காலம் எங்கிருந்தார் ?, என்ன செய்தார்? அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? என்று அவரிடமும், அவரைத் துதிபாடிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டாலும்...ஒரு பதிலும் வராது.அவர்களுக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
    .
    முதலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார், பின்னர் இலங்கை தமிழர்களுக்காக பேசினார், நாம் தமிழர் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார், தற்போது  நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அறிவித்துள்ளார்.


    நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார் சீமான். நேற்று திருவண்ணமலையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். வழக்கமான தன் எழுச்சி உரைக்கு பின் உணர்வாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.  அப்போது நாம் தமிழர் இயக்கத்தை வரும் மே17ல் அரசியல் இயக்கமாக மாற்றபோகிறேன் என்றும், திமுக, அதிமுக கட்சிகளை தேர்தலில் எதிர்த்து வெற்றி பெறுவேன் என்று அறிவித்துள்ளார்.


    அரசியல் என்னும் சாக்கடையில் இவரும் மூழ்கி முத்து எடுக்க ஆசைப் படுகிறார். ஒரு இனத்திற்காக, மக்களுக்காக பாடுபடுவதற்கு, போராடுவதற்கு, ஜெயம் என்ற வெற்றியை அடைவதற்கு அரசியல் பின்னணி அவசியமா ?.
    அரசியல் கட்சி என்ற பலம் தேவையா ?
    மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தியடிகள் முதலான எண்ணாற்ற தலைவர்கள் அரசியல் பின்னணி இல்லாதவர்களே. அவர்கள் எப்படி போராடி ஜெயித்தனர் ?.


    "இனி அடிக்கு அடி, உதைக்கு உதை தான்...தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள் என்ற கோரிக்கையும் வைத்திருக்கிறார் சீமான்."
    அடிக்கு அடி உதைக்கு உதை என்றால் இவருக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன வித்தியாசம், இவருக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?.இது தான் தீர்வா ?. ஆரம்பம் அமர்க்களப்படலாம்..ஆனால் முடிவு அதோகதிதான்.


    உண்மையில் சீமானுக்கு தமிழ், தமிழர், தமிழ் கலாச்சாரம் மீது அக்கறை இருந்தால், முதலில் அனைவரையும், அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்து பின்னர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முயற்சிக்க வேண்டும். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற ஒரு வரி பழமொழி உணர்த்தும், அதனின் அர்த்தம் சீமானுக்கு தெரியாமல் இருக்காது.


    அதைவிட்டுவிட்டு அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்வதும், திமுக, அதிமுகவை தேர்தலில் வெல்வேன் என்று கூறுவதும் தேவையற்றது.இவரது இது நாள் வரையிலான நடிப்பு, திட்டம், எண்ணம் தற்போது வெளிப்பட்டுவிட்டது.தானும் பிற அரசியல்வாதிகளை போல் தான்,   அவர்களைப் போல் வரவேண்டும் என்ற ஆசையும் அவருக்குள் துளிர்விட்டு, இப்பொழுது மலர்ந்திருக்கிறது.
    இவரையும் நம்பி சில பேர் வேலை வேட்டியை விட்டு விட்டு செல்வதுதான் கொடுமை.
    ஒற்றுமையில்லாத தமிழனும், தமிழினத் தலைவர்களும் இருக்கும் வரை கடவுளே வந்து போராடினாலும் ஒரு பிரயோஜனமுமில்லை.
    நன்றி :     error007

    more
  • இலங்கையை தாயகமாகக்கொண்ட பிரபலம் வாய்ந்த அமெரிக்க வர்த்தகர் கைது
    பிரபலமான வர்த்தகரென இவர் அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்க உளவுப்பிரிவினர் (F.B.I) அவரின் வருவாய்க்கான காரணிகளை கண்டறிந்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அவர் வர்த்தக மோசடியில் ஈடுபட்டமை தெரியவந்ததற்கமைய அக்குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவருமான ராஜ் ராஜரட்னம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


    2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ராஜ் ராஜரட்ணம் அவர்கள் கடந்த மாதம் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளின்போது இராணுவத்தினரால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது அரச படைகளிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி உதவி வழங்குவதாக ராஜரட்னம் ஒப்புக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    தெருத்தேங்காயை பிடுங்கி வழிப்பிள்ளையாருக்கு தானம் வழங்கும் நிகழ்வாகவே ராஜ் ராஜரட்னத்தின் மனிதநேயப்பணி மறைக்கப்பட்டிருந்தமை இன்று அம்பலமாகியுள்ளது.

    more
  • இந்திய விவசாயிகளுக்கு பில் கேட்ஸ் 44 கோடி ரூபா நிதியுதவி
    மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பெயரில் இயங்கி வரும் பில் - மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனம், இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு 44.72 கோடி ரூபா நிதியுதவி வழங்குகிறது.

    உலகின் மிகவும் ஏழ்மையான பகுதிகளில் விவசாயத்தை செழிக்கச் செய்யும் வகையில், 120 மில்லியன் டொலர் செலவிலான பிரமாண்டத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது கேட்ஸ் பவுண்டேஷன். அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு இந்த நிதியுதவியைச் செய்கிறது.

    இதுகுறித்து டெஸ்மாய்ன்ஸ் நகரில் கேட்ஸ் கூறுகையில்,

    "மெலின்டாவும், நானும், ஏழை விவசாயிகளுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களது விவசாயம் தழைத்தோங்க எங்களால் முடிந்த சிறு உதவி இது. பசி, பட்டினி, ஏழ்மையை விரட்டும் வகையில் விவசாயிகள் பெருமளவில் விவசாயப் பணிகளில் ஈடுபட இது உதவியாக இருக்கும்.

    இந்தியா போன்ற நாடுகளில் 1960களிலிருந்து 80கள் வரை பெரும் விவசாயப் புரட்சி நடந்தது. இதை உலக நாடுகள் பாடமாக எடுத்துக் கொண்டு விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர முயல வேண்டும். இந்தியாவில் தோன்றிய பசுமைப் புரட்சி மிகவும் மகத்தானது.

    இப்படிப்பட்ட விவசாயஎழுச்சியின் மூலமாக பஞ்சத்தைப் போக்கலாம்; கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காக்கலாம்; வறுமையை விரட்டலாம்; பொருளாதார முன்னேற்றத்தையும், வளத்தையும் பெறலாம்.

    அதேசமயம், முதலில் தோன்றிய பசுமைப் புரட்சியின்போது நடந்த அதீத உரப் பயன்பாடு, நீர்ப்பாசனம் போன்றவற்றில் ஏற்பட்ட தவறுகளை விஞ்ஞானிகளும், அரசுகளும், விவசாயிகளும் மீண்டும் செய்து விடாமல் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

    இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை விவசாயப் பணியில் திருப்பி அவர்களை முழுமையான, வளர்ச்சி பெற்ற விவசாயிகளாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.இதனால் அவர்களின் வருவாயும் அதிகரிக்கும்" என்றார்.

    more
  • மஹிந்தவிடம் வாங்கிக் கட்டிய வாழ்நாள் பேராசிரியர்


    அண்மையில் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் யாழ்ப்பாண புத்திஜீவிகள் நூறு பேர் ஜனாதிபதியை சந்திக்க கொழும்பு சென்றது தெரிந்தவிடயம். அவர்கள் அலரிமாளிகையில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் வினாவொன்றை எழுப்பி மஹிந்தவிடம் வாங்கிக்கட்டிய விடயம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

    யாழ்ப்பாண ஸ்ரீதர் தியேட்டரில் படம் பார்த்தவர்கள் அலரி மாளிகையிலும் படம் பார்த்த கதை சொல்கிறேன் கேளுங்கள்.

    அங்கே நடைபெற்ற ஒரு சுவையான விடயம்

    வாழ்நாள் பேராசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் வினாவொன்றை எழுப்பினாராம். அது என்ன வென்றால், வன்னி வதைமுகாமில் இருக்கும் யாழ்ப்பாண சமூகத்தவரை யாழ்ப்பாண சமூகத்தவரான நாங்கள் பொறுப்பேற்கிறோம். நீங்கள் அவர்களை விடுவியுங்கள் என்பதே.

    வந்ததே மகிந்தருக்கு கோபம். யார் நீர்?  (who are you?)  இதைக் கேட்பதற்கு இதற்கான அனுமதியை உமக்கு தந்தது யார்? உமக்கு ஒதுக்கப்பட்ட விடயம் பற்றி மட்டும் கதையுங்கள் என்று பெரிந்து தள்விட்டாராம்.

    வாழ்நாள் பேராசிரியருக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டதாம். அதன்பின் சாப்பிடுவதற்கு மட்டும்தான் வாய் திறந்தாராம். பேராசிரியர்கள் அரசியல்

    செய்யப்போனால் இப்படித்தான் என்று பேசிக் கொள்கிறார்கள்.

    புத்திகளைச் சீவிய புத்திஜீவிகளில் “பொங்குதமிழ் புகழ்” மாணவர் ஒன்றியங்களும் சமூகமளித்தனவாம். அவர்களும் சில கேள்விகளைக்கேட்டு வாங்கிக் கட்டினராம். இந்தக் கடுப்பில் மாணவர் தலைவர்கள் மறுநாள் பசில் ராஜபக்சேவுடனான சந்திப்பின்போது நழுவிவிட்டார்களாம்.

    “யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்ற பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது”

    யாழ்ப்பாணத்திலிருந்து
    சனீஸ்வரன்

    more
  • டவுசர் அணிந்த இன்னுமொரு புத்தள பிரேமானந்தா.. காமலீலைக்கு சிறுமி பலி!
    புத்தளம் தில்லையடியில் பல வருடங்களாக நோர்வே நாட்டின் அனுசரணையுடன் இயங்கிவந்த அம்மன் ஆலயம் என்ற பெயரில் இயங்கிவந்த அநாதை இல்லத்தில் தங்கி படித்துவந்த சாந்தி எனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 13வயது சிறுமி அதே இல்லத்தை நடத்திவந்த ஜெயா எனப்படும் 28வயதுடைய காமுகனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். மேற்படி இந்த சம்பவம் ஒருநாளில் நடந்த சம்பவம் இல்லையென்றும் தொடர்ந்து அந்தசிறுமி காமுகனின் பாலியல் சேஷ்டைகளுக்கு உள்ளாகி வந்ததாகவும் நேற்றையதினம் கடுமையாக நடந்துக் கொண்டதால் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவே விஷயம் வெளியே தெரியவந்துள்ளது மேற்குறிப்பிடப்பட்ட அநாதை இல்லத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு தங்கியிருக்கும் சிறுவர் சிறுமியர்களை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிக

    பிற்குறிப்பு… இந்த அநாதை இல்லத்தை முன்னர் நடத்திவந்த இந்த காமுகனின் சகோதரரான விஜி என்பவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை பேணியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் மேலும் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி56ரக துப்பாக்கி மற்றும் சி4ரகவெடிமருந்து என்பவற்றை குற்றத்தடுப்பு பொலிஸார் மீட்டனர் மேலும் தம்பி பாணியிலேயே இவரும் இரு பெண்ணை பாலியல் இம்சைக்கு உள்ளாக்கி பின்னர் விஷயம் வெளிவர அவரையே திருமணம் செய்துக்கொண்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது இந்த அநாதை இல்லத்தை நடத்திவருபவர்கள் பணம் சம்பாதிக்கும் எண்ணத்திலேயே அன்றி சிறுவர்களின் எதிர்காலத்தை குறிக்கோளாக கொண்டதல்ல மேலும் இங்கு கல்விகற்கும் அனைத்து பிள்ளைகளுமே அநாதைகள் அல்ல அவர்களுக்கு பெற்றோர்கள் உண்டு என்பதையும் இங்கு அறியத் தருகிறோம்.
    நன்றி :அதிரடி .கொம்

    விரிவான செய்திகள் தொடரும் ,,

    more
  • சென்னை நட்சத்திர கலைவிழா நயன்தாரா திடீர் வருகை: பிரபுதேவா மனைவி மிரட்டலால் பரபரப்பு

    பிரபுதேவா, நயன்தாரா காதல் ரகசியமாக வளர்கிறது. நயன்தாராவை பார்த் தால் அடிப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் ஆவேசப்பட்டுள்ளார்.

    இதனால் சென்னை வருவதை நயன்தாரா தவிர்த்து வந்தார். “ஆதவன்” பட விழாக்களில் கூட பங்கேற்க வில்லை. கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டுக்கு போய் நேரில் சண்டை போட ரம்லத் தரப்பினர் முயற்சித்து வந்தனர்.

    இந்த நிலையில் நயன் தாரா நேற்று திடீரென்று சென்னையில் தலை காட்டினார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்று பரபரப்பு ஏற்படுத்தினார்.

    இவ்விழாவுக்காக ஒரு நாள் முன்னதாகவே சென்னை வந்து ரகசிய இடத்தில் தங்கினார். அவர் வழக்கமாக தங்கும் நட்சத்திர ஓட்டல்களில் ரம்லத் ஆள் வைத்து தேடினார். ஆனால் அங்கு அவர் இல்லை. சென்னை வந்திருப்பது உறுதி ஆனால் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லையே என்று குழம்பினார்.

    இந்த நிலையில் இரவு 8 மணிக்கு நயன்தாரா நேருஸ்டேடியத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் முண்டியடித்தனர். மேடையின் முன்வரிசை இருக்கையில் போய் உட்கார்ந்தார்.

    அவர் வந்ததும் பிரபுதேவா விழா அரங்கில் இருந்து வெளியேறினார். பிரபுதேவா தந்தைடான்ஸ் மாஸ்டர் சுந்தரம், சகோ தரர்ராஜு சுந்தரம் மற்றும் குடும்பத்தினரும் வெளியேறினார்கள்.

    நயன்தாரா வருவதற்கு முன்பாகவே பிரபுதேவா மேடையில் ஆடி முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நயன்தாரா அருகில் சிம்பு உட்கார்ந்து இருந்தார். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து திடீரென்று சிம்பு மேடையேறி “லூசுப் பெண்ணே, லூசுப் பெண்ணே” “லூசுப் பெண்ணே” “லூசுப் பையன் உன்னாலே தான்லூசா சுத்துறான்”என்ற பாடலை பாடினார். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    அப்பாட்டை கேட்டு நயன்தாரா சிரித்தபடி இருந்தார்.

    அதன் பிறகு நயன்தாரா மேடையில் ஏறி சினிமா தொழிலாளர் சங்கத்தினரை வாழ்த்தி விட்டு இறங்கினார்.

    பிரபுதேவா மனைவி ரம்லத்திடீரென்று விழா அரங்குக்கு வரலாம் என்று பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவரும் வருவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அழைப்பிதழ் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் செல்ல முடியாமல் வெளியே தவித்தப்படி நின்றனர். ஸ்டேடியம் நிரம்பி விட்டதாக சொல்லி கேட்டுகளை போலீசார் மூடி விட்டனர். கூட்டத் தினரையும் கலைந்து போகும் படி விரட்டினர். இந்ததகவல் தெரிந்து ரம்லத்தால் வரஇயல வில்லை.

    மேடையில் சினேகா, உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலையும், ஸ்ரேயா கந்தசாமி பாடலையும் பாடினார்கள். பிரபு, விஜய், சூர்யா, அர்ஜூன், திரைப்பட தொழிலாளர் சங்கத்தலைவர் வி.சி.குகநாதன், ஜி.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    more
  • பாபர் மசூதியை இடித்த இந்து முஸ்லீமாக மாறிய விநோதம்

    1992 டிசம்பர் மாதம் ஆறாம் தேதி (டிசம்பர் 6 என்பது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்) அத்வானி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான காவிக் கூட்டத்தினர் 450 ஆண்டுகால வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

    இந்தியா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. 17 ஆண்டுகள் பறந்தோடிய நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடு.

    இதில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அன்று பாபர் மசூதியின் நடுக் கோபுரத்தை கடப்பாரையால் இடித்துக் கூத்தாடிய இரு இளைஞர்கள் சிவசேனா அமைப்பினைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிவசேனா பறக்கும் படையின் துணைத் தலைவர் பல்பீர் சிங், மற்றொருவர் யோகேந்திரபால்.

    சரி, அவர்களுக்கு இப்பொழுது என்ன வந்தது? ஒரு சுவையான திருப்பம் இதில் ஏற்பட்டுள்ளது. அந்த இரு இளைஞர்களும் இப்பொழுது முசுலிம்களாக மாறிவிட்டனர் என்பதுதான் அந்தச் சுவையான திருப்பம் மிகுந்த செய்தியாகும்.

    பாபர் மசூதி கோபுரத்தின்மீது ஏறி, இரு இளைஞர்கள் யானையின் மத்தகத்தைப் பிளப்பதுபோல செயல்பட்டார்களே ஏடுகளில் அந்தப் படங்களெல்லாம்கூட வெளியானதே சாட்சாத் அந்த இரு இந்து இளைஞர்கள், சிவசேனாவின் சிப்பாய்கள்தான், இப்பொழுது முகம்மது ஆபிராகவும், முகம்மது உமர் ஆகவும் மாறிவிட்டனர்.

    இளைஞர்கள் மூளையில் சாயம் ஏற்றி ஏற்றி, வெறித்தனமான போதனைகளை ஊட்டி ஊட்டி, வெறியாட்ட வன்முறைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்துக் கொடுத்து, மாற்று மதக்காரர்கள்மீது வெறுப்பினைக் கூர்மைப்படுத்தி கூர்மைப்படுத்தி, ஒரு கட்டத்தில் அவர்களை வேட்டை நாய்களாக ஏவிவிடுவார்கள். அவ்வாறு ஏவிவிடப்பட்டு இடிக்கப்பட்டதுதான் பாபர் மசூதி.

    காலம் கடந்து இப்பொழுது உண்மையை உணர்ந்து, தாம் செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக எந்த மதத்துக்கு விரோதமாக வெறியாட்டம் போட்டார்களோ, அந்த மதத்தோடேயே அய்க்கியமாகும் நிலை ஏற்பட்டுவிட்டது!



    more
  • பிரபாவுடன் இராதமையால் தப்பினாராம் திருமாவளவன்

    "நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்" என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

    பிரபாவுடன் இராதமையால் தப்பினாராம் திருமாவளவன்
    நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
    இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார்.


    "இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூற, அதை சிரித்தபடி செவிமடுத்துக்கொண்டிருந்தார் திருமாவளவன்.

    more
  • கோவையில் முஸ்லிம் பெண்களிடம் அத்து மீறியதாக கைது: மத்திய ரிசர்வ் போலீசார் 3 பேர் சிறையில் அடைப்பு
    கோவை, அக். 12-

    கோவை குருடம்பாளையத்தில் மத்தியரிசர்வ் போலீஸ் படையினருக்கான (சி.ஆர்.பி.எப்.) பயிற்சி முகாம் உள்ளது. இங்கு பயிற்சிக்காக ஆந்திராவை சேர்ந்த சத்யம் (27), சென்னை அலெக்சாண்டர் (27), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கமல்சத்தார் (25) ஆகியோர் வந்து இருந்தனர்.

    இவர்கள் 3 பேரும்  கோவையில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினார்கள். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் போதை தலைக்கேறி என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் தள்ளாடினர்.

    அவர்கள் உக்கடத்தில் உள்ள ரபீக் என்பவரது வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது வீட்டில் ஆண்கள் இல்லை. அங்கிருந்த பெண்களிடம் மத்திய ரிசர்வ் போலீசார் அத்து மீறி நடக்க முயன்றனர். ஒரு பெண்ணிடம் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இதே போல் ரகமத்துல்லா வீட்டிற்குள்ளும் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அச்சம் அடைந்த பெண்கள் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    இதைப்பார்த்ததும் போலீஸ்காரர்கள் தப்பி ஓட முயன்றனர். பொது மக்கள் அவர்களை விரட்டினர். 3 பேரும் பொது மக்களிடம் சிக்கிக்கொண்டார்கள். அவர்களிடமிருந்த அடையாள அட்டைகள் பிடுங்கப்பட்டது. அப்போது ஒருவரது பாக்கெட்டில் மது பாட்டிலும் இருந்தது. இதனையும் பறித்தனர்.

    பின்னர் 3 பேரையும் உக்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 3 பேரும் குடித்து இருப்பது உறுதியானது.

    கைதான போலீஸ்காரர்கள் மீது குடிபோதையில் தகராறு செய்தல் (75-வது பிரிவு) அத்து மீறி நுழைதல் (448), கொலை மிரட்டல் விடுத்தல் (506) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அவர்கள் மாஜிஸ்தி ரேட்டு முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    more
  • கடும் குரலில் பாலு கண்டிப்பு - அழுத வவுனியா பெண் கலெக்டர்

    வவுனியா: வவுனியா சென்ற திமுக - காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு கடும் குரலில் கண்டித்துப் பேசியதால் வவுனியா பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ் அழுது விட்டார். இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி, டி.ஆர்.பாலுவை தடுத்து அமைதிப்படுத்தினார். பின்னர் பாலு தவிர அனைவரும் பெண் கலெக்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

    திமுக - காங்கிரஸ் எம்.பிக்கள் குழு இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதிகளின் நிலை குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று காலை யாழ்ப்பாணம் சென்ற அக்குழுவினர் மாலையில் வவுனியா சென்றனர்.

    அப்போது வவுனியா மாவட்ட பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ், குழுவினருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அப்போது அவரது செயல்பாட்டால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, தனக்கே உரித்தான கடுமையான குரலில், நீங்கள் யார் எங்களது விஷயங்களில் தலையிட, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கண்டிப்புடன் கேட்டாராம்.

    இதுகுறித்து பி.எஸ்.எம்.சார்லஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், குழுவினரின் நடவடிக்கையில் தலையிட நீங்கள் யார், உங்களது தகுதி என்ன என்று கடுமையான குரலில் கேட்டார் டி.ஆர்.பாலு.

    அவரது கோபமான பேச்சால் நான் அழுது விட்டேன். இத்தனைக்கும் நான், தமிழக குழுவினரின் விருப்பத்திற்கேற்பதான் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். ஆனால் அவர் கண்டிப்பான குரலில் பேசியதால் நான் மனம் உடைந்து அழுது விட்டேன்.


    இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி தலையிட்டு பாலுவை அமைதிப்படுத்தினார். அவரும், மற்றவர்களும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். ஆனால் நான் பேசியதை மறந்து விடுங்கள் என்று மட்டுமே பாலு என்னிடம் கூறினார் என்றார் சார்லஸ்.

    இந்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திமுக - காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்களின் வருகை தங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும், அதேசமயம், தங்களுக்கு உதவினால் மேலும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் அவர்கள் கூறினராம்.

    மாணிக் பார்ம் முகாம் வளாகத்தில் உள்ள 1 முதல் ஐந்தாவது மண்டலம் வரையிலான பகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி எம்.பி்க்கள் சென்று பார்த்தனர். ஐந்து மணி நேரம் நீடித்த இந்த ஆய்வை முழுமையாக வீடியோவில் படம் பிடித்தனர். பலர் அகதிகளின் பேச்சை குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் குழுவினர் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து சென்று முகாம் தமிழர்களைச் சந்தித்துப் பேசினர்.

    தமிழக எம்.பிக்களைப் பார்த்த தமிழர்கள் , ராணுவத்தினர் குறித்த பயமே இல்லாமல் தைரியமாக அருகில் வந்து மனம் விட்டுப் பேசியதைக் காண முடிந்ததாக கூறப்படுகிறது.



    more

Featured Video

Photos