Advertisement



  • Ready, willing and waiting for the next boat out


    Hoping for a new life ... from left, S. Prabhu, Arun Raj, Kethwes Kumar and Kether Vran at the beach in Andimunai, Sri Lanka, near where the people-smuggling boats are launched. Photo: Matt Wade

    The risk of failure is no deterrent for the many Sri Lankans who want to start a new life, writes Matt Wade in Andimunai, Sri Lanka.


    In Andimunai it feels like everybody wants to leave.


    The usual population of the sleepy fishing town on Sri Lanka's west coast is about 10,000. But locals say at least 2000 of them have gone overseas by boat.

    Another 1000 or so have returned after being deported from places like Europe, North America and Australia.

    Many of them will try another getaway.

    ''Each family has someone who has left, come back and tried to go again,'' says Arun Raj, a Tamil from Andimunai who made a failed bid for Europe and now wants to catch the next boat to Australia.

    Andimunai is one of many towns along the Sri Lankan coast with a long tradition of "irregular migration".

    Many leave for economic opportunity. But two decades of military conflict between the Sri Lankan army and Tamil Tiger rebels helped stoke the seaside people-smuggling culture.

    Illegal departure by boat has become routine along the Sri Lankan coastline and this has underpinned the recent flurry of boats filled with Sri Lankan Tamil asylum seekers trying to reach Australia.

    "Coastal areas [of Sri Lanka] have a higher degree of irregular migrants leaving the country via boats especially due to [the] easy exit route using sea transportation," says Tilani Jayawardhana, an academic from the Institute for Police Studies who has studied Sri Lankan migration.

    People smugglers on the west coast - called "agents" by the locals - have the capacity to mount ambitious maritime projects to deliver their clients to foreign destinations.

    Mano, a 29-year-old Tamil, says he recently joined a fleet of 10 boats travelling to Europe. The flotilla was well co-ordinated and the vessels kept in constant radio contact. This experienced network of people smugglers is responding to a spike in demand since the end of the civil war in May.

    "There's a sense that a flight is on, especially among Tamil youth," one human rights activist told the Herald. "It's due to fear."

    Andimunai, about 130 kilometres north of the capital Colombo, was relatively unscathed by the civil war but its Tamil population is still anxious.

    "A lot of young people have gone missing from here," says a teacher, K. Mahadevan. "This is the reason so many youngsters are trying to leave by boat."

    Europe has traditionally been the most popular destination for those leaving Andimunai, but locals say more boats are being organised to Australia.

    This is more than just hearsay.

    Three weeks ago police burst in on a gang of smugglers meeting clients bound for Australia at the Ranvil Beach Hotel in Chilaw, a town 35 kilometres south of Andimunai. The ringleaders had hired a function room at the hotel where they were negotiating the final downpayments for the voyage with clients hours before the boat was due to leave.

    Normally smugglers demand a portion of the total smuggling fee in advance and arrangements are made for relatives in Sri Lanka to deliver the balance once the asylum seeker has reached the destination. Men at Andimunai said the going rate for passage to Australia by boat was between $3000 and $7000.

    The hotel raid has made smugglers more cautious but no one expects it to make much difference. Locals say the boat owner was released by police almost immediately and the remaining crew members were not held for long. The wealthy, well-connected smugglers know who to pay to ensure their boats can leave Sri Lanka undetected. They can also buy freedom if caught.

    It's their relatively poor and desperate clients who are the most vulnerable.

    Some never make it to their destination.

    Arun Raj says he knows three men from Andimunai who have perished at sea while trying to make it to another country.

    Sumit Mendis says his life has been ruined by a boat trip to Australia in the hope of asylum. Mendis and his brother were with 10 other Sinhalese men who managed to navigate a small vessel all the way to Shark Bay in Western Australia a year ago.

    Their application for asylum was eventually rejected and the brothers were deported with six other group members earlier this month.

    Ever since, Mendis has been lying low at his parent's home near the beach at Chilaw. He claims to have fears for his safety after being harassed by police and the agent who arranged last year's boat to Australia. His 26-year-old brother, Prasadh, was thrown into jail on his return to Sri Lanka on suspicion of people smuggling.

    The family deny the charge and say Prasadh has been so badly bashed in custody that his hearing has been damaged and his mental health impaired.

    "We have been abandoned and ostracised," Sumit told the Herald. "We are now a joke in our village."

    Stories of failed migration such as this one are common in Sri Lanka. But they don't seem to be much of a deterrent. Instead many in Andimunai joke about their adventures on the high seas and encounters with immigration authorities across the globe.

    ''It's not a big deal if you get caught,'' says Tony, a hotelier. ''You just find a new agent and try again later.''

    He endured a gruelling 39-day voyage to Italy in 2004. But Tony only made it ashore for four days before his cover was blown. He was deported and spent 21 days in jail in Sri Lanka.

    "Of course I'll go again," he says. "Maybe I'll try Australia next time."

    The Sydney Morning Herald

    more
  • சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார் சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இவ்வாறான புலிகளின் பட்டியல் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அரவிகன்,
    அமெரிக்காவில் உள்ள இராஜேந்திரன் பாலசிங்கம்,
    உலக ஈழ இளைஞர் அமைப்பின் அண்டுவேல்மன்,
    கனடாவைச் சேர்ந்த உருத்திரமூர்த்தி,
    பிரித்தானியாவைச் சேர்ந்த இளங்கோ,
    கனடாவைச் சேர்ந்த இளங்கபிள்ளை, அர்ஜூன எதிர்வீரசிங்கம், வினிபரா எனப்படும் ரஞ்சித் பெர்னாண்டோ,
    சுவீடனைச் சேர்ந்த ஜெகன் மோகன்,
    நோர்வேயைச் சேர்ந்த ஜெயசந்திரன், தெதியவன்,
    மலேசியாவைச் சேர்ந்த நாகலிங்கம்,
    லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கருணாகரன்,
    அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சதியன் குமரன்,
    கனடாவைச் சோந்த லுக்காஸ் பாலசிங்கம் (நடேசனின் சகோதரர்),
    பரிசின் மணிவண்ணன்,
    பிரான்ஸைச் சேர்ந்த நடராஜா மதிதரன்,
    அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலந்திரன்,
    கனடாவின் டேவிட் பூபாலபிள்ளை,
    அமெரிக்காவைச் சேர்ந்த ராஜ் ராஜரட்னம்

    உள்ளிட்டோரின் பெயர்களை அவர் தெரிவித்துள்ளார்.

    திறைசேரி அதிகாரி, முன்னாள் சட்ட மா அதிபர் ஆகியோரும் இந்த புலிகள் வலையமைப்பில் அங்கம் வகித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

    கடந்த 25 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டல், புலிகளின் இணைய தளங்களை செயற்படுத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    குமரன் பத்மநாதனின் இந்த அம்பலப்படுத்தலுடன் சில புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளை குறைத்துக் கொண்டுள்ளதாக திவயின செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

    more
  • பொலிஸாரினால் பம்பலப்பிட்டி யில் மனநோயாளி ஒருவர் கடலில் வைத்து அடித்துக் கொல்லப்படும் கொடூர வீடியோ பதிவு! புத்திசுவாதீனமற்ற இளைஞர் ஒருவர் பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தின் மீது கல்வீச்சு நடத்திவிட்டு கடலில் குதித்துத் தப்பி ஓடிய போது துரத்திச் சென்ற ஸ்ரீலங்கா பொலிஸார் அவ்விளைஞனை கடலில் வைத்து அடித்து மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவத்தினை பம்பலப்பிட்டியில் உள்ள Z Building இல் இருந்து TNL தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் மிகவும் துல்லியமாக வீடியோ காட்சியாகப் செய்யப்பட்டுள்ளனர்.

    சட்டத்தினையும் பாதுகாப்பினையும் பேணிக் காக்க வேண்டிய காவற்துறையினர் ஸ்தலத்திலேயே தண்டனையைக் கொடுக்க முனைவது கண்டிக்கப்பட வேண்டியதே, நீதி தேவதை கண் திறப்பாளா?

    more
  • சரத் பொன்சேகாவின் அமெரிக்க பயணம்: பின்னணியில் நடந்தது என்ன?
    சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார். முன்னரே அறிவிக்கப்பட்டபடி இவரது விஜயம் கடந்த 17 ஆம் திகதிவரை உத்தியோகபூர்வமானதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், கடைசியில் அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பொன்சேகாவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இது தொடர்பாக தெரியவருவதாவது:-

    கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதிவரை சரத் பொன்சேகாவின் அமெரிக்க விஜயம் உத்தியோகபூர்வமானதாகவும் விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க சென்று அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொபேரட் ப்ளெக்கை சந்திப்பதாகவும் காவாயில் அமைந்துள்ள அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை தலைமையகத்தில் இடம்பெறவுள்ள இராணுவ அதிகாரிகளின் சந்திப்பில் கலந்துகொள்வதாகவும் சரத் பொன்சேகாவின் விஜயம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்புக்களுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு அமெரிக்க அரசினால் முன்னர் சரத் பொன்சேகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்து.

    ஆனால், கடந்த 17 ஆம் திகதி முன்னாள் இராணுவதளபதி சரத் பொக்சேகாவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் பட்ரிக்கா கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ வதிவிடத்துக்கு அழைத்து, அமெரிக்க அரசு சரத் பொன்சேகாவை கவாயில் நடைபெறும் இராணுவ தளபதிகள் கலந்துகொள்ளும் சந்திப்புக்கு அனுப்பியிருந்த அழைப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில், சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசு போர் நடைபெற்ற காலப்பகுதியில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை தொடர்பாக அமெரிக்க அரசு விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது. அந்த அறிக்கையில் பெருந்தொகையான மனித உரிமை மீறல்கள் சிறிலங்கா படைகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில், அவ்வாறான மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட அரச படைகளுக்கு தளபதியாக பதவியிலிருந்தவர் சரத் பொன்சேகா. ஆகவே, அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசு அமெரிக்க அரசினால் கோரப்பட்டுள்ளநிலையில், அந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமான சந்திப்புக்கு அழைப்பு விடுப்பது பொருத்தமாக அமையாது என்று கூறியுள்ளார்.

    அமெரிக்கா அரச நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக கலந்துகொள்ளும் விவகாரத்துக்கு அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளநிலையில், தனது விடுமுறையை கழிப்பதற்கென சரத் பொன்சேகா கடந்த வெள்ளியிரவு தனது மனைவி அனோமாவுடன் அமெரிக்காவை நோக்கி பயணமாகியுள்ளார். தனது உதவியாளர் பிரிகேடியர் அதுல சில்வா மற்றும் மெய்பாதுகாவலர்களான இரண்டு கொமாண்டோக்கள் ஆகியோருடன் டுபாய் ஊடாக அமெரிக்கா செல்லும் விமானத்தில் சரத் பொன்சேகா பயணமாகியுள்ளார்.

    அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயமாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் இந்த பயணம் காலாவதியாகவும் அவரது அமெரிக்க விஸாவை நீடிப்பதற்கானதாகும் என்றும் கடந்த தடவை இவர் விஸா நீடிப்பாக சென்றிருந்தபோது அமெரிக்க குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் இவரது நடவடிக்கைகள் குறித்து சுமார் இரண்டு மணிநேரம் விசாரணைசெய்யப்பட்டதாகவும் இம்முறை சரத் பொன்சேகா அமெரிக்கா நுழைவதற்கு முன்னர் அவர் மீது விசாரணைகள் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    உத்தியோகபூர்வ சந்திப்புக்களை மேற்கொள்வதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்ததால் எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி சிறிலங்காவுக்கு திரும்புவதாக ஓழுங்கு செய்திருந்த சரத் பொன்சேகா, தற்போது அந்த சந்திப்புக்கள் அமெரிக்க அரசினால் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நவம்பர் 7 ஆம் திகதியே நாடு திரும்புவதாக திட்டமிட்டுள்ளார்.

    more
  • ராஜீவ் படுகொலையில் 'றோ' தொடர்பு என சிறிலங்கா உளவுப்பிரிவு சந்தேகம்?
    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இந்தியா புலனாய்வு பிரிவான றோவினால் தற்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுக்கு நெருக்கிய வட்டாரங்களிலிருந்தே இத் தகவல் கசிய விடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

    பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவரும், விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான கே.பி.யின் கைதில் முக்கிய பங்காற்றியவருமான,  சிங்கப்பூரை தளமாக கொண்டியங்கும் றொகான் குணவர்த்தன, ராஜீவ் கொலை தொடர்பான ஆய்வில், மேற்கண்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிலங்கா உளவுத்துறைசார் ஊடகங்கள் வாயிலாக  இது விடயம் கசிய விடப்பட்டிருப்பதாகவும்  அறியப்படுகிறது.

    கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கும், குமரன் பத்மநாதன் எனும் கே.பி.யை விசாரிப்பதற்கு இந்தியா விடுத்த  கோரிக்கைகள் சிறிலங்கா அரசினால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட நிலையில், இருநாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாசக்காரப் புள்ளைகளாகப் பழகும் சிறிலங்கா, இந்தியா அரசுகளுக்கிடையில்  இந்த முறுகல் சிறு அதிருப்தியைத் தோற்றுவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் கே.பியிடமிருந்து, விடுதலைப்புலிகள்தான் அக்கொலையைச் செய்தார்கள் என ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைப் பெற்று, அந்த வழக்கை முடித்துவிட இந்திய உளவுத்துறை விரும்புவதாகவும், ஆனால் இந்த வழக்குடன் தொடர்புபட்டுள்ள இந்தியப்புலனாய்வுத்துறையையும், முக்கிய புள்ளிகளையும், சிறிலங்கா அச்சுறுத்தி வைத்திருப்பதற்காகவே இதுவரையில் கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை  எனவும் வெளிவந்துள்ள தகவல்களினடிப்படையில் ஊகந்  தெரிவிக்கப்படுகிறது.

    இதே சமயம்  பாகிஸ்தானில் சிறிலங்கா கிரிக்கெட்அணிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவினரால் கே.பி. விசாரிக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசு அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

    more
  • அந்த இறுதி நாளில் எமது தளபதிகளுக்கும் நான்காம் கட்ட ஈழப் போருக்கும் நடந்தது என்ன? தப்பி வந்த புலி கூறும் புதிய தகவல்
    குருதிச்சுவடுகளில் பாதம் பதித்தபடி” என அக்கடிதத்திற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தின் நிறைவு வரிகளை மீண்டும் நினைவுபடுத்துதல் அர்த்தமுடையது.

    “கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்களின் கொள்கை வீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்”

    இதோ மே-17 கடைசி நாள் கடந்து மேலும் ஒரு நாள் களத்திலே நின்று உண்மையானதோர் புறநானூற்று வீரனின் கடிதப் பதிவு காலம் கடந்த கண்ணீர் வரலாறாய் இங்குவிரிகிறது:

    எமது தாயகநிலத்தை அழித்து, பின் அபகரிக்க உலக நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட “இரத்தக் குளியல்’ நடவடிக்கையின் (Operation BloodBath) இறுதி நாட்கள் எம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவை.

    அழுவதற்கும் அவகாசமின்றி அந்தரித்த மக்கள் திரள். அருகில், கண்முன்னே வெடித்துச்சிதறும் ஷெல்களால் துடித்துச் சாகும் உயிர்களின் கடைசிக் கதறல்கள். நடந்து விட்டதை அறியும் ஒருகண அவகாசம் கூட இல்லாமல் பிணங்களாய் விழுந்தவரின் உருக்குலைந்த உடல்கள். கை, கால்கள் துண்டிக்கப்பட்டு உதவிகேட்கும் அவலக் குரல்கள். பங்கருக்குள் பதுங்கியபடியே பட்டினியில் மயங்கி உயிர்பிரியப் போனவரின் அழுகிய உடல்களது வாடை. அகப்பட்டதை எடுத்துக் கொண்டுஉயிர்காக்க அங்குமிங்கும் ஓடிய லட்சக்கணக்கான மக்கள் திரளுக்குள்மிதிபட்டு இறந்த பிஞ்சுக் குழந்தைகள், கை கொடுக்க எவருமின்றி ஆங்காங்கே மல்லாக்காய் கிடந்த முதியோர்கள். ஆம், உலகின் மன சாட்சிக் கதவுகள் மூடிக்கிடக்க முள்ளிவாய்க் காலில் இன அழித்தல் கோரத்தாண்டவம் அரங்கேறியது.

    இப்பேரழிவிற்கும்நடுவில் “கடைசிவரை களமாடியே வீரமரணம் அடைவோம்’ என உறுமும் துப்பாக்கிகளுடன் எமது புலிவீரர் அணிகள். மே 12 முதல் சீலனின் மரபை எம்வீரர்கள் சுவீகரித்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல்தாக்குதல் தளபதியாய் இருந்த சீலன் அண்ணை சண்டைக்களத்தில் விழுப்புண்அடைந்தபோது, தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துச் சென்று தொடர்ந்துபோரிடு என அருண் என்ற சக போராளிக்கு உத்தரவிட்டார். அந்த மரபையே நாங்கள்சீலன் அண்ணை மரபு என்கிறோம். அவ்வாறே கடைசி நாட்களில் நாங்கள் களமாடினோம்.

    விமானகுண்டுவீச்சு, பல்குழல் எறிகணை வீச்சு, டாங்குகளின் ராட்சத குண்டு வீச்சுயாவற்றையும் நேரடியாக எதிர்கொண்டபடி கடற் புலித் தளபதி சூசையோடு தளபதியர்கள் பானு, விடுதலை, புலவர், சிறீராம் அணிகள் இறுதிவரை போராடிமடியும் திட சங்கற்பம் பூண்டவர்களாய் அணிகளை வழிநடத்தினர்.

    தேசியத்தலைவருடன் தளபதியர்கள் பொட்டம்மான், ஜெயம், குமரன் மற்றும் ரட்ணம்மாஸ்டரின் கரும்புலி அணிகள் களத்தில் ஆவேசம் எடுத்து ஆடின. மே 15 அன்று ஊடறுத்துத் தாக்குதல் நடத்தி காயமுற்றிருந்த சொர்ணம் அண்ணை தனது உடலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும்படி எமக்கு கட்டளையிட்டு எம் கண்முன்னாலேயே “கடைசிவரை போராடுங்கோ. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”என்று கூறியபடி தன் கழுத்தில் கிடந்த இரு சய னைட் குப்பிகளையும் கடித்து கண்கள் சொருக வீரமரணம் தழுவினார். சொர்ணம் அண்ணை கேட்டுக்கொண்டபடி, அவரின் திருவுடல் எதிரியின் கையில் கிடைத்து விடக்கூடாதென்ற அவரின் விருப்பத்தைநிறைவேற்ற அவரது உடலை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு சூசை அண்ணையிடம் சென்றபோது ஐ.நா.பொதுச் செயலரின் தனிச்செயலர் நம்பியார் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசியற்பிரிவு பொறுப்பாளர் நடேசண்ணையையும், புலித்தேவனையும் அறிவுறுத்தியதின்படி இருவரையும் முல்லைத்தீவு வட்டுவாகலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். வெள்ளைக் கொடியேந்திப் போனவர்களின் தொடர்பு வட்டுவாகல் சென்றபின் அறுந்தது.

    நடேசன், புலித்தேவன் அண்ணையர்களுக்குக் கிடைத்த துரோக மரணம் உலகம் நிச்சயம் எங்களை காக்க வராது என்ற செய்தியை எமக்கு உறுதியாக்கியது. இந்நிலையில் தலைவரைக் காப்பது ஒன்றே களத்தில் நின்ற எமது கடமையாகியது. களமுனையில் அவசரமாற்றங்கள் செய்யப்பட்டன. எமது ஆட்லறி பீரங்கிகள் யாவும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. கடற்புலி அணிகள் மட்டும் இடைமறிப்புத் தாக்குதல்களில் உக்கிரம் காட்டி நின்றன.

    எஞ்சி நின்ற நூற்றுக்கும் குறைவான கடற்புலிகளை காயங்களோடு தளபதி விடுதலை நெறி செய்தார். மே-16 இரவு நந்திக் கடற்கரை வழி முன்னேறிய ராணுவத்தினருக்கும் தளபதி புலவர் அணியினருக்கும் இடையே அதிகாலை வரை சமர் தொடர்ந்தது. ராணுவத்தின் 53-வது டிவிஷனது முழுப்பலத்துடனான முன்னெடுப்பை புலவரின் சிறு அணிமுறியடித்து பலநூறு ராணுவத்தினரை கொன்றழித்தது.

    அதேநேரத்தில் இரட்டை வாய்க்கால் பகுதியிலிருந்து முன்னேறி வந்த 58-வது டிவிஷன் ராணுவத்தினருக்கு தளபதி விடுதலையின் அணி மரண அடி கொடுத்தது. ஆத்திரம்கொண்ட சிங்கள ராணுவம் தன் வெறிக்கூத்தை அப்பாவி மக்கள் மீது திருப்பியபோதுதான் அலறியடித்த மக்கள் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படுத்துப்படுத்து நகர்ந்தனர். சூசை அண்ணைக்குத் தொடர்பெடுத்து இதனைக் கூறினேன். தொடர்ந்து தலைவரின் நிலை என்ன என்று கேட்டபோது “அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்” என்றார்.

    மக்கள் இப்போது முழுமையாக வெளியேறத் தொடங்கியிருந்தனர். அதைப் பயன்படுத்தி இராணுவம் எமது நிலைகளை நோக்கி முன்னேறியது. எம்மால் எதிர்தாக்குதல் செய்யமுடியாத நிலை. எம்மை ராணுவம் கடந்து முன்னேறிவிட்டபோது சூசையண்ணைக்கு மீண்டும் தொடர்பெடுத்து அதனைச் சொன்னேன். அதற்கு சூசையண்ணை, “நான் ஜக்கத் அடிக்கப் போறேன், நீங்கள் கடைசிவரை சண்டையிடுங்கோ” என்றார். “ஜக்கத்’ என்றால் வெடிமருந்து அங்கி அணிந்து எம்மையே தற்கொடையாக்கும் மரபு. அத்தோடு சூசையண்ணையோடான தொடர்பு அறுந்தது.

    சூசையண்ணை இருந்த புளிய மரத்தடி எமது நிலையிலிருந்து 300 மீட்டர் தூரம்தான். அவர் இருந்த மண் அணையாலான காப்பரணுக்குள்தான் வெடிபொருட்களும், ஆயுதங்களும் இருந்தன. அப்பக்கம் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. கருந்திரளான புகை வான்நோக்கி எழுந்தது. கடலில் சரித்திரம் படைத்த எங்கள் சூசையண்ணை கடற்புலிகள் பிறந்து வளர்ந்த அதே முல்லைத்தீவு கரையில் காவியமானார்.

    நெஞ்சு கனத்த வேதனையோடு மீண்டும் களமிறங்கினோம். காயமுற்றுத் துடித்தபடி உறவினரால் கைவிடப்பட்ட மக்களின் கதறல்கள், முனகல்கள், சிதறிய பிணங்களின் அகோரங்கள், முண்டங்கள், தலைகள், சிதறிய உடைமைகள், எரியும் வாகனங்கள் இவற்றினூடே தவண்டு தவண்டு எதிரியின் அணிகளுக்குள் ஊடுருவினோம். மே 17 மாலை 7 மணி அளவில் ஐவர் ஐவராகப் பிரிந்து களமாட முடிவு செய்தோம். எமக்கிடையே எஞ்சியிருந்த எல்லா தொடர்புகளையும் துண்டித்தோம். இறந்துகிடந்த ராணுவத்தினரின் சீருடைகளை அகற்றி நாங்கள் அணிந்தோம். அவர்களின் நிலைகள், காவலரண்களில் நின்றபடி இரவு முழுவதும் சமராடினோம். எனது ஐவர் அணி மட்டுமே அன்றிரவு 50-க்கும் மேலான ராணுவத்தினரை அழித்தது.

    குடிக்கத் தண்ணீரில்லை. மூன்று நாளுக்கு முன் கிடைத்த ஒரேயொரு மாவு உருண்டையை சாப்பிட்டுவிட்டு இரத்தக்கறை படிந்த உடலும் உடையுமாய், இரண்டு மாதமாய் உறங்காத கண்கள், குண்டுக் கீறல்களில் வழியும் ரத்தம், வலி எதையும் பொருட்படுத்தாது மோதிக் கொண்டிருந்தோம்.

    உண்டியலடிச் சந்தியைக் கடந்து பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த கவச வாகனத்திற்கு ஆர்.பி.ஜி. அடித்து எரித்தோம். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடும் சண்டை எழவே உள்ளுக்குள் புகுந்து 53-வது டிவிஷனுக்கும் 58-வது டிவிஷனுக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டோம். நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொண்டிருந்தபோது நாங்கள் நந்திக் கடல்பக்கமாய் நகர்ந்தோம்.

    எமது ஐவர் அணியில் இருவர் வீரமரணம் அடைய எஞ்சியிருந்த மூவரும் இரட்டைவாய்க்கால்பகுதிக்கு நகர்ந்து அங்கும் இரு ராணுவ அணிகளுக்கிடையே சண்டையை மூட்டினோம். எமது அணி மட்டுமே அங்கு 200-க்கும் மேலான ராணுவத்தினரை சுட்டுக்கொன்றது.

    மே 18 நண்பகல் 12 மணியளவில் அதே ராணுவச் சீருடையுடன் ஒற்றைப்பனையடி நோக்கி நகர்ந்தோம். ராணுவ கவச வாகனம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர் திசையில்ஆர்.பி.ஜி. உந்துணையோடு வேறொரு ராணுவ அணி வந்தது. நாங்கள் கவச வாகன அணிநோக்கி தாக்குதல் தொடுக்க அவர்களோ எதிர்திசை ஆர்.பி.ஜி. அணியோடு சண்டைதொடங்கினார்கள். நாங்கள் மீண்டும் நந்திக்கடல் பக்கமாய் முல்லை வீதியை கடக்க முற்பட்டோம். அங்கே காவலரணில் நின்ற மூன்று ராணுவத்தினர் சிங்களத்தில் எங்களைக் கூப்பிட சிக்கல் வருமென்பதால் மூவரையும் சுட்டோம். அங்கு சண்டை வெடித்தது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் நுழைய முயன்றபோது எங்கிருந்தோ வந்த ஆர்.பி.ஜி. எறிகணை என் காலை பதம் பார்த்தது. தூக்கியெறியப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தேன். எழ முயன்றேன். முடியவில்லை. கண்கள் சுழன்றன. சாவதாய் நினைத்தேன். கண்கள் மூடின. ஆனால் மீண்டும் கண்விழித்தபோது நம்ப முடியவில்லை. உயிருடன் இருந்தேன். முள்ளிவாய்க்காலில் அல்ல. ஸ்ரீலங்காவின் இராணுவ மருத்துவமனையில். அங்கிருந்து எப்படித் தப்பினேன் என்பது இன்னொரு நெடிய கதை. உயிரோடிருந்தால் மீண்டும் உங்களுக்கு எழுதுவேன்.

    ஆனால் ஒன்று: சுமார் 38000 மாவீரர்களின் தியாகங்களோடு நான்காம் ஈழப்போர் தோல்விகண்டுள்ளது .

    more
  • மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு சென்ற பெண் போலீசை கற்பழித்து கொன்ற காமக்கொடூரனின் லீலை (2)

    பெண் போலீசை கற்பழித்து கொன்ற காமக்கொடூரனின் லீலை
    அவினாசி : பெண் போலீஸ் ஜெயமணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெய்சங்கரின் வாக்குமூலத்தைக் கேட்டு, தனிப்படை போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையைச் சேர்ந்த மணியன் மனைவி ஜெயமணி(40); காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் பணியாற்றினார்.


    கடந்த ஆக., 23ம் தேதி, பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வலசுபாளையம் பிரிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அன்றிரவு 8.30 மணிக்கு, "டியூட்டி' முடிந்ததும், ஊருக்கு செல்வதாக சக போலீசாரிடம் கூறிச் சென்ற ஜெயமணி, வீடு செல்லவில்லை; காணவில்லை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். ஆனால், செப்., 18ம் தேதி, பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் பிரிவில் ஜெயமணி சடலமாக கிடந்தார்.


    முக்கிய திருப்பம்: இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக, குற்றவாளி குறித்த தடயம் சிக்கியது. கொலை செய்து விட்டு, குற்றவாளி திருடிச் சென்ற மொபைல் போனில் உள்ள இ.எம்.ஐ.இ., எண்ணை கொண்டு கூடுதல் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த மொபைல் போன் பலரது கைகளுக்கும் மாறிமாறி, சேலத்தில் ஒருவருக்கு விற்கப்பட்டிருந்ததை கண்டறிந்த போலீசார், அந்நபரிடம் விசாரித்த போது, எடப்பாடியைச் சேர்ந்த ஜெய்சங்கரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். ஜெய்சங்கர், இதற்கு முன் கற்பழிப்பு, கற்பழித்து கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடையவன் என்பதை போலீசார் அறிந்து கொண்டனர். ஜெய்சங்கரை பிடிப்பதற் கான திட்டத்தை தனிப்படை போலீசார் ரகசியமாக வகுத்தனர். சாதாரண உடையில், எடப்பாடி தாலுகா, காணியம்பட்டி ஊராட்சி, கோணசமுத்திரத்தில் உள்ள அவனது வீடு அருகே போலீசார் காத்திருந்தனர். ஆனால், அவன் வரவில்லை. இரண்டு நாட்களாக காத்திருந்த போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


    நேற்று முன்தினம் பகல் 1.00 மணிக்கு கணக்கம்பாளையம் பிரிவில், போலீசார் சென்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் பைக்கில் வந்த ஒருவன், வேகமாக செல்ல முயன்றான். மடக்கிய போலீசார் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினான். பைக் நம்பரை சோதனை செய்த போது, நம்பர் பிளேட் மாற்றியது தெரிந்தது. பெருமாநல்லூர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, விசாரித்தனர். போலீசாரிடம் சிக்கியவன் பெயர் ஜெய்சங்கர் என்பது தெரிந்தது.


    போலீசாரிடம் ஜெய்சங்கர் தெரிவித்ததாக கூறப்படுவதாவது: ஜெய்சங்கருக்கு 2003ல் திருமணம் நடந் துள்ளது; மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். திருமணத்துக்கு முன், காணியம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவரின் மனைவி கையை பிடித்து இழுத்து, ஊர்ப்பஞ்சாயத்து செய்யப் பட்டதில், 7,000 ரூபாய் அபராதம் கட்டியுள்ளான். அதிலிருந்து அவனது, "காம லீலை' துவங்கியுள்ளது. கடந்த 2008 செப்., 9ல், சங்க கிரியைச் சேர்ந்த சேலம் நகர போலீசில் பணிபுரியும் ராஜகோபால் மனைவி இந்திரா காந்தியை கற்பழித்து கொலை செய்தான். அடுத்து, கடந்த ஏப்., 20ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூர் - குண்டூரைச் சேர்ந்த ஜெயகாந்தம் (70) என்ற மூதாட்டியை கொலை செய் தான். அங்கிருந்த அவரது பேத் தியை கற்பழிக்கும் நோக்குடன் சென்றபோது கொலை நடந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக, பெண்களை கற்பழித்தல், நகைகளை வழிப்பறி செய்தல் போன்றவற்றை ஜெய்சங்கர் செய்துள்ளான். கடைசியாக கடந்த மாதம் 19ம் தேதி பெருந்துறை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அமுதம் பேக்கரி அருகே மெயின் ரோட்டில், வேறொரு நபருடன் கூட்டு சேர்ந்து, தனி வீட்டில் இருந்த பெண்ணை கத்தியால் குத்தி, காதை அறுத்து கம்மல், செயினை திருடினான்.


    காயம் செய்த பின் கற்பழிப்பு: ஜெய்சங்கரிடம் சிக்கிய பெண்களில் சிலரை மட்டும் கற்பழித்து, நகைகளை திருடியுள்ளான். பெண்கள் சிக்கியதும், முதலில் கழுத்தின் பின் பகுதியில் கத்தியால் குத்துவது வழக்கமாம்; அப்பெண் மயக்கமானதும் கற்பழித்து விட்டு, காதை அறுத்து கம்மலை எடுத்து விட்டு, முகத்தின் பல பகுதி, கைகள், மார்பு ஆகிய பகுதியில் குத்தி, கொலை செய்து விடுவானாம். ஜெய்சங்கரின் காமவேட்டைக்கு, கோவை மேற்கு மண்டல காவல் எல்லையில் மட்டும் ஏழு அப்பாவி பெண்களும், திருச்சியில் ஒரு பெண்ணும் சிக்கியுள்ளனர். எட்டு பெண்களை கற்பழித்து கொன்றது, இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது, ஐந்து வழிப்பறி, ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்து, கற்பழிப்பு என மொத்தம் 17 வழக்குகளில் தற்போது ஜெய்சங்கர் மாட்டியுள்ளான்.


    ஜெயமணி சிக்கியது எப்படி: ஆக., 23ம் தேதி இரவு 8.20 மணிக்கு வலசுபாளையம் பிரிவில், "டியூட்டி' முடிந்ததும், அரச்சலூருக்கு செல்ல ஜெயமணி முடிவு செய்து, எஸ்.ஐ.,க்கு தெரியப்படுத்தியுள்ளார். அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறினார்; கண்டக்டர், "பஸ் குன்னத்தூர் செல்கிறது என்றும், பெருந்துறை சென்று அரச்சலூர் செல்லுமாறு' கூறினார். உடனே இறங்கிய ஜெயமணி, மெயின் ரோட்டுக்கு சென்று பைக்கில் வந்தவர்களிடம், "லிப்ட்' கேட்டார். அவ் வழியாக, திருட்டு பைக்கில் வந்த ஜெய்சங்கர், ஜெயமணியை ஏற்றிக் கொண்டு சம்பவம் நடந்த காளிபாளையம் பிரிவில் திரும்பியுள்ளான். ஜெயமணி, "வண்டியை ஏன் இங்கு திருப்புகிறாய்' என்றதற்கு, "எனது அப்பா இங்கு வசிக்கிறார்; அவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, செல்லலாம்' என்று ஜெய்சங்கர் கூறினான். சந்தேகமடைந்த ஜெயமணி, பைக்கிலிருந்து குதித்து, ஜெய்சங்கரை திட்டியவாறே சில அடி தூரம் உள்ள மெயின் ரோட்டுக்கு நடந்து சென்றார். ஆவேசமடைந்த ஜெய்சங்கர், பைக்கில் எப்போதும் வைத்திருக்கும் கத்தியை எடுத்து, அவரது பின் கழுத்தில் குத்தினான். எதிர்பாராத இத்தாக்குதலால் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை, அருகிலிருந்து சுடுகாட்டுக்கு இழுத்துச் சென்று கற்பழித்துள்ளான். உயிருக்கு போராடிய ஜெயமணி, ஜெய்சங்கரின் வயிற்றில் உதைத்துள்ளார். ஆவேசமுற்ற அவன், முகம், மார்பு, கைகளில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். ஜெயமணியின் காதை அறுத்து கம்மல், பேன்ட் பாக் கெட்டிலிருந்த போலீஸ் ஐ.டி., கார்டு, 250 ரூபாய் ரொக்கம், தாலிக்கொடி, மொபைல் போனை திருடிக் கொண்டு, பைக்கில் தப்பினான். எடப்பாடிக்கு செல்லும் வழியில், சித்தோடு வாய்க்காலில் கத்தியை கழுவி, பிற பொருட் களை வாய்க்காலில் வீசி விட்டு வீட்டுக்கு சென்றான். ஐ.டி., கார்டை மட்டும் வீட்டில் பத்திரப்படுத்தியுள்ளான். ஒரு வாரம் கழித்து மொபைல் போனை விற்றான். ஜெயமணி கொலைக்கு பின்னும், ஐந்து பெண்களை கற்பழித்து கொலை செய்து, நகைகளை திருடியுள்ளான். கைது செய்யப்பட்ட ஜெய் சங்கரிடம் இருந்து ஒரு பைக், 26,400 ரூபாய் மதிப்புள்ள 22 கிராம் தங்க நகை, மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், அவன் இதுவரை 20 சவரன் தங்க நகை, மொபைல் போன்கள், மொபட், பைக் ஆகியவற்றை திருடியுள்ளான்.


    நவ., 3 வரை சிறைக்காவல்: பெண் போலீஸ் ஜெயமணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெய்சங்கரை பெருமாநல்லூர் போலீசார், திருப்பூர் ஜே.எம்.எண் 2 கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு, மாஜிஸ்திரேட் விடுப்பில் இருந்ததால், பொள்ளாச்சி ஜே.எம்.எண் 2 மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி பொறுப்பு மாஜிஸ்திரேட்டாக இருந்தார். அவர் பொள்ளாச்சி கோர்ட்டில் பணியில் இருந் ததால், இங்கு வந்து மாஜிஸ்திரேட் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் மாலை 4.00 மணிக்கு ஜெய்சங்கரை ஆஜர்படுத் தினர். ஜெய்சங்கரை, நவ., 3ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    more
  • மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சியளிக்க 12 விடுதலைப்புலி உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்றனர் ?

    நக்சலைட்டுகள் வெளிநாடுகளிலிருந்து ஆயுதம் பெறுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம், விடுதலைப்புலிகளுடன் இணைந்து இந்தியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிக் காடுகளில் பயிற்சி எடுத்ததற்கும், கூட்டங்கள் கூடியதற்குமான சான்றுகளையும் மத்திய புலனாய்வுத் துறையினர் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். மாவோயிஸ்டுகள் புலிகளிடமிருந்து பயிற்சி பெற்றதற்கு போதிய சான்றுகள் கிடைட்துள்ளன என்றார் அவர்.

    ஆந்திர பிரதேசம், தமிழ் நாடு, சட்டீஸ்கார் மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களுக்குள் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் இருக்கும் என மத்திய புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், இப்போதைய தகவல்களின்படி நன்கு பயிற்சிபெற்ற 12 விடுதலைப்புலி உறுப்பினர்கள் அண்மையில் இந்தியாவுக்குள் உள்நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து கேரளா ஊடாக ஆந்திராவின் வச கடற்கரையை அடைந்துள்ளனர் என மேலும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

    புலிகள் மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சியளித்து இந்திய படைகளைத் தாக்குமாறு செய்வதோடு, தாம் இலங்கையில் இழந்த நிலங்களை மீளப்பெறுவதற்காக இலங்கையின் வட மாகாணத்திலுள்ள துருப்புகளைத் தாக்குவதற்கான செயற்பாட்டுத் தளமாக தென்னிந்தியாவைப் பாவிப்பார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    more
  • மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு சென்ற பெண் காவலர் கற்பழித்து கொலை !
    திருப்பூரில் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவிற்கு பாதுகாப்பு சென்ற பெண் போலீசார் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால்  தமிழக போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு, மாவட்டம் அரச்சலூரை சேர்ந்தவர் மணியம் (43).  இவர் கடந்த காலத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். அந்த பணியல் இருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற்று, சொந்தமாக லாரி தொழில் செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயமணி (39). காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

    ஜெயமணி கடந்த மாதம் 23 ம் தேதி தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திருப்பூர் வந்த போது பெருமாநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    பணியை முடித்து விட்டு, வீடு திரும்புவதாக உயர் அதிகாரிகளிடம் கூறி விட்டு சென்ற ஜெயமணி பல நாட்கள் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரது கணவர் பல இடங்களில் தேடியும் ஜெயமணி கிடைக்காததால், இது குறித்து  காங்கேயம் டி.எஸ்.பி. -யிடம் புகார் கொடுத்தார்.

    இந்த நிலையில், பெண் காவலர் ஜெயமணி, பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு அருகில் உள்ள காளிபாளையம் பிரிவில் ஒரு சுடுகாட்டில் பெண் பிரேதம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலையடுத்து அப் பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று அருகில் இருந்த தடயங் களை வைத்து விசாரணை நடத்திய போது அது காணாமல் போன பெண் காவலர் ஜெயமணி தான் என்று உறுதி செய்தனர்.

    பெண் காவலர் ஜெயமணியன் உடைகள் கழற்றப்பட்ட நிலையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.

    இதனால் இந்த வழக்கை திருப்பூர் டி.எஸ்.பி. காமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருப்பூர் , தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் , நிகழ்ச்சி , பாதுகாப்பு சென்ற பெண் காவலர் கற்பழித்து கொலை , போலீசார் அதிர்ச்சி , வழக்கு பதிவு, தனிப்படை, விசாரணை,

    more
  • இலங்கை அகதி பெயரில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கொலை மிரட்டல்!
    இலங்கை அகதி பெயரில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது
    தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க சதி நடக்கிறது. இன்று கூட எனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழம் அமைப்போம் என்று பேக்ஸ் அனுப்பி இருக்கிறார்கள். யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை.

    காங்கிரஸ் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது. ஒவ்வொரு தலைவர்களுக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.

    இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் காங்கிரஸ் அதை அனுமதிக்காது. வன்முறை, பிரிவினைவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை.

    நேற்று எனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்தும், இன்று வந்துள்ள மிரட்டல் குறித்தும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் எழுத உள்ளேன் என்றார்.

    more
  • ‘கரன்ஸி புலி’யின் மர்ம முகங்கள்

    பொறியில் சிக்கிய ராஜ் ராஜரத்தினம்

    நியூயார்க்கில் வசிக்கும் அமெரிக்க மெகா கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்! நியூயார்க் பங்குச் சந்தை ஏறுவதிலும் - இறங்குவதிலும் இவரது கண்ணசைவுக்கும் பங்குண்டு என்று கூறுவார்கள். இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் படித்த அமெரிக்க பிரஜை. 'ஹெட்ஜ் பண்ட்' எனப்படும் பங்குச் சந்தை வியாபாரத்தில் உலக மகா கில்லாடி. இவரை கடந்த 16.10.09-ல் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ (குடீஐ) கைது செய்துள்ளது. 'பங்குச் சந்தை தொடர்பான மோசடி செய்தார்' என்று ராஜரத்தினம் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், விசாரணை வேறு திசையிலும் பயணிப்பதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது.


    முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனுடன் தோளில் கை போட்டுப் பேசக் கூடியவர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனின் தேர்தல் செலவுகளுக்கு கோடிகளை நன்கொடையாக வழங்கியவர் என்று நியூயார்க்கையே அதிசயத்துடன் தன் பக்கம் நிமிர்ந்து பார்க்க வைத்தவர் ராஜ் ராஜரத்தினம். இவர் விடுதலைப்புலிகளுக்கும் பணத்தை அனுப்பியதாகவும் அதிகாரிகள் துருவி வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைக் கலங்கடித்த 'அக்னி' ராஜரத்தினம் அல்ல இவர். ராஜ் என்று அன்போடு அழைக்கப்படும் ராஜரத்தினம் சென்னைக்கு 'விசிட்' அடித்ததோடு சரி. போர்பஸ் மாத இதழ், ராஜ் ராஜரத்தினம் உலகின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவர் என்று கூறுகிறது.

    இன்டெல். ஐ.பி.எம்., மெக்கின்ஸி ஆகிய பெரும்புகழ் கொண்ட நிறுவன பங்குகளை சுமார் 20 மில்லியன் டாலர்கள் வரையில் (சுமார் 92 கோடி ரூபாய்), 'இன்ஸைடர் டிரேடிங்' (பார்க்க... பெட்டிச் செய்தி) முறையில் வாங்கி 100 மில்லியன் டாலர்கள் வரை தவறாக பங்குச்சந்தையில் லாபம் பார்த்தார் என்று எப்.பி.ஐ. தனது முதல் குற்ற அறிக்கையில் கூறியிருக்கிறது. இவரை பொறி வைத்துப் பிடித்தவர், அதிபர் ஒபாமாவினால் சமீபத்தில் நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட ப்ரித் பராரா என்ற பஞ்சாபி - இந்தியர்தான்!

    இலங்கையில் நடைபெற்று வந்த ஈழப் போரில், தனது வியாபாரத் தொடர்புகள் கருதி நடுநிலை எடுத்து வந்த ராஜ், 2000-ம் ஆண்டு முதல் புலிகளை மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கமான வுசுழு எனும் 'தமிழர் மறுவாழ்வு அமைப்பு' மூலம், இலங்கையில் ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை புலிகள் அமைப்புக்கு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு 2001-ம் ஆண்டு எழுந்தது. 2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது.

    இலங்கையின் அரசியல்வாதிகளை இவர் நன்கு கவனித்து வந்ததாலோ என்னவோ... ஈழப்பகுதிகளில் இவர் செய்த உண்மையான மனிதாபிமான செயல்களை பாராட்டியே வந்தனர். அதேசமயம், 'இவர் ஈழப்பிரச்னையில் தலையிடுகிறார்' என்று உளவு அமைப்புகள் இலங்கை அரசை எச்சரித்து வந்தன. வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலேந்து மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அமெரிக்க அரசினால் கைது செய்யப்பட்ட வுசுழு-வுயுஆஐடு சுநுர்யுடீடுஐவுயுவுஐழுN ழுசுபுயுNஐணுயுவுஐழுN தலைவர் கருணாகரன் கந்தசாமி, போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில் 'மிஸ்டர் பி' என்பவர் ஒரு மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களையும் போலீஸ் கைப்பற்றியது. 2000, 2004 ஆண்டுகளில் தலா ஒரு மில்லியன் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் இலங்கை வங்கியில் இருந்து சேகரித்தது. யானையிறவு போரில் புலிகள் வெற்றிபெற இந்த நன்கொடைகள் பெருமளவு உதவியதாகவும் இலங்கை போலீஸார் அரசுக்குத் தகவல் தந்தனர். மொத்தத்தில், 2000-ம் ஆண்டு முதலே போலீஸாரின் பார்வையில் வந்த ராஜ், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார் என்று தெரிகிறது.

    எப்.பி.ஐ - கோர்ட்டில் உத்தரவு பெற்று இவரது தொலைபேசி,கைபேசிகளை ஒட்டுக்கேட்டது. இவரது பிஸினஸ் கோஷ்டியில் ஒரு ரகசிய உளவாளியை நுழைத்து கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற வட அமெரிக்க சங்கப் பேரவையின் ஆண்டு மாநாடு நடைபெற்றபோது, அப்போதைய தலைவர் திருப்பூரைச் சேர்ந்த நடராஜன் ரத்தினத்திடம் 'ப்ளாங்க் செக்' கொடுத்து, 'எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்' என்றாராம் ராஜ். இதற்காக ராஜ் வைத்த ஒரே கண்டிஷன், புலிகளின் ஆதரவு பெற்ற மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் கேரன் பார்க்கரை அழைத்துப் பேச வைக்கவேண்டும் என்பது என்றும் கூறப்படுகிறது. பிறகு, பலமுறை புலிகளின் ஆதரவுக் கூட்டங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறார் என்றும் அதையெல்லாம். எப்.பி.ஐ தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்தது என்றும் சொல்கிறார்கள் இப்போது.

    ஆனால், ராஜரத்தினத்தின் நண்பர் வட்டமோ, ‘அவர் தமிழ் ஆர்வலர். ஆகவே பேரவைக்கு நன்கொடை கொடுத்தார். பல்வேறு சேவை மையங்களுக்கும்தான் வாரி வாரி வழங்கியுள்ளார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவர் புலி ஆதரவாளர் என்று கூறுவது தவறு. சிறிய வயதில் கஷ்டப்பட்ட ராஜ், ஏழைகளுக்கு உதவினார். சுனாமி தாக்கிய கிராமங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இதை அன்றைய இலங்கை அதிபரே பாராட்டினார்!’ என்று கூறுகிறார்கள்.

    முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டனை தலைமை டிரஸ்டியாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க - இந்திய பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தில் ராஜ் டிரஸ்டியாக செயல்படுகிறார். இந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பெரும் கொடை வள்ளல் ராஜ்தான். இதனால், இவர் புகழ் அமெரிக்காவெங்கும் பரவியது. இவரது கம்பெனியின் மதிப்பு 5 பில்லியன் டாலர்கள். செல்வச் செழிப்பில் வளைய வந்த ராஜ், ஒரு சமயம் தன் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்து அதில் சுமார் 500 விருந்தினர்களை களிப்பூட்டினார். பங்குச் சந்தை முதலாளிகள், வங்கித் தலைவர்கள், முதலீட்டாளர்கள் என்று றுயுடுடு ளுவுசுநுநுவு நபர்கள் அன்று அந்த கப்பலில் மிதந்தனர். மிக உயரிய ஒயின், புளூ லேபிள் விஸ்கி ஆறாக ஓடியது. விருந்தினர்களோடு அந்த கப்பல் நியூயார்க் மாநகரை சுற்றி வந்தது. பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாலும், புலிகளின் ஆதரவுப் பழியும் ராஜ் மீது இறங்கியிருக்கிறது.

    இலங்கையில் போர் முடிந்து புலிகள் ஒடுக்கப் பட்டுவிட்ட நிலையில், புலிகளின் ஆதரவு பிரமுகர்கள் மீது அமெரிக்கா வழக்குகளை தூசி தட்டி எடுப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த கைது நடந்ததா என்ற கேள்வியும் இதனால் எழத் துவங்கியுள்ளது.

    (உலக பணக்கார்களின் வரிசையில் 587 வது இடத்திலிருக்கும் ஒருவரை முதல் 100 பேர்களில் ஒருவரென கதையளக்கின்றார். அத்தோடு நிறுத்தாமல் “2004-ம் ஆண்டில் சுனாமி இலங்கையில் கோரத் தாண்டவம் ஆடியபோது... தமிழர்கள் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வீடுகளை இலவசமாக இவர் கட்டித் தந்தார். இலங்கை அரசும் இதை வரவேற்றது“. என்று அடுத்த புழுகையும் அவிழ்த்து விடுகின்றார். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில தமிழர்களுக்கு மட்டும் யுனிசெவ் அமைப்பே சில வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. இலங்கை அரசோ அல்லது விடுதலைப்புலிகளோ அல்லது தனிநபர்களோ ஒரு குடிசை கூட அந்த மக்களுக்கு போட்டுக் கொடுக்கவில்லையென்பதே உண்மை. ஆனால் விடுதலைப்புலிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குதவவென பல நாடுகளிடமிருந்தும் நேரடியாக பல மில்லியன் டாலர்களை பெற்றுக் கொண்டனர் ராஜ் ராஜரத்தினம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென புனர்வாழ்வக்கழகத்திற்கு வழங்கிய நிதியை புனர்வாழ்வுக்கழகம் புலிகளுக்கே கொடுத்தது. இதனாலேயே புனர்வாழ்வுக்கழகத்தை இலங்கை அரசு தடை செய்தது. ராஜ் ராஜரத்தினம் நிதி வழங்கிய கால கட்டத்தில் புனர்வாழ்வுக்கழகம் தடைசெய்யப்பட்டிருக்காததால், ராஜ் ராஜரத்தினம் மீது இலங்கை அரசால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது.- கிருபானந்தன்))

    (இன்ஸைடர் டிரேடிங் என்றால் என்ன என்று முதலீட்டு ஆலோசகர் நாகப்பனிடம் கேட்டபோது,

    'பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியே அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலையேற்றத்தை முன்கூட்டி தெரிந்துகொண்டு, பங்குகளை வாங்கிப் போட்டு விலையேற்றத்துக்குப் பிறகு விற்று லாபம் பார்ப்பதுதான் இன்ஸைடர் டிரேடிங்!

    சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகளின் விலை குறையப்போகிறது என்று தெரிந்து கொண்டு, முன்கூட்டியே பங்குகளை விற்பதும் இதில் பொருந்தும். ஒரு நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர், தன் பெயரில் பங்கு பரிவர்த்தனை செய்யாமல், மறைமுகமாக தன் உறவினர் பெயரிலும் செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் 'செபி' மாதிரியான அமைப்புகள் இன்ஸைடர் டிரேடிங்கைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டுவந்து விட்டது. பங்குச் சந்தையால் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடைய உறவினர்களின் லிஸ்ட்டைக்கூட அந்த நிறுவனம் கேட்டு வாங்கி வைத்திருக்க வேண்டும் என்று 'செபி' வலியுறுத்தத் துவங்கியிருக்கிறது. காரணம், இந்த உறவினர்கள் யாரேனும் அதே நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கிறார்களா என்பதை 'செபி' கண்காணித்து வருவதுதான்!'' என்றார் நாகப்பன்.

    ஏற்கெனவே தங்கள் வசம் கிடைத்திருக்கும் கே.பத்மநாபன் (கே.பி.) மூலமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி வலைப் பின்னல்களை விசாரித்து வரும் இலங்கை அரசுக்கு, கே.பி. மூலம்தான் ராஜ் ராஜரத்தினம் தொடர்பாகச் சில விவரங்கள் கிடைத்ததாகவும்... அதை அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு போனதும்தான் இந்த கைது என்றும் ஒரு செய்தி உள்ளது. டி.ஆர்.ஓ. எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு மாற்றுப் பெயரில் மில்லியன் டாலர் நிதி அளித்ததோடு, அதன் ஒருங்கிணைப்பாளராகவும் அவரே செயல்பட்டு வந்தாரா என்று தற்போது எஃப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. புலிகளின் மிகப் பெரிய தாக்குதல்களான ஓயாத அலைகள் 1, ஓயாத அலைகள் 2 போன்ற போர்களின் போதெல்லாம் ஆயுதங்கள் வாங்கிக் குவிக்க நிதி கொடுத்தது ராஜ் ராஜரத்தினம்தான் என்று புலிகள் ஆதரவு ஆட்களே சொல்லத் துவங்கியுள்ளனர். அதோடு, இலங்கையில் போர் கடுமையாக நடந்த சமயத்தில் அந்நாட்டின் பங்கு மார்க்கெட்டை ஆக்கிரமித்திருந்த டாப் 10 கம்பெனிகளையும் ராஜ் ராஜரத்தினம் கட்டுப் படுத்தி வந்ததாக இலங்கையில் தற்போது பேச்சு எழுந் துள்ளது.

    போர் முழுவதுமாக முடிந்த பிறகு புலிகளின் குழந்தைப் போராளிப் பிரிவுக்கான மறுவாழ்வு ஏற்பாடுகளுக்கு ஒரு மில்லியன் டாலர்களை இலங்கை அரசிடம் வழங்க முன்வந்திருக்கிறார் ராஜ் ராஜரத்தினம். இம்முறை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரான ரோஹித்த பொகல்லகாம இந்தப் பணத்தை வாங்கவிடாமல் தடுத்துவிட்டார்!

    - மு.தாமரைக்கண்ணன்)

    (நன்றி: விகடன்)

    more

Featured Video

Photos