Advertisement



  • கஸ்ரோவின் இளவரசர்களை நம்பி மோசம் போன மலேசிய பொறுப்பாளர் ராஜன்

    விடுதலைப்புலிகளின் மலேசிய பொறுப்பாளரான‌ “மலேசியா ராஜன்” கடந்த டிசம்பர் இறுதி நாட்களில் மலேசிய விமான நிலையத்தில் வைத்து முதலில் கைதுசெய்யப்பட்டார். தனது குடும்பம் சகிதமாக பிலிப்பைன்ஸ்சில் தலைமறைவாக இருந்துவிட்டு மலேசிய திரும்புகையில் மலேசிய புலனாய்வுப்பிரிவினரிடம் கைதானார்.கேபியின் கைதை தொடர்ந்து மலேசியாவை விட்டு தப்பியோடிய ராஜன் நீண்ட காலமாக மலேசிய புலனாய்வுப்பிரிவின் வலைவிரிப்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    விடுதலைப்புலிகளின் உறுப்பினரான மலேசியா ராஜன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார் (வயது 42)அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விடுதலை செய்து விமானநிலையத்துக்கு வெளியே செல்ல அனுமதித்த மலேசிய‌ நாட்டு குடிவரவு மற்றும் புலனாய்வு பிரிவினர் ராஜனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    கடந்த ஒருமாதகாலமாக மலேசியாவில் விசாரணைக்குட்படுத்திய மலேசிய புலனாய்வுப்பிரிவினர் ராஜனுடன் இணைந்து செயற்படும் மலேசிய குடியுரிமை கொண்ட சிலரையும் கைதுசெய்துள்ளதாக மறுஆய்வுக்கு தெரியவருகிறது. மலேசியாவை மையங்கொண்டு செயற்படும் புலிகளை கட்டுப்படுத்தும் மலேசிய புலனாய்வுப்பிரிவினருக்கு சிறிலங்காவின் நாடுகடந்த புலனாய்வுத்துறையும் கூட்டாக சேர்ந்து இந்த நடவடிக்கையில் கடந்த பல மாதங்களாக ஈடுப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையின் நிமித்தம் அனைத்துலக செயற்பாட்டில் இருந்த வன்னியில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகளும் மலேசியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக நம்பகமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதேவேளை மலேசியாவில் தனது விசாரணையை முடித்துக்கொண்ட மலேசிய புலனாய்வுப்பிரிவு நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ராஜனை ஒப்படைத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

    ஆனால், நேற்று காலை கொழும்பில் வைத்து அவரை கைது செய்ததாக அறிவித்துள்ள சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர், மலேசியா ராஜனை தாம் பல ஆண்டுகளாக தேடிவந்ததாகவும் -

    அவர் கண்ணன் என்ற பெயரிலும் செல்லத்துரை சாந்தகுமார் என்ற பெயரிலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார் என்றும் 1996 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை சாம விகாரைக்கு அருகாமையில் வெடிமருந்துகள் அடங்கிய லேடன் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் முதல் உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டுவந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்..

    விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான இவர் அந்த அமைப்பினருக்கு ஆயுத வழங்கல்களை மேற்கொள்ளுதல், விடுதலைப்புலிகளின் புலனாய்வுபிரிவினரை கொழும்புக்கு கூட்டிவருதல் போன்ற செயற்பாடுகளை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டுவந்தார் என்றும் அவர் கூறினார்.

    சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கே.பி. மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி இவர் கைது செய்யப்பட்டாரா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி, தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளுக்க பங்கம் விளைவிக்கக்கூடி பதில்களை தாம் வெளியிடவிரும்பவில்லை என்றார்.

    மே18 க்கு பின்னர் அனைத்துலக கஸ்ரோவின் இளவரசர்களின் தொடர்பில் இருந்து வந்த ராஜனின் கைது கடந்த டிசம்பர் இறுதி நாட்களில் நிகழ்ந்தது.எனினும் அது பற்றிய எந்த கரிசனையின்றி மௌனம் காத்து வந்த கஸ்ரோவின் இளவரசர்கள் இந்த கைதின் பின்னணியில் இருப்பதாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.


    மறு ஆய்வு

    more
  • என் கண்முன்னே பசில் ராஜபக்ச புலிகளுக்கு பணம் வழங்கினார் ரிரான்.
    2005 இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்லில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக புலிகளுக்கு பசில் ராஜபக்சவினால் என் கண்முன்னே பணம் வழங்கப்பட்டது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு) யின் செயலாளர் ரிரான் அலெக்ஸ்தெரிவித்துள்ளார். 

    ரிரான் அலெக்ஸ் தனது வீட்டிற்கு நேற்று ஊடகவியலாளர்களை அழைத்து இது தொடர்பாக கூறுகையில், மங்கள சமரவீர அவர்கள் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த 2004ம் ஆண்டு காலகட்டத்தில் நான் விமான நிலையங்களுக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது 2005ம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் நாட்டின் பிரதம மந்திரியாக மஹிந்த ராஜபக்ச இருந்தார். என்னை மஹிந்த ராஜபக்ச அலறி மாளிகைக்கு அழைத்து, தனக்கு புலிளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவேண்டிய தேவை உள்ளதாகவும், அந்தப்பக்கத்தில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அறிமுகம் செய்யுமாறும் கூறினார்.

    எமில் காந்தன் என்பவருக்கு பெரியதோர் சரித்திரம் உண்டு அதைப்பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை. 2002 ம் ஆண்டு டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன புனரமைப்பு அமைச்சராக இருந்தபோது, எமில் காந்தன் அவ்வமைச்சில் வேலை செய்துகொண்டிருந்தார். அத்தருணத்தில் அவர் எனக்கு அறிமுகமாயிருந்தார். மஹிந்தவின் வேண்டுதலை ஏற்று, எமில் காந்தன் கொழும்பில் உள்ள ஓர் வர்த்தகர், அவருக்கு புலிகளுடன் தொடர்பு உண்டு எனவும் வேண்டுமானால் அவரை அறிமுகம் செய்ய முடியும் எனவும் கூறினேன். அப்போது பசில் ராஜபக்சவை அறிமுகமா என வினவினார் இல்லை என்றேன். பசிலை அறிமுகம் செய்து வைத்த மஹிந்த ராஜபக்ச, எமில் காந்தனை அவருடன் தொடர்பு படுத்துமாறும் கூறினார். அப்போதுதான் பசில் ராஜபக்சவை நேரடியாக சந்தித்தேன். அதன் பின்னர் எமில் காந்தனை பசில் ராஜபக்சவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். 

    பசில் ராஜபக்சவும் எமில் காந்தனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். அப்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கியிருந்தது. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றிபெறும் பொருட்டு வடகிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டும் இதற்கான உதவியை புலிகளிடமிருந்து பெற்றுத்தாருங்கள், பிரதியுபகாரமாக எதை வேண்டுமானலும் செய்வோம் என பசில் ராஜபக்ச ஒருநாள் கூறியபோது, தமக்கு படகுகள் வாங்குவதற்கு பணம் வேண்டும் 180 மில்லியன்கள் (18 கோடி) தேவை எனக் கூறினார் எமில் காந்தன், பிரச்சினை இல்லை அப்பணத்தை தரமுடியுமென எவ்வித தயக்கமுமில்லாமல் கூறினார் பசில் ராஜபக்ச.

    பிறிதொருநாள் எமில் காந்தனை சந்திக்க பசில் ராஜபக்ச வந்தார். நான் கனவில் கூட எதிர்பார்த்திராத சம்பவம் நிகழ்ந்தது. பசில் ராஜபக்ச பெரிய பயணப்பொதிகளுடன் வந்தார். பணம் பரிமாறப்பட்டது. வட மாகாண மக்களை வாக்களிக்காமல் தடுப்பதற்கு புலிகளுக்கு வழங்கப்பட்ட கப்பம் அது. 

    2007ம் ஆண்டு என்னை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து செய்து தடுத்து வைத்திருந்தபோது இவ்விடயத்தை அவர்களுக்கும் கூறினேன். அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் இவ்விடயத்தை எனது வாக்குமூலத்தில் பதிய மறுத்தனர். அவ்வாறு இவ்விடயத்தை எனது வாக்குமூலத்தில் பதியாவிட்டால் நான் எந்தவோர் வாக்குமூலத்திலும் கையொப்பம் இடமாட்டேன் என கூறினேன். பின்னர் என்மீது எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யாமல் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தார்கள். 

    18 கோடி ரூபா பணத்திற்காக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்த பிரபாகரனுக்கு கோடாரியால் கொத்துவிழுந்தது சரியோ தவறோ என்பதை தீர்மானிப்பதற்கு இவ்விடயம் போதுமானது என மக்கள் பேசுகின்றனர். எதுவாக இருந்தாலும் இவ்விடயம் இன்று இலங்கையில் உள்ள பிரபல ஊடகங்கள் யாவற்றிலும் வெளிவந்துள்ளபோதும், தமிழ் ஊடகங்கள் எதுவும் இவ்விடயத்தை கண்டுகொள்ளவில்லை என்பது கேலிக்குரியது. இன்னும் சில நாட்களில் அது தமிழ் மக்களின் காதுகளில் விழும்போது எமில் காந்தன் இவ்விடயத்தை பயன்படுத்தி பசிலிடம் பணம் வாங்கிய விடயம் பிரபாகரனுக்கு தெரியாது என்று கதைவிடவும் தயங்கமாட்டார்கள் என நம்பப்படுகின்றது.


    more
  • மேற்கு பயங்கரவாதம் இஸ்லாமிய விஞ்ஞானத்தை ஊதி அணைக்க முனைகிறது
    M.ஷாமில் முஹம்மட்





    Dr.ஆபியா சித்திரவதையின் முன்பும் , பின்பும்

    பெப்ரவரி 2007 ஆண்டு அமெரிகாவின் டெனிசி பல்கலை கழகதின் - University of Tennessee- சட்டத்துறை பேராசிரியர் றிநோல்ட் -Glenn "Instapundit" Reynolds- அமெரிக்கா ஈரானின் இஸ்லாமிய தலைவர்களையும் , அணுவாயுத விஞ்ஞானிகளையும் கொலை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார் நேற்று -12.01.2010- மேற்கு பயங்கரவாதம் ஈரான் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை கொலை செய்துள்ளது. இது றிநோல்டின் என்ற ஒருவருடைய வாதம் அல்ல இது ஒரு சிந்தனை போக்கு இதை மேற்கு பயங்கரவாதம் றிநோல்டின் வாதத்திக்கு முன்னரும் பின்னரும் அழகாக செய்து வருகின்றது.


    மேற்கு பயங்கரவாதம் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை ஈரான் தலை நகரில் அவரின் வீட்டின் அருகில் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டின் மூலம் கொலை செய்துள்ளது இதை அமெரிக்க , இஸ்ரேலிய பயங்கரவாதம் என ஈரான் கூறியுள்ளது. இந்த கொலை இஸ்லாமிய உலகத்துக்கு புதியது அல்ல அதிகமான முஸ்லிம் விஞ்ஞானிகள் அன்மை காலமாக கொலை செய்யப்படுகின்ரனர் அல்லது கடத்தடுகின்ரனர் .

    ஈராக் ஆக்ரமிக்கபட்டு ஆரம்ப 18 மாதங்களில் மட்டும் 310 முஸ்லிம் விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் முக்கிய அணு விஞ்ஞானத்துடன் தொடர்புடையவர்கள் , 17500 கும் அதிகமான விஞ்ஞானிகள் நாட்டை விட்டும் வெளியேரிவிட்டனர் இவர்களில் அதிகமானவர்கள் மேற்கு மேலாதிக்க பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்க வைக்கப்பட்டுள்ளனர் அல்லது ஏதே ஒரு வகையில் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர் என்று இது பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஒரு எகிப்திய ஆய்வுமையம் கூறுகிறது என்பதுடன் இந்த கொலைகள் அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களினால் செய்யப்பட்டவை என சுட்டிகாட்டுகிறது.

    ரஷிய கம்யூனிஸ ராஜ்ஜியம் பிரிந்து உடைந்த போது கீர்கிஸ்தான்- Kyrgyzstan- , தாஜ்கிஸ்தான்-Tajikistan-, டேக்மிஸ்தான் -Turkmenistan-, உஸ்பெக்கிஸ்தான்-Uzbekistan- என்ற நாடுகள் கம்யூனிஸ அராஜகதில் இருந்து முஸ்லிம் நாடுகளாக விடுதலை பெற்று நிமிர்ந்தன அங்கும், செச்னியா-Chechnya-, டாகஸ்தான்- Dagestan- , இங்குஸ்கீட்டியா-Ingushetia- ஆகிய ரஷ்ய ஆக்கிரமிப்பு தேசங்களிலும் பல முஸ்லிம் விஞ்ஞானிகள் ,புத்திஜீவிகள் கடத்த பட்டு காணாமல் போயுள்ளனர் அல்லது கொலை செய்யபட்டுள்ளனர் கடத்தப்பட்ட முஸ்லிம் விஞ்ஞானிகள் பற்றி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்பதை தவிர வேறு எந்த தகவலும் இதுவரையும் கிடைக்கவில்லை , இங்கு நடந்த கடத்தல் , காணாமல் போதல் என்பன வற்றின் சூத்திர தாரிகளாக ரஷிய , அமெரிக்க மேலாதிக்கங்கள் இருப்தாக நம்பபடுகிறது .

    அதேபோன்று மேற்கு நாடுகளில் பணியாற்றும் முஸ்லிம் விஞ்ஞானிகள் ஐந்து வேலை தொழுதாலும் பயங்கர வாத பிரிவுகளினால் கைதாகின்றனர் , கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முஸ்லிம் அணு விஞ்ஞானி ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரும் இவரின் சகோதரர்களும் இணையத்தின் ஊடாக அல்ஜீரியா இஸ்லாமிய போராளிகளின் இணைய தளங்களை பார்க்கிறார்கள் தாடி வைத்துள்ளார் ஐந்து தடவை தொழுகிறார் என்ற காரணத்தால் வட ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய போராளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி . இவருடன் சேர்ந்து, அவரது 2 விஞ்ஞா துறை மாணவர்களான சகோதரர்களையும் கைது செய்தனர்.


    பாகிஸ்தானிலும் பல முஸ்லிம் அணுவாயுத விஞ்ஞானிகள் கடத்தபடுகின்றனர் இந்த வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த Dr.ஆபியா என்ற பெண் முஸ்லிம் விஞ்ஞானி 2003 மார்ச் 30ல் கடத்தப்பட்டு காணாமல் போனார் . கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார் . சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கும் ஆளாகியுள்ளார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். இவோன் ரெட்லி இதை வெளிகொண்டுவந்ததால் உலகம் இதை அறிந்து கொண்டது அல்லது மற்ற ஆயிர கணக்கான முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் புத்திஜீவிகள் , போன்று இதுவும் அறியப்படாத விடையமாக இருந்திருக்கும்


    இருட்டில் இருந்த ஐரோப்பாவை விஞ்ஞா யுகத்துக்கு அலைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் இதுபற்றி Marguis' எனும் அறிஞர் தனது ‘speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 'It is to Muslim science, to Muslim art and to Muslim literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.' 'ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிபிடுகிறார் .'

    8-12ம் நூற்றாண்டு காலப்பகுதி 'ஐரோப்பா அறியாமை இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் . இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு விஞ்ஞா அடிபடைகளை உருவாக்கி இருந்தது இந்த கால பகுதியில் இருட்டில் இருந்த ஐரோப்பாவுக்கு எழுச்சி , புரட்சி விஞ்ஞாம் என்று சிந்திப்பதற்கு கற்றுகொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று உலக வரலாறு கூறுகிறது .
    இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அத்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் திட்மிட்டு மேற்கு உலகால் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவர படுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது.

    இன்று இஸ்லாத்தின் எழுச்சியை தடுக்க இஸ்லாம் மீண்டும் உலகை ஆள்வதை தடுக்க இஸ்ரேல மற்றும் அமெரிக்க , மேற்குலக பயங்கரவாதம் இஸ்லாத்தை நேசிக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளை கொலை செய்து வருகின்றது.


    கடந்த வருடம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women's Invention Exposition) யில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றனர்.

    விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில் கலந்து கொண்டன என்பதும் முஸ்லிம் பெண் விஞ்ஞானி மெஹ்ராஜ் கோல்கின்பர் , மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றார் . மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப் பரிசை வென்றது

    சோனியா சப்ரீ பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் "நானோ காம்ப்போஸைட்" கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினை பெற்றார், மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors' Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது.என்பனவும் அவதானிக்க படவேண்டியவை இந்த முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் இருவர் பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு பிரித்தானிய உளவு துறையால் பல மணி நேரம் விசாரிக்க பட்டார்கள் என்பதும் இவர்கள் இஸ்லாமிய உடைஅணிந்தவர்கள் என்பது குறிபிட்டதக்கது

    உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியை, இஸ்லாமிய ஆச்சியை-இஸ்லாமிய கிலாபத்- தடுக்க , தாமதபடுத்த மேற்கு பயங்கரவாதம் பல களங்களில் முனைகிறது அதில் ஒன்றுதான் இந்த முஸ்லிம் விஞ்ஞானிகளை, புத்திஜீவிகளை ஊதி அணைக்க முனையும் முயற்சி


    நிராகரிபவர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். அல் குர்ஆன் (9:32)

    more

Featured Video

Photos