Advertisement



  • கப்பலில் கனடா சென்றுள்ள சிலரின் உடலில் புலிச் சின்னம் (பச்சை) பொறிக்கப்பட்டுள்ளது.


    கப்பல் கம்போடியாவில் பதிவுசெய்யப்பட்ட Princess Easwary (பிரின்சஸ் ஈஸ்வரி) என இனங்காணப்பட்டுள்ளது.
    76 இலங்கையர்களுடன் கனடா கடற்பரப்பைச் சென்றடைந்த கப்பல் கடந்த மாத முற்பகுதியில் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளமை சர்வதேச கப்பல் போக்குவரத்து பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. Ocean Lady (ஓசியன் லேடி) எனும் பெயருடன் கனடியக் கடற்பரப்பை அடைந்த குறிப்பிட்ட கப்பலின் உண்மைப் பெயர் Princess Easwary (பிரின்சஸ் ஈஸ்வரி) எனவும், இக்கப்பல் தனது கடற்பயணத்தின் போது கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மும்பாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றுள்ளதுடன், அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவின் வடமேற்கேயுள்ள முந்திரா (Mundra) எனும் துறைமுகத்தை செப்படம்பர் மாதம் 8ம் திகதி அடைந்த இரு பதிவுகளே சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பதிவாகியுள்ளதாகவும், அதன் பின்னர் எவ்வித தரவுகளும் பதிவாகவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஆனால் கப்பல் எங்கிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது என்ற தகவல் இதுவரை புலனாக வில்லை.

    Lloyds MIU (The world's premier source of maritime information)எனப்படும் கப்பல் நகர்வுகளை பதிவு செய்யும் கம்பனியின் தகவல்களின் அடிப்படையில் பிரின்சஸ் ஈஸ்வரி கம்போடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், 2008 ம் ஆண்டில் குறிப்பிட்ட கப்பல் இந்தோனேசியா, தாய்வான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட கப்பல் கம்பனியின் பதிவில் பதியப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சல் விலாசங்களும் பாவனையில் இல்லை என தெரியவருகின்றது.

    குறிப்பிட்ட கப்பல் விடயத்தில் கடல் பிரயாணம் தொடர்பான சகல சர்வதேச நிறுவனங்களையும் ஆர்சிஎம்பி (Royal Canadian Mounted Police) யினர் தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டிவருகின்றனர். திரட்டப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக ஆர்சிஎம்பி யின் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், குறிப்பிட்ட கப்பல் எவ்வாறு கடத்தல் காரர்களின் கைகளில் வீழ்ந்தது என்ற விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதே நேரம் கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ள 76 பயணிகளும் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை அரசினால் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என தேடப்படும் கார்த்தீபன் மாணிக்கவாசகர் அடையாடம் காணப்பட்டுள்ளார். 26 வயதுடைய இவரது பெயர் சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) தேடப்படுவோர் பெயர்ப்பட்டியலில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    கப்பலில் காணப்பட்ட 76 பேரில் சிலரது உடலில் புலிகளின் சின்னம் குத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாக கனடிய பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் புலிகள் இயக்கத்தின் உண்மையான உறுப்பினர்கள் முடிந்தவரை தமது அடையாளத்தை வெளிகாட்டாமல் பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பார்கள் என்பது பொதுவான விடயம்.

    அதேநேரம் கனடிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர்களின் ஒருவரான Jason Kenney அவர்கள், குற்றச் செயல்களில் தொடர்புடையதாக பதிவுகளைக் கொண்டுள்ளோர் மற்றும் கனடாவில் பயங்கரவாத இயக்கமாக தரப்படுத்தப்பட்டுள்ள புலிகளியக்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவர் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    புலிகளின் எல்லை கடந்த நவீன ஆட்கடத்தல் தொடர்பாக சர்வதேச புலனாய்வு நிறுவனங்கள் தமது முழுநேர பார்வையை திருப்பியுள்ளதுடன், இக்கட்டமைப்பில் உள்ள பலருக்கும் வலை விரித்துள்ளனர். அந்த வகையில் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா, துருக்கி, பர்மா போன்ற நாடுகளில் இருந்து செயற்படும் பலர் குறிப்பிட்ட நாடுகளின் உள்ளுர் புலனாய்வு நிறுவனங்களினதும், அங்கு செயற்படக்கூடிய சர்வதேச புலனாய்வு நிறுவனங்களினதும் வலைகளில் மாட்டியுள்ளதுடன் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.

    புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நவீன ஆட்கடத்தல் வியாபாரம் சர்வதேச சமுகத்தின் பார்வையை ஈர்த்துள்ளதுடன், இவ்வியாபாரம் மேற்குலகின் பாதுகாப்புக்கு கூட அச்சுறுத்தாலாக அமையும் என நம்பப்படுகின்றது. சர்வதேசம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டுவருகின்ற நிலையில் சகல பயங்கரவாத அமைப்புக்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிவரும் புலிகள் தமது இராணுவப் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள தற்கொலைதாரிகளை மேற்குலக நாடுகளுக்குள் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அந்நாடுகள் தமது எச்சரிக்கை மணியை அசைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது எனலாம். அவ்வாறான ஓர் நிலை தோன்றும் போது கடந்த காலங்களில் புலிகளின் உள்நோக்கம் புரியாமல் அவ்வியக்கத்தின் செயற்பாடுகளுடன் தங்களை இணைந்து தம்மை இனம் காட்டிக்கொண்ட பலரும் சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்வர் என்பது கவலைதரும் விடயமாகும்.

    more
  • புதுக் கட்சி சீமான் இற்கு இந்தக் கதறல் கேட்கின்றதா?
    அகதி முகாம் அலறல்! “காசேதான் கடவுளடா...”

    தமிழக எம்.பி-க்கள் குழு, இலங்கையின் முள்வேலி முகாம்களில் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலையறிந்து தாயகம் திரும்பியிருக்கும் நிலையில்... இங்கிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலையை அறிய மண்டபம் அகதிகள் முகாமை ஒரு வலம் வந்தோம். அங்கே 'காசேதான் கடவுளடா' கோஷம் ஓங்கி ஒலிப்பது கண்டு அதிர்ந்து போனோம்!


    'இலங்கையே தேவலாம் போலிருக்கு..! ஆனா, இங்க நடக்குற எதையும் வெளியில் சொன்னா எங்க மேலயும் 'விடுதலைப் புலி'ன்னு முத்திரை குத்தி, சிறப்பு முகாமுக்கு அனுப்பிடுவாங்க. அதுக்கு பயந்தே நாங்க வாய் திறக்கிற தில்லை. எங்க போட்டோவையோ பெயரையோ போட்டுறாதீங்க...” என்ற பயம் கலந்த வேண்டுகோளுடன் அகதிகள் சிலர் நம்மிடம் பேசினார்கள்.

    'சொந்தங்களையும் சொத்து சுகங்களையும் இழந் துட்டு நிர்க்கதியா நிக்கிறவங்க, உயிர் பிழைச்சுக் கெடப் போம்னுதான் இங்க அகதிகளா வந்திறங்குறாங்க. அப்படி வரும்போது படகோட்டிக்கு ஓர் ஆளுக்கு 30 ஆயிரம் வரை பணம் கொடுக்கணும். அப்படியே கொடுத்தாலும் நடுராத்திரியில இடுப்பளவு தண்ணியிலே எங்கள இறக்கி விட்டுட்டு போயிடுவான். வெளிச்சம் கிட்டிய பின் பார்த்தால் நாங்கள் ஏதாவது ஒரு திட்டில் இருப்போம். பிறகு, அங்கிருந்தும் காசு குடுத்துத்தான் நாங்க கரைக்கு வரணும்.

    நாங்க தனுஷ்கோடிக்கு வந்துட்டோம்னு தெரிஞ்சாலே போலீஸ்ல இருக்கிற அத்தனை பிரிவுகளும் எங்களைத் தேடி வந்துருவாங்க. சிலர் எங்களோட பாக்கெட்டுகளை சோதிச்சு அதிலிருக்கும் முக்கியமான சாமான்களை எல்லாம் எடுத்துருவாங்க. அதை திருப்பிக்கேட்டா 'இயக்கத்துல இருந்தே என்று எழுதி சிறைக்கு அனுப்பிருவோம்'னு மிரட்டுவாங்க. முகாமுக்கு வந்த பின்னாடியும் எங்கள மூன்று நாட்கள் விசா ரணை என்று சொல்லி பிரிச்சு வெச்சிடுவாங்க.

    அப்புறம்தான் எங்களுக்கு முகாம்ல வீடு கொடுப் பாங்க. அதுக்கப்புறம், தொட்டதுக்கெல்லாம் காசு தான். முகாமில் இருக்கும் ஆட்கள் எங்காவது வெளியே போக வேண்டுமென்றால் இங்குள்ள அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும். அப்படி வெளியே செல்பவர்கள் கூடுதலான நாட்கள் வெளியில் தங்கியிருந்தாலும், ட்ரீட்மென்ட்டுக்காக வெளியூர் போனாலும் அந்த அதிகாரிக்கு பணம் கொடுக்கணும். எங்களுக்கான ரேஷன் கடையில் கூடுதலா பணம் குடுக்கிறவங்களுக்கு மட்டுமே நல்ல அரிசி குடுப்பாங்க் இல்லாட்டி பெரும்பாலும் நாத்த அரிசிதான்.

    எங்களின் நடவடிக்கைகள் பற்றி விசாரிப்பதற்காக மாசத்துல நான்கு முறை தணிக்கை விசாரணை நடக்கும். இதில்லாமல் வி.ஐ.பி-க்களின் தமிழக விசிட்டின் போதும் ஸ்பெஷல் தணிக்கைகள் நடக்கும். தணிக்கை நடக்கும் நாட்களில் நாங்க யாரும் முகாமைவிட்டு வெளியே போகவே முடியாது. வெளியிடங்களுக்கு வேலைக்கும் செல்ல முடியாது. தணிக்கையின்போது எங்க ஆட்களை முகாமில் வேலை பார்க்கும் ஆட்கள், கொச்சையாக ஏசி அழைப்பார்கள். இதுக்காக நாங்க யாரும் கோபப்பட்டா, 'என்னடா முறைக்கிறே? செங்கல்பட்டுக்கு மாத்தி விடணுமாக்கும்'ன்னு அதட்டுவாங்க...” என்று துயரத்தோடு சொன்னவர்கள், தொடர்ந்து...

    'முகாமுக்குக் கூடுதலான ஆட்கள் வந்துட்டா, இங்க ஏற்கெனவே இருக்கும் ஆட்களை வெளியூர் முகாம்களுக்கு அனுப்புறதுக்கு லிஸ்ட் எடுப்பாங்க. வெளிமுகாமுக்குப் போக விரும்பாதவங்க, முகாம் அதிகாரிகிட்ட பணத்தைக் குடுத்து லிஸ்ட்டுல இருந்து தங்களோட பேரை எடுத்துருவாங்க. அவங்களுக்கு பதிலா லிஸ்ட்டில் பெயர் இல்லாத ஆட்களை விரட்டிப் பிடித்து வலுக்கட்டாயமா அனுப்பி வைப்பாங்க. வெளிநாடுகளுக்கு செல்ல விசா வாங்கும் நடை முறைகளுக்காக ராம்நாடு கலெக்டர் ஆபீஸ் போனா, அங்க இருக்கும் சில அதிகாரிகளும் எங்களை பணம் பணம்னு அரிச்சுருவாங்க.

    இதையெல்லாம்விட மோசம் என்னன்னா... எங்க பரிதாப நிலைமைய கண்டு மனசிரங்கிய விஜயகாந்த் உள்ளிட்ட சிலர் அரிசி, துணிமணிகளை பாக்கெட் போட்டு ஒரு குடும்பத்துக்கு ஒரு பாக்கெட் என கொடுத்தாங்க. இந்த முகாம்ல வேலை பார்க்குற சிலபேரு, ஒரு பாக்கெட்டை நாலா பிரிச்சு நாலு குடும்பத்துக்கு கொடுத்துட்டு மிச்சத்தை எடுத்துட்டுப் போயிட்டாங்க. இதைப் பத்தி ரெண்டு மாசத்துக்கு முந்தி கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். விசாரணை செஞ்ச கலெக்டர், முகாமில் நடந்த தவறுகளுக்கு காரணமா இருந்த ஓர் அதிகாரியை இங்கிருந்து மாத்திட்டாரு. அவர் போன பின்னாடி வெளி முகாம் களுக்கு ஆட்களைத் தூக்கி அடிக்கிற வழக்கம் நல்ல வேளையா நின்னுருக்கு. ஆனாலும், மற்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுது...” என்றார்கள்.

    அகதி மக்களின் புலம்பல்கள் குறித்து மண்டபம் முகாம் அதிகாரிகள் தரப்பில் கேட்டோம். 'நீங்கள் கேள்விப்பட்டது போன்ற பிரச்னைகள் இங்குள்ள அகதிகளுக்கு இப்போது இல்லை. ரேஷனில் அரிசி உள்ளிட்ட எல்லாப் பொருட்களுமே தரமாகத்தான் வழங்கப்படுகிறது. இதுபற்றி மாதம்தோறும் ஆய்வும் நடத்தப்படுகிறது. கையூட்டு மற்றும் வெளிமுகாம் களுக்கு ஆட்களை அனுப்புவது குறித்த புகார் சில மாதங்களுக்கு முன் இருந்தது. அதற்குக் காரணமாக இருந்த அதிகாரி, தற்போது மாற்றப்பட்டு விட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அகதி ஒருவரும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டு விட்டார்” என்று சொன்னார்கள்.

    (நன்றி;: விகடன்)

    more
  • பிரபாகரன் டெத் சேர்டிபிகேட் எங்கே? - இலங்கை சென்று வந்த தமிழ்நாடு எம்பி தரும் தகவல்
    அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பிய தமிழக எம்.பி-க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி-யான கே.எஸ்.அழகிரியும் ஒருவர். அந்தப் பயணத்தை சகல ஊடகங்களும் அங்குலம் அங்குலமாக அலசி வெளியிட்டு வரும் நிலையில்... கே.எஸ்.அழகிரி தன் கோணத்தில் அந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

    'நம் நாட்டு அதிகாரிகள் பிரபாகரன் டெத் சேர்டிபிகேட்டை பலமுறை கேட்டும் தராமல் இலங்கை அரசு இழுத்தடிக்கிறதாமே... இது பற்றி உங்கள் குழுவினர் விசாரித்தார்களா?”

    'இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷேவிடம், பிரபாகரனின் டெத் சேர்டிபிகேட் குறித்து நான் கேட்டேன், 'எங்கள் நாட்டில் இது போல டெத் சேர்டிபிகேட் தருவதில் சில பிரச்னைகள் உண்டு. சுனாமி வந்தபோது மொத்தமாக மக்கள் மாண்டு போய்விட்டனர். அவர்களுக்கான டெத் சேர்டிபிகேட் தர ஒரு சட்டம் போடப்பட்டது. அது காலாவதியாகி ஒரு வருஷமாகி விட்டது. பிரபாகரன் விஷயத்திலும் ஒரு சட்டம் போட வேண்டும்' என்றார் அவர். பிரபாகரன் மனைவி மதிவதனி மற்றும் மகன் நிலை குறித்துப் பேசும்போது, 'அவர்கள் எங்கள் கஸ்டடியில் இல்லை. அவர்களைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதே சமயம், பொட்டு அம்மான் உடலை எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அவர் தப்பிப் போயிருக்க சான்ஸே இல்லை” என்றார்.

    'போரில் புலிகள் தோல்வி அடைந்தது ஏன் என்று அங்கே விசாரிக்க முடிந்ததா?”

    'இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரிடம் இது பற்றிப் பேசினேன். புலிகள் ராஜீவ் படுகொலையை நடத்தியதால், உலக அளவில் அந்த இயக்கத்துக்கு இமேஜ் பெரிய அளவில் சரிந்துவிட்டது. அமைதிவழிப் பேச்சுவார்த்தையில் புகழ்பெற்ற அமிர்தலிங்கம் கொலையின்போதே புலிகளின் மரியாதை விழுந்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் பலரும் இந்த கோரக் கொலைகளைத் தொடர்ந்து புலிகளுக்கு அது வரை வழங்கி வந்த மானசீக ஆதரவை நிறுத்தி விட்டனர். அடுத்தடுத்து நடந்த ஏராளமான படுகொலை சம்பவங்களால் 'போராளி' என்கிற பேனர் 'பயங்கரவாதி' என்ற பேனராக மாறிவிட்டது.

    அம்பாறை அருகே முஸ்லிம்களை 24 மணி நேரத்தில் வெளியேறும்படி புலிகள் பெயரில் முன்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 'முஸ்லிம்களுடன் நல்ல நட்பில் இருந்த புலிகள் ஏன் இதை செய்யப்போகிறார்கள்? யாரோ விஷமிகள்தான் இப்படிச் செய்திருப்பார்கள்' என்று முஸ்லிம்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால், உலகத்திலேயே எங்கும் நடக்காத கொடுமையாக மூன்று மசூதிகளில் புலிகள் அதிரடியாகப் புகுந்து 240 நபர்களைக் கொன்று குவித்தனராம். இது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் கடுங் கோபத்தை உண்டாக்கிவிட்டது.

    தமிழ் ஆதரவு சிங்களத் தலைவரான ரணில், அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், எந்த கட்சிக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று புலிகள் தமிழர்களை தடுத்தனர். ஒருவேளை அவர்கள் வாக்களித்திருந்தால் ரணில் ஜெயித்திருப்பார். இந்நேரம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக பிரச்னையைத் தீர்த்திருப்பார். புலிகளின் செயலால் ரணிலும் தோற்றுவிட்டார்.

    இதெல்லாம்தான் புலிகள் தோல்வியைத் தழுவ முக்கியக் காரணங்கள் என்று எங்களிடம் சொன்னார்கள்!”

    'பிரபாகரனின் கடைசி நிமிடங்கள் பற்றி புதிய தகவல் ஏதும் கிடைத்ததா?”



    'அங்கே எனக்குக் கிடைத்த தகவல் இப்படி இருக்கிறது...

    பிரபாகரன் இறப்பதற்கு முந்தின நாள் இரவு 12மணிக்கு நடேசன், தொலைபேசியில் பசில் ராஜபக்ஷேவிடம் பேசினாராம். போரை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று அவர் கேட்டுக் கொண்டாராம். இதே விஷயத்தை மறுநாள் நார்வே தூதரகத்தில் இருந்தும் போன் மூலம் சொன்னார்களாம். பசிலும் நடேசன் தரப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்தாராம். அவர்களின் வரவை சிங்கள ராணுவம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்... வேனில் வந்த புலிகள் ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்களாம். இந்த சம்பவத்தால் ராணுவத்தினரின் கவனத்தைத் திசைதிருப்பி, பிரபாகரன் உள்ளிட்ட சிலர் கடலில் புதுவழி ஏற்படுத்தி தப்பிக்க ரகசியத் திட்டமிட்டிருந்ததாக ராணுவத்துக்குத் தகவலும் வந்ததாம். இது மாதிரி ஏதாவது திசைதிருப்பும் செயலில் புலிகள் ஈடுபடுவார்கள் என்பதை முன்கூட்டி எதிர் பார்த்தே, கடல்பகுதிகளில் ஏழு அடுக்கு பாதுகாப்பு வளையங்களை ராணுவத்தினர் செய்திருந்தனராம். இதன் தொடர்ச்சியாகவே, பிரபாகரன் தப்பிக்கும்போது சுடப்பட்டு இறந்தார் என்கிறது அந்தத் தகவல்!.”

    'எம்.பி.க்கள் குழு இலங்கை சென்று திரும்பிய பிறகு, முகாம்களில் உள்ள தமிழ் மக்களை சொந்த இருப்பிடத்துக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளதாக தகவல் வருகிறதே... இது எந்தளவுக்கு திருப்தியான நடவடிக்கை?”

    'இலங்கை அரசு இன்னும்கூட வேகமாக இதை செய்திருக்க முடியும். இப்போது முகாம்களில் இருப்பவர்களில், 'புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஊடுருவித் தங்கி இருக்கிறார்களா?' என்பதை சல்லடை போட்டு ராணுவத்தினர் தேடுகிறார்கள். பலர் தங்களின் சொந்த முகவரியை ஏனோ மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை தனிமைப்படுத்தி ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று அதிகாரிகள் விசாரித்து வருகி றார்கள். மேலும், புலிகள் பல இடங்களிலும் புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைத் தற்போது தோண்டி எடுக்கிறார்கள். அதை முழுமையாக அகற்றாவிட்டால், மீண்டும் அங்கே குடியேற்றம் செய்யப்படுகிறவர்களில் சிலர் அந்த ஆயுதங்களைத் தோண்டி எடுத்து ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தக் கூடும் என்று நினைக்கிறது இலங்கை அரசு. மூன்றாவது காரணம், புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது. இந்த காரணங்களால்தான் தாமதம் ஏற்படுவதாகச் சொல்கிறது இலங்கை தரப்பு!” என்று முடித்தார் கே.எஸ்.அழகிரி.

    more
  • கடைந்தெடுத்த தமிழ்த் துரோகிகள்....‏ "நேர்மையாக இருப்பதாக காட்டுபவர்களை விட நேர்மையாக வாழ்பவர்களையே எனக்கு பிடிக்கும்"
     என்றார் தலைவர் பிரபாகரன்.

    ஆனால் இன்று நடப்பது என்ன? நீண்டநெடிய விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளின் எண்ணிக்கை அனுமன் வாலைப் போல் நீண்டு கொண்டே இருக்கிறது. கொலைச்சதியின் கூட்டுப்பங்காளிகளான சோனியாவின் காங்கிரஸ் காரர்களுடனும், கூட்டிக் கொடுக்கும் துரோகி கருணாவுடனும் இருப்பவர்களை உண்மையான உணர்வாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
    சோனியாவையும் வாழ்த்திப் பேசி விட்டு மறுபக்கம் ஈழ ஆதரவு பேச்சை பேசினால் அவர்கள் தலைவர் சொன்னது போல் நேர்மையானவர்களா?

    எதிரியின் இருப்பிடம் நமக்கு நன்றாக தெரிகிறது. ராஜபக்சேவும்,
    கோதபாயாவும் அவர்கள் பிறந்த சிங்கள இனத்திற்காக சண்டையிடுகிறார்கள்.

    ஆனால் நமக்குள்ளேயே இருந்து கொண்டு எச்சில் எலும்புகளுக்காக துரோகம்
    செய்யும் துரோகிகள் அவர்களை விடவும் ஆபத்தானவர்கள்.

    இத்துணை காலமும் ஆடுகள் போல் தென்பட்டவர்கள் ஆட்டுத்தோல் போர்த்திய நரிகள் என்று இப்போதுதான் தெரிகிறது.

    துரோகிகளின் பட்டியல் இதோ...(எதிரிகளை சேர்க்கவில்லை)


    1. ஜெயலலிதா (கருணாவுக்கு செக் வைத்து சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை
    பார்க்காமல் ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளை பேசி, அகங்காரத்தால்
    அழிந்தவர். போரில் மக்கள் அழிவது இயல்பு என்ற தத்துவ முத்துக்களை
    உதிர்த்தவர், ஈழத்தை அமைத்து கிழித்து விடுவேன் என்று ஓட்டுக்காக
    வாய்சவடால் விட்டவர்).
    2. திருமாவளவன் (எழும் தமிழ் ஈழம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே
    மறுபக்கம் எழும் ஈழத்தை அமுக்குவது, ஒரு எம்.பி. பதவிக்காக ராஜா பக்சவிடம்
    அடிபணிந்தது, மாவீரர் குடும்பத்தினரை தமிழகத்தில் இறக்கி விடுகிறோம்,
    காப்பாற்றுங்கள் என்று சொல்லிய புலிகளின் தொடர்பை துண்டித்தது,
    ராஜபக்சேவின் நையாண்டி, நக்கல் ஜோக்குக்கு விழுந்து விழுந்து சிரிப்பது).

    4. ராமதாஸ் (தன் மகனை பதவியில் வைத்துக் கொண்டே மக்கள் டி.வி.யில் சோக
    கீதம் பாடுவார், இப்போது கருணாவுடன் சேர்ந்து குரல் கொடுக்கப்
    போகிறாராம்)

    5. விஜயகாந்த் (காங்கிரஸிடம் 300 கோடி வாங்கிக் கொண்டு வாயை பொத்திக்
    கொண்டு இருப்பது, காங். கூட்டணிக்காக சோனியாவை விமர்சிக்காமலிருப்பது,
    கருணாவின் UNDERGROUND பினாமியாக இருப்பது).

    6. சிதம்பரம் (மெத்தப் படித்த மேதாவி. கொலைகாரர்களுக்கு 500 கோடி, 1000
    கோடி என்று ஊக்கத் தொகை அளிக்கிறான் மீண்டும் மீண்டும் கொலை செய்வதற்கு).

    7. ஜெகத் கஸ்பர் (தேன் ஒழுகுவது போல் நக்கீரனில் எழுதி கருணா, சிதம்பரம்,
    சோனியாவின் உதவி இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்று மக்கள் மனதில் விஷ விதையை விதைப்பது).

    8. தினமலர் (காசுக்காக தன் வீட்டு பெண்களையே கூட்டிக் கொடுக்க தயங்க மாட்டான்).

    9. ரஜினிகாந்த், கமல், விஜய் Etc நடிகர்கள் (ரசிகர்களை தூண்டி
    விட்டிருந்தாலே புரட்சி ஏற்பட்டிருக்கும். எதுவும் செய்யாமல் கிழட்டு
    கருணாநிதியை  பல மணி நேரம் வாழ்த்திப் பேசுவது.

    அதிலும் விஜய், "ராவு காலம்" ராகுல் காந்தியுடன் ஈழ மக்களுக்கு எப்படி நல்லது செய்வது என்றுபேசுகிறாராம்.

    ஆப்படித்தவுடன் அடங்கி விட்டார். இந்த நடிகர்கள் கருணாநிதி
    ஏவும் வருமான வரி சோதனைக்கு பயந்து அடங்கி ஒடுங்கி விட்டார்கள். பல கோடி ரூபாய் வருமானம் வெளிநாடுகளில் தமிழர்கள் படம் பார்த்ததால்தான் சம்பாதிக்க முடிந்தது என்பதை மறந்து விட்டார்கள்).

    10. வைரமுத்து (கருணாவின்நிதியின்  அடியை வருடுவதுதான் வேலை. மன்னர் கருணாவைநிதியை  வாழ்த்திப் பாக்கள் பாடி பரிசில் பெறுவதுதான் இவருடைய முதல் வேலை)

    11. வீரமணி (கருணாவின்நிதியின்  அடிவருடி, இவன் கையால்தான் தலைவர் பழரசம் வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். இப்போது அவரே வருத்தப்படுவார்)

    12. ஜெகத்ரட்சகன் (கருணாவின்நிதியின்  அடிவருடி)

    13. சுப. வீரபாண்டியன் (கருணாநிதியின்  அடிவருடி)

    14. காங்கிரஸ் பன்னிகள் (ராஜபக்சேவின் குண்டியை நாக்கால் நக்கி கழுவி
    விட்டு அதில் சந்தன மணம்தான் வருகிறது, நாறவில்லை என்று சர்டிபிகேட்
    கொடுக்கிறார்கள்).

    15. நக்கீரன் (பிரபாகரன் படத்தை கிராபிக்ஸ் பண்ணி பணம் பார்ப்பதில்
    எக்ஸ்பர்ட். பிரபாகரன் தன் உடலை பார்ப்பது போல் வந்த படத்தை பற்றி
    கேட்டால் "அது நம்ம ரெடி பண்ணினது சார்" என்கிறான்).

    மக்களின் முன்னேற்றத்திற்காக சாணக்கிய மூளையை உபயோகப்படுத்தினால் அதை "ராஜ தந்திரம்" என்று சொல்லலாம். ஆனால் தனக்கும், தனது குடும்பத்திறகாக மற்ற எல்லோரையும் முட்டாளாக்க நாடகங்களை நடத்தினால் அதற்கு பெயர் ராஜ தந்திரம் அல்ல (துரோகத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம்).

    ஆலமரத்தில் ஏராளமான விழுதுகள் உருவாவது போல் கருணாநிதி  என்ற ஒற்றை
    துரோகியிடமிருது இவ்வளவு பேரும் உருவாகியிருக்கிறார்கள். எட்டு கோடித்
    தமிழர்களை 80 துரோகிகள் சேர்ந்து நன்றாக ஏமாற்றுகிறார்கள். இவர்களால்
    ஒட்டு மொத்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
    நடக்கடும் ,,,,,,நடக்கட்டும் ....

    more
  • ஜெகத் காஸ்பர்- தண்டிக்கப்படாத குற்றவாளி, இதோ அவரின் உண்மை முகம்
    இந்த மாதிரி ஆட்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஏதோ தமிழர்களுக்கு கொஞ்சம் குரல் கொடுத்தாரே என்ற முறையில் நாம் கொடுத்த மதிப்பினை தவறாக எடுத்து கொண்டு இன்று இந்த ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார். வளர்த்த கடா மார்பில் பாய்வதை விட கேவலமாக இன்று அந்த மார்பினையே கிழித்து ரத்தம் குடிக்க வந்த மிருகம் இது.

    ஈழத் தமிழர்களுக்காக வசூலிக்கப்பட்ட நன்கொடையில் கையாடல் செய்த குற்றத்திற்காக
    ஈழத்திற்கு வரவழைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு அருட்தந்தை என்பதனால் தண்டிக்கபடாத குற்றவாளி என்று விடுவிக்கப்பட்டவர்தான் இவர்.



    நேற்றைய தினம் தமிழகத்தின் முன்னனி இணையத்தளமான குமுதத்திற்கு பேட்டி ஒன்றை அருட்தந்தை ஜெகத் காஸ்பர் அவர்கள் வழங்கியிருந்தார். அதில் பழ நெடுமாறன் ஐயா உட்பட பலரை கீள் தரமாக விமர்சித்திருக்கும் அவர், பழ நெடுமாறன் ஐயா, மற்றும் வைகோ போன்றவர்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும், தமிழ் நாட்டு ஈழ ஆதர்வாளர்கள், தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியா போர் நிறுத்தத்தைக் கொன்டுவந்திருக்கும் என கற்பனையின் உச்சக்கட்டத்திற்கே சென்று புதுக் கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். தன்னுடன் சேர்ந்து உணர்வாளர் சீமான் கட்சி ஆரம்பித்துவிட்டு பின்னர் தனக்குச் சொல்லாமலே தன்னை விலக்கிவிட்டதாகவும் சாடியுள்ளார்.

    "விபச்சாரம்", "நான்" "நீ" என்ற ஏக வசனங்களைக் கொண்டு தமிழீழ உணர்வாளர்களை வயது தராதரம் பார்க்காமல் வசைபாடியுள்ளார் திரு.ஜெகத் காஸ்பர் அவர்கள். ஆண்மை பற்றிப் பேசி, ஒருவரை ஆண்மை இல்லாதவர் என வசைபாடும் கீழ்த்தரமான நடத்தை கொண்டவர் காஸ்பர் அவர்கள். ஒரு அருட் தந்தை என்ற தனது ஸ்தானத்தில் இருந்து விலகி மிகவும் கீழ் தரமாக ஈழ உணர்வாளர்களை விமர்சித்திருக்கிறார். இப்படி இவர் விமர்சிக்க அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தது. தனது பிறந்த நாளுக்கு தேசிய தலைவர் வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதுவே தனக்கு கிடைத்த அங்கிகாரம் எனக்கூறுகிறார். இதற்கு மேல் யாரும் என்னுடன் பேச முடியாது என்கிறார் காஸ்பர்.

    விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தவறுகள் இருப்பதை தாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் காஸ்பர். அப்படி ஒத்துக்கொள்ள இவர் யார்?

    விடுதலைப் புலிகளின் உறுப்பினரா?

    சுபவீர பாண்டியன் மற்றும் காஸ்பர் அடிகளார் முன் நிலையிலேயே, இந்தியாவால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு, ப.நடேசன் அவர்களும் புலித்தேவனும் வெள்ளைக்கொடியுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் நுழைந்தனர், இதில் இவர்கள் பங்கும் சிதம்பரத்தின் பங்கும் இருப்பதை யாரும் மறந்துவிடவில்லை. இருப்பினும் அப் பழியை அப்படியே விஜய் நம்பியார் மீது திருப்பிப் போட்டு அவரை ஒட்டுமொத்த குற்றவாளியாக்கி தான் தப்பிக்கப் பார்க்கிறார் காஸ்பர்.

    வெள்ளைக் கொடிகளை காட்டியவாறு செல்லுங்கள் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் நாம் தருகிறோம் எனக் கூறிய இந்தியா, நயவஞ்சகமாக எமது தலைவர்களைக் கொல்லக் காரணமாகியது. அப்படியே அதை இலங்கை அரசு செய்திருந்தால் கூட அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அற்ற இந்தியாவிடம், இனியும் நாம் சென்று பிச்சை கேட்கவேண்டும் என்கிறார் காஸ்பர் அடிகளார். அதாவது இந்திரா காங்கிரசுடன் பேசினால் நல்லது நடக்கும் என்றால் பேசலாம் என்பது அவர் கொள்கை. அடிப்படையில் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்படும் சோனியாவிடம் நக்கிப் பிழைக்கலாம் என்கிறார் காஸ்ப்பர் அடிகளார்.

    எல்லாம் போகட்டும்,

     விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்பதற்காக ஐயா பழ நெடுமாறன் சிறையில் அடைக்கப்பட்டார், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோ பல வருடங்கள் போடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார், சீமான் உட்பட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்,

    ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் காஸ்பர் அவர்கள் ஏன் தமிழ் நாட்டில் இன்னும் கைதுசெய்யப்படவில்லை, குறைந்த பட்சம் கியூ பிரிவினரால் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது மிகுந்த சந்தேகத்திற்கு உரியது. மத்திய அரசில் இவருக்கு இருக்கும் தொடர்புகளும், இந்திய உளவுப் பிரிவின் நெருங்கிய தொடர்பும் இருப்பதன் காரணமாகவே இவர் இது நாள்வரை கைதுசெய்யப்படவில்லை.


    குமுதம் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு, பதிலைக் கூறாமல் உலக பயங்கரவாதம் குறித்து பேசி சில கேள்விகளை திசை திருப்பி அதனை ஒரு விவாதமாக மாற்றி, நேர்காணலை திசை திருப்ப காஸ்பர் மேற்கொண்ட முயற்சிகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

    அத்துடன் 2002ம் ஆண்டு இந்தோ- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், அதனால் ஏவப்பட்ட செயற்கைக்கோள், அதில் உள்ள புற ஊதாக்கதிர் உள்வாங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகக் கூறும் காஸ்பர் அவர்கள்,

    அதனை முன்னமே விடுதலைப் புலிகளுக்கு அறிவித்திருக்கலாமே, தற்போது அதைப் பற்றி பேசி என்ன பயன்.?

    தமிழ் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களையும் வசைபாடி, தான் மட்டும் செய்வதே சரி எனக் கூறி தனது நேர்காணலை நிறைவுசெய்துள்ளார் காஸ்பர் அவர்கள். சிதம்பரம், தொடக்கம் சிதம்பரத்தின் மகனுடனும் தாம் தொடர்புகளைப் பேணிவருவதாகக் கூறும் காஸ்ப்பர், கவிஞர் கனிமொழி யுடனான தொடர்புகளைப் பற்றி கடைசிவரை வாய் திறக்கவில்லை.

    புலம்பெயர் தமிழ் மக்கள், தற்போது ஈழ விடுதலைப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இளையோர் அமைப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த கால கசப்பான அனுபவங்களை இரை மீட்டி, தமிழர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ண முனையும் விசக் கிருமிகளை முதலில் களைந்தால் தான் எமது போராட்டம் வலுப்பெறும். தேசிய தலைவர் எனது நண்பர், விடுதலைப் புலிகளை நான் ஆதரிக்கிறேன் எனச் சிலர் கூறி கடைசியில் கவிழ்த்த விடையங்களை நாம் அறிவோம்.

    தமிழர்கள் தற்போது பிரிந்து கிடப்பதாக முழத்திற்கு, முழம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் காஸ்பர் அவர்கள். தமிழராகிய நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் உணர்வாளர்களாக இருக்கிறோம் அப்படியே இனியும் இருப்போம் என அதிர்வு இணையம் நம்புகிறது. அதுவே உண்மை. இதில் காஸ்பர் போன்ற புல்லுருவிகள் அகற்றப்படவேன்டும். சுதந்திர ஈழம் மலரவேண்டும். தமிழர்களின் போராட்டமே விடுதலையை வென்றெடுக்குமேயன்றி, நாம் நக்கிப் பிழைக்கத் தேவையில்லை. காங்கிரசிடம் மண்டியிடவோ அல்லது இந்திய அரசிடம் பிச்சையாக நாம் தமிழீழத்தைப் பெறவேண்டியது இல்லை.

    அதனை தமிழீழ தேசிய தலைவரும் விரும்பமாட்டார். போராடாமல் ஒரு இனம் வெற்றிபெற்றதாகச் சரித்திரமில்லை என்றான் எமது தங்கத் தலைவன்! எனவே அவர் வழியில் நாம்செல்வோம். அது ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் அல்லது அரசியல் போராட்டமாக இருக்கலாம்.


    more
  • புதினம், தமிழ்நாதம் இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணி என்ன?




    புதினம்,தமிழ்நாதம்எனும் இரு இணையத்தளங்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள கரன் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
    இவ் இரு இணையத்தளங்களும் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரரின் மேற்பார்வையில் இயங்கி வந்தன. இவ் இணையங்களுக்கான செய்திகள் வன்னியில் இருந்து நந்தவனம் எனும் பெயரில் இயங்கிவந்த புலிகளின் இளை ஒன்றில் இருந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.


    அதேநேரம் இவ் இணையத்தினை நிர்வகித்து வந்த கரன் என்பவருக்கு தயா மாஸ்ரரின் சிபார்சின் பேரில் மேற்குலக நாடொன்றில் வசிக்கும் தமிழ் தொழில் அதிபர் ஒருவர் நிதி உதவி செய்து வந்துள்ளார். ஆனால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரனுக்கான மாதாந்த வருமானம் கிடைக்காமையால் அவ்விணையம் தடைப்பட்டிருக்க வேண்டும் என கடந்த காலங்களில் புலிகள் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.


    அத்துடன் தயா மாஸ்ரர், இலங்கை அரசாங்கத்தினால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது பலரினாலும் உணரப்பட்டுள்ள விடயம். அந்நிலையில் தயா மாஸ்ரரின் நம்பக்கைக்கு உரியவரான கரனால் நிர்வகிக்கப்பட்டு வந்த இணையம் தனிப்பட்ட காரணங்களுக்காக சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்ள்ளது. தனிப்பட்ட காரணங்கள் எனும்போது தயா மாஸ்ரரின் தேவைக்காக நிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட இணையம், பிற்காலத்தில் தயா மாஸ்ரர் கும்பல் மீண்டும் ஒரு வடிவத்தில் மக்களை ஏமாற்ற மக்கள் முன் தோன்றும்போது புதினம், தமிழ்நாதம் போண்ற இணையங்களும் தமது வடிவத்தையும் மாற்றிக்கொண்டு வெளிவருவதற்கு முன் ஏற்பாடாக நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.


    புலிகள் இயக்கம் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளபோது, குறிப்பிட்ட இரு இணையங்களும் கே.பி தரப்பினரை ஆதரிவந்திருந்தன. கே.பி யின் கைதை தொடர்ந்து இடம்பெற்ற தொடர்கைதுகளையும், இலங்கை அரசியல் மாற்றங்களையும் வைத்து நோக்குகின்றபோது, கொழும்பில் தடுப்புக்காவலில் உள்ள கேபி யின் அழுத்தத்தில் குறிப்பிட்ட இணையங்கள் நிறுத்தப்படனவான என்கின்ற சந்தேங்களும் எழுந்துள்ளன.
    -இலங்கைநெட்-




    more
  • தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

    குழந்தையின் தோலில் புனித குர்ஆன் வசனங்கள்

    தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

    இக் குழந்தையின் உடலில் குர்ஆன் வசனங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை புரியாமல் மருத்துவ உலகே திகைப்படைந்துள்ளது.

    தென் ரஷ்யாவில் செச்சினியாவிலுள்ள தகெஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த அலி யகுபோவ் என்ற மேற்படி குழந்தை பிறந்த பின் அதன் நாடியில் "அல்லாஹ்" என்ற வார்த்தை தோன்றியதையடுத்து அவனது பெற்றோர் வியப்படைந்தனர்.

    தொடர்ந்து அக் குழந்தையினது முதுகு, கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றில் அராபிய வசனங்கள் பல தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

    தற்போது 9 மாத வயதாகும் அலி யகுபோவின் தோலில் வாரத்திற்கு இரு தடவைகள் புதிய குர்ஆன் வசனங்கள் தோன்றுவதாகவும் புதிய வசனங்கள் தோன்றும் போது பழைய வசனங்கள் மறைந்து விடுவதாகவும் அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

    திங்கட்கிழமையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவுகளிலும் சிறுவனது உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றி வருவதாகக் கூறிய மதினா, இதன்போது குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்து சிறுவன் மிகுந்த வேதனையுடன் அழுவதாகக் கூறினார்.

    "இதன்போது எமது மகனை பற்றிப் பிடிக்க முடியாது. அவனது உடல் உதறிக் கொண்டிருப்பதால் அவனை தொட்டிலிலேயே படுக்க வைத்திருப்போம். அவன் வேதனைப்படுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

    அலி யகுபோவின் உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றும் வரை மத நம்பிக்கையற்றவராக இருந்த அவரது தந்தை, தற்போது தீவிர மதப் பற்றாளராக மாறியுள்ளதாக பாலகனின் தாயாரான மதினா தெரிவித்தார்.

    இது தொடர்பில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் அஹமட்பாஷா அமிராலேவ் விபரிக்கையில், "இந்த சிறுவன் இறைவனின் தூய அடையாளமொன்றாக உள்ளான்.

    எமது பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை நிறுத்தும் முகமாக அல்லாஹ்வே இப்பாலகனை எம்மிடம் அனுப்பி வைத்துள்ளான்'' என்று கூறினார்.

    more
  • புகலிடம் கோரும் இலங்கையர்களுடன் கடும்போக்கை கனடா கடைப்பிடிக்கும் - குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி
    கனடாவில் புகலிடம் கோருவோர் மீது மென்போக்கு கடைப்பிடிக்கப்படுவதாக நிலவும் அபிப்பிராயத்துடன் அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நாட்டின் மேற்கு கரையோரத்தில் துருப்பிடித்த படகு ஒன்றில் வந்து சேர்ந்த இலங்கையர்கள் என்று நம்பப்படும் 76 பேருடன் தாம் கடும்போக்கை கடைப்பிடிக்க இருப்பதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி தெவித்துள்ளார்.

    தமிழ் கனடியர்கள் இந்த படகு மக்கள் மீது கருணை காண்பிக்குமாறு கனடிய அதிகாரிகளை வற்புறுத்திவரும் அதேவேளை, இந்த குடியேற்றவாசிகளின் சட்டவிரோத படகுப் பயணம் அதிகரித்து த்து வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் பிரச்சினையை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது என்று அமைச்சர் கெனடி, தெரிவித்துள்ளார்.

    அநேகமான புகலிடக் கோரிக்கைகள் பொய்யானவை என்று நம்பப்படுவதாகவும் அவை தொடர்பாக கடும் சட்டங்களை கொண்டுவரப் போவதாகவும் கனடாவின் கொன்சர்வேற்றிவ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.



    இரண்டு வகை குடிவரவு ·றைமைகளை கடைப்பிடிக்கும் நாடு என்ற பெயரைப் பெற்றுக் கொள்ள தாங்கள் விரும்பவில்லை என்று அமைச்சர் கெனடி தெரிவித்தார். கனடாவுக்கு வர பொறுமையுடன் காத்திருக்கும் சட்டஙுதியான, சட்டத்தைமதித்து நடக்கும் குடியேற்றவாசிகள் ஒரு வகையினராகவும் பின் கதவு வழியாக புகலிடக் கோரிக்கை லம் கனடாவுக்கு வர ·யல்வோர் இரண்டாவது வகையினராகவும் இரு வகையினர் இருப்பதை அவர் பேட்டி ஒன்றின் போது சுட்டிக் காட்டினார்.



    புகலிடம் வழங்கும் ·றைமையை துஷ்பிரயோகம் செய்யும் இரண்டாவது வகையினருக்கு குடிவரவுக் கதவை டிவிடுவது சிறந்தது என்று தாங்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.



    புகலிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் படகு மக்களின் எதிர்காலம் பற்றி தீர்மானிப்பதற்கு இந்த விடயம் நேற்று குடிவரவு அகதிகள் விசாரணை மண்டபத்தில் ஆராயப்பட இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.



    கனடிய குடிவரவு சட்டத்தின் கீழ, தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிட கோரிக்கையாளர் ஒருவர் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு ·ன்னதாக அவரது விடயம் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். இந்த குடியேற்றவாசிகள் கடந்த சனிக்கிழமை இரவு படகிலிருந்து கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள்.



    இவர்களது வரவினால் கனடாவின் பாரிய தமிழர் ச·தாயம் மிகுந்த அக்கறையுடன் அதன் இரண்டு உறுப்பினர்களை படகு பிடிபட்ட மேற்கு கரையோரத்திற்கு அனுப்பியுள்ளது. ரொறொன்ரோ வழக்கறிஞர் கெ> ஆனந்தசங்கரி குடியேற்றவாசிகளை சந்திக்க வேண்டுமெனக் கோரி கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை நிலையத்தின் வன்கூவர் அலுவலகங்களுக்கு திங்கட்கிழமை நேரில் சென்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. திங்கட்கிழமை அதிகாலை விமானம் லம் வன்கூவர் போய்ச் சேர்ந்த ஆனந்தசங்கரியும் டேவிட் பூபாலப்பிள்ளையும் குடியேற்றவாசிகள் இலங்கையிலிருந்து அவலப்பட்டு வெளியேறிய இளம் தமிழர்கள் என்று நம்புகிறார்கள்.



    அநேகமானோருக்கு இலங்கை இப்போதும் பாதுகாப்பற்ற நாடாகவே இருந்து வருகிறது என்று ஆனந்தசங்கரி தெரிவித்தார். வன்கூவர் தீவிலிருந்து சுற்றுவட்டரத்திலுள்ள தடுப்பு முகாமொன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட குடியேற்றவாசிகளை செவ்வாய்க்கிழமை சந்திக்க மீண்டும் முயற்சி செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.






    more
  • பாங்காக் தாய்லாந்தில் 45 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
    இன்று காலை 6.30,  மணியளவில் பாங்காக் தாய்லாந்தில்  சட்டவிரோதமாக
    தங்கியுள்ளோரை கைது செய்யும்  பொருட்டு குடிவரவு-குடியகல்வு
    திணைக்களத்தினால்  பாங்காக் தாய்லாந்தில்  45 சட்ட விரோத குடியேற்ற
    வாசிகள் கைது  செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழ்கள்
    இதில் 16 வயதுக்கு உட்பட்டோர் 15,ஏனையவர்கள் 25 ஆண்களும்  பெண்களும் 
     அடங்குவர்
    பாங்கொக்கில் உள்ள {unhcr} அகதிகல் பனிமனையில் பதிவு
    செய்யப்பட்டவர்கள்  இதில் பொரும்பாலானவர்கள் அகதிகள் என
    அங்கிகரிக்கப்பட்டவர்கள்  சுமார்  4 வருடங்கலாக  அகதியகலாக  பாங்காக்
    தாய்லாந்தில் தங்கி இருப்பவர்கள் என்பதும் குரிப்பிடத்தக்கது.
    சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முட்பட்ட 260 இலங்கையர்கள்
    இந்தோனேஷியாவில் கைது.  கைதை . அடுத்து  கனடாவின் மேற்கு கரையோரப்
    பகுதியில் மர்மக் கப்பல் ஒன்றுடன் கடந்த வார இறுதியில்
    கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு
    குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார்
    பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து
    கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்துபுறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியாத நிலையில் அது பாங்காக்கிலிருந்து
    செயல் படும் சட்ட விரோத முகவர்களால் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று இணைய
    தலங்களில் வந்த செய்திகளை அடுத்து பாங்காக் குடிவரவு-குடியகல்வு
    திணைக்களத்தினால்  பாங்காக்கில் கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன்
    ஒரு அங்கமே இந்தக் கைது என்றும்  கூரப்படுகிறது  .
    தாய்லாந்தில் இருந்து : ஜெயகுமார்

    more
  • புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்” கிளிநொச்சியை இராணுவம் அண்மித்ததும் பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் பலாத்காரத்தை பிரயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள்”


    மே 16ம் திகதிவரை வெள்ளான் முள்ளிவாய்க்காலிலிருந்து பின் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் வந்துள்ள என் ஊராரையும், உறவினரையும் பார்ப்பதற்காக அண்மையில் வவுனியா சென்றேன். புறப்படுமுன் லண்டனிலிருந்து வெளிவந்த செய்திகள் எம்மை சற்று சிந்திக்க வைத்தாலும் இவையெல்லாம் உண்மைதானா என்பதை நேரே சென்று அறியவேண்டும் என்ற ஆவல் எம் பயணத்தை தொடரும்படி தூண்டியது.

    விமானத்திலிருந்து வெளியேறும்போது எனக்குள்ளே சற்று தயக்கம். காரணம் பிரித்தானிய கடவுச்சீட்டு கொழும்பு விமானநிலையத்தில் விரும்பப்படாத ஒன்றென்றும், பலர் இம்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் ஊடகங்களின் விடாது தொடர்ச்சியான செய்திகளாக இருந்தன.

    விமானநிலையத்தின் உள்ளே சென்றதும் swine flu வை அறியும் camera முன்னே வரிசையாக செல்லும்படியான அறிவித்தல் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் செய்யப்பட்டது. அதிகாரிகள் monitor முன் இருந்து எமது உடல் வெப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று எம்மை வரவேற்பதுபோல் குடிவரவு அதிகாரிகளின் இருக்கைக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்தது. கடவுச்சீட்டை கையளித்தபோது எந்த விதமான முகமாற்றமும் இல்லாது தனது கடமையை செய்துவிட்டு கடவுச்சீட்டை கையளித்தார் அந்த அதிகாரி.

    விமான நிலையத்திலிருந்து hotel சென்றபோது இரவு 11 மணி இடையிடையே இராணுவமும் பொலிசும் எம்மை நிறுத்தி சோதனை செய்தார்கள். எந்த இடையுறுமில்லாது நடந்து கொண்டார்கள்.

    மறுநாள் காலை வவுனியா செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றோம். காலை 5.45 மணிக்கு யாழ்தேவி புகையிரதம் கோட்டையிலிருந்து புறப்பட்டது. புறப்படுமுன் அத்தனை அறிவிப்புகளும் சிங்கள மொழியிலேயே செய்தார்கள் எனக்கு எதுவுமே புரியவில்லை. புகையிரதம் மதவாச்சியை அடைந்தபோது அனைவரையும் அவரவர் பொதிகளுடன் வெளியே வருமாறு கேட்கப்பட்டோம். அத்தனை பொதிகளையும் சோதனை செய்தபின் என்னை அந்த அதிகாரி ‘வவுனியா போகமுடியாது’ என்று கூறிவிட்டார். ‘வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு MOD (ministry of Defence) அனுமதி வேண்டும்’ என்றார். அந்த அதிகாரியின் கடமை உணர்வை புரிந்துகொண்டு கடவுச்சீட்டுக்குள்ளே வைத்துக் கொடுத்தேன் என்னை வவுனியா செல்வதற்கு அனுமதித்தார்.

    1985 ம் ஆண்டு லண்டன் செல்வதற்காக வவுனியா புகையிரத நிலையத்தில் நின்றபோது என் நண்பர் கொக்காவில் இராணுவமுகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. புகைவண்டி வவுனியாவை அடைந்தபோது அந்த ஆண்டு என் கண்முன்னே வந்து போனது. 25 ஆண்டுகால நகர்வு ஓர் சினிமாவை பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தது.

    புகையிரத நிலையத்திலிருந்து வீடுசென்ற போது இது வவுனியாவோ இல்லை யாழ்ப்பாணமோ என்ற குழப்பம் எனக்குள்ளே. பார்க்குமிடமெல்லாம் பசுமையான வயல்களும் குளங்களுமாக வேலிகளேயில்லாமல் இருந்த வவுனியா நகர்ப்புறம் இன்று வயல்களும் குளங்களும் மண்ணால் நிரப்பப்பட்டு மேட்டு நிலங்களாகவும் நான்கு பக்கமும் கிடுகுகளால் மூடி அடைக்கப்பட்ட வேலிகளாலும், ஒலிபெருக்கி மூலம் இரவுபகலாக ஓலமிடும் இந்துக் கோயில்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.

    வவுனியாவை யாழ்ப்பாண இந்து மயமாக்கும் திட்டமிட்ட செயல்பாடோ இதுவென்று என்மனம் என்னையே கேட்டது. அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வாழ்ந்த காலப்பகுதிக்கு வவுனியா தள்ளப்பட்டு விட்டதென்று முணுமுணுத்தார் என்னை கூட்டிச்சென்ற நண்பர்.

    சில நாட்களே வவுனியாவில் தங்கிநிற்கக் கூடிய நிலையிருந்ததால் கிடைக்கின்ற பொழுதெல்லாம் அவர்களிடமிருந்து தகவல்களைப்பெறும் நோக்கில் அவர்களோடு பேசிக்கொண்டேன்.

    “எம்மை யாருமே காப்பாற்றவில்லை கடவுள்தான் காப்பாற்றினார்” என்று ஆரம்பித்தார்கள். நடந்தவற்றை அறியும் ஆவலில் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களை மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டேன்.

    மன்னாரில் நடந்த போரில் பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ”கிளிநொச்சியை இராணுவம் அண்மித்ததும் பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் பலாத்காரத்தை பிரயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

    ”எதற்காக பொதுமக்கள் மீது பலாத்காரத்தை செலுத்தினார்கள்” என்று கேட்டபோது ”இழந்த பிரதேசங்கள் இராணுவத்திடம் பறிபோகுமென்று அவர்கள் என்றுமே எண்ணியதில்லை, பறிபோனதால் அவர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்” என்றனர். தளபதி திலீபனிடம் ”எதற்காக மக்கள்மீது இப்படி பலாத்காரம் செய்கிறீர்கள்” என்று கேட்க ”இது மேலிடத்து உத்தரவு” என்றாராம்.

    பலாத்காரமாக பிள்ளைகளைப் பிடிக்க வரும்போது பெற்றோர் அவர்களை எதிர்த்தால் அவர்களை அவ்விடத்திலேயே சுட்டுவிட்டு பிள்ளையை பிடித்துச்சென்ற சம்பவங்களை சிலர் கூறினார்கள். பிள்ளை மறுத்தால் பெற்றோருக்கு முன் பிள்ளையை சுட்டுவிட்டு இப்போ என்ன செய்வீர்கள் என்று கேட்டுவிட்டுப் போவார்களாம் போராளிகள்.

    ”பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்துக் கொண்ட போராளிகளே தோல்வியின் முதல்காரணி” என்றார்கள். ஒருவாரகால ஆயதப் பயிற்சியோடு களம் இறக்கி விடுவார்களாம். அவர்கள் எப்போதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் தப்பிச் செல்லவே விருப்பம் கொண்டிருந்தார்களாம்.

    தளபதி தீபன் இறப்பதற்கு முன்னதாக மிகப்பாரிய இராணுவ ஊடறுப்பொன்றை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் சென்றதாகவும், சென்ற வழியில் இராணுவத்தினர் முன்கூட்டியே நிலையெடுத்திருந்ததால் அதில் 450 க்கும் மேற்பட்ட போராளிகளையும், சொர்ணம் தனது காலையும் இழந்ததாக குறிப்பிட்டார்கள்.

    நெஞ்சின் தோள்பகுதியில் குண்டுபட்ட தீபன் இரண்டு நாட்களாக களத்தில் நின்று போராடி மூன்றாம் நாள் எறிகணை பட்டு இறந்ததாகவும், பங்கர் வாசலிலே படுத்திருந்த விடுதலைப் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி மீது செல் விழுந்து வெடித்து அவர் மரணித்துள்ளார்.

    இறந்த உடல்கள் ஆங்காங்கே நாட்கணக்கில் துர்நாற்றம் வீசியபடி கிடந்த காட்சியையும், காயப்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி ஆங்காங்கே கிடந்ததாகவும்; துர்நாற்றமெடுத்து ஈ மொய்க்கின்ற காட்சி சர்வசாதாரணமாக இருந்தது என்றார்கள்.

    இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தப்பிவர முனைந்த பலர் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களை சிலர் விபரித்தனர்.

    இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை கொடுத்து இரண்டு தேங்காய் வாங்கிய கதையை கூறிய அதேவேளை ஓரு இலட்சம் வரையான நெல் மூட்டைகளை விடுதலைப் புலிகள் அப்படியே இராணுவத்திடம் கைவிட்டு வந்ததாக கூறியபோது உணர்ச்சிவசப்பட்டார்கள்.

    ஓவ்வொரு இடப்பெயர்வின் போதும் கைவிட்டுச்சென்ற தமது உடைமைகளையும் இழந்த உறவுகளையும் எண்ணி கண்ணீர் வடித்தார்கள். பார்க்குமிடமெல்லாம் பிணங்களும், கேட்பதெல்லாம் மரணஓலங்களுமாக பல வாரங்கள் கழிந்தன என்று தேம்பித் தேம்பி அழுதார்கள்.

    பங்கருக்குள் இருந்தபோது விடுதலைப் புலிகளின் ஆலோசகர் திருநாவுக்கரசு கடந்த இரு வருடங்களாக பிரபாகரனுக்கு சித்த சுவாதீனம் பிடித்து விட்டதென்று கூற அங்கிருந்த மற்றய விடுதலைப் புலிகளின் விசிறிகள் அவரோடு கைகலப்பிற்கு சென்று விட்டார்களென்று ஒருவர் தெரிவித்தார்.

    இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது எப்படி இராணுவம் நடந்து கொண்டது என்று விடுதலைப் புலிகளின் மிகவும் நெருக்கமானவரிடம் கேட்க ”என் மனச்சாட்சியை தொட்டுச் சொல்கிறேன் மனிதர்களைப்போல் நடந்துகொண்டார்கள்” என்றார்.

    அடுத்தநாள் வவுனியா நகரைப் பார்ப்பதற்காக சென்றோம். 25 ஆண்டுகால போரின் அழிவுகளை மக்கள் முகங்கள் மட்டுமல்ல வவுனியா நகரும் காட்டிக் கொடுத்தது.

    நகருக்கு அண்மையில் உள்ள சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்தில் போராளிகளை மட்டும் வைத்து பராமரிக்கிறார்கள். வெறும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட வேலிக்குள் அவர்கள் மிகவும் லாவகமாக நடமாடுகிறார்கள்.

    உறவினர்கள் முட்கம்பிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். கிடுகுகளால் வேயப்பட்ட கொட்டகைகளுக்குள் ஏதோ வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன.

    முகாமிலிருந்து சில நாட்களுக்கு முன் வெளியேறிய சிலருடன் பேசியபோது முகாமுக்குள் பல குழந்தைகள் திடீர் திடீரென இறந்து போவதாகவும், இந்த இறப்புக்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொலித்தீன் கூரைகளே காரணம் என்று வைத்தியர்கள் சந்தேகப்படுவதாக கூறினர்.

    மேலும் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு யாழ்தேவி மூலம் கொழும்பை வந்தடைந்தோம். மறுநாள் லண்டன் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றபோது உள்ளேயும் வெளியேயும் விமானப்படை அதிகாரிகள் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்ட முறை என்னை 2005 ம் ஆண்டு புலிகளின் புளியங்குள விசா காரியாலயத்தோடு ஒப்பிட வைத்தது.

    2005ம் ஆண்டு யாழ் செல்வதற்காக தரைவழியாக புளியங்குளம் சென்றோம். வாகனத்தை விட்டு இறங்கியதும் “அ” க்கு போங்கள் “இ” க்கு போங்கள் “பு” க்கு போங்கள் என்று பயணிகளையும் வாகன உரிமையாளர்களையும் மந்தைகள் போல் நடாத்திய காட்சி என் கண்முன்னே வந்துபோனது.

    கிளிநொச்சியிலுள்ள விசா காரியாலயத்துக்கு சென்றபோது அந்த இளம் அதிகாரி ”லண்டனிலே விடுதலைப் புலிகளிற்கு பணம்கொடுத்த ரசீது இருக்கிறதா?” என்றார். ”இல்லை” என்றேன். ”அப்படியென்றால் விசா கிடைக்காது” என்றார். ”விசா எடுக்க வேண்டும் என்ற நோக்கில் எவரும் பணம் கொடுப்பதில்லை” என்றேன்.

    ”அப்படி அறிவதாயின் உங்கள் area பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு அறியுங்கள்” என்றேன். என்னை கூட்டிச் சென்றவரின் முகமாற்றம் என்னை தொடர்ந்து பேசவிடாது தடுத்தது. அப்போது எம் நீண்ட இருக்கையின் மூலையில் ஒருவர் காத்திருந்தார், அவரைக் காட்டிய அந்த அதிகாரி ”அதோ பாருங்கள் அந்த நபர் லண்டனிலிருந்து வந்தவர். இரு வாரங்களாக இங்கே வந்து போகிறார். இவர் லண்டனில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர். அதனால் அவருக்கு தண்டனை இது” என்று சொன்னார்.

    ”சுனாமி அடித்தபோது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தானே பணம் பெற்றீர்கள். இப்போது ஏன் அவர்களை இப்படி நடாத்துகிறீர்கள்?” என்று கேட்டேன். ”தமிழீழத்துக்கு உல்லாசப் பயணியாக எந்தத் தமிழனும் வரத்தேவையில்லை” என்றார் இறுமாப்போடு. ”அப்படி உல்லாசப் பயணிகள் தேவையென்றால் நாம் ஐரோப்பியரை அழைப்போம் இங்கே” என்றார்.

    நடந்தவற்றை அன்று பல விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தினேன். அதை அன்று அவர்கள் விடுதலைப் புலிகளின் வளர்சியாகவே பார்த்தார்கள். மே18 வரை அதே நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள்.

    அதனால்தான் அவர்களால் இன்றுள்ள உண்மை நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்தும் புனை கதைகளை கட்டவிழ்த்து விட்ட வண்ணம் உள்ளனர்.

    இந்தக் கலையை கற்றுக் கொடுத்தவர்கள் நம்முடைய TULF என்பது அனைவரும் அறிந்ததே. 1977 ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’ என்றார்கள். ‘ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்னதடை’ என்றார்கள். இவ்வாறே என் மனம் அங்குமிங்கும் போய்வர விமானம் லண்டனை வந்தடைந்தது.

    Thesam Net

    more
  • பள்ளிப்பட்டு பட்டாசு விபத்தில் 32 பேர் பலி:அனுமதியின்றி நடத்திய பட்டாசு கடைக்கு `சீல்' வைப்பு அதிகாரிகள்-போலீசார் 7 பேர் சஸ்பெண்டு ;பட்டாசு வியாபாரி உள்பட 5 பேர் கைது

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஜார் தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 42) என்பவர், தீபாவளியை முன்னிட்டு பள்ளிப்பட்டு சோளிங்கர் ரோட்டில் உள்ள ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலக்கடலை மில் குடோனை வாடகைக்கு எடுத்து அதில் பட்டாசு வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆனந்தகுமாரும், அவரது ஊழியர்கள் சிலரும் குடோனை விட்டு வெளியே ஓடி வந்து விட்டனர்.

    பட்டாசுகள் வெடித்துச் சிதறியபடி தீ பயங்கரமாக எரிந்ததால், பட்டாசு வாங்க வந்தவர்கள் குடோனில் இருந்து வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர். ஹாலில் இருந்த அவர்கள் அனைவரும் பட்டாசுகள் பயங்கரமாக வெடிப்பதைப் பார்த்து பயந்துபோய் ஹாலை ஒட்டி இருந்த மற்றொரு அறைக்குள் தஞ்சம் புகுந்தனர்.

    அந்த அறைக்கு கதவுகள் இல்லாததால், ஹாலில் வெடித்த பட்டாசுகள் அவர்கள் இருந்த அறையில் வந்து விழுந்தன. அந்த அறையிலும் அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இதில் அந்த பட்டாசுகளும் வெடித்துச்சிதறின. இதனால் அறையில் தஞ்சம் அடைந்த அனைவரும் வெளியேற வழி இல்லாததால் தீயில் சிக்கி உடல் கருகி பலியானார்கள்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அப்போது அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்ததாலும், குடோன் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருந்ததாலும் தீயணைப்பு படையினரால் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை.

    இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிகுமார், கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், ஐ.ஜி. ஆசிஸ் பங்ரா, டி.ஜ.ஜி. துரைராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இந்த கோர சம்பவத்தில் 32 பேர் பலி ஆனார்கள். தீயணைப்பு படையினர் குடோனுக்குள் சென்று பார்த்தபோது, ஓர் அறையில் 32 பேர் உடல் கருகி ஒரே குவியலாக பிணங்களாக கிடந்தனர். தீயணைப்பு படையினர் அந்த உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    அதன்பிறகு, 32 பேரின் உடல்களையும் தனித்தனி மூட்டையாக கட்டி இரண்டு சரக்கு வண்டிகளில் ஏற்றி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    தீயில் கருகி பலியானவர்களில் 26 பேர் ஆந்திர மாநிலத்தையும், 5 பேர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. இறந்த மற்றொருவர் யார் என்று தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் ரேணிகுண்டாவைச் சேர்ந்த சிவா (வயது 40), கோபி, சோமசுந்தரம், புண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (45) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிவாவும், ரமேசும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.

    இந்த சம்பவத்தால், பள்ளிப்பட்டில் தீபாவளி பண்டிகைகளை இழந்தது. மக்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

    சென்னையில் இருந்து சென்ற தடயவியல் நிபுணர்கள், பட்டாசு விபத்து நடந்த குடோனில் சோதனை நடத்தினார்கள். அவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் ஆனந்தகுமார், குடோன் உரிமையாளர் ஜெய்சங்கர், கடை ஊழியர்கள் மது, ஜெகதீசன், பாபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பட்டாசு குடோன் தீ விபத்து சம்பவத்தில், கடமையை சரிவர செய்ய தவறியதாக பள்ளிப்பட்டு தாசில்தார் உள்பட 7 பேரை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிகுமார் `சஸ்பெண்டு' செய்து உள்ளார்.

    அவர்கள் விவரம் வருமாறு:-

    1. ஜான் பென்னார்னீன் (பள்ளிப்பட்டு தாசில்தார்)

    2. சங்கரி (மண்டல துணை தாசில்தார்)

    3. அருண்குமார் (நில வருவாய் ஆய்வாளர்)

    4. சையத் பாபு (கிராம நிர்வாக அலுவலர்)

    5. வெங்கடேசன் (ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர்)

    6. கோபால் (பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர்)

    7. பாலசுப்பிரமணியன் (தனிப்பிரிவு முதல்நிலை காவலர்)

    பட்டாசு குடோன் தீ விபத்து பற்றி விசாரணை நடத்த, மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சுந்தரத்தை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்து உள்ளது. அவர் நேற்று விபத்து நடந்த குடோனை பார்வையிட்டு அதற்கு `சீல்' வைத்தார். பள்ளிப்பட்டு நகரில் உள்ள மற்ற பட்டாசு கடைகளுக்கும் `சீல்' வைக்கப்பட்டது. அந்த கடைகளில் உள்ள பட்டாசுகளை அழிக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

    தீ விபத்து நடந்த குடோனில் இருந்து 3 பேர் தப்பிச்சென்று விட்டதாக தெரிய வந்து இருப்பதாகவும், அவர்களை போலீசார் தேடி வருவதாகவும், விசாரணை அதிகாரி மோகன சுந்தரம் தெரிவித்தார்.

    அவர் இன்னும் ஒரு வாரத்தில் தனது விசாரணை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வார் என தெரிகிறது.

    இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. மின்சார கசிவின் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    குடோனுக்கு பட்டாசு வாங்க வந்திருந்தவர்களுடன் வந்த ஒரு குழந்தை தனது கையில் வைத்திருந்த மத்தாப்பு குச்சியை கொளுத்தியதாகவும், அப்போது தீப்பொறி பறந்து பட்டாசுகளில் விழுந்ததால் அவை வெடித்துச் சிதறியதாகவும் ஒருவர் தெரிவித்ததார்.

    என்றாலும் விசாரணைக்கு பின்னர்தான் உண்மையான காரணம் தெரிய வரும்.

    விபத்து நடந்த பட்டாசு குடோனில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கேட்டு ஆனந்தகுமார் தனது மனைவி வாணி பெயரில் மனு செய்து இருந்தார். அதற்கு வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை சார்பில் அனுமதி வழங்குவதற்கு பரிந்துரையும் செய்யப்பட்டு இருந்தது.

    ஆனால் அனுமதி வழங்க வேண்டிய திருத்தணி ஆர்.டி.ஓ. லஞ்சம் வாங்கிய வழக்கில் `சஸ்பெண்டு' செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திருவள்ளூரைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தற்காலிக பொறுப்பு ஏற்று இருந்தார்.

    இதனால் ஆனந்தகுமாருக்கு பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே தனது தந்தை குப்பையா செட்டி பெயரில் உரிமம் இருக்கிறது என்ற எண்ணத்தில் ஆனந்தகுமார், பட்டாசு விற்பனையை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அனுமதி இல்லாமல் யாரும் பட்டாசு கடை நடத்துகிறார்களா என்று தீவிரமாக கண்காணிக்கும் படி அந்தந்த பகுதி துணை சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் எங்கும் அனுமதி இல்லாத பட்டாசு கடை இல்லை என்று டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனைத்து துணை சூப்பிரண்டுகளும் தகவல் அனுப்பினார்கள். இப்போது, விபத்து நடந்த குடோன் அனுமதி இல்லாமல் செயல்பட்டு தெரியவந்து உள்ளது. இதை கண்டுபிடிக்க தவறியதற்காக திருத்தணி துணை சூப்பிரண்டு வேணுகோபால் மீதும் இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    more
  • இடம்பெயர் முகாம் மக்களை பார்வையிடும் போர்வையில் யுத்த ஆலோசகர் ஒருவரை ஐ.நா. அனுப்பி வைக்கத் திட்டம் - அரசாங்கம்
    இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களை பார்வையிடும் போர்வையில் யுத்த ஆலோசகர் ஒருவரை ஐக்கிய நாடுகள் அமைப்பு அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

    ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள மேஜர் ஜெனரல் பெட்ரிக் கொமடார் ஓர் யுத்த ஆலோசகர் எனவும் அவர் எதிரித்திரிய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

    இவ்வாறான ஓர் யுத்த ஆலோசகரை நாட்டிற்குள் அனுமதிப்பதா என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எரித்தியா ஆயுதங்களை வழங்கியுள்ள காரணத்தினால் மேஜர் ஜெனரல் பெடரிக் கொமடோரின் விஜயம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

    எதிர்வரும் 8ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் கொமடோர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    கொங்கோ நாட்டு அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து இரகசியமான தகவல்களை கொமடோர் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    more
  • ‘பிரபாகரன் படத்துக்கு மாலை அணிவிக்கப்படும் - குழப்பமடையவேண்டாம்!’

    புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்தின உரை இம்முறை நடைபெறாது என்ற போதும் பிரபாகரனுக்கான அக(புற) வணக்கத்தை செலுத்துவதற்கு வெளிநாட்டு புலிப்பினாமிகள் தயாராகி வருகின்றார்கள். இதன் முன்னோட்டமாக தமது மேல்மட்ட ஆதரவு தளத்தில், ‘இம்முறை பிரபாகரனுக்கு மாலை அணுவிக்கப்போகிறோம் யாரும் குழப்பமடையவேண்டாம்’ எனக் கோரப்பட்டுள்ளனர்.

    கறுப்பு ‘சேட்’ போட்டவனெல்லாம் தந்தை பெரியாராகிவிட முடியும் என்று இந்தியாவில் மனப்பால் குடிக்கும் கூட்டம் இந்தத் தகவலையடுத்து பெரும் குழப்பமடைந்துள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான், அனுமான் “கண்டேன் சீதையை” என்று இராமனுக்கு உரைத்ததுபோல சீமான் “கண்டேன் பிரபாகரனை” என்று கதைவிடுகிறார். வெள்ளை உடையணிந்த கறுப்புள்ளம் கொண்ட பாதிரி ஜெகத் ஜெஸ்பாரும் தன் பங்குக்கு ‘நான் கிளிநொச்சி நோக்கி வருவேன்’ என பிரபாகரனே கூறியதாக தனது இணையத்தளத்தில் றீல் விட்டும் புலி ஊடகங்களே கண்டுகொள்ளவில்லை.

    தமிழர் போராட்டம் என்று அநியாயமாக இளைஞர்கள், யுவதிகள், சிறுவர் - சிறுமியரைப் பலிகொடுத்துவிட்டு அவர்களின் பெயரால் மாவீரர் உரை. அதுவும் தனது பிறந்த நாளுக்கும் மாவீரர்களின் இறந்த நாளுக்கும் பாலம் அமைத்து பிரபாகரனின் உரை.

    இந்தக் கொடுமை போதாதென்று அந்த பிதட்டலுக்கு கனடா சேரனில் இருந்து கொழும்பு கா. சிவத்தம்பி வரை பொழிப்பு எழுதுவார்கள். தற்குறி தமிழ் ஊடகங்கள் தொடக்கம் தறிகெட்ட ஊடகவியலாளர்கள் வரை ஒரே புலம்பல்தான்.

    இம்முறையுடன் அது நடக்காது. அதற்குப் பதிலாக பிரபாகரனுக்கு மாலை அணிவிக்கப்படும். மாலை அணிவித்தது பிழை - சரி என்ற வாதம் எழலாம். அல்லது மாலை அணிவிப்பதற்கு யார் யாருக்கு தகுதி இருக்கு என்று விவாதம் எழலாம். இவ்வாறு சமூகத்துக்கும் அறிவியலுக்கும் உதவக்கூடிய விவாதத்தை தமிழ்கூறும் நல்லுலகு காணும். இவ்வாறான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது எமக்கெல்லாம் பெருமைதானே!

    இதில் வேடிக்கையென்னவென்றால், தமிழீழம் வேண்டிப் போராடிய மண்ணில் பிரபாகரனின் படத்துக்கு யார் மாலைபோடுவது? அட பிரபாகரனின் படத்தையாவது யாராவது வைப்பார்களா? யாராவது வைத்திருப்பார்களா? எல்லாம் புலன் பெயர்ந்துள்ள கொழுப்பெடுத்த தமிழினவாளர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள்தான் பிரபாகரனுக்கு தலைப்பாகையும் கட்டினார்கள் இப்போ மாலையும் அணிவிக்கப்போகிறார்கள்.

    more
  • அகதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். பலர் உயிரிழப்பு.


    அவுஸ்திரேலியாவிற்கு அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் படகொன்றில் சென்று கொண்டிருக்கையில் இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டபோது உண்ணாவிரம் இருந்த இலங்கை அகதிகள் என தம்மை கூறுவோர் 56 மணித்தியாலயங்களின் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

    அவர்களில் பலர் உயிர் இழந்துள்ளதாக Sydney Morning Herald எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. அங்கு சென்ற மக்கள் சார்பான பேச்சாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள அலெக்ஸ் என்பவர், கடத்தல்காரர்கள் 30 குடும்பங்களிடமிருந்து 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயணச் செலவாக பெற்றுள்ளதாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தை ஒன்றுக்கு கூட 15000 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    4 மில்லியின் அமெரிக்க டொலர்களை வழங்கக் கூடிய 30 குடும்பங்கள் வன்னியில் இருந்தாக என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

    more
  • அம்பலத்திற்கு வரும் புலிகளின் ஆட்கடத்தல் வியாபாரம்! திடுக்கிடும் தகவல்கள்!
    மலேசியாவில் இருந்து செயற்படும் புலி உறுப்பினர்களால் கடந்தவாரம் மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை தமிழர்கள் அனுப்பிவைக்கப்பட்ட கப்பல் தொடர்பாக அதிர்ச்சிய+ட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்பட்ட புலிகளின் கப்பல்களுக்கு பொறுப்பான பிரத்தானிய பிரஜையான சங்கர் மற்றும் நோர்வே பிரஜையும் இலங்கை தமிழருமான ஸ்டிபன் ராஜா என்று அழைக்கப்படும் சோதி, ஜேர்மனில் வசகிக்கும் பாது, பிரித்தானியாவில் வசிக்கும் புலிகளின் உறுப்பினரான மோகன், மலேசியாவில் உள்ள கண்ணன் மற்றும் டானியல், புலிகளின் செயற்பாட்டாளரும் மலேசியாவில் வசித்துவருபவருமான ரொனால்ட் அல்லது சுகு, இந்தோனேசியாவில் வசிக்கும் பாபு மற்றும் மதி ஆகியோர் கப்பல் மூலம் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

    மோகன் தற்போது இந்தோனேசியாவில் பதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. ஏனையோர் மலேசியாவில் வசித்து வருவதாகவும் இதில் ரொனால்ட் அல்லது சுகு என்பவர் சர்வதேச ரீதியாக புலிகளின் பணத்தினை கையாள்பவர் எனவும் இவர் புலிகளின் பணத்தில் மலேசியாவில் வாங்கப்பட்ட ஆடம்பர மாளிகை ஒன்றில் வாழ்ந்து வருவதுடன் மலேசியாவில் அதி விலைகூடிய ஆடம்பர வாகனம் ஒன்றில் நடமாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    சோதி மற்றும் ரெனோல்ட் அல்லது சுகு வன்னிமுகாமில் உள்ள புலி உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி கனடாவில் மூன்று லட்சம் டொலர்களை சேகரித்து அதில் 35,000 டொலர்களுக்கு பாவனைக்கு உதவாத படகு ஒன்றினை கொள்முதல் செய்து அதில் 30 புலி உறுப்பினர்களையும் அத்துடன் பொதுமக்கள் 230பேரிடம் 15,000 டொலர்கள் வீதம் பணத்தினை பெற்றுக்கொண்டு மேற்படி படகில் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தபோதே படகும் படகில் பயணம் செய்தவர்களும் இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆபத்தான கடற்பயணத்திற்க பாதுகாப்பற்ற மரத்தில் செய்யப்பட்ட படகினை வாங்கி அதன மூலம் இவ் பொதுமக்களையும் பலி கொடுக்கவும் புலம்பெயர் புலிகள் துணிந்துள்ளனர்.
    ரொனால்ட், சோதி போன்றோர் மலேசியாவில் பயங்கரவாத பாதாளகுழுக்கள் போன்று செயற்படுவதாகவும் மலேசியாவிற்கு செல்லுகின்ற தமிழ் செல்வந்தர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தியும், மிரட்டியும் பணம் பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. அண்மையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் மகனை மலேசியாவில் வைத்து கடத்தி மூன்று மில்லியன் டொலர்களை கப்பமாக பெற்றுகொண்டதன் பின்னர் கடத்தப்பட்ட நபரை இவ் கொள்ளை குழு விடுவித்துள்ளது.

    சட்டத்திற்கு முரணான வகையில் புலிகளும் அவர்களது கொள்ளை குழுவும் மேற்கொண்டுவரும் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் திரட்டி கொள்ளும் பணம் எதுவும் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கோ அல்லது போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ வழங்கப்படுவதில்லை. மாறாக தங்களின் குடும்பம் தங்களது சுகபோகங்களிற்கே இவ் பணங்கள் அனைத்து செலவழிக்கப்பட்டும் தம் தம் பெயர்கள் மற்றும் தமது உறவினர்களின் பெயர்களில் முதலீடாகவும் சுயநல நோக்கத்துடன் வைப்பீடு செய்யப்பட்டும் வருகின்றன.

    இவ் கொள்ளை குழு தொடர்பான போட்டோக்கள் என்பன அடங்கிய நீண்டதொரு பட்டியல் விரைவில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் இவ்வாறான ஆட்கடத்தல் நாடகம் தொடர்பாக ஏற்கனவே நெருப்பு பலமுறை சுட்டிக்காட்டியிருந்ததும் இன்னுமொரு புலிகளின் குழுவொன்று கரேபியன் நாடுகளில் முதலீடு செய்துகொண்டு பாரியளவில் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறித்த செய்திகள் வெளிவரும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்.

    more

Featured Video

Photos